Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

வசதிகள் வைத்து திருமணம் முடிக்கப்பட்டால் அது வியாபாரம்

Posted on March 2, 2021 by admin

வசதிகள் வைத்து திருமணம் முடிக்கப்பட்டால் அது வியாபாரம்

35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 50க்கும் மேற்பட்ட ஆண்மகன்கள் உள்ளார்கள்..

30 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் 50க்கும் மேற்பட்ட பெண்களும் உள்ளனர்.

இதற்கு சொத்து மதிப்பும் வரட்டு கௌரவமுமே காரணம். அதாவது மாப்பிள்ளைக்கு அடிப்படை சொத்து, விவசாய தோட்டம் 7 ஏக்கருக்கு மேல் இருக்க வேண்டும். அல்லது வெளிநாட்டு மாப்பிள்ளை!

அவரே Post graduate degree முடித்து, வங்கி.. ஆசிரியை.. சென்னை, பெங்களூரீல் IT கம்பெனியில் வேலையில் இருக்க வேண்டும் அல்லது வெளிநாட்டில் வேலையில் இருக்க வேண்டும்.

குறைந்தது 40,000க்கும் மேல் சம்பளம் வாங்க வேண்டும்.

பல இளைஞர்கள் படித்த படிப்பிற்கேற்ற தகுதியான வேலை கிடைக்காததால், சுயதொழில் செய்து வருகின்றனர். சுயதொழில் செய்யும் ஆண்களை திருமணம் செய்துகொள்ள பெண்கள் விரும்புவதில்லை. பெண் வீட்டாரும் விரும்புவதில்லை..

வீட்டுக்கு ஒரே பையனா இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும்.

1995 வரை திருமணம் செய்தவர்கள் சொத்து, உத்தியோகம், தகுதி பார்த்துதான் திருமணம் செய்வேன் என்று சொல்லி இருந்தால் இந்த தலைமுறையே இருந்து இருக்காது.

இதில் இப்போ என்ன பிரச்சனை என்றால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதால் திருமண வயதை கடந்தும் ஆணும், பெண்ணும் அதிகமாக இருப்பதுதான்.

சரி இதன் விளைவு என்ன என்று பார்ப்போம்…

1960 முன்பு வரை ஒவ்வொரு கிராமத்திலும் பலருக்கு 10 குழந்தைகள், 8 குழந்தைகள், குறைந்தது 5 குழந்தைகள் சர்வ சாதாரணமாக பெற்றுக்கொண்டார்கள்.

1980க்கு பின் 100ல் 80 குடும்பம் இரண்டு குழந்தைகள், எங்காவது ஒரு சில குடும்பத்தில் மூன்று குழந்தைகள் உண்டு.

2000க்கு பின் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைதான் என்பது எழுதப்படாத தீர்ப்பாக மாறிவிட்டது.

ஆனால், 2010க்கு பின் ஒரு குழந்தை வேண்டுமே இறைவா என்று போகாத இடம் இல்லை, பார்க்காத மருத்துவமும் இல்லை. என்ற நிலையில் உள்ளோம்.

இதற்கு அறிவியல் ஆயிரம் காரணம் சொல்லலாம், ஆனால் முதல் காரணம் ஆரோக்கியம்.

1960 வரை பெண்ணுக்கு 16, ஆணுக்கு 20ல் திருமணம் உணவு: ராகி, கம்பு, சோளம்.

1975க்கு மேல் பெண்ணுக்கு 18, ஆணுக்கு 22 உணவு: அரிசி .அரிச மா மரவள்ளி

1992க்கு மேல் பெண்ணுக்கு 20, ஆணுக்கு 25 உணவு: பட்டை தீட்டப்பட்ட அரிசி.

2000க்கு மேல் பெண்ணுக்கு 25, ஆணுக்கு 30க்குள்.. உணவு: துரித உணவு.

2010க்கு மேல்
உணவு: மைதா மாவில் தயாரித்த உணவு, வெள்ளை சர்க்கரை பயன்பாடு அதிகம். தரம் குறைந்த எண்ணெய் என மனித இனம் நோய் மற்றும் மலட்டுத்தன்மை தாக்கத்தில் இருக்கிறோம்.

இந்நிலையில் 28க்கு மேல் 35 வயது வரையிலும் திருமணம் ஆகாமல் பெண்கள் அதிகளவில் இருக்கிறார்கள்.

ஆண்கள் 30 வயது முதல் 40 வயது வரை திருமணம் ஆகாமல் உள்ளார்கள்.

வசதிகள் வைத்து திருமணம் முடிக்கப்பட்டால் அது வியாபாரம்.

திருமணத்துக்கு முன் ஏழையாக இருந்து, பிற்காலத்தில் பணம் புகழ்பெற்ற மனிதர்கள் ஏராளம். முதலில் சொத்து சுகம் என வாழ்ந்து திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் ஏழ்மைக்கு வந்தவர்கள் அதிகம்.

எனவே, வரும்காலம் இப்படிதான் இருக்கும் என்று தீர்மானம் செய்யாமல், நல்லதை மற்றும் நினைத்து மனங்கள் பிடித்தால் மணம் செய்யலாம்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். குடும்பம் என்பது எவ்வளவு முக்கியம் அதற்கு பணம் தேவைதான். ஆனால், பணத்தால் வாழ்க்கையை இழந்துவிடக் கூடாது.

சரியான கல்வியறிவு, நல்லொழுக்கம், நற்குணம், நல்ல சுறுசுறுப்பு, உழைக்கும் மனப்பான்மை உள்ள மாப்பிள்ளையா, பெண்ணா என கண்டறிந்து மனமுடியுங்கள்… வாழ்க்கை இனிமையாகும்…

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 3

Categories

Archives

Recent Posts

  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb