“இனி எனக்கு யாரும் அஞ்ச வேண்டாம், நான் இறைவனுக்கு அஞ்சியவனாக வாழ்க்கையை துவங்கி உள்ளேன்” என இஸ்லாத்தை ஏற்று கொண்ட ஆஸ்திரேலியா மல்யுத்த வீரர் கூறி உள்ளார்..
ஆஸ்திரேலியாவில் பிரபல மல்யுத்த வீரர் வில்லி ஒட் இஸ்லாத்தை தான் வாழ்வியலாக ஏற்று கொண்டு உள்ளார். அவர் இஸ்லாம் தனக்கு எப்படி வந்தது என்பதை கூறிய போது தான் மிக பெரிய வீரர் என்பதை வைத்து பலரை என் தோற்றத்தை கொண்டு மிரட்டுவேன். அனைவரும் என்னை பார்த்தாலே நடுங்குவார்கள்.
ஆனால் சில மாதங்களுக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மிக பெரிய போட்டியில் நான் வீரர்களை வீழ்த்துவது குறித்து பயிற்சி எடுத்து கொண்டு இருக்கும் போது அருகில் ஒரு சிறுமி என்னை சற்றும் கண்டுகொள்ளாமல் அவள் ஏதோ படித்து கொண்டு இருந்தாள்.
அவளை பயமுறுத்தும் விதத்தில் நான் ஆக்ரோஷமாக பயிற்சி எடுத்து உடல் பாணியிலேயே மிரட்ட பார்த்தும் எனக்கு எதிராக இன்னொருவர் பயிற்சி இருந்தாலும் அவள் எதையும் கண்டு கொள்ளாமல் இருந்தாள். அருகில் சென்று.. அவள் இடத்தில் இங்கே பலர் மிக ஆக்ரோஷமாக பயிற்சி எடுக்கிறார்கள், நீ சந்திக்காத சூழ்நிலை இருந்தாலும் நீ அச்சம் இல்லாமல் என்ன செய்கிறாய் யாருடன் வந்தாய் என கேட்ட போது, எனது தந்தை மருத்துவர் அவர் சிலரின் பரிசோதனைக்கு வந்து உள்ளார் அவர் உடன் வந்தேன் எனக்கு எந்த பயமும் இல்லை நான் திருகுர்ஆன் ஓதி கொண்டு இருக்கிறேன் இதில் இறைவன் கூறுகிறான்..
وَلَا تَهِنُوْا وَ لَا تَحْزَنُوْا وَاَنْتُمُ الْاَعْلَوْنَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.
(அல்குர்ஆன் : 3:139)
என்ற வசனத்தை ஓதி காட்டினாள் அந்த சிறுமி.
உடனே ஏதோ என் மனது உடனே திருகுர்ஆன் ஓத வேண்டும் என்பதை அறிந்து அந்த சிறுமியின் தந்தை இடத்தில் திருகுர்ஆன் வாங்கி ஓதினேன் மூன்று நாட்களில் இஸ்லாத்தை ஏற்று கொண்டேன் என்பதை பதிவு செய்து உள்ளார்..மேலும் எனது சமூக வலைதளங்களில் நான் பதிவு செய்தது இனி என்னை கண்டு யாரும் அஞ்ச வேண்டாம் நான் இறைவனுக்கு அஞ்சியவனாக வாழ்க்கையை துவங்கி இருக்கிறேன் என்பதை பதிவு செய்ததாக கூறி உள்ளார்.
ஒரு வசனம் இஸ்லாத்தை ஏற்று கொண்டார் நாமும் நம் வாழ்க்கையில் திருகுர்ஆன் உண்டான தொடர்பை குறித்து சுய பரிசோதனை செய்ய வேண்டும்..இறைவன் அவனுடைய மார்க்கத்தை பரப்பி கொண்டே இருக்கிறான் அதில் நன்மைகளை செய்தவர்கள் வெற்றியாளர் மறுமையில் இதை தான் மூமின்களுக்கு இறைவன் சொல்லி காட்டுகிறான் அப்படி பட்ட வாழ்க்கையை நாமும் வாழ்வோம் இன்ஷா அல்லாஹ்..
தமிழாக்கம்: A. யாசர் அராபத்
தகவல் : ISLAM IS WORLD MEDIA
THOWHEEDISM மீடியா செய்தி பிரிவு..