ரமளானும் திக்ரும்
ஸய்யித் அப்துர் ரஹ்மான் உமரி
திக்ரு எனும் தலைப்பின் கீழ்வரும் இந்நான்கையும் ரமளான் மாதத்தில் முழுமையாக வெளிப்படுத்தியாக வேண்டும்.
நபிகளாரின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அழகிய முன்மாதிரி வாழ்க்கை இதனையே நமக்குப் போதிக்கின்றது
‘காலையிலும், மாலையிலும் அவனைத் துதித்துக் கொண்டிருங்கள். அவனே உங்கள் மீது கருணை பொழிகிறான்’. (அல்குர்ஆன் 33:42)
(நபியே!) நாம் உம்மைச் சான்று வழங்குபவராகவும் நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியிருக்கிறோம்;
(எதற்காக வெனில் மக்களே!) நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும் நம்பிக்கை கொள்வதற்காகவும்,
அவருக்கு (தூதருக்கு) உறுதுணையாய் இருப்பதற்காகவும், அவரைக் கண்ணியப்படுத்துவதற்காகவும் மேலும்,
காலையிலும் மாலையிலும் நீங்கள் அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டிருப்பதற்காகவும் தான்! (அல்குர்ஆன் 48:8,9)
காலையிலும் மாலையிலும் உங்கள் இறைவனின் பெயரை நினைவு கூர்ந்துகொண்டிருங்கள் (76:25)
அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூர்ந்த வண்ணம் இருங்கள். (அல்குர்ஆன் 62:10)
என்னை நினைவுகூர்வதில் நீங்கள் குறைபாடு செய்து விடக்கூடாது. (அல்குர்ஆன் 20:42)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: ‘உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்:
என்னடியான் என்னைப்பற்றி எவ்வாறு நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்து கொள்கிறேன்.
அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன்.
அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன்.
அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழமளவுக்கு அவனை நெருங்குவேன்.
அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன்.
அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச்செல்வேன். (அபூ ஹுரைரா, புகாரி)
2. இகாமத்துஷ் ஷரீஆ
(இறைமார்க்கத்தை நிலைநாட்டல்)
நன்றிமிக்க அடியான் இவ்வுலகத்தின் நிலையைக் கண்டு பொருமுகின்றான். இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் அவனது வழிகாட்டலை விட்டு விட்டு வேறுவேறு கண்ட கண்ட வழிகாட்டுதல்களை எல்லாம் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அல்லாஹ்வுக்கு மட்டுமே ஸஜ்தா செய்வதை விட்டு விட்டு கண்டவர்களுக்கு எல்லாம் கண்ட கண்ட கொள்கைகள், கோட்பாடுகளுக்கெல்லாம் ஸஜ்தா செய்து வருகிறார்கள்.
இந்நிலையை மாற்றியமைத்தாக வேண்டும் என அவன் உள்ளத்தில் நிரம்பியுள்ள நன்றியுணர்வு அவனைத் தூண்டுகின்றது
தன் உள்ளத்து நன்றியுணர்வு வெளிப்படுத்துவது, வான்மறை குர்ஆனில் அப்படியே பிரதிபலிப்பதை யும் அவன் பார்க்கின்றான்.
‘இனி மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காக தோற் றுவிக்கப் பட்டிருக்கும் மிகச் சிறந்த சமூகத்தவராய் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகின்றீர்கள்; தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள். மேலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றீர் கள்’ (அல்குர்ஆன் 3:110)
ஏவவேண்டிய முதல் நன்மை எது?
இதுதான்!
உன்னைப் படைத்த இறைவன் ஒருவனுக்கே அடிமையாக இரு!
உன்னைப் படைத்த இறைவன் ஒருவனுடைய வழி காட்டுதலையே பின்பற்று!
3. நஹ்யுல்முன்கராத் (தீமைகளைத் தடுத்தல்)
அல்லாஹ் படைத்த பூமியில் அல்லாஹ் வெறுக்கும் விஷயங்கள் எதுவும் நடைபெறக்கூடாது. அல்லாஹ்வால் படைக்கப்பட்ட மனிதர்கள் அவனுக்குப் பிடிக்காத செயல்களைச் செய்யலாகாது.
இறைநம்பிக்கையாளரின் நன்றியுணர்வு ஊக்குவிக்கின்ற அடுத்த செயல் தூண்டுதல் இது!
‘தீமைகளில் இருந்து தடுத்து நிறுத்துங்கள்’ என்னும் ஆணையை வான்மறை குர்ஆன் பலவிடங்களிலும் வழங்குகின்றது.
ஷரீஅத்தை நிலைநாட்டுவது, தீமைகளைத் தடுத்து நிறுத்துவது ஆகிய இவ்விரண்டும் ‘வல்ல இறைவ னின் பெருமையைப் பறைசாற்றுவது’ (அத்தக்பீர்) என்னும் கருத்தை அட்டகாசமாக பிரதிபலிக்கின்றன.
4. அத்தாஅத்துல் காமிலா பிர்ரிழா
(உவப்போடு கூடிய முழுக் கட்டுப்பாடு)
நன்றியுணர்வால் விளைகின்ற கடைசி மகசூல் இது!
இறைவனுக்கே முழுமையாகக் கட்டுப்பட்டு வாழ்வது, நிறைவான இதாஅத்.
‘(நபியே!) நாம் இந்த வேதத்தை உம்மீது சத்தியத்துடன் இறக்கி இருக்கிறோம். எனவே நீர் அல்லாஹ் வையே வழிபடும். தீனை கீழ்ப்படிதலை அவனுக்கே உரித்தாக்கிய நிலையில்!’ (அல்குர்ஆன் 39:2)
இறைவன் ஒருவனுக்கே முழுமையாகக் கட்டுப்பட்ட வாழ்வதற்கான பயிற்சியை நோன்பு நமக்கு வழங்குகின்றது.
அதுமட்டுமல்ல, இறைவன் ஒருவனுக்கே கட்டுப்பட்டு வாழ்வதை நிராகரிப்பாளர்கள் மனதார ஏற்கவே மாட்டார்கள். ஏதாவது ஒரு வகையில் இடையூறுகளை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.
இறைவனின் தூய அடிமைகளை அவர்கள் சகித்துக் கொள்ளவே மாட்டார்கள். அந்த இடையூறுகளை எதிர்கொண்டு நிமிர்ந்துநின்று இறைவனுக்கு மட்டுமே அடிமையாக வாழத் தேவையான மனவலிமையையும் நோன்பு நமக்கு அளிக்கின்றது.
‘எனவே (அல்லாஹ்வின் பக்கம் திரும்புகின்றவர்களே!) உங்கள் தீனை (முழுமையான கீழ்ப்படிதலை) அல்லாஹ்வுக்கே உரித்தாக்கிய வண்ணம் அவனையே அழையுங்கள்; உங்களுடைய இந்தச் செயல் இறைநிராகரிப்பாளர்களுக்கு எவ்வளவு வெறுப் பூட்டக்கூடியதாய் இருந்தாலும் சரியே!’ (40:14)
source: https://www.facebook.com/photo/?fbid=1536331776571212&set=a.138724279665309