ஒவ்வொரு நாணயத்திற்கும் இரு பக்கங்கள் இருக்கின்றன. அதைப் போல விட்டமின் மாத்திரைகள் என்றவுடன், நம் மக்கள் சத்து மாத்திரை என்ற புனிதமான சொல்லைப் போட்டு, அதனை நேரந்தவறாமல் உண்டு வருவதை நாம் பார்த்திருக்கின்றோம். அம்மாக்கள் பிள்ளை நோஞ்சானாக இருந்தால் மருத்துவரிடம் சென்று, அய்யா எனது பிள்ளை நோஞ்சானாக இருக்கின்றான் ஏதாவது சத்து மாத்திரை அல்லது டானிக் எழுதித் தாருங்கள் என்பார். இவரும் தனக்குப் பிடித்தமான? கம்பெனியின் டானிக் அல்லது மாத்திரையை எழுதிக் கொடுப்பார். இவ்வாறாக, இன்று படித்தவர்களிலிருந்த…