மிகப் பெரும் ஆயுதம் நஜீப் ஃபாஜில் “அம்மா உங்க வயசு என்னம்மா..?” “எழுபது ஆண்டுகள்” “அப்படியென்றால் விடுதலைப் போர் சமயத்தில் உங்களுக்கு இருபது அல்லது இருபத்தியோரு வயசு இருந்திருக்கும் இல்லே..” “ஆமாம்’‘ “அன்றிலிருந்து நீங்கள் இந்த ஊரை விட்டு வெளியே போனதே இல்லையா, அம்மா?” “ஒரு நாளும் போனதில்லை” “இத்துணை ஆண்டுகளில் உலகத்தில் மிகப் பெரும் மாற்றங்கள் நடந்துவிட்டுள்ளன அம்மா..” “கேள்விப்பட்டிருக்கின்றேன்.” “நீங்கள் மறுமணம் செய்து கொள்ளவில்லையா?” “இல்லை” “என்னுடைய…
Category: கதைகள்
‘தர்மமும் தியாகமும்’ – சிறுகதை
‘தர்மமும் தியாகமும்’ – சிறுகதை அ.முஹம்மது நிஜாமுத்தீன் பக்ரீத் பண்டிகை சிறப்பாக முடிந்தது. பெருநாள் சிறப்புத் தொழுகையை முடித்துவிட்டு, குர்பானி ஆடு அறுத்து, அதில் மூன்றில் ஒரு பங்கு சொந்த உபயோகத்திற்கு வைத்துக்கொண்டு, ஒரு பங்கை உறவினர்களுக்கும் மற்றொரு பங்கை எளியவர்களுக்கும் பகிர்ந்தளித்தோம். சுவையான உணவு உண்டுவிட்டு மாலை நேரமானதும் நானும் என் மனைவியும் தஞ்சாவூர் நகருக்கு புறப்பட்டுச் சென்றோம். எஸ். ட்டீ. ஹாஸ்ப்பிடல் (ப்பீ) லிமிடெட், தஞ்சாவூரின்…
“தீன்” காக்கா!
“தீன்” காக்கா! சுபுஹு தொழுதுவிட்டு தனது மளிகை கடையை திறந்த தீன் காக்கா காலண்டரில் 10.06.1984 என்ற தேதியை கிழித்துவிட்டு இருக்கையில் அமர்ந்தார். பணியாட்கள் சாமான்களை பரத்த ஆரம்பித்தனர். வியாபாரமும் ஆரம்பித்து சூடுப்பிடித்து ஓய்ந்திருந்த நேரம். கடைக்கு வெளியே பதினைந்து வயது மதிக்கத்தக்க சிறுவன் அலங்கோலமாக நின்றிருந்தான். அவனது கோலம் பிச்சை கேட்பதாக காக்காவுக்கு தோன்றியது. “தம்பி இங்கிட்டு வா..!” என்று கூப்பிட்டு 20 பைசாவை நீட்டினார். வந்தவன் எந்த அசைவுமின்றி சுரத்தில்லாமல் “பசிக்குது..!” என்றான். ஒரு…
அறிவியல் பாங்கு! ‘உண்மைச்சம்பவமாக’ இருந்திக்க வேண்டியது. ஆதாரமில்லை என்பதால் கற்பனைக்கதை ஆனது!
அறிவியல் பாங்கு! ‘உண்மைச்சம்பவமாக’ இருந்திக்க வேண்டியது. ஆதாரமில்லை என்பதால் கற்பனைக்கதை ஆனது! கீழக்கரை ஜும்மா பள்ளி – கிபி 630 ல் கட்டப்பட்ட பள்ளிவாசல். தமிழகத்தின் முதலாவது பள்ளிவாசல். பின்னர் இஸ்லாம் பரவ பரவ சில நூறு வருஷங்களில் காயல்பட்டினம், ஏர்வாடி, மதுரை, அதிரை, நாகூர் என பல ஊர்களில் பள்ளிவாசகள் முளைத்தன. கிபி 1510 ல் உருவாக்கப்பட்டு… சிறிது சிறிதாக செம்மைப்படுத்தப்பட்டு… மணி, நிமிடம், வினாடி எல்லாம் பகுக்கப்பட்டு, 1656 ல் பெண்டுலம் சேர்க்கப்பட்டு உலகளவில்…
எஜமானனும் காவலாளியும்
எஜமானனும் காவலாளியும் [ உண்மைத்தன்மையை அறியாமல் எவரைப்பற்றியும் தவறாக முடிவெடுக்கக்கூடாது!] ஒரு செல்வந்த முதலாளியின் வீட்டில் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். முதலாளி தினமும் வீட்டுக்கு வரும் போது ஓடோடிச் சென்று வீதிக்கதவை திறந்து அவருக்கு வந்தனம் சொல்வது அவனது வழக்கம். ஆனாலும் ஒரு நாளேனும் அந்த முதலாளி பதில் கூறியதும் கிடையாது; காவலாளி முகத்தை ஏறெடுத்து பார்ப்பதும் கிடையாது. ஒரு நாள் பசியோடிருந்த அந்தக் காவலாளி வீட்டுக்கு வெளியே உள்ள குப்பத்தொட்டியில் வீசப்பட்ட உணவுகள் ஏதும்…
உங்களுக்கு சோதனையா? இறைவனின் அருட்பார்வை உங்கள் மீது விழுந்துவிட்டது!
உங்களுக்கு சோதனையா? இறைவனின் அருட்பார்வை உங்கள் மீது விழுந்துவிட்டது! மவ்லவி, காதிர் மஸ்லஹி கப்பல் ஒன்று கடலில் வழிதவறி செல்லும்போது புயலில் சிக்கி மூழ்கிவிடுகிறது. அதில் ஒருவன் மட்டும் எப்படியோ தப்பி விடுகிறான். அருகிலுள்ள தீவில் அவன் nகரையேறுகிறான். “இறைவா, இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்துவிடு. ஆள் அரவமற்ற இந்த தீவில் எத்தனை நாள் நான் இருப்பது? என் மனைவி மக்களை பார்க்கவேண்டாமா??” என்று பிரார்த்திக்கிறேன். ஏதாவது…
எனக்குத் தேவை ஸாலிஹான ஒரு மனைவி
எனக்குத் தேவை ஸாலிஹான ஒரு மனைவி பாத்திமா என்ற முஸ்லிம் மாணவியும் ஜார்ஜ் என்ற கிறிஸ்துவ மாணவனும் மிகுந்த காதலர்களாக கல்லூரியில் படித்து வந்தனர். பாத்திமாவின் தந்தை தன் அருமை மகளுக்கு திருமணம் நடத்த நாடி மாப்பிளை பார்த்துக் கல்யாணமும் முடிவாக்கப்பட்டது. பாத்திமா மௌனம் சம்மதாக இருந்தாள். ஆனால்… தன்னை பெற்று வளர்த்த தாய் தந்தையர்களுக்கே தெரியாமல் இருவரும் தலைமறைவாகி விடாலமென முடிவு செய்தனர். எப்படியோ இந்த விஷயம் அவளின் தந்தைக்கு தெரிந்துவிட்டது.
பனை மரத்துக்குக்கீழ் பால் குடித்தாலும்….
பனை மரத்துக்குக்கீழ் பால் குடித்தாலும்…. சே.ச.அனீஃப் முஸ்லிமின் [ “மீனா வீட்டிற்கு புதிதாக ஒரு ஆண் வந்திருக்கிறார்…” “அவரைப் பார்த்தால் மீனாவின் சொந்தக்காரர் போன்றும் தெரியவில்லை… அவர் ஒரு முஸ்லிம் பாய்” “பையனை கல்லூரிக்காக சென்னை அனுப்பிவிட்டு அவள் கடையை கூட பார்க்காமல் இப்படி கூத்து அடிக்கிறாள்..” “60 வயதைக் கடந்தவர் என்றாலும் அவரும் ஆம்பிளை தானே..” “அவளுக்கு ஆம்பள சுகம் தேட ஆரம்பிச்சுடுச்சு…” இவை அக்கம்பக்கத்தில் மீனாவை…
மிகப் பெரும் ஆயுதம்
மிகப் பெரும் ஆயுதம் நஜீப் ஃபாஜில் “அம்மா உங்க வயசு என்னம்மா..?” “எழுபது ஆண்டுகள்” “அப்படியென்றால் விடுதலைப் போர் சமயத்தில் உங்களுக்கு இருபது அல்லது இருபத்தியோரு வயசு இருந்திருக்கும் இல்லே..” “ஆமாம்’‘ “அன்றிலிருந்து நீங்கள் இந்த ஊரை விட்டு வெளியே போனதே இல்லையா, அம்மா?” “ஒரு நாளும் போனதில்லை” “இத்துணை ஆண்டுகளில் உலகத்தில் மிகப் பெரும் மாற்றங்கள் நடந்துவிட்டுள்ளன அம்மா..” “கேள்விப்பட்டிருக்கின்றேன்.” “நீங்கள் மறுமணம் செய்து கொள்ளவில்லையா?”
ஒருவரை நாம் அவமானப்படுத்தினால் கண்டிப்பாக நாமும் அவமானப்பட வேண்டிய காலம் வரும்
ஒருவரை நாம் அவமானப்படுத்தினால் கண்டிப்பாக நாமும் அவமானப்பட வேண்டிய காலம் வரும் நூலகத்தில் ஒரு இளம்பெண் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். ஒரு இளைஞன் அவளருகில் வந்தான். அவளருகில் ஒரு இருக்கை காலியாக இருந்தது. அவளிடம் மெல்லக் கேட்டான். “நான் இங்கே அமரலாமா?” அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்…. பின் உறக்கக் கேட்டாள் “இன்று இரவு உன்னோடு தங்குவதா? என்ன நினைத்தாய்?” அவள் சப்தம் கேட்டு நூலகத்தில் உள்ள அனைவரும் அவனையே பார்த்தனர்.