ஸ்டெம் செல் மற்றும் மரபியல் ஆய்வுகளில்
தனித்தன்மை பெற்றுள்ள சகோதரி ராணா
Aashiq Ahamed
டாக்டர். ராணா தஜானி (படங்கள்), பாலஸ்தீனத்தை சேர்ந்த மூலக்கூறு உயிரியல் விஞ்ஞானியான இவர், ஜோர்டானின் Hashemite பல்கலைக்கழத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்.
ஸ்டெம் செல் மற்றும் மரபியல் ஆய்வுகளில் தனித்தன்மை பெற்றுள்ள சகோதரி ராணா இது தொடர்பில் பல்வேறு விருதுகளை வென்றவராவார். கேம்பிரிட்ஜ், யாலே, ஹார்வர்ட் என உலகின் பல தலைச்சிறந்த பல்கலைக்கழகங்களில் கவுரவ பேராசிரியராவும் இருக்கிறார் ராணா தஜானி.
‘இளம் விஞ்ஞானிகளுக்கான இஸ்லாமிய அகாடமி’யை தோற்றுவித்த இவருடைய மற்றுமொரு செயல்திட்டம் மகத்தானது.
படிப்பு என்பது மாணவர்களுக்கு மகிழ்வை தர வேண்டும். ஒரு பாடத்தை விருப்பத்துடனும், மகிழ்வுடனும் படிக்கும் மாணவர்கள் மொழி வல்லமையும், தொழிநுட்ப திறனும், சிறந்த அறிவுத்திறனும் பெற்றவர்களாக வளர்வர் என்று கூறியவர், அதற்கான பாடத்திட்டங்களை கட்டமைத்தார்.
எப்படி தொடங்குவது என்று குழம்பியவருக்கு, இவர் சார்ந்த லோக்கல் பள்ளிவாசல் உதவ முன்வந்தது. இதற்கான பொருளாதார செலவிலும் பள்ளிவாசல் நிர்வாகம் பங்கெடுத்துக் கொண்டது. ஐம்பது மாணவர்களுடன் அந்த பள்ளிவாசலில் தன் பயிற்சியை தொடங்கினார் ராணா.
ராணாவின் பாடத்திட்டத்தின் பலனாக மாணவர்கள் படிப்பதில் மட்டும் ஆர்வம் என்றில்லாமல் ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக இருப்பதாக மாணவர்களின் பெற்றோர் மகிழ்ச்சி தெரிவிக்க இவருடைய பாடத்திட்டம் புகழ் பெற ஆரம்பித்தது.
ஒரு பள்ளிவாசலில் தொடங்கிய முயற்சி பல பள்ளிவாசல்களுக்கும் பரவியது. அரசும் உதவ முன்வந்தது. இந்த திட்டங்களின் பலனாக இன்று சுமார் 1500 நூலகங்கள் ஜோர்டானில் நிறுவப்பட்டுள்ளன.
எதிர்காலத்தை கணக்கில் கொண்டு, தன் செயல்திட்டத்தை அமல்படுத்த பிரதிநிதிகளை நியமித்தார் ராணா தஜானி. பிரதிநிதிகள் என்பவர்கள் ராணாவால் பயிற்றுவிக்கப்பட்ட பெண்களாவர். இவர்கள் மூலமாக அதிகப்படியான மாணவர்களை சென்றடைந்தது ராணாவின் பயிற்றுவிக்கும் முறை.
இன்று, இறைவனின் கிருபையால், பாலஸ்தீனம் ஜோர்டான் சிரியா லெபனான் மற்றும் பல்வேறு அகதி முகாம்கள் என இவருடைய முயற்சி விரிவடைந்திருக்கிறது.
ராணாவின் சீரிய திட்டத்தால் பயிற்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 50,000-த்தை தாண்டுகிறது. இவரால் பயிற்றுவிக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 7,000-த்துக்கும் அதிகமாகும்.
தன்னுடைய பணிகளுக்காக பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார் ராணா. இங்கே நான் அவற்றை பட்டியலிட்டால் நீங்கள் பலமுறை க்ரோல் செய்ய வேண்டி வரும் என்றால் அந்த விருதுகளின் எண்ணிக்கையை கற்பனை செய்துக்கொள்ளுங்கள். இறைவன், இவர் போன்ற எண்ணற்ற கல்வியாளர்களை இவ்வுலகிற்கு, நம் சமுதாயத்திற்கு தந்தருள்வானாக.
source: https://www.facebook.com/photo?fbid=3282293268534706&set=pcb.3282294961867870