Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஒட்டகமும் பாவோபாப் மரங்களும்

Posted on February 28, 2021 by admin

ஒட்டகமும் பாவோபாப் மரங்களும்

       ரஹ்மத் ராஜகுமாரன்     

ஒட்டகம் பாலைவனத்தில் வாழ்பவை என்பது உங்களுக்கு தெரிந்ததுதான் . பொதுவாக பாலைவனத்தில் வசிக்கும் பிராணிகள் தன் உணவில் இருந்து நீரை எடுத்து கொள்ளும். ஆனால், இதற்கு மாறாக ஒட்டகமோ நீரூற்றில் இருந்துதான் நீரை எடுத்து கொள்ளும்.

தண்ணீர் கிடைத்துவிட்டால் 10 நிமிடத்தில் 123 லிட்டர் நீரை ஒரே மூச்சில் உறிஞ்சிவிடும். எவ்வளவு தூரம் வெயிலில் நடந்தாலும் இவற்றிற்கு வியர்த்து போகாது.

இரண்டு வகை ஒட்டகம் உள்ளது. ஒருவகை ஒரு முதுகு உடையது; மற்றொன்று இரண்டு முதுகு உடையது. இரண்டுமே நீரில் நன்றாக நீந்தும். 70-80 லிட்டர் தண்ணீர் குடிக்கும் ஒட்டகத்துக்கு மூன்று வயிறுகள்.

முதல் வயிற்றில் உணவை சேகரிக்கும். இரண்டாவது வயிற்றில் திரவ சுரப்புகள் இருக்கும். மூன்றாவதில் அசை போடப்பட்ட உணவு ஜீரணமாகும்.

முதல் இரண்டு வயிற்றில் உள்ள பைகளில் தண்ணீரை நிறைய சேமித்து வைத்து கொள்ளும். அந்த பைகளில் நீர் நிரம்பியவுடன் தசைகள் மூடிவிடும். தண்ணீர் தேவைப்படும் போது திறந்து சுரக்கும்.

 ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகளில் இரத்தத்திற்கும் சாணத்திற்கும் இடையில் அதன் வயிற்றில் இருந்து கலப்பற்ற பாலை இறைவன் சுரக்க செய்கிறான் என்பதாக குர்ஆனில் அல்லாஹ்;

وَاِنَّ لَـكُمْ فِىْ الْاَنْعَامِ لَعِبْرَةً‌ نُّسْقِيْكُمْ مِّمَّا فِىْ بُطُوْنِهٖ مِنْ بَيْنِ فَرْثٍ وَّدَمٍ لَّبَنًا خَالِصًا سَآٮِٕغًا لِّلشّٰرِبِيْنَ‏

(ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளிலும் உங்களுக்கு ஒரு படிப்பினை உண்டு.

இரத்தத்திற்கும் சாணத்திற்கும் இடையில் அதன் வயிற்றில் இருந்து

கலப்பற்ற பாலை (உற்பத்தி செய்து) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம்.

அது அருந்து பவர்களுக்கு மிக்க இன்பகரமானது. (குர்ஆன் : 16:66)

ஆனால் ஒட்டகத்தின் வயிற்றில் மட்டும் தண்ணீர் சேமித்து வைத்திருக்க பை போன்ற ‘வாட்டர்டேங்க்’ கையும் சேர்த்தே இறைவன் படைத்திருக்கிறான்.

பாலைவனப் பயணத்தின்போது குடிநீர் காலியாகி, கிடைக்காமல் போனால் , பயணிகள் பயணம் செய்யும் ஒட்டகங்களில் ஒன்றை அறுத்து அதன் வயிற்றிலிருக்கும் நீரை குடிநீராகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஒட்டகம் மாதிரி இறைவன் ஒருவித மரத்தையும் படைத்துள்ளேன்.

மடகாஸ்கர் தீவில் இருக்கும் Baobab (பாவோபாப்) மரங்கள் தான் உலகில் மிகப்பெரிய மரங்கள். உயரத்தில் அல்ல, சுற்றளவில். இந்த மரங்களின் உயரம் என்னவோ 15லிருந்து 98 அடி தான். ஆனால் மரத்தின் சுற்றளவும் அதிகபட்சமாக 154 அடிகள் வரை இருக்கும்.

இவற்றின் மற்றொரு ஸ்பெஷல் என்ன தெரியுமா? மரத்தின் அடிப்பகுதி மூங்கில் மாதிரி வெற்றிடம் கொண்டதாகவும், அந்த வெற்றிடத்தில் நீர் நிறைந்தும் இருக்கும். ஒரு பெரிய Baobab மரத்தில் 1,20,000 லிட்டர்கள் நீர் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். கோடை காலங்களில் இந்த நீர் ஆவியாக மாறிவிடாமல் மரங்களே பாதுகாக்கின்றன.

மடகாஸ்கர் தீவிலிருக்கும் மக்கள் வறட்சிக்காலங்களில் இம்மரங்களிலிருக்கும் நீரை அருந்துகின்றனர். மரங்கள் இறந்துவிட்டால், அடிப்பகுதியைத் தண்ணீர் சேமித்து வைக்க உபயோகப்படுத்துகின்றனர். 1000 வருடங்கள் பழமையான மரங்கள் இத்தீவில் இருக்கின்றன என்று சொல்லப்பட்டாலும், அதை நிரூபிக்க ஆதாரம் ஏதும் இல்லை..ஏனென்றால், மரங்களின் வயதைக் கணக்கிடும் growth rings பாவோபாப் மரங்களில் கிடையாது.

இறை வல்லமை என்னவென்று சொல்வது ?

– ரஹ்மத் ராஜகுமாரன்

source: https://www.facebook.com/photo/?fbid=2848508605408476&set=a.1412423615683656

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

23 − 16 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb