ஐரோப்பாவிற்கு தடுப்பூசி முறைகளை கற்றுக்கொடுத்த உதுமானிய கிலாஃபத்
உலகில் யார் எதை கண்டுபிடித்தாலும் அதை தங்களது கண்டுபிடிப்பாக முன்னிறுத்தும் கயமைத்தனம் ஐரோப்பியர்களின் உடன்பிறந்த குணம்.
பிரிட்டனில் பிறந்த எட்வர்ட் ஜென்னர் 1798 இல் அம்மை நோய்க்கான தடுப்பூசியை அறிமுகம் செய்ததிலிருந்து தான் அதன் வரலாறு துவங்குகிறது என்பது அந்த கயமைத்தனங்களில் ஒன்று.
16 ஆம் நூற்றாண்டு துவங்கி ஐரோப்பியர்கள் அமெரிக்க கண்டத்தில் அம்மை நோயை பரப்பி அங்கே வாழ்ந்த ஆயிரக்கணக்கான பூர்வகுடி செவ்விந்தியர்களை கொலை செய்த வரலாறை யெல்லாம் இதுபோன்று கயமைத்தன கதைகள் மறைத்துவிடும் என்று நம்புகின்றனர்.
தடுப்பூசியை கண்டுபிடித்தவர் என்று சொல்லப்படும் பிரிட்டனைச் சேர்ந்த எட்வர்ட் ஜென்னர் பிறப்பதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்பாகவே, பெருகியிருந்த அம்மை நோய்க்கு பல வடிவங்களில் தடுப்பு முறைகளை கையாண்ட பாரம்பரியம் கீழைத்தேய மருத்துவ மரபிற்கு இருக்கிறது.
அதில் ஒன்று அம்மை நோய் காயத்திலிருந்து பாலை குத்தி எடுத்து பிள்ளைகளுக்கு செலுத்தும் முறை.இது 18 ஆம் நூற்றாண்டில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு ஆசிய ஆப்ரிக்க நாடுகளில் பரவலாக பின்பற்றப்பட்டு வந்த சிகிச்சை முறை.
ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் யுரேசியா பகுதியான துருக்கி – கான்ஸ்டான்டி நோபிளில் அதாவது அன்றைய உதுமானிய கிலாஃபத்திற்குட்பட்ட கிராமங்களில் கூட இந்த அம்மைநோய் தடுப்பு முறை பின்பற்றப்பட்டு வந்துள்ளதை உதுமானிய பேரரசின் மருத்துவ வரலாறு கூறுகிறது.
1750 இல் உதுமானிய பேரரசின் தலைநகரில் பிரிட்டனின் தூதராக பணியாற்றிய எட்வர்ட் மாண்டேகுவின் மனைவி மேரி மாண்டேகு அவர்கள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு துருக்கி வந்தபோது அங்கே மக்கள் நோய் குறித்து எந்த அச்சமும் இல்லாமல் இருப்பதை கண்டார்.
இது குறித்து 1761 இல் இவர் எழுதிய கடிதத்தில் துருக்கியில் வயதான பெண்மணிகள் அம்மை நோய்க்கான தடுப்பூசிகள் போடுவதை முழுநேரத் தொழிலாக செய்கின்றனர். அது மக்களை அம்மை நோயிலிருந்து பெரிதும் தடுக்கிறது அதனால் என் பிள்ளைகளுக்கும் போட்டுக்கொண்டேன் என்று எழுதுகிறார்.
இந்த பெண்மணியின் கடிதம் மற்றும் தொடர் முயற்சியின் காரணமாக 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உதுமானிய கிலாஃபத்திலிருந்து தான் ஐரோப்பாவிற்கு அம்மைநோய் தடுப்பூசிமுறை அறிமுகமாகியது.
அதன் தொடர்ச்சிதான் எட்வர்ட் ஜென்னரின் கண்டுபிடிப்பு.
மனிதனுக்கு ஏற்பட்ட அம்மைநோய் கிருமியிலிருந்து எடுக்கப்படும் உதுமானிய மற்றும் கீழைத்தேய முறையிலிருந்து சற்று மாறுபட்ட எட்வர்ட் ஜென்னர் 1798 இல் மாட்டிலிருந்து (Cowpox) எடுக்கப்பட்ட அம்மை நோய்க்கிருமிகளை கொண்ட தடுப்பூசியை லண்டனில் அறிமுகம் செய்தார்.
இந்த எட்வர்ட் ஜென்னர் கூட துருக்கியில் பின்பற்றப்பட்ட முறையில் அம்மை நோய்க்கான தடுப்பூசியை போட்டுக்கொண்டவர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
6 ஆண்டுகள் கழித்து எட்வர்ட் ஜென்னரின் தடுப்பூசியை கிழக்கிந்திய கம்பெனியினர் திப்பு சுல்தானை வீழ்த்திய தென்னிந்திய பகுதி மக்களிடம் தான் முதன்முதலில் சோதித்துப் பார்த்துள்ளனர்.
நோய்த் தடுப்பில் ஏராளமான முறைகள் பன்னெடுங்காலமாக உலகின் பாரம்பரிய மருத்துவத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பதையும், அவை அனைத்தும் பின்பற்றத்தக்கவை தான் என்பதையும் ஐரோப்பிய உத்தமர்கள் தவறுதலாக கூட சொல்லிவிட மாட்டார்கள்.
ஐரோப்பியர்கள் செய்கின்ற அத்தனையையும் எழுதிவைத்து பாதுகாப்பார்கள்.ஆனால் நாமோ 9 வேலைகளைச் செய்தால் ஒன்றைக்கூட உருப்படியாக எழுதிவைப்பதுமில்லை அதை வெளியே சொல்வதுமில்லை என்ற ஆதங்கத்தை உதுமானிய கிலாஃபத்தின் மருத்துவர்கள் வேதனையோடு எழுதிவைத்துள்ளனர்.
ம்ம்ம்…… அதையெல்லாம் உருப்படியாக செய்திருந்தால் முஸ்லிம் உம்மத்திற்கு இந்த அவலங்கள் அவமானங்கள் ஏற்பட்டிருக்காது.
– Cmn Saleem
Source :
http://www.t-vine.com/an-ottoman-history-of-vaccination/
https://time.com/5542895/mary-montagu-smallpox/