Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

முஸ்லிம்கள் மேலும் முன்னெடுக்க வேண்டிய சமூக நலப்பணிகள்

Posted on November 22, 2020 by admin

முஸ்லிம்கள் மேலும் முன்னெடுக்க வேண்டிய

சமூக நலப்பணிகள்

    CMN Saleem     

முஸ்லிம்கள் முன்னெடுக்கும் சமூக நலப்பணிகள் அனைத்தும் நிலையான நீடித்த பலன்களை தரக்கூடியாதாக இருக்குமேயானால் அதன் விளைவாக இஸ்லாமிய மார்க்கம் அனைவராலும் கண்ணியப்படுத்தப்படும்.

தமிழக முஸ்லிம் சமூகம் சிறியதும் பெரியதுமாக பல்வேறு சமுதாயப் பணிகளை சாதி மத வேறுபாடின்றி ஆங்காங்கே முன்னெடுத்து வருகிறது.
இந்த நேரத்தில் சமுதாய அமைப்புகள் ஜமாத்துகள் அறக்கட்டளைகள் ஒருவர் செய்யும் அதே சேவையை போட்டிபோட்டு மற்றவர்களும் செய்யாமல் பணிகளை வேறுபடுத்தி செய்ய வேண்டும் என்ற சமூகத்தின் வேண்டுகோளை தயவு கூர்ந்து செவிமெடுக்க வேண்டும்.

அதென்னவோ தெரியவில்லை இஸ்லாமிய அமைப்புகள் அனைவரும் கட்டாயம் ஒரு ஆம்புலன்ஸ் வாங்கி விட வேண்டும் என்பது தமிழகத்தில் எழுதப்படாத விதியாக பின்பற்றப்படுகிறது.

கடந்த 20 ஆண்டுகளாக த.மு.மு.க சார்பில் ஏறக்குறைய 160 ஆம்புலன்ஸ்கள் சிறப்பாக சேவையாற்றி வருகின்றன.

அதுபோக உலக வங்கியின் நிதியுதவியுடன் தமிழக அரசும் GVK – EMRI என்ற தனியார் நிறுவனமும் சேர்ந்து 2008 இல் துவங்கிய 108 இலவச அவசரகால சேவையில் தற்சமயம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 936 ஆம்புலன்ஸ்கள் ஓடுகின்றன.

உலக வங்கி வலியுறுத்தும் சுகாதார கொள்கையை இம்மி அளவும் பிசகாமல் அப்படியே பின்பற்றி சர்வதேச மருந்து தயாரிக்கும் நிறுவனங்களிடம் தமிழக அரசு நல்ல பெயர் எடுத்து வருவதால் இன்னும் எத்தனை ஆயிரம் ஆம்புலன்ஸ்கள் தேவை ஏற்பட்டாலும் கொடுப்பதற்கும் அவற்றை முறையாக பராமரிப்பதற்கும் அவர்கள் தயாராக இருக்கின்றனர்.

இதல்லாமல் தனியார் மருத்துவமனைகள் அறக்கட்டளைகள் சில பள்ளிவாசல்கள் கோவில்கள் மடங்கள் என்று பல நிறுவனங்களின் சார்பிலும் எண்ணிக்கையில் அடங்கா ஆம்புலன்ஸ்கள் தமிழக வீதிகளில் ஓடிக்கொண்டுள்ளன.

இப்போதைக்கு ஆம்புலன்ஸ் சேவை மேலதிகமாக இருக்கும் சூழலில் இஸ்லாமிய அமைப்புகள் புதிய ஆம்புலன்ஸ்களை தவிர்த்துக் கொள்வது அறிவுப்பூர்வமானதாக இருக்கும்.

சற்று மாத்தி யோசிப்போம்.

மருத்துவ சேவையில் மக்களுக்கு ஏராளமான அவசர தேவைகள் இருக்கின்றன. ஏழை எளிய மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் சில தேவைகளை இங்கே கவனப்படுத்த விரும்புகிறேன்.

சிறுநீரக செயலிழப்புகளால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் மரணிக்கின்றனர். வேறு வழியில்லாமல் டயாலிசிஸ் சிகிச்சையின் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் தங்களது சொத்துக்களை இழந்து வறுமைக்கு தள்ளப்படுகின்றனர்.

மஹல்லாக்களில் இலவச டயாலிசிஸ் மையங்கள் துவங்கலாம்.ஒரு டயாலிசிஸ் இயந்திரம் ஏறக்குறைய 8 இலட்ச ரூபாய்க்குள் தான் இருக்கும்.
ஒரு ஆம்புலன்ஸ் வாங்கும் தொகையில் இரண்டு டயாலிசிஸ் இயந்திரங்கள் வாங்கிவிடலாம். பரிதவிக்கும் மக்களின் உயிர்காக்கும் உதவி இது.

தமிழகத்தில் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இலவச டயாலிசிஸ் மையங்களை நடத்துகின்றனர். அவர்களை மக்கள் கண்கண்ட தெய்வங்களாக வணங்குகின்றனர்.

அதேபோல அரசுப் பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் கட்டித் தரலாம்.பல மகளிர் பள்ளிக்கூடங்களில் கழிவறைகள் இல்லாமல் மாணவிகள் நாள்முழுவதும் அனுபவிக்கும் சங்கடங்கள் ஏற்படும் பாதிப்புகள் சொல்லி மாளாது.

தமிழக விவசாயிகள் வட்டிக்கு வாங்கி வியர்வை சிந்தி விளைவிக்கப்படும் பழங்கள் காய்கறிகள் ஆண்டின் சில மாதங்களில் மட்டும் அவற்றுக்கு நல்ல விலை கிடைக்காமல் தெருவிலும் ஆற்றிலும் கொட்ட வேண்டிய கொடும் துன்பத்திற்கு ஆளாகின்றனர்.

அதேபோல தமிழகத்தின் நீண்ட நெடிய கடற்பரப்பில் உயிரை பணையம் வைத்து பிடிக்கப்படும் கடல் உணவுகளில் குறிப்பிட்ட சதவிகித உணவுகள் பாதுகாக்க வழியில்லாமல் சீரழிவதால் மீனவர்கள் பெரும்நஷ்டத்திற்கு உள்ளாகின்றனர்.

வேளாண் பொருட்களையும் கடல் உணவுகளையும் பாதுகாப்பதற்கு ஆங்காங்கே இலவச குளிர்சாதன கிடங்குகள் அமைத்துத் தந்து விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வில் ஒளியேற்றலாம்.

பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம்.கட்டுரை நீண்டுகொண்டே போகும்.மக்களின் தேவைகளும் நெருக்கடிகளும் நாளுக்குநாள் பெருகிக்கொண்டே இருக்கின்றன..

ஒரு அமைப்பு செய்யும் சேவைக்கு பின்னாலேயே மற்றவர்களும் ஓடிக்கொண்டிருப்பதற்கு பதில் சற்று மாத்தி யோசித்தால் மக்கள் நலன் மேம்படும்.
அங்கே இஸ்லாம் கண்ணியப்படுத்தப்படும்.

– CMN Saleem

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 87 = 93

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb