Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஜீவராசிகளின் விஷம் – மருந்து

Posted on March 29, 2021 by admin

ஜீவராசிகளின் விஷம் – மருந்து

      ரஹ்மத் ராஜகுமாரன்       

( குகையில் நாகம் ஒன்று அபூபக்கர் சித்திக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைத் தீண்டியபோது…..)

பாம்பு, தேள் என்ற உடனே அவற்றின் விஷத்தன்மை நம் நினைவுக்கு வரும். இந்த உயிரினங்களுக்கு இரையை வேட்டையாடுவது, தற்காப்புக்கு என்று பொதுவாக 2 செயல்பாடுகளுக்கு விஷம் பயன்படுகிறது.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சியில் நஞ்சு பலவித மாறுதல்களுக்கு உள்ளாகி, ஒவ்வோர் உயிரினத்தின் தேவைக்குத் தகுந்தாற்போல் தகவமைக்கப்பட்டு உள்ளது.

நஞ்சு என்பது ஒரே ஒரு வேதிப்பொருள் அல்ல; உயிரியல் ரீதியான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பல பொருட்கள் அடங்கியது. குறிப்பாக புரதங்களின் கலவை. அதில் இருக்கும் ஒவ்வொரு சேர்மத்துக்கும் அதன் ஒட்டுமொத்த செயல்பாட்டில் பங்கு உண்டு.

ஒட்டுமொத்தமாக நஞ்சு உடலுக்கும் உயிருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்றாலும், அதில் உள்ள சில பொருட்களுக்கு அபாரமான மருத்துவ பண்புகளும் உள்ளன.

பிற உயிர்களிடத்தில் குறிப்பிட்ட ஓர் நஞ்சு ஏற்படுத்தும் வினையை ஆராய முயன்றபோது, நஞ்சில் இருக்கும் பொருட்களின் தனிப்பட்ட செயல்முறை, அவற்றின் மருத்துவப் பயன் ஆகியவை கண்டறியப்பட்டன.

எடுத்துக்காட்டாக, விரியன் வகைப் பாம்பு ஒன்றின் நஞ்சில் இருக்கும் பொருளுக்கு, ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் உண்டு. அதன் நஞ்சில் இருந்து அந்த பொருளைப் பிரித்து ஆராய்ந்து, செயற்கையாகத் தயாரித்து ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.

விஷ முறிவு மருந்து என்பது பாம்பின் நஞ்சிலிருந்தே தயாரிக்கப்படுகிறது. பாம்பிலிருந்து எடுக்கப்பட்ட நஞ்சானது நீர்த்துப்போகச் செய்யப்பட்டு பின்னர் குதிரைகள் அல்லது செம்மறி ஆடுகளில் செலுத்தப்பட்டு, அதன் உடலில் உருவாகும் நோய் எதிர்ப்புச் சக்திகளைப் பிரித்தெடுத்து, அதிலிருந்து விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படுகிறது.

தேள் வகை கொடிய நஞ்சைக் கொண்டது. அதன் நஞ்சில் இருக்கும் சில பொருட்கள், மனித உடலின் புற்றுச் செல்களோடு பிணைந்துகொள்கின்றன; அந்த நஞ்சுக்கு உள்ள ஒரு சிறப்பு பண்பு, குறிப்பிட்ட நிறத்தில் அவற்றை ஒளிரச் செய்வதுதான். மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அறுவை சிகிச்சையின்போது அந்த பொருளைச் செலுத்தி, புற்றுச் செல்களோடு அவற்றைப் பிணைந்து கொள்ளச்செய்து, பின்னர் ஒளிரும் செல்களை மட்டும் நீக்குகிறார்கள். இதன்மூலம் ஆரோக்கியமான செல்கள் நீக்கப்படுவதோ புற்றுச் செல்கள் விடுபட்டுப் போவதோ தவிர்க்கப்படுகிறது.

நரம்பு மண்டலத்தை தாக்கும் நஞ்சு வகைகள் பலவற்றில், நாள்பட்ட வலியைப் போக்கக்கூடிய வலிநிவாரணிகள் உண்டு. கூம்பு நத்தைகள் என்ற கடல்வாழ் நத்தைகள் மிக வீரியமான நஞ்சைக் கொண்டவை; கொனோடாக்சின் என்று அழைக்கப்படும் பொருள் அவற்றில் உண்டு. அவை வலியைக் கடத்தும் நரம்புகளை முடக்கி, வலி சமிக்ஞைகள் மூளைக்குச் சென்றடைவதை தடுக்கின்றன.

வலிநிவாரணிகள் தயாரிப்பில் சில நாடுகள் இவற்றை பயன்படுத்துவதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஒரு வரலாற்றுப்பொன்னேடு

இறைக்கட்டளைப்படி நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தோழர் அபூபக்கர் சித்திக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் மக்காவில் இருந்து மதீனாவுக்கு புலம் பெயர்ந்து சென்றார்கள். இந்த நிகழ்ச்சி ‘ஹிஜரத்’ என்று அழைக்கப்பட்டது.

அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அபூபக்கரும் பாலைவனத்தில் மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்தார்கள். கிட்டத்தட்ட பாதி தூரம் சென்றவர்கள், அந்த பாலைவனத்தைக் கடந்து தவர் மலையில் உள்ள ஒரு குகையை அடைந்தார்கள்.

அந்த குகை மிகவும் பழமை வாய்ந்த பள்ளதாக்கில் இருந்ததால் மிகவும் சிரமப்பட்டு இருவரும் அதில் ஏறினார்கள். தங்களது கால்தடங்கள் கூட தங்களை எதிரிகளிடம் காட்டிக்கொடுத்து விடும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அஞ்சினார்கள். எனவே அவர்கள் தங்களது கால்விரல் நுனியிலேயே நடந்து வந்தார்கள். இதனால் அவர்களது கால் விரல் வெப்பத்தினால் வெந்து காயங்கள் ஏற்பட்டு ரத்தம் கசிய ஆரம்பித்தது.

அதனைக் கண்ணுற்ற அபூபக்கர் சித்திக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தனது தோள்களில் தூக்கி வைத்துக்கொண்டு அந்த குகையை நோக்கி நடந்தார்கள்.

குகைக்குச் சென்றதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வெளியே இருக்கச் செய்து விட்டு, தான் மட்டும் உள்ளே நுழைந்தார்கள். அந்த குகை மிகவும் சிறியதாக இருந்தது. இரண்டு நபர்கள் படுப்பதற்கும் மூன்று அல்லது நான்கு நபர்கள் அமரும் இடவசதி கொண்டது.

உள்ளே சென்ற அபூபக்கர் சித்திக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் குகையை நன்றாக சுத்தம் செய்தார்கள். குகைகளில் இருந்த ஏராளமான துவாரங்களை தங்களுடைய ஆடையை கிழித்து கிழித்து அடைத்தார்கள். பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உள்ளே அழைத்தார்கள். அண்ணலார் உள்ளே சென்றதும், களைப்பின் மிகுதியால் அப்படியே துயில் கொள்ள ஆரம்பித்தார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தலையை தன் மடியில் சாய்த்துக்கொண்ட அபூபக்கர் சித்திக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், கிழித்து அடைக்க ஆடை இல்லாததால் தன்னுடைய கால் விரல்களால் மீதமிருந்த இரண்டு துவாரங்களையும் அடைத்துக் கொண்டார்கள்.

துரதிர்ஷ்டவசமாக அந்த துவாரத்தில் இருந்த நாகம் ஒன்று அபூபக்கர் சித்திக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் பாதங்களை தீண்டி விட்டது. கொடிய விஷம் உடலில் ஏறியதால் சொல்லொண்ணா வலியும் வேதனையும் ஏற்பட்டது. கால்களை அசைத்தால் அது அண்ணலாரின் தூக்கத்தை கெடுத்து விடும் என்று நினைத்து, வலியை பொறுத்துக் கொண்டு அமைதியாக இருந்தார்கள்.

ஆனால், வலியின் வேதனையில் அவர்களது கண்ணிலிருந்து வழிந்தோடிய கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. சில கண்ணீர்த்துளிகள் வழிந்தோடி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கன்னங்களில் பட்டு தெறித்தது.

உடனே விழித்துக்கொண்ட அண்ணலார், ‘அபூபக்கரே! என்ன நேர்ந்தது?’ என வினவினார்கள்.

அபூபக்கர் சித்திக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ‘அண்ணலே! எனது காலில் ஏதோ விஷ ஜந்து தீண்டி விட்டது போல் தெரிகிறது. வலியையும் வேதனையையும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை’ என்றார்கள்.

உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் உமிழ் நீரை எடுத்து கடிபட்ட இடத்தில் தடவினார்கள். என்னே ஆச்சர்யம்! உடனே அபூபக்கர் சித்திக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வலியும் வேதனையும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது.

விஷ முறிவு மருந்து என்பது பாம்பின் நஞ்சிலிருந்தே தயாரிக்கப்படுகிறது. பாம்பிலிருந்து எடுக்கப்பட்ட நஞ்சானது நீர்த்துப்போகச் செய்யப்பட்டு பின்னர் குதிரைகள் அல்லது செம்மறி ஆடுகளில் செலுத்தப்பட்டு, அதன் உடலில் உருவாகும் நோய் எதிர்ப்புச் சக்திகளைப் பிரித்தெடுத்து, அதிலிருந்து விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படுகிறது.

ஜீவராசிகளின் விஷம் வியாதிகளுக்கு மருந்தாகுவதையும், வலி நிவாரணியாகுவதையும் விஞ்ஞானம் கண்டு பிடித்திருக்கிறது. அந்த ஜீவராசிகளின் விஷத்தையும், அதனால் ஏற்படும் வலியை போக்கும் நிவாரணியாக அண்ணலெம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உமிழ்நீர் இருந்ததை என்னென்று சொல்வது?

– ரஹ்மத் ராஜகுமாரன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

88 − = 79

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb