ஒரு, அல்லாஹ்வின் அடிமையின் வரலாறு!
காதிஸிய்யா சண்டைகள் உச்சத்தில் இருந்த காலம். களங்களும், தளங்களும் பரஸ்பரம் முஸ்லிம்கள் கையிலும், பாரஸீகர்கள் கையிலும் மாறி மாறி வீழ்ந்து கொண்டிருந்தன. அன்றும் அப்படித்தான்.
அமீருல் முஃமினீனிற்கு போர் செய்திகளை சொல்ல வழமையாக வரும் உளவாளி வரவில்லை. வந்தவனோ புதியவன். மதீனா நோக்கி அதிகாலை இருட்டில் தன் குதிரையில் வந்து கொண்டிருந்தான்.
மதீனாவின் எல்லையில் ஒரு உருவம் அவனை எதிர் கொண்டது. அமீருல் முஃமினீனின் இருப்பிடம் எங்கே இருக்கிறது? என்று கேட்டான் அந்த ஒற்றன்.
அந்த உருவம் அவனிடம் சொன்னது, “நான் உங்களிற்கு வழிகாட்டுகிறேன். உங்கள் குதிரையின் கடிவாளத்தை பிடித்து நான் அழைத்துச் செல்கிறேன்”.
உருவம் நடக்க ஆரம்பித்தது. சூரியனும் உதிக்க ஆரம்பித்தது.
செல்லும் வழியில் அந்த உருவம் கேட்டது, “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்.
ஒற்றன் சொன்னான். “அப்படியானால் எனக்கும் நேற்றைய கள நிலவரங்களை சொல்லுங்களேன் போகும் வரை” என்றது உருவம்.
ஒற்றனும் பிஃல்டர் பண்ணி சில வற்றை மட்டும் சொன்னான்.
உருவம் பேசவில்லை. சிந்தித்தவாறு வேகமாக நடக்க ஆரம்பித்தது.
மதீனா குடியிருப்பு பகுதியில் நுழைந்த போது, அந்த உருவத்தை பார்த்து மக்கள் மரியாதையாக ஒதுங்கி வழி விட்டனர்.
அதில் சிலர் அந்த உருவத்திற்கு ஸலாம் சொல்லினர்.
அதில் “யா அமீருல் முஃமினீன்” என்பதும் கலந்து ஒலித்தது. ஒற்றன் அசந்து போனான். தன் குதிரையின் கடிவாளத்தை பிடித்து ஆட்சியாளரின் இடத்திற்கு வழிகாட்டி சென்றது உமர் கத்தாஃப் என்பதை உணர்ந்த போது அவன் தேகம் நடுங்கியது.
யார் போர்களை நடாத்திக் கொண்டிருந்தாரோ, யாரை கண்டு ரோமர்களும், ஹொர்மூஸானும் அஞ்சுகிறார்களோ அவர் தன்னை குதிரையில் வைத்து கால்நடையாக அழைத்து செல்கிறார்.
பாய்ந்து குதித்து ஸலாம் கூறி ஒற்றன் கேடடான். “யா அமீருல் முஃமினீன், தாங்களா எனக்கு வழி காட்டினீர்கள், அதுவும் நான் குதிரையில் தாங்களோ நடையில்” அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை.
உமர் ரலியல்லாஹுஅன்ஹு சொன்னார்கள், “சகோதரா, நீயோ ராஜ கடமையின் நிமித்தம் வந்தவன். நானோ காற்று வாங்க வந்தவன், நீ குதிரையில் அமர்ந்திருப்பது தான் முறை” என்று.
ஆட்சியாளரிற்கு, உலகின் பல இடங்களில் போர் முளைகளை திறந்தவரிற்கு எந்த தகப்பரோ, கிஃபுரோ இருக்கவில்லை. நான் அல்லாஹ்வின் அடிமை என்பதே அவர் சப்கொன்ஸஸ் மைன்டில் ஆழப்பதிந்த தோட்ஸ். அதனால் தான் அவர் அப்படி நடந்து கொண்டார்.
பின்னர் ஒரு முறை அந்த ஒற்றன் அறிந்து கொண்டான் ஒவ்வொரு நாளும் அமீருல் முஃமினீன் அதிகாலையில் வோர் ரிப்போட்டை அறிந்து கொள்ள அந்த இடத்திற்கு வருவது வழமை என்று.
அல்லாஹ்வின் அடிமைகளில் ஒரு அடிமையின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சாம்பிள் இது. அல்லாஹு அக்பர்.