Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

காலியாகிறது இந்திய கஜானா…!

Posted on March 24, 2021 by admin

காலியாகிறது இந்திய கஜானா…!

கடந்த 30 ஆண்டுகளில் முதன் முதலாக இந்திய ரிசர்வ் வங்கி தன்னிடம் இருப்பு வைத்துள்ள தங்கத்தை (சுமார் 28 டன்) விற்பனை செய்துள்ளது.

மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு ஏற்கெனவே 1.76 லட்சம் கோடி ₹ ரிசர்வ் வங்கி வழங்கியும் நிதிப் பற்றாக் குறை சீரடையவில்லை. இதனால் இருப்பு வைக்கப் பட்டுள்ள தங்கத்தை விற்பனை செய்து அதன் மூலம் வரும் லாபத்தை மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள ரிசர்வ் வங்கி முடிவு செய்தது.

இதன்படி ஏற்கெனவே 1.15 பில்லியன் டாலர் அளவுக்கான தங்கம் விற்பனை செய்யப்பட்டு விட்டது.

ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்கப் பட்டுள்ள தங்கத்தின் அடிப்படையிலேயே உலக வங்கியிடம் கடன் வாங்க முடியும்.

தற்போது தங்கம் விற்கப் படுவதால் மேற்கொண்டு கடன் பெறுவது மற்றும் கடனை அடைப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

ஏற்கெனவே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிந்து கொண்டிருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கியின் கையிருப்பும் கரைந்து வருவதால் இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து பொருளாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

2019-ம் ஆண்டு இந்தியாவின் நிதிப் பற்றாக் குறை பட்டவர்த்தனமாக தெரிய வந்தது. எனவே, நாட்டின் பொருளாதார நிலையை மேலும் மூடி மறைக்க முடியாத நரேந்நிர மோடி தலைமையிலான அரசு நிதிச் சுமையை சரிசெய்ய பிமல் ஜலான் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.

தற்போது இந்த ஜலான் குழு தான் ரிசர்வ் வங்கியின் தங்கத்தை விற்கும் ஒரு ஆலோசனையை வழங்கி நாட்டை திவாலாக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.

ஜலான் குழு ஆலோசனைப் படி ரிசர்வ் வங்கி 1.987 மில்லியன் அவுன்ஸ் தங்கத்தை (28377.981Kg) விற்பனை செய்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க கட்சி வேறுபாடுகள் இன்றி நிபுணர்களின் கருத்துகளை கேட்டு செயல்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தி இருந்தார்.
மேலும், நாட்டின் பொருளாதார நிலை மோசமடைந்து வருவதை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பல முறை சுட்டிக் காட்டினார்.

ஆனால் எதற்குமே செவி சாய்க்காத மோடி அரசு, பொருளாதார மந்த நிலைக்கு ஊபர், ஓலா நிறுவனங்கள் தான் காரணம் என்று சப்பை கட்டு கட்டி தங்களுடைய பொருளாதாரக் கொள்கையின் தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்தது.

இதன் விளைவாக தற்போது நாட்டின் அடிப்படை ஆதாரமான ரிசர்வ் வங்கியின் தங்கத்திலேயே கை வைத்து நாட்டை திவலாக்கும் நிலைக்கு மோடி அரசு இட்டுச் சென்றுள்ளது.

Source : The New Indian Express

ஆன்திஸ்டே

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 3

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb