உமர் இப்னு கத்தாப் அல் ஃபாரூக் ரளியல்லாஹு அன்ஹு – அதிசயத்தக்க மகத்தான சாதனையாளர்
உலக முடிவு நாள் வரையிலும், ஒரேயொரு முஸ்லிம் இப்புவியில் உயிரோடு இருக்கும் வரையிலும் அவர் ஆற்றும் பணிகளிலும் கடமைகளிலும் அந்த நன்மைகளின் பங்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குச் சென்றுகொண்டே இருக்கும்.
அப்படிப் பெரிதாக என்ன செய்துவிட்டார் என்று கேட்டால், உமர் அவர்கள் செய்த மாதிரி வேறு யாருமே செய்யவில்லை என்பது அவர்களுடைய வரலாற்றை உன்னிப்பாகப் படித்தால் புரியும். சில உதாரணங்கள்…
1. பொதுக்கருவூலம் (Public Treasury) என்ற ஒரு விஷயத்தை நிறுவிய முதல் முஸ்லிம் ஆட்சியாளர் உமர் ரளியல்லாஹு அன்ஹு.
2. நீதிமன்றங்களையும் நீதிபதிகளையும் உருவாக்கிக் கொடுத்த முதல் முஸ்லிம் ஆட்சியாளர் உமர் ரளியல்லாஹு அன்ஹு.
3. ராணுவத்துறையை நிறுவி, அவர்களுக்கு சம்பளம் கொடுத்த முதல் முஸ்லிம் ஆட்சியாளர் உமர் ரளியல்லாஹு அன்ஹு.
4. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு செய்த முதல் முஸ்லிம் ஆட்சியாளர் உமர் ரளியல்லாஹு அன்ஹு.
5. நாணயங்கள் உருவாக்கி வெளியிட்டுப் புழக்கத்தில் கொண்டு வந்த முதல் முஸ்லிம் ஆட்சியாளர் உமர் ரளியல்லாஹு அன்ஹு.
6. கால்வாய்கள் வெட்டிய முதல் முஸ்லிம் ஆட்சியாளர் உமர் ரளியல்லாஹு அன்ஹு.
7. மாநகரங்களை உருவாக்கிய முதல் முஸ்லிம் ஆட்சியாளர் உமர் ரளியல்லாஹு அன்ஹு.
8. நாட்டை மாகாணங்களாகவும் மாவட்டங்களாகவும் பிரித்த முதல் முஸ்லிம் ஆட்சியாளர் உமர் ரளியல்லாஹு அன்ஹு.
9. சுங்க வரி விதிப்பதை அறிமுகப்படுத்திய முதல் முஸ்லிம் ஆட்சியாளர் உமர் ரளியல்லாஹு அன்ஹு.
10. சிறைச்சாலைகளை உருவாக்கிய முதல் முஸ்லிம் ஆட்சியாளர் உமர் ரளியல்லாஹு அன்ஹு.
11. காவல் துறையை உருவாக்கிய முதல் முஸ்லிம் ஆட்சியாளர் உமர் ரளியல்லாஹு அன்ஹு.
12. எல்லா நகரங்களுக்கு மத்தியில் இருந்த வழியெங்கும் பயணிகளுக்காக தங்கும் விடுதிகளை அமைத்த முதல் முஸ்லிம் ஆட்சியாளர் உமர் ரளியல்லாஹு அன்ஹு.
13. ஏழைகளுக்கு உதவித்தொகை வழங்கிய முதல் முஸ்லிம் ஆட்சியாளர் உமர் ரளியல்லாஹு அன்ஹு.
14. நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களை அமைத்து, ஆசிரியர்களுக்கு உயர்ந்த சம்பளம் வழங்கிய ஆட்சியாளர் உமர் ரளியல்லாஹு அன்ஹு.
15. முத்’அ என்ற தற்காலிய திருமண அமைப்பை வேண்டாம் என்று தடுத்த முதல் முஸ்லிம் ஆட்சியாளர் உமர் ரளியல்லாஹு அன்ஹு.
16. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பள்ளிவாசலை – மஸ்ஜினுந் நபவி – பெரிது படுத்தி விரிவாக்கம் செய்த முதல் முஸ்லிம் ஆட்சியாளர் உமர் ரளியல்லாஹு அன்ஹு.
17. அறக்கட்டளைகளை (ட்ரஸ்ட்) நிறுவிய முதல் முஸ்லிம் ஆட்சியாளர் உமர் ரளியல்லாஹு அன்ஹு.
18. திருக்குர்’ஆன் தொகுக்கப்பட்டு ஒரே வேதநூலாக இன்று உலகெங்கிலும் இருப்பதற்குக் காரணமான முதல் முஸ்லிம் ஆட்சியாளர் உமர் ரளியல்லாஹு அன்ஹு.
19. ஃபஜ்ர் தொழுகைக்கான பாங்கின்போது, “அஸ்ஸலாத்து ஹைரும் மினன் நவ்ம்” / ”தூக்கத்தைவிட தொழுகை சிறந்தது” என்ற வாக்கியத்தை இணைத்துச் சொல்லச் சொன்ன முதல் முஸ்லிம் ஆட்சியாளர் உமர் ரளியல்லாஹு அன்ஹு.
20. ரமலான் மாதத்தில் தராவீஹ் தொழுகையை முறைப்படி அறிமுகப்படுத்திய முதல் முஸ்லிம் ஆட்சியாளர் உமர் ரளியல்லாஹு அன்ஹு.
21. பள்ளிவாசல்களில் விளக்குகளைப் பொருத்திய முதல் முஸ்லிம் ஆட்சியாளர் உமர் ரளியல்லாஹு அன்ஹு.
22. ஹிஜ்ரி காலண்டரை அறிமுகப்படுத்திய முதல் முஸ்லிம் ஆட்சியாளர் உமர் ரளியல்லாஹு அன்ஹு.
23. பள்ளிவாசல் இமாம்களுக்கும், பாங்கு சொல்லும் முயெத்தின்களுக்கும் சம்பளம் கொடுத்த முதல் முஸ்லிம் ஆட்சியாளர் உமர் ரளியல்லாஹு அன்ஹு.
பதினெட்டிலிருந்து இருபத்து மூன்று வரையிலான சேவைகளை உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைத் தவிர வேறு யாருமே செய்திருக்க முடியுமா என்பதற்காக பதில் முடியாது என்றே மறுமை நாள் வரை இருக்கும் என்று நம்புகிறேன்.
திருக்குர்’ஆனை தொகுக்கச் சொன்னதையும், ஹிஜ்ரி காலண்டரை அறிமுகப்படுத்தியதையும் மட்டுமே எடுத்துக்கொண்டால்கூட அவை மஹ்ஷர் வரையிலான கோடிக்கணக்கான இதயங்களின் துஆக்களுக்கு உரிய காரியமாகும்.
தனக்குப் பிறகு ஒரு நபி வருவதாக இருந்தால் அது உமராகவே இருக்கும் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏன் சொன்னார்கள் என்று இப்போது கொஞ்சம் புரிந்திருக்கலாம். அல்ஹம்துலில்லாஹ்.
இனி உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் பெயரைச் சொல்லும்போதெல்லாம் இந்த மகத்தான சேவைகள் நினைவுக்கு வரவேண்டும். உமர் (ரளியல்லாஹு அன்ஹு) என்ற பெயரைச் சொல்லும்போது மனதில் ஒரு தனி மரியாதை உருவாக வேண்டும். இன் ஷா அல்லாஹ்.