உம்மத்துக்கள் அனைவரும் ஒரு வரிசையில்… அஸ்ஸலாமு அலைக்கும், குறை கண்டதில் கறை கண்டவனாக! வரிகளில் வலி உண்டு; வழி இல்லை! அனைத்திற்கும் பெயரோ இஸ்லாமிய இயக்கம் – வார்த்தையில் மட்டும்தான் வாழ்க்கையில் இல்லை! வெறி பிடித்த எதிரிகளின் நடுவே சகோதரனின் கறி சாப்பிடுவதில் எத்தனை இன்பம்!
Category: கவிதைகள்
மாற்றம் தேடும் வழி முறைகள்
மாற்றம் தேடும் வழி முறைகள் ‘ஷஹாதத் கலிமா’வைச் சுமந்த முன்னோர்,அளப்பரிய வெற்றிகளோடு உலகை ஆண்டார்கள்.சகலதையும் சம்மதமாய்ப் பார்க்கும் நாமோ,சொல்லொனா தோல்விகளால் தொடர்ந்தும் மடிகிறோம். குர்ஆன் ஹதீஸாக வாழ்ந்த முன்னோர்,குவலயம் போற்றும் கோமான்களாய் வாழ்ந்தார்கள்,குர்ஆன் ஹதீஸின் பெயரால் நாம்,குரோதங்கள் வளர்க்கும் கொடுமையைப் புரிகின்றோம்! முஸ்லிமை முகமனோடும், எதிரியை வாலோடும்,சந்திப்பதே நம் வாழ்வும் வரலாறும்;,இஸ்லாத்தின் எதிரியை அன்போடு அணைக்கின்றோம்,ஈமானிய உறவுகளை வெறுப்போடு மறுக்கின்றோம்.
ஏழை எங்களுக்கே முதலிடம்…!
ஏழை எங்களுக்கே முதலிடம்…! பாத்திமா நளீரா ஹஜ்ஜுப் பெருநாள் சிரிக்கிறது ஹஜ்ஜாஜிகள் கூட்டம் செழிக்கிறது. சந்தோஷத்தைக் கொண்டாட காசுக்குத்தான் ‘கல்பு” (மனம்) இல்லாமல் காய்ந்து போயுள்ளது. வருடந்தோறும் ஹஜ் பட்டம்பெறும் வசதி வர்க்கத்தினரே சற்று நின்று… பட்டினிக்குப் பட்டியலிடும் உங்கள் முஸ்லிம் சமுதாயத்தையும் திரும்பிப் பாருங்கள்..
உனக்கும் எனக்கும் நடுவே…
It is between you and me உனக்கும் எனக்கும் நடுவே இதுதான் உனக்கும் எனக்கும் நடுவே உன் வருகையை வர்ணமாக மாற்ற மாதங்களாக காத்திருந்தேன் உன் வருகை நெறுங்கிய பொழுதுகளில் மலராக பூத்திருந்தேன்!! நீயும் வந்து விட்டாய் நானோ தாமதிக்கிறேன் உன் முகம் காண என்னுள்ளே எழும் பதட்டம் உன் இதய துடிப்பிடம் சொல்கிறது இதோ வருகிறேன் என்று உன்னை காண ஓடோடி வருகிறேன் உன் முகம் கண்ட வுடன் மருதாணி வைத்து சிவந்த கைகளாக…
யாருக்கு வேணும் இந்த இந்தியா ?
இது யாரோட இந்தியா? யாருக்கு வேணும் இந்த இந்தியா? வைரமுத்து ஆளும் வர்க்கமே சொரணை இல்லையா ? வி ஐ பி களுக்கே இந்தியா…!!! பாவனா-வுக்குபாவாடை கிழிந்தால்பாராளுமன்றம் வரை எதிரொலிக்கிறது நந்தினிஹாசினி-களுக்குகருவறுக்கப்பட்டாலும்அது கிணற்றுக்குள்ளே மூடி மறைக்கப்படுகிறது ஸ!!! அம்பாணி, அதாணிமல்லையா கடன் வாங்கினால்அது தள்ளுபடி செய்யப்படுகிறது
சுவர்க்கத்திற்கு வேகத்தடை !
சுவர்க்கத்திற்கு வேகத்தடை ! அறியாமைக் காலத்துஅரேபியர்களாஅதிரைக் காரர்கள்? செவ்வக செங்கல் வைத்துசிமென்ட்டால் செதுக்கியெடுத்துசவப்பெட்டிச் சாயலிலேசிலை வணங்கத் துணிந்தனரே ஐயகோ என்ன செய்யஅறிவழிந்து போயினரே இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம்இன்றில்லை என் செய்வேன்சின்னச் சின்ன கபுருடைத்துபெரிய கபுரைக் குற்றஞ்சொல்ல! பச்சைப் போர்வை போத்திபாதுகாக்கும் முன்பதாகபகுத்தறியப் படித்தவரேபிழையுணர மாட்டீரோ
கவிதைக்கு கருத்து முக்கியம்
கவிதைக்கு கருத்து முக்கியம் கரீம்கனி வசை, திட்டு, புகழ், அழகியல் பாடுதல் சாதாரண விஷயங்கள். அவை கவிதையாகாது. அல்லாஹ் குழந்தையை பிறக்க வைக்கிறான். கணவன் இல்லாமலேயே கரு உருவாக்க தன்னால் முடியும் என்று உலகுக்கு நிரூபித்துக் காட்டினான். நேற்றுவரை வெறுமனே தெரிந்த நிலத்தில் இன்று செடி, பயிர், மரம் வளர வைக்கிறான். பட்டுப்போன மரத்தைத் துளிர்க்க வைக்கிறான். ஏதுமில்லாத மரத்தில் எண்ணற்ற காய்கள், பழங்கள் வெளிக்கொணர்கிறான். இது அல்லாஹ்…
நிறை குடம் தளும்பாது! குறை குடம் கூத்தாடும்!!
நிறை குடம் தளும்பாது! குறை குடம் கூத்தாடும்!! கரிய இருட்டில் பறக்கும் மின்மினி,கர்வத்துடன் கூறியது,” என்னைப் போலஉலகுக்கு, ஒளி கொடுப்பவர் யாருள்ளார்?உலகம் என்ன ஆகும் நான் இல்லாவிடில்?” விண்ணில் தோன்றிய தாரகைகள்,விழுந்து விழுந்து நகைக்கலாயின;“எங்கள் ஒளியின் முன் நீ நிச்சயம்மங்கி நிற்பாய்! ஏன் வீண் பெருமை?” இப்போது நகைத்தது வானத்து நிலா;“இங்கே நான் வந்தபின்னர் உங்களைஎங்கே எங்கே எனத் தேட வேண்டும்!என்று தான் உணர்வீர் உண்மையினை?”
பெண் ஓர் அற்புதப் படைப்பு! பேணிக் காப்போர் அறிவார் உண்மையை!
பத்து ஆண்கள் செய்யும் வேலைகளைபதறாமல் செய்து முடிப்பாள் ஒரு பெண்! பெண் ஓர் அற்புதப் படைப்பு! பேணிக் காப்போர் அறிவார் உண்மையை! அழகிய சித்திரம் கண்களுக்கு இன்பம்,பழகிய மொழியோ செவிகளுக்கு இன்பம்,நறுமணப் பொருட்கள் நாசிக்கு இன்பம்,அறுசுவை உணவு நாவுக்கு இன்பம்! மழலையின் தழுவல் மனத்துக்கு இன்பம்,முழுமையான இன்பம் தருவது எதுவோ?மாயையின் சக்தியை மறைத்து வைத்து,மயக்குகின்ற ஒரு மங்கை மட்டுமே! அழகிய உருவால் கண்களுக்கு இனிமை,குழறும் மொழியால் செவிகளுக்கு இனிமை,ஊறும் தேன் இதழ்களால் நாவுக்கு இனிமை,நறுமண பூச்சுக்களால்…
மனிதர்கள் பலவிதம்!
மனிதர்கள் பலவிதம்! பொறாமைதனை நெஞ்சில் ஏற்றிபொருமிப் பொருமி அலைகிறான்எருமைபோல் நடந்துகொண்டுஏமாறுபவன் இருக்கிறான்! பேராசையால் மூளைமங்கிபேந்தவிழிப்பவன் இருக்கிறான்போராசையினால் போட்டிபோட்டுபணக்காரனானவன் இருக்கிறான்! பெண்ணாசை பித்துப் பிடித்தபெரிய மனிதன் இருக்கிறான்பொன்னாசையால் விழிகள் பிதுங்கிபொறாமைப்படுபவன் இருக்கிறான்!