மனமும் மூளையும் – ரஹ்மத் ராஜகுமாரன்
உகங்ளால் முயுடிமா ?
உகங்ளால் இப்பகக்த்தை பக்டிக முந்டிதால் உகங்ளை பாட்ராடியே ஆக வேடுண்ம் நூறுற்க்கு 55 சவிகித மகக்ளால் மடுட்மே இ்பப்டி பக்டிக முயுடிம்.
நீ்கங்ள் எபப்டி இதை பக்டிகிர்றீகள் என்று உகங்ளால் நம்ப முயடிவிலைல்யா?
ஆசச்ரிமாயன ஆறற்ல் கொடண்து மதனினின் மூளை ஒரு ஆய்ராச்யிசில் கேபிம்ட்ரிஜ் பல்லைகக்ககழம் இந்த உமைண்யை கடுண்பித்டிது உளள்து.
எத்ழுக்துகள் எந்த வசைரியில் உளள்து எபன்து முகிக்யமல்ல முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்ழுதும் சயாரின இத்டதில் உள்ள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும் எனாதல் எறான்ல்….
மதனினின் மூளை முதல் எத்ழுதையும் கடைசி எத்ழுதையும் மடுட்மே பக்டிகும் பாகிக்யுள்ள எத்ழுதுக்கள் தானாக உள்ங்வாகபப்டும்.
திருக்குர்ஆனை ஓதும்போது நீங்கள் கவனித்திருக்கலாம் எழுத்துக்கள் இடம் மாறிய பிழைகளும் இல்லை .எழுத்துப் பிழையும் இல்லை . இருந்தாலும் திருக்குர்ஆனை தொழுகையில் மனப்பாடமாக ஓதி ஓதி அதைப் பார்த்து ஓதும்போது எழுத்துப்பிழைகள் தெரியாது என்பதாக யூதர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் யூதர்களை விட ஒரு படி மேலே போய் த.த.ஜ.வினர் புனிதக்குர்ஆனில் எழுத்துப்பிழைகள் உண்டு என்று வாதம் செய்ததை இங்கே சுட்டிக் காட்டுகிறேன். (வலைதளத்தில் உள்ளதை Copy Text செய்து கொடுத்துள்ளேன் )
புனித குர்ஆனில் எழுத்துப்பிழைகளா?
தூத்துக்குடி விவாதம்- பாகம் – 1
بسم الله الرحمن الرحيم
போலி தவ்ஹீத்வாதிகளின் முகத்திரை கிழித்த தூத்துக்குடி விவாதம்.
கடந்த 29,30-09-2012 சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களாக தூத்துக்குடியில் புனிதக்குர்ஆனில் எழுத்துப்பிழைகளா? என்ற தலைப்பில் தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக
மவ்லவி ஏ.முஹம்மது முஸ்தஃபா மஸ்லஹி
தலைமையில் மவ்லானா எம். ஷைகு
அப்துல்லஹ் ஜமாலி ஹழரத் அவர்கள்
உட்பட ஐவர் குழுவும்,
த.த.ஜ. சார்பாக சகோ.பி.ஜே. தலைமையில் ஐவர் குழுவும் விவாதித்தனர்.
தூத்துக்குடி மாநகர ஜ.உ. சபை நிலைப்பாடு
புனிதக்குர்ஆன் ஓசையிலும், எழுத்து வடிவிலும் இறைவனால் முழுமையாகப் பாதுகாக்கப்படுகிறது. அதில் எவ்வித எழுத்துப்பிழையும் இல்லை.
எழுத்துப்பிழை உண்டு என்று கூறுவது குர்ஆனையும் அதை எழுதிய எழுத்தர்களான ஸஹாபாக்களையும் அவமதிப்பதோடு அது யூத நஸாராக்களின் நச்சுக்கருத்தாகும் என்பது தூ.டி மாநகர ஜ.உ. சபையின் நிலைப்பாடாகும்.
த.த.ஜ. வினர்களின் நிலைப்பாடு
திருக்குர்ஆன் ஓசையில் மட்டும்தான் பிழையின்றி பாதுகாக்கப்படுகிறது. எனவே குர்ஆனில் எழுத்துப்பிழைகள் உண்டு என்பது த.த.ஜ. வினர்ன் நிலைப்பாடாகும். ஆணவமும், அவமானமும்வெறும் பத்து நிமிடங்களில் குர்ஆனில் எழுத்துப்பிழைகளுண்டு என்பதை நிரூபித்து விடுவோம் என விவாத ஒப்பந்தத்தில் த.த.ஜ. வினர் ஆணவம் பேசினர். ஆனால் இரண்டு நாட்களாகியும் பிழைகளை நிரூபிக்கமுடியாமல் திணறி மூக்கறுபட்டு அவமானப்பட்டுப் போயினர் த.த.ஜ. வினர்.
பி.ஜே.யின் அறியாமை – 1
இவ்விவாதத்தில் த.த.ஜ. வினர் முதல் பிழையாக குர்ஆனிலுள்ள நுஞ்ஜி نُنْجِي (21:88) என்பதை கூறினர். அதில் இரண்டாவது நூன் -(ن)ஐ விட்டுவிட்டு “நுஜி( )” என எழுதியுள்ளனர். பிழையாக விடுபட்ட நூன் -(ن)ஐ அடையாளம் காட்டுவதற்கு ஒரு சிறிய நூன் -(ن)ஐ போட்டுள்ளனர் என வாதித்தனர்.
தூ.டி.ஜ.உ. சபை சார்பில் அளிக்கப்பட்ட பதில்
நுஞ்ஜி نُنْجِي (21:88) என்பதில் இரண்டாவது நூன் -(ن)ஐ விட்டு எழுதியது பிழையில்லை. மாறாக ஸஹாபாக்கள் அவர்களின்
காலத்து எழுத்து முறையிலுள்ள ஒரு விதியைப்பேணி அவ்வாறு எழுதியுள்ளனர்.
அவ்விதிவென்னவெனில் ஒரே இனத்தைச்சார்ந்த இரு எழுத்துக்கள் அடுத்தடுத்து வந்து அதில் இரண்டாவது எழுத்து “சுக்கூன்” பெற்றிருந்தால் அந்த இரண்டாவது எழுத்தை விட்டு எழுதுவது ஆரம்பகாலத்து எழுத்து விதியாகும். ஆனால் வாசிக்கும் போது அதை உச்சரிப்பார்கள்.
உதாரணமாக குர்ஆனிலுள்ள ‘யுஹ்யீ (يُحْيِي) மற்றும் ‘தாவூது (دَاوُودُ) என்பதை எடுத்துக்கூறினோம்.
‘யுஹ்யீ (يُحْيِي) என்பதில் ஒரே இனத்தைச்சார்ந்த இரண்டு “யே ((ي அடுத்தடுத்து வந்து அதில் இரண்டாவது
“யே ((ي சுக்கூன் பெற்றிருப்பதால் அதை ஸஹாபாக்கள் விட்டு எழுதியுள்ளனர். குர்ஆனிலுள்ள அனைத்து யுஹ்யீ (يُحْيِي) களும் இவ்வாறுதான் எழுதப்பட்டிருக்கும். எனினும் சட்ட அடிப்படையில் விடப்பட்ட அந்த எழுத்தை உச்சரிக்க வேண்டும் என்பதற்காகவும், ஆரம்பகால எழுத்து விதியை நாம் அறியாததாலும் விடப்பட்ட “யே ((يவை அறிவிப்பதற்காக எழுதப்பட்டிருக்கும் “யே ((يக்கு அருகில் அரபுநாட்டு குர்ஆன் பிரதியில் ( ) ஒரு சிறிய “யே ((يயும் இந்திய நாட்டு குர்ஆன் பிரதியில் யே ((يக்கு கீழ் கடாஜேரும் ( ) போடப்பட்டிருக்கும்.
அவ்வாறே ‘தாவூது (دَاوُودُ) என்பதில் ஒரே இனத்தைச்சார்ந்த இரண்டு “வாவ் (و) அடுத்தடுத்து வந்து அதில் இரண்டாவது “வாவ் (و) சுக்கூன் பெற்றிருப்பதால் அதை ஸஹாபாக்கள் விட்டு எழுதியுள்ளனர்.
குர்ஆனிலுள்ள அனைத்து ‘தாவூது (دَاوُودُ)உம் இவ்வாறுதான் எழுதப்பட்டிருக்கும். எனினும் சட்ட அடிப்படையில் விடப்பட்ட அந்த “வாவ் (و)வை உச்சரிக்க வேண்டுமென்பதற்காகவும், ஆரம்பகாலத்து எழுத்து விதியை நாம் அறியாததாலும் விடப்பட்ட “வாவ் (و)வை அறிவிப்பதற்காக எழுதப்பட்ட “வாவ் (و)வுக்கு மேல் அரபுநாட்டு குர்ஆன் பிரதியில் ஒரு சிறிய “வாவ் (و)வும் ( ) , இந்திய நாட்டு குர்ஆன் பிரதியில் உல்டா பேஷும் ( ) போடப்பட்டிருக்கும்.
அது போலத்தான் நுஞ்ஜி (نُنْجِي) என்பதில் ஒரே இனத்தைச்சார்ந்த இரண்டு நூன் (ن) அடுத்தடுத்து வந்து அதில் இரண்டாவது நூன் (ن) சுக்கூன் பெற்றிருப்பதால் அதை ஸஹாபாக்கள் விட்டு எழுதியுள்ளனர். எனினும் சட்ட அடிப்படையில் விடப்பட்ட அவ்வெழுத்தை உச்சரிக்க வேண்டுமென்பதற்காகவும், ஆரம்பகாலத்து எழுத்து விதியை நாம் அறியாததாலும், விடப்பட்ட அந்த நூன் (ن)ஐ அறிவிப்பதற்காக எழுதப்பட்ட நூன் (ن)க்கு மேல் அரபுநாட்டு குர்ஆன் பிரதியிலும், இந்தியநாட்டு குர்ஆன் பிரதியிலும் ஒரு சிறிய நூன் (ن) போடப்பட்டிருக்கும். எனவே நுஞ்ஜி (نُنْجِي) என்பது ஆரம்பகாலத்து எழுத்து விதிப்படி சரியாகத்தான் எழுதப்பட்டிருக்கிறது என்று நாம் கூறினோம்.
மேலும் இதை சவூதி அரசாங்கமும் சவூதி குர்ஆன் பிரதியின் இறுதியில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர் என்று கூறினோம்.
والحروف الصغيرة تدل على أعيان الحروف المتروكة فى خط العثمانية مع وجوب النطق بها
(எழுதப்பட்ட எழுத்துக்கு மேலுள்ள) சிறிய எழுத்துக்கள் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடைய குர்ஆன் மூலப்பிரதிகளில் (ஆரம்பகாலத்து சட்ட அடிப்படையில்) விடப்பட்ட எழுத்துக்களை அறிவிக்கும்.
மேலும் அந்த சிறிய எழுத்தை ( ஹஃப்ஸ்(ரஹ்) உடைய கிராஅத்தின் பிரகாரம் ) மொழிவது அவசியமாகும் என்று சவூதி அரசாங்கம் அச்சடித்துள்ளது.
எனவே நுஞ்ஜி ( )” என்பது சரியாகத்தான் எழுத்தப்பட்டிருக்கிறது என்பதை ஆதாரங்களுடன் நாம் நிரூபித்த பொழுது திகைத்துப்போன பி.ஜே. குழுவினர் மறுபடியும் அவர்களது அறியாமையை போட்டுடைத்தனர்.
பி.ஜே.யின் அறியாமை – 2
அந்த அறியாமை என்னவெனில் குர்ஆனில் இடம்பெற்ற நன்ஸக் (نَنْسَخْ), நுன்ஸிஹா (نُنْسِهَا) ஆகியவற்றில் இரண்டு நூன் (ن) சந்தித்து அதில் இரண்டாவது நூன் (ن) சுக்கூன் பெற்றிருந்தும் அதை எழுதப்பட்டிருக்கிறதே? இங்கு நீங்கள் கூறும் விதிப்பிரகாரம் இரண்டாவது நூன் (ن) ஐ விட்டு நஸக் (نَسَخْ) என்றும், நுஸிஹா (نُسِهَا) என்றும் தானே எழுதப்பட்டிருக்கவேண்டும் ? என்று கேள்வி கேட்டு அவர்களின் அறியாமையை வெளிப்படுத்தினர்.
தூ.டி.ஜ.உ. சபை சார்பில் அளிக்கப்பட்ட .பதில்
குர்ஆன் ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கிறது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஆதாரப்- பூர்வமான ஹதீஸ் புகாரியில் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் நுஞ்ஜி (نُنْجِي) என்பதில் இரு விதமாக ஓதும் முறை (கிராஅத்) இருக்கிறது.
ஒன்று : நுஞ்ஜி (نُنْجِي)
இரண்டு : நுஜ்ஜி (نُجِّي)
ஆனால் நன்ஸக் (نَنْسَخْ),
நுன்ஸிஹா (نُنْسِهَا) என்பதில் ஒரே ஒரு
கிராஅத் மட்டும்தான் இருக்கிறது.
எனவே நுஞ்ஜி (نُنْجِي) என்பதில் ஆரம்பகாலத்து எழுத்து முறையை பேணி
எழுதும் போது நுஞ்ஜி (نُنْجِي) என்ற
கிராஅத்திற்கும் நுஜ்ஜி (نُجِّي)
கிராஅத்திற்கும் எந்த பாதிப்பும் வராது. ஆனால் நன்ஸக் (نَنْسَخْ),
நுன்ஸிஹா (نُنْسِهَا) என்பதில்
ஆரம்பகாலத்து விதியைப் பேணி
இரண்டாவது நூன் (ن)ஐ விட்டு
எழுதினால் நஸக் (نَسَخْ) என்றும்,
நுஸிஹா (نُسِهَا) என்றும் கிராஅத் இருப்பதாக தவறாக விளங்கிவிடக் கூடாது என்பதற்காக நிர்பந்தத்தினால் இங்கே ஆரம்பகாலத்து எழுத்து விதியை பேணாமல் குர்ஆனின் ஓதும் முறையை (கிராஅத்தை) பேணி இரண்டாவது நூன் (ن)ஐ எழுதியுள்ளனர்.
எனவே ஸஹாபாக்கள் அதிக கவனத்துடன்தான் குர்ஆனை எழுதியுள்ளனர். எழுத்து விதியை பேணும் இடங்களில் அவ்விதியையும், கிராஅத்தை பேணும் இடங்களில் கிராஅத்தையும் பேணி மிகக்கவனமாக சரியாகத்தான் எழுதியுள்ளனர் என்று நாம் பதில் கூறியவுடன் த.த.ஜ.வினர் விழி பிதுங்கி பதிலில்லாமல் குர்ஆனை இழிவுபடுத்த ஆரம்பித்தனர்.
– ரஹ்மத் ராஜகுமாரன்