கோவை மாவட்டம் ஆர்எஸ் புரம் சின்மயா வித்யாலயா பள்ளிக்கூட மாணவி தற்கொலை தொடர்பாக வழக்கறிஞர் திரு எம் ரஹமத்துல்லா தலைமையில் NCHRO அமைப்பு மேற்கொண்ட உண்மை கண்டறியும் குழுவின் இடைக்கால அறிக்கை:
வழக்கறிஞர் S.ஜமீஷா, மேட்டுப்பாளையம், கோவை மாவட்டம் வழக்கறிஞர் சத்தியபாலன் ப.பா மோகன் சட்ட குழுமம், கோவை. வழக்கறிஞர் கே உமா மகேஸ்வரி வழக்கறிஞர் கோவை வழக்கறிஞர் K.வசந்தகுமார், ப.பா மோகன் சட்ட குழுமம், கோவை. திரு.அப்பாஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்டிபிஐ கட்சி கோவை திரு முஹம்மது நவ்ஃபல் ஒருங்கிணைப்பாளர் என் சி ஹெச் ஆர் ஓ தமிழ்நாடு ஆகியோர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவினை NCHRO சார்பாக வழக்கறிஞர் எம் ரஹமத்துல்லா கோவை ஆகிய என் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டது இக்குழு இன்று 14/11/2021 காலை 10 மணி அளவில் சென்றிருந்தோம்.
அந்த மாணவியின் வகுப்பு தோழிகள் நண்பர்கள் உறவினர்கள் மற்றும் அந்த மாணவியின் பெற்றோர்கள் பல்வேறு இயக்கங்களை சேர்ந்த தோழர்களிடம் முதல் கட்ட விசாரணையை மேற்கொண்டோம்.
தற்கொலை செய்து கொண்ட மாணவியின் வயது 17 ஆகும். கோயமுத்தூர் கோட்டை மேடு பகுதியில் குடியிருக்கும் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண். அவரது தகப்பனார் டீக்கடையில் வேலை பார்க்கும் சாதாரண தினக்கூலி.
R.S புரம் பகுதியை சேர்ந்த சின்மயா வித்யாலயா பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் அதிக மதிப்பெண் பெரும் மாணவிகளில் முதல் இடத்தில் இருப்பதால் பள்ளியில் அனைவருக்கும் பரிச்சயமானவர் என்பது மட்டுமின்றி அனைத்து ஆசிரியர்கள் சக மாணவ மாணவர்களின் பேரன்புக்கு உரியவளாக இருந்திருக்கிறாள்.
அறிவும் துடிப்பும் கொண்ட அந்த மாணவி அதே பள்ளியில் ஆசிரியராக இருக்கும் மிதுன் சக்கரவர்த்தி என்ற ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு இருந்திருக்கிறாள் என்பது தெரியவருகிறது.
இந்த பாலியல் துன்புறுத்தல் கடந்த ஆறு மாதமாக நடந்திருக்கிறது.
இந்த மிதுன் சக்கரவர்த்தியின் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் பள்ளியின் தலைமையாசிரியர் கவனத்திற்கு சென்றிருக்கிறது.
மிதுன் சக்கரவர்த்தியின் பாலியல் துன்புறுத்தலும், பள்ளியின் தலைமையாசிரியரான மீரா ஜாக்சன் இந்த சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக் கொண்டதும் பள்ளியின் பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று அவனது குற்றத்தை மறைக்க முயற்சித்ததும்தான் மாணவியின் தற்கொலை சம்பவத்திற்கு முதல் காரணமாக இருந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது.
மிக மோசமான பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளது என்பதை அறிந்தும் அந்த சம்பவத்திற்கு காரணமான ஆசிரியரை பள்ளியை விட்டு தற்காலிகமாக கூட பணி நீக்கம் செய்யாமல் பாதிக்கப்பட்ட மாணவியின் வகுப்பில் தொடர்ந்து ஆசிரியராக வகுப்பு எடுக்க அனுமதித்திருக்கிறார்கள். அது அந்த மாணவியின் மன அழுத்தத்தையும், அச்சத்தையும் பெரும் தொடர் அவமானத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் மற்றும் மிதுன் சக்ரவர்த்தி அவரது மனைவி அர்ச்சனா, வைஷ்னவன் ஆகிய நான்கு பேர் அடிக்கடி அலைபேசியில் அந்த மாணவியிடம் அலைபேசியில் மணிக்கணக்கில் பேசி இருப்பதும் அப்பொழுது அந்த பெண் அதற்கு பதில் பேசுவதையும் வைத்து ஏதோ பிரச்சினை என்பதை மாணவியின் பெற்றோர்கள் ஊகித்திருக்கிறார்கள்.
என்ன பிரச்சினை, ஏன் இவ்வளவு நேரம் பேசுகிறாய் என்று பெற்றோர்கள் கேட்டும் தனது பெற்றோரின் நலனுக்காகவும், அந்த மாணவி ஒன்றும் இல்லை என்று தனக்கு நடந்த கொடுமைகளை பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்து இருக்கிறாள்.
தனக்கு நடந்த கொடுமைகளை வெளியே சொல்லக்கூடாது என்று பள்ளி நிர்வாகம் அந்த மாணவியிடம் சத்தியம் வாங்கி மறைக்க முயற்சித்திருக்கிறார்கள்.
பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்பதால் இந்த சம்பவத்தை மூடி மறைக்க அந்த மாணவியிடம் இதை பெரிதுபடுத்த வேண்டாம் தினம் தினம் என்று கெஞ்சியிருக்கிறார்கள். அந்த மாணவி தன்க்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமையாலும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல், அச்சத்தால் மனம் நொந்து இதற்கு மேல் அந்த பள்ளியில் தொடர்ந்து படிக்க முடியாது என்று தன் பெற்றோரிடம் எனக்கு இந்த பள்ளி வேண்டாம், மாற்று சான்றிதழ் வாங்கிவிட்டு வேறு பள்ளியில் சேர்த்து விடுங்கள் என்று சொல்லியுள்ளார்.
மாணவியின் தந்தையும் என்ன பிரச்சினை என யூகிக்க முடியாமல் தனது மகள் கல்வியில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர் என்பதால் அவளது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் எவ்வித குறுக்கீடும் செய்யாமல், ஏதோ பிரச்சினை நடத்திருக்கிறது தொடர்ந்து படிக்கவிருப்பமில்லை என்று மகள் சொல்கிறாள் என்று மாற்று சான்றிதழ் கேட்டு பள்ளிக்கு சென்று இருக்கிறார். அங்கு அந்த மாணவியின் தந்தையை வெளியே அமரவைத்து விட்டு ஆங்கிலத்தில் அந்த மாணவியிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் பேசியிருக்கிறார். மாணவியின் தந்தையிடம் அப்பொழுதும் கூட இது தான் பிரச்சினை என்று பள்ளி நிர்வாகம் சொல்லாமல் மூடி மறைக்கவே முயற்சித்திருக்கிறார்கள்.
தன் மகளுடன் என்ன உரையாடல் நடக்கிறது என்பதை கூட தெரிந்துகொள்ள முடியாமல் தன் மகள் ஏதோ ஒரு பிரச்சனையில் இருக்கிறாள் அவளை சுற்றி ஏதோ நடக்கிறது என்னவென்று தெரிந்துகொள்ள முடியாமல் தவத்திருக்கிறார் அந்த மாணவியின் தந்தை.
அந்த மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தலை யாரும் கேள்விப்பட்டு பிரச்சனையை பெரிது படுத்தி விடக்கூடாது என்பதற்காக அந்த மாணவியுடன் மூடி மறைக்க வேண்டி பெற்றோருக்கு தெரியாமல் மனநல மருத்துவரை வைத்து அந்த மாணவிக்கு கவுன்சிலிங் நடத்தியிருக்கிறார் பள்ளியின் முதல்வர். அந்த கவுன்சிலிங்கிற்கு மாணவியை அழைத்து வந்து பள்ளியில் விடும் படி மாணவியின் தந்தைக்கு பள்ளி நிர்வாகம் சொல்லியுள்ளது அப்பொழுதும் கூட என்ன கவுன்சிலிங், எதற்க்காக என்று அவர்கள் சொல்லவில்லை.
உச்சகட்ட குழபத்தை பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் ஏற்படுத்தியிருக்கிறது என்பது தெரியவருகிறது.
மாணவிக்கு நடந்த கொடுமையை மறைக்கவும் குற்றம் செய்த ஆசிரியர் மேல் நடவடிக்கை எடுக்காமலும் அந்த மாணவிக்கே அந்த குற்றவாளியை வகுப்பெடுக்க வைத்து உச்சபட்ச மன உளைச்சலுக்கு அந்த மாணவியை உட்படுத்தியிருக்கிறார்கள் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது .
காவல் துறை ஏன் துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை மக்கள் போராட்டம் வழுத்த பிறகு தான் குற்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யபட்டிருக்கிறார்கள் என்பதை பற்றி இரண்டாவது கட்ட விசாரணையை நாங்கள் வருகிற நாட்களில் மேற்கொள்ள இருக்கிறோம்.
பள்ளியில் நடந்த குறிப்பிட்ட சம்பவம் பற்றியும் அந்த பள்ளியின் பின்னணி பற்றியும் இந்த சம்பவத்தை தவிர்த்து வேறு சம்பவங்கள் இந்த பள்ளியில் நடந்திருக்கிறதா என்பதை பற்றியும் காவல்துறை சரியான கோணத்தில் சிறப்புப் புலனாய்வு அமைப்பிற்கு கொண்டு வழக்கை விசாரிக்க வேண்டும் என்பதே குழுவின் முதன்மை கோரிக்கையாக மக்கள் மன்றத்தில் வைக்கப்படுகிறது. முழுமையான விசாரணை முடிந்ததும் முழுஅறிக்கை பின்னர் வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
– உண்மை அறியும் குழுவிற்க்காக
வழக்கறிஞர் திரு.M.ரஹ்மத்துல்லா, கோவை.
source: https://www.facebook.com/rahamathulla.adv.7