Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தொலைநோக்குப் பார்வை – அப்துர் ரஹ்மான் உமரி

Posted on September 15, 2021September 15, 2021 by admin

தொலைநோக்குப் பார்வை 

–  அப்துர் ரஹ்மான் உமரி  –   

எதிர்காலத்தைப் பற்றி கொஞ்சம் முன்னதாகவே சிந்திப்பவரை அறிவாளி என்கிறார்கள். ஒருவர் எந்தளவுக்கு முன்னோக்கி சிந்திக்கின்றார் என்பதைப் பொருத்து அவரது மதிக்கூர்மை அளவிடப்படுகின்றது.

சில சிறந்த சிந்தனையாளர்கள் பத்தாண்டுகள், இருபது ஆண்டுகள் முன்னோக்கி சிந்திக்கின்றனர். ஐம்பது, நூறு ஆண்டுகள் முன்னோக்கி சிந்தித்து செயற்பட்டோரும் உண்டு. இவர்களைத்தான் நாம் சமூகச் சிற்பிகள் என்கிறோம். தாங்கள் சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்தவற்றை பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில் வெற்றிகரமாக செயற்படுத்தி சமூகத்தை பல படிக்கட்டுகள் முன்னேற்றி விடுகிறார்கள்.

அரசியல் அரங்கில் விடுதலை, விடியல், வளர்ச்சி என்பனவெல்லாம் இதைத்தான் குறிக்கின்றது என நினைக்கின்றேன்.
சையதினா உமர் ஃபாரூக் அவர்கள் கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு அப்பால் சிந்தித்து செயற்பட்டார்கள் என்கிறார்கள் வரலாற்றியல் சமூக ஆய்வாளர்கள்.

அவ்வலிய்யாத்து உமர் என்றொரு நூல் தலைப்பே இருக்கின்றது.
உமர் அவர்கள் முதன்முதலில் செயற்படுத்தியவை எனப்பொருள். அதாவது வரலாற்றில் அதற்கு முன்பாக அப்படியொரு நடைமுறை இருந்திருக்காது. முதன்முறையாக உமர் அவர்கள்தான் ஆய்ந்து கண்டறிந்திருப்பார்கள். இந்த அவ்வலிய்யாத்களை நூற்றுக்கணக்கில் பட்டியல் போடுகின்றார்கள்.

நிற்க,
சமுதாய வழிகாட்டிகள், அறிஞர் பெருந்தகைகள் முதலியோருக்கு இந்த தொலைநோக்குப் பார்வை மிக மிக அவசியம்.
ஒருவருக்குக் கொடுக்கப்படும் திறமைக்கும் அவரிடமிருந்து பெறப்படும் சமூக ஊழியத்திற்கும் ஆழமான தொடர்பிருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்

அதுவும் இந்த தொலைநோக்குப் பார்வை பற்றி தனித்துக் குறிப்பிடும் நிறைமொழி நபிமொழி ஒன்று உண்டு. ஃபிறாஸத் என்னும் சொல் அதில் வருகின்றது.
இறை நம்பிக்கையாளரின் ஃபிறாஸத் பற்றி ஆர்வமூட்டுகின்றது அந்நபிமொழி.
ஃபிறாஸத் என்றால் மெய்யுணர் திறனருட் பார்வை என ஒரு நூலில் நான் மொழி பெயர்த்திருக்கின்றேன்.

இப்போது நம் வீட்டைக் கொஞ்சம் எட்டிப் பார்ப்போம்.

நம்மை – தமிழக முஸ்லிம்களை அல்லது இந்திய முஸ்லிம்களை – வழிநடத்தும் பொறுப்பில் உள்ளோருக்கு – வழிநடத்தும் பொறுப்பில் தாம் உள்ளதாக நினைத்துக் கொள்வோருக்கு – வழிநடத்தும் பொறுப்பில் தாம் இல்லையே என வருத்தப் படுகின்ற உலமாக்களுக்கு – (இந்த சொற்களை மிகவும் கவனமாக உள்ள நிலையை கருத்தில் கொண்டு தேர்வுசெய்துள்ளேன், வேறு பொருளில் எடுத்துக் கொள்ள வேண்டாம்) இந்த – ஃபிறாஸத் ஒரு பக்கம் இருக்கட்டும் – தொலை நோக்குப் பார்வை இருக்கின்றதா? ஆம் என்றால் வழிநடத்தப் போதுமான அளவுக்கு இருக்கின்றதா? என யாரேனும் ஆராய்ந்து பார்த்திருக்கிறார்களா? எனத் தெரியவில்லைஸ

நவீன அறிவியலிலும் தொழில் நுட்பங்களில்ம் உலகம் நாளும் பொழுதும் முன்னேறிக் கொள்வதை அன்றாடம் பார்த்துக் கொண்டுதான் உள்ளோம். அறிவியல், தொழில் நுட்ப தளங்களில் சந்தைக்கு வரும் எந்தவொரு புதிய கண்டுபிடிப்பையும் நமது மார்க்க அறிஞர்கள் கொஞ்சம் – கொஞ்சம் அல்ல, பயங்கரமான- ஒவ்வாமையோடுதான் அணுகுகின்றார்கள்.

பள்ளிவாசலில் சர விளக்குகளை தொங்கவிடக்கூடாது என தராவீஹ் தொழவைக்க வந்த ஸஹாரன்பூர் ஹாபிழ் சாஹிப் சொன்னதை நான் சிறுவயதில் எங்கள் பள்ளியில் கண்டுள்ளேன். இதுபோன்ற எண்ணற்ற உதாரணங்கள் உங்களுக்கே தெரியும்.

அறிவியல், கலை, நவீன தொழில் நுட்பம் எதுவாக இருப்பினும் மானுட குல பயன்பாட்டிற்கான இறைவன் அளிக்கின்ற அருட்கொடை அது என்கின்றது ஷரீஆ. ஆனால் ஷரீஅத்தைக் கற்றதாக சொல்வோரிடமும் ஷரீஅத்தின் வழியில் சமூகத்தை வழிநடத்துவதாக சொல்வோரிடம் இப்பார்வை இருப்பதில்லை. ஏனிந்த நிலை? (ஏனிந்த இழிநிலை? எனலாமா இல்லை ஏனிந்த மடமை? எனலாமா என்பதை நீங்களே முடித்துக் கொள்ளலாம்)

நாவல், கலை, சினிமா எல்லாவற்றையும் பகையாகத்தான் பார்த்துப் பழக்கம் நமக்கு, நம் அறிஞர் பெருந்தகைகளுக்கு. இன்று ஓடிடி-யில் என்னென்னமோ காணொளிகள், காண் காட்சிகள் கடைவிரிப்பதைப் பார்த்தால் ஏக்கமாகவும் ஆதங்கமாகவும் இருக்கின்றது.
இது கூடாது, அது கூடாது,
கூடாது கூடாது கூடாது கூடாது
கூடாது கூடாது என கூடா விதிகளை இயற்றும்
பெருமக்களாகவே அன்றுமுதல் இன்றுவரை திகழுகிறார்கள்
நம் அறிஞர் பெருமக்கள்.

இவற்றை பயன்படுத்துவது எங்ஙனம் என சிந்தித்து இவற்றைக் கையாளும் நடத்தை விதிமுறைகளை யாரும் வகுக்கக்காணோம்.
கூடாதவை ஒருபுறமிருக்க
சமூகச் செயல்பாடுகள் விஷயத்திலாவது நமக்கு
தொலை நோக்கு இருக்கின்றதா? என்றால்
இல்லவே இல்லை என அடித்துச் சொல்லாம்.
வேறு வழியில்லை, அப்படித்தான் இருக்கின்றது, நிலை.

பொதுச் சமூகத்தில் தலையெடுக்கும் பல விஷயங்கள், ஆளுமைகள் பற்றிக்கூட நம் வழிகாட்டிகள், அறிஞர்களிடம் தெளிவான பார்வையோ கண்ணோட்டமோ இல்லை.
சீமான் என்றொரு செந்தமிழர். அவருக்குப் பின்னால் எத்தனையோ முஸ்லிம் இளைஞர்கள்.
யார் இவர்? இவரது கருத்தியல் என்ன? இதனால் பிற்காலத்தில் என்னென்ன விளைவுகள் ஏற்படும்? ஏற்படக்கூடும்? என்றெல்லாம் சிந்திக்கின்ற, சிந்திப்பதை சமூகத்தின் முன்வைக்கின்ற தகைமைகள் உள்ளனவா? என தேடித்தேடிப் பார்த்து பெருமூச்சு விடவேண்டியிருக்கின்றது.

எத்தனையோ பேர் வருகிறார்கள், தங்கள் கடைகளை நமது வீதிகளில் விரிக்கிறார்கள். நமக்கு எதுவுமே தெரிவதில்லை.
கொஞ்ச காலம் சென்று ஏடாகூடமாக ஏதேனும் வெடித்துத் தகர்ந்த பின்னரே சுரணை பிறக்கின்றது. இது எந்த வகையான தோல் என்றே தெரிவதில்லை.

இதோ, யாரே ஒருவர் சபரிமாலா-வாம்.
தேடித் தேடிப்போய் மாணவிகளையும் பெண்களையும் பார்த்து பார்த்து வகுப்பு எடுக்கிறார்.
என்ன வகுப்பு? இஸ்லாமிய ஷரீஆ வகுப்பு.
யார் இவர்? எதற்காக நம் பிள்ளைகளுக்கு வகுப்பெடுக்கிறார்?
இவரது பின்புலம் என்ன? உள்நோக்கம் ஏதேனும் உண்டா?

யாராவது யோசிக்கிறார்களா?
இதற்கும் தெரியவில்லை-தான் பதில்.
ஆன்லைன் வகுப்பு பற்றிய போஸ்டர் ஒன்று வந்தவுடன் சிலபல ஆலிம்களுக்கு
சுள்ளென்று கோபம் வருகின்றது, தங்கள் சினத்தை எழுத்தில் வடிக்கிறார்கள்.

கண்களுக்கு முன்னால் என்னென்னவோ வித்தைகள் காட்டப்படுகின்றனவே,
இவற்றையெல்லாம் தொலைநோக்கோடு ஒருவர் கூடவா, சிந்தித்துப் பார்க்க மாட்டார்கள்?

ஊடுருவல் எப்படி எப்படியெல்லாமோ நடக்கின்றது.
விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது பள்ளிக்கூடப் பாடம்.
முளைத்து நச்சு விட்ட பிறகும்கூட தெரிய மாட்டேன் என்கின்றதே,
இதை என்னென்று சொல்ல? யாரிடம் போய் சொல்ல?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 5

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb