ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய நெஞ்சை சுடும் நிஜம் [ நினைவில் கொள்ளுங்கள் மறுமையில் கஸ்தூரி மலைக்குமேல் வீற்றிருக்கும் பாக்கியம் பெற்றவர்கள் மோதினார்கள் என்பது நபிமொழி. அதுமட்டுமின்றி மாபெரும் கலீஃபாவான உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களாலேயே ”எங்களது தலைவர்” என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட பிலால் ரளியல்லாஹு அவர்களின் வாரிசுகள் மோதினார்கள் என்பதை மறந்திட வேண்டாம். அதை மறந்தாலும் ஒவ்வொருவரும் மரணித்த பின்பு ஆணாக இருந்தால் அவர்களைக் குளிப்பாட்டி தூய்மைப் படுத்தி கபனிட்டு; ஆணானாலும் பெண்ணானாலும் கபுரில் அடக்கம்…
Category: கதையல்ல நிஜம்
புதைகுழிக்குள் உருவான ஹாஃபிள்கள்!
புதைகுழிக்குள் உருவான ஹாஃபிள்கள் ரஷ்யாவில் சோவியத் யூனியன் ஏற்பட்டபோது அடக்குமுறை பயங்கரமாக இருந்தது. யாரும் மதத்தைப் பின்பற்றக்கூடாது. பிரச்சாரமும் செய்யக்கூடாது. குர்ஆன் வைத்துக் கொள்ளக் கூடாது. அந்த நேரத்தில் ஒரு 21 பேர் கொண்ட ஜமாஅத் ஒன்று தாஷ்கண்டுக்குச் சென்றது. மக்களுக்கு குர்ஆன் கற்றுக்கொடுக்க அழைத்தது. ஆனால், ஜமாஅத்தினரைக் காட்டிலும் அங்குள்ளவர்கள் மிக அற்புதமாக திருக்குர்ஆனை ஓதினார்கள். அதுவும் பார்க்காமல் ஓதினார்கள். ஒவ்வொருவரும் ஹாஃபிளாக இருந்தார்கள். இறைமறுப்பாளர்கள்…
மெழுகுவர்த்தி…!
[ ஓர் உண்மைச்சம்பவத்தின் தழுவல் இக்கதை! ] “நட்சத்திரங்கள் துயில் கொள்ள செல்லும் சாமத்து ராத்திரி… ஐந்தாவது முறையாகவும் தன் நண்பிக்கு எழுதிய காயிதத்தை சரி பார்க்கிறாள் ருஷ்தா. “எனதருமை தோழிக்கு… உன் கடிதம் கிடைத்தது… வாழ்வின் வசந்தமான திருமண வாழ்வில் நீ நுழையப்போகிறாய்… திருமணம் என்பது மார்க்கத்தில் பாதி என்று சொல்வார்கள்… மரணம் மட்டும், அதற்குப் பின் சுவனத்திலும் உங்கள் காதலும், உறவும் தொடரட்டும் என பிரார்த்திக்கிறேன்…. ” – வஸ்ஸலாம், உனதருமை நண்பி ருஷ்தா….
தேடல்களும், விடைகளும்!
தேடல்களும், விடைகளும்! ஹுஸைனம்மா சின்ன வயசுல, கள்ளங்கபடறியா எல்லாப் புள்ளைகளையும் போல, நானும் தெரியாம முழுங்கிட்ட பபிள்கம்மை வெளியே கொண்டுவர தலைகீழா நின்னுகிட்டே, “பபிள்கம் வெளியே வந்துரட்டும். வயித்துக்குள்ளேயே வெடிச்சிடக்கூடாது அல்லாவே”ன்னு பிரார்த்தனை செய்யிற அளவுக்குத்தான் எனக்கும் பக்திப் பரவசம் இருந்துது. ஆனா, இப்பவும் அப்படியேவா இருப்போம்? “ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அதுதாண்டா வளர்ச்சி”ன்னு தெரியும்தானே. முஸ்லிம்கள் நிறைந்து வாழும் ஊரில் பிறந்ததால், என்னைச் சுற்றி எல்லாரும்…
அவளுக்கும்தான் புரியவில்லை…..
அவளுக்கும்தான் புரியவில்லை…. முஹம்மது ஃபெரோஸ்கான் அழைப்பு மணியோசைக் கேட்டதும், ஓடிப்போய்க் கதவைத் திறந்தாள் ஜமீலா. டியூசனிலிருந்து திரும்பி வந்திருந்த மகளை அன்போடு அனைத்துக் கொண்டாள். ‘இன்றைக்கு என்ன ஸ்பெஷல் மம்மி?’ கேட்டுவிட்டு, புத்தகப்பையைக் கொண்டு போய் மேசையில் வைத்தால் மகள் ஆயிஷா. அவளுக்கு வியர்த்துக் கொட்டியது. மின்விசிறியைச் சுழலவிட்டு, சோபாவில் போய்ச் சாய்ந்தால் ஆயிஷா.’கண்ண மூடிக் கொள்ளுங்கோ’ தாயின் கட்டளைப்படி கண்ணை மூடிக் கொண்டாலும், வாயை மூடிக் கொள்ளவில்லை. தாய்…
ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல் ( 1 )
ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல் ( 1 ) மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி நான் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவன் என்ற போதிலும் பெற்றோர், மனைவி, உறவினர் என்ற உள் வட்டத்திற்குள் மிகவும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தேன். ஒரு கடையில் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்த போதிலும் மனதில் ஒரு நிறைவு இருந்தது. குடும்பத்தில் நடக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றிலும் தவறாமல் கலந்து கொள்ளும் பாக்கியமும் கிடைத்தது. இதே சூழ்நிலையில் ஓடிக்கொண்டிருந்த என் வாழ்க்கைச் சக்கரம்…
ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல் ( 2 )
பிறகு வீட்டிற்குள் போன என்னை அம்மாவைத் தவிர யாருமே கண்டு கொள்ளவில்லை. இப்படியே இரண்டு மாதங்களும் உருண்டோடி விட்டன. மீண்டும் எனது துபாய் பயணத்திற்கான நாளும் வந்து விட்டது. பயணம் புறப்படுவதற்கு முதல் நாள் இரவில் கனத்த இதயத்துடன் தேம்பி, தேம்பி அழுத என் மனைவியின் அழுகையை என்னால் நிறுத்த முடியலை. நீங்கள் ஏன் துபாய் போகிறீர்கள்? பேசாமல் இங்கேயே ஏதாவது வியாபாரமோ, அல்லது கடையிலோ வேலை பாருங்கள். குறைந்த வருமானமாக இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் துபாயி…
ஒன்றா பத்தா?
IIM-இல் சேர்வதற்கான நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்ட மாணவனிடம்,தேர்வாளர், “பத்து சுலபமானக் கேள்விகளைக் கேட்கவா? அல்லது ஒரேயொரு கடினமான கேள்வியைக் கேட்கவா? என்றார். மாணவனுக்கு சற்று குழப்பமாக இருந்தது. சில நொடிகள் கண்களைமூடி நன்கு யோசித்து”ஒரேயொரு கடினமான கேள்வியைக் கேளுங்கள்!”என்றான்.