Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மணமக்களுக்கான பிரார்த்தனை

Posted on October 24, 2021 by admin

மணமக்களுக்கான பிரார்த்தனை    

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது;  

”பாரகல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர்”

பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக! என்று கூறுவார்களென அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா, ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள்: வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வார்த்தை (குர்ஆன்) நடைமுறையில் சிறந்தது என்னுடைய நடைமுறை (சுன்னத்) காரியங்களில் கெட்டது பித்அத்துக்கள் (இஸ்லாம் மார்கத்தில் நபிவழிக்கு மாற்றமாக சேர்க்கப்பட்ட அதிகமாக்கப்பட்ட புதுமையானவைகள்) பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகளே, வழிகேடுகள் நரகத்தில் (கொண்டு) சேர்க்கும். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி)

நடைமுறையில் உள்ள ஸஅல்லிஃப் பைனஹுமா போன்ற துவாவை ஒதுவது அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறாத விதத்தில் ஆமீன், ஆமீன் என்று முழுங்குவதைனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த துவா ஒதும் போது அலி (ரளியல்லாஹு அன்ஹு), ஃபாத்திமா (ரளியல்லாஹு அன்ஹா) என்ற பெயர், வரும்போது பெண்ணுக்கு பெண்ணுடைய உறவினர் (தாலி) கருகமணி கட்டுவது போன்றவை ஆதாரமற்ற மூட நம்பிக்கையாகும். அதை நாம் அவசியம் தவிர்க்க வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது நபித்துவத்தில் நிக்காஹ்விலோ, நிக்காஹாவிற்கு பிறகோ தன் மனைவிகளுக்கோ அல்லது தன் மகள் ஃபாத்திமாவுக்கோ (தாலி) கருகமணி கட்டவே இல்லை என்பதும், (தாலி) கருகமணி கட்டுவது அதை கணவன் இறந்த பின் அறுப்பது பின் அந்த பெண்ணை விதவை கோலத்தில் வைத்து அபசகுணமாக கருதி ஒதுக்கி வைப்பது இவையாவும் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்படாதவை. இவை பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையாகும்.

சீறா புராணத்தை இயற்றிய உமர் புலவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் சுமார் ஆயிரம் வருடத்திற்குப் பின்னர் பிறந்துள்ளவர். தனது கற்பனையினால் சில கவிதைகளை இயற்றி அதில் இப்படி அலி ரளியல்லாஹு அன்ஹு, ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா ஆகியோரின் திருமணத்தைக் கற்பனையாகப் பாடியுள்ளார். இதை செயல்படுத்தும் நமது தமிழ் உறுது முஸ்லிம் மக்கள் நபிவழியை சுன்னத்தை செயல்படுத்தவில்லை என்பதை அறியலாம். ஆகையால் நாம் நபி வழியை கடைபிடித்தால் இம்மையில், மறுமையில் வெற்றி பெறுவோம்.

 மணமக்களின் பிரார்த்தனை (துஆ) :  

”லயின் அதய்தனா ஸாலிஹன் லநகூனன்ன மினஷ் ஷாகிரீன்” (7:189)

எங்களிறைவா! எங்களிருவருக்கும் நீ நல்லதை (சந்ததியை) கொடுத்தால் நிச்சயமாக நாங்களிருவரும் நன்றியுடையவர்களாக இருப்போம். (அல்குர்ஆன் 7:189)

(ஆதிமனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவரது துணைவியார் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் கேட்ட பிரார்த்தனை)  

“ரப்பீஹப்லி மின்லதுன்க துர்ரியய்யதன் தைய்யிபதன் இன்னக்க சமிஉத்துஆ”

இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனைகளைச் செவிமடுப்பவன். (அல்குர்ஆன் 3:38)

 (ஜக்கரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட பிரார்த்தனை)    

 மணமகனின் பிரார்த்தனை (துஆ) :

”ரப்பனா ஹப்லலனா மின் அஜ்வாஜினா வ துர்ரிய்யாதினா குர்ரத்த அயுனின் வ ஜஅல்னா லில் முத்தகீன இமாமா”

”எங்கள் இறைவனே! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்கு கண்களின் குளிர்ச்சியைத் தருவாயாக! இன்னும் இறையுணர்வுடையோர்க்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கி அருள்வாயாக.” (அல்குர்ஆன் 25:74)

(ரஹ்மானின் நல்லடியார்கள் கேட்கும் பிரார்த்தனைகளில் ஒன்று பார்க்க 25:67 முதல் 75 வசனங்கள்)

ஒரு பெண்ணை மணமுடித்ததும் அவளது முன்னெற்றி ரோமத்தை பிடித்திக் கொண்டு மணமகன்:

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக ஹைரஹா வஹைர மா ஜபல்த்த அலைஹி வ அவூது பிக மின் ஷர்ரிஹா வஷர்ரி மாஜபல்த்த அலைஹி” என்று பரகத்துக்காக துஆ செய்ய வேண்டும்.

பொருள்: ”இறைவா! இப்பெண்ணிடமிருந்து (எனக்கு) நன்மையானவை கிடைக்க வேண்டுமென்றும், இப்பெண்ணின் இயல்புகளிலிருந்து எனக்கு நன்மையானவை கிடைக்க வேண்டுமென்றும், உன்னிடம் வேண்டுகிறேன். மேலும் இப்பெண்ணிடமிருந்து தீங்குகள் ஏற்படாமலிருக்கவும் உன்னிடம் வேண்டுகிறேன்.” (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அமர்பின் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: ஹாகிம்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

33 − 30 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb