[ போஸ்னிய மதரஸா ஒன்றில் மார்க்க கல்வி கற்று
பட்டம் பெற்ற மாணவிகள் ]
போஸ்னியாவை அலங்கரிக்கும் இஸ்லாம்
ஐரோப்பாவின் பல்கான் தீபகர்ப்ப பகுதியில் தற்போது அமைந்து ஏழு நாடுகள் முன்பு யுகஸ்லோவியா என்ற பெயரில் ஒரே நாடாக இருந்தது.
அங்கு ரஷ்ய கம்யுனிசத்தின் பிடி இறுகி இருந்தது கம்யுனசத்தின் பிடி தளர்ந்த பிறகு யுகஸ்லோவியாவில் இருந்து ஒவ்வொரு நாடாக பிரிந்து போக ஆரம்பித்தது.
அப்படி பிரிந்து போன நாடுகளில் ஒன்று தான் போஸ்னியா.
வடக்கிலும் மேற்கிலும் குரேஷியாவும் கிழக்கில் செர்பியாவும் தெற்கில் மாண்டினீக்ரோவும் போஸ்னியாவின் எல்லைகளாகும். அதன் தலைநகர் சரேயேவோ நகரமாகும்.
1992 ஆம் ஆண்டு யுகஸ்லோவியாவிடம் இருந்து விடுதலை பெற்ற போஸனியாவின் பரப்பளவு 51197 சதுரமைல்களாகும்.
அந்த நாட்டின் நாணயத்தின் பெயர் மார்க். அந்த நாட்டின் மொத்த குடிமக்களின் எண்ணிக்கை நான்கு மில்லியனாகும்.
இவர்களில் சுமார் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் முஸ்லிம்கள். எஞ்சியவர்கள் செர்பியர்களும் க்ரோட்’டுகள் என்று அழைக்கப்படும் ரோமன் கத்தோலிக்கர்கள்.
1992 க்கும் 1995 க்கும் இடைபட்ட காலம் போஸ்னிய முஸ்லிம்களுக்கு துயரம் நிறைந்த காலமாகும்.
அந்த காலகட்டத்தில் தான் போஸ்னியா தன்னை தனி நாடாக அறிவித்தது.
இந்த காலகட்டங்களில் போஸ்னிய முஸ்லிம்களை ஒட்டு மொத்தமாக அழிப்பதற்கு உரிய அனைத்து முயர்ச்சிகளையும் செர்பியர்கள் மேற்கொண்டனர்
இந்த கால கட்டத்தில் அங்கு ஏரளமான இறை இல்லங்கள் இடிக்க பட்டது இஸ்லாமிய அடையாளங்கள் அகற்ற பட்டது முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாக கொல்ல பட்டனர்.
.
சரித்திரத்தால் மிகவும் வஞ்சிக்கப்பட்ட நாடு போஸ்னியாதான் என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். ஆரம்பத்திலிருந்தே பல அரசியல் மாற்றங்களால் அலைக் கழிக்கப்பட்டு ரத்தத்தில் தோய்ந்தபடியே தொடர்ந்தது.
போஸ்னிய யுத்தத்தின்போது அதன் தலைநகரான சரயேவோவில் கூட எந்த வீட்டிலும் மின் விநியோகம் கிடையாது. உணவுப் பொருள்கள் எல்லாம் யானை விலை. ஒரே ஒரு காரட்டின் (தங்கம் அல்ல…காய்) விலை மூன்று டாலர்கள். வீடுகளில் தண்ணீர் விநியோகம் கிடையாது.
போஸ்னியாவில் உள்ள மக்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். முஸ்லிம்கள் (இவர்களில் பலர்ஸ்லாவ்’ என்ற பழைய இனத்திலிருந்து இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறியவர்கள்), கிரேக்கப் பழமையினமானசெர்பு’கள், ‘க்ரோட்’டுகள் என்று அழைக்கப்படும் ரோமன் கத்தோலிக்கர்கள்.
ரோமப் பேரரசு, அதன்பிறகு அதன் பிறகு உஸ்மானிய பேரசு என பலர்களின் ஆளுகையின் கீழும் போஸ்னியா ஆளபட்டது போஸ்னியா.
ஐரோப்பியத் தலைவர்கள் எல்லாம் சேர்ந்து நடத்திய பெர்லின் மாநாட்டின்போதுதான் ஆஸ்திரியா – ஹங்கேரி வசம் போஸ்னியாவை ஒப்படைக்க, 1908-ல் ஆஸ்திரியா – ஹங்கேரி நாடுகள் போஸ்னியாவை அதிகாரப் பூர்வமாக சுவீகரித்துக் கொண்டன. என்றாலும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்தான் அவை போஸ்னியாவை நடத்தி வந்தன.
நாளடைவில் முதலாம் உலகப் போர் நடைபெற்றதையும் பின்னர் டிட்டோ வின் ஆட்சியில் போஸ்னியா, யுகோஸ்லாவி யாவின் ஒரு பகுதியாக மாறி போனது.
டிட்டோவின் இறப்புக்குப் பிறகு க்ரோவேஷியாவும் ஸ்லோவேனியாவும் தங்களைச் சுதந்திர நாடுகளாக அறிவித்துக் கொண்டன.
ஆனால் போஸ்னியா சுதந்திர மான தனி நாடாக மாறுவதை அந்த நாட்டில் வசித்த செர்புகள் ஒப்புக் கொள்ளவில்லை. செர்பியாவோடு சேர்ந்தே இருந்தால்தான் போஸ்னியாவில் உள்ள தங்களுக்குப் பாதுகாப்பு என்பது அவர்கள் எண்ணம். ஆனால் முஸ்லிம்கள் மற்றும் க்ரோட் இனத்தவரின் மெஜாரிட்டி வாக்குகளைப் பெற்று போஸ்னியா தனி நாடாகத் தன்னை அறிவித்துக் கொண்டது.
உள்நாட்டுக் கலவரம் உச்சத்தை அடைந்தது.
போஸ்னியாவில் மிகப்பெரிய அளவில் இனக்கலவரம் உண்டானது. இதற்கு அதன் மக்கள் தொகையில் பல்வேறு இனத்தவரின் எண்ணிக்கையும் அவர்களுக்கிடையே நிலவிய வெறுப்புணர்வும்தான் காரணம்.
மொத்த மக்கள் தொகையில் சுமார் 51 சதவீதம் பேர் முஸ்லிம்கள். இருபத்தி ஏழு சதவீதம் பேர் செர்புகள். பதினெட்டு சதவீதம் பேர் க்ரோட்டுகள்.
மெஜாரிட்டியாக இல்லையென்றாலும் செர்பு பிரிவினர் வலுவாக இருந்தார்கள். கொரில்லா போர்முறை தெரிந்திருந்தது மட்டுமல்ல, செர்பியா இவர்களுக்கு ஆயுத விநியோகம் செய்துவந்தது.
‘தனி நாடு’ அறிவிப்பு வந்ததும் 1992-ல் வெடித்த உள்நாட்டுக் கலவரத்தில் போஸ்னியாவில் ஆயிரக்கணக்கில் உயிர்கள் பறிக்கப்பட்டன. நாளாக ஆக கலவரம் பெரிதானது. “முஸ்லிம்களை போஸ்னியாவிலிருந்து வெளியேற்றுவதே எங்கள் நோக்கம்” என்று சபதம் செய்தனர் செர்பு இன மக்கள். “எத்னிக் க்ளென்சிங்” என்று வர்ணிக்கப்படும் இந்த ‘இனரீதியில் பரிசுத்தப்படுத்தும்’ அழிக்கும் வேலை வெறித்தனமாக விரிவுபடுத்தப்பட்டது.
இரண்டே மாதங்களில் போஸ்னியாவில் மூன்றில் இரு பகுதியை பலத்தை உபயோ கித்து ஆக்கிரமித்துவிட்டனர் செர்புகள். (Serbs)
செர்புகளின் முஸ்லிம் அழிப்பு சபதம் ஒரு பக்கம் நடக்க, க்ரோட்டுகளுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே இன்னொரு அடிதடி தொடங்கியது.
ஐ.நா.சபை முன்வைத்த எந்த அமைதி திட்டத்தையும் செர்புகள் ஏற்றுக் கொள்ள வில்லை. அரை மனதோடு ஏற்றுக் கொண்ட நிபந்தனைகளையும் கையெழுத்திட்ட சில நாட்களிலேயே மீறினார்கள்.
இத்தனை குழப்பங்கள் ஒரு நாட்டில் நடக்கும்போது ‘உலக ரவுடி’ அமெரிக்கா சும்மா இருக்குமா? தலையிட்டது. சம்பந்தப்பட்ட தலைவர்களை அழைத்து சமரச பேச்சுவார்த்தையைத் தொடங்கியது.
அமெரிக்காவிலுள்ள டேடன் என்ற இடத்தில் இந்த சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
போஸ்னியாவின் தலைவரான அலிஜா இதற்கு அழைக்கப்பட்டார். அதே சமயம் போஸ்னியாவில் உள்ள க்ரோட் மற்றும் செர்ப் இனப்பிரிவுகளின் தலைவர்களை அமெரிக்கா அழைக்கவில்லை. இவர்களை ஆட்டுவிப்பது முறையே க்ரோவேஷியா மற்றும் செர்பியா ஆகிய நாடுகள்தான். எனவே க்ரோவேஷிய நாட்டு அதிபர் டுட்ஜ்மென் மற்றும் செர்பிய நாட்டு அதிபர் மிலோசெவிக் ஆகியோரைத்தான் சமாதானம் பேச அழைத்தது.
பேச்சு வார்த்தைகளின் முடிவில் “செர்பு களுக்கு 49 சதவீதம், மற்றவர்களுக்கு 51 சதவீதம் என்ற வகையில் போஸ்னியாவைப் பங்கு போட்டுவிடலாம். அவரவர் பகுதிகளில் அவரவர் தங்கியிருக்கட்டும். தனித்தனி குடியரசுகளாக – ஆனால் ஒரே நாடாக – போஸ்னியா இருக்கும்” என்ற ஏற்பாட்டுக்கு எல்லா தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.
51 சதவீதத்துக்கு கொஞ்சம் குறைவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று தொடக்கத்தில் செர்பு பிரிவினர் முறுக்கிக் கொண்டனர். என்றாலும் உலக நாடுகளின் தீவிரமான கருத்துகளும் அதனால் வலுவடைந்த போஸ்னிய முஸ்லிம்களின் நிலையும் அவர்களை மாற்றிக் கொள்ள வைத்தது.
ஆனால் பிரச்சினை தீர்ந்துவிடவில்லை. அது வேறு புதிய வடிவத்தில் தலைகாட்டியது. எந்தப் பகுதியை யார் எடுத்துக் கொள்வது என்பதில்தான் இடியாப்பச் சிக்கல்!
சரயேவோ இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதில் ஒரு பகுதி தங்களுடையதாக வேண்டும் என்றார்கள் செர்புகள். முஸ்லிம்களோ அது அப்படியே முழுமையாகத் தங்களுக்குத் தேவை என்றனர். செர்பிய நாடு மற்றும் போஸ்னியாவில் உள்ள செர்புகள் வாழும் பகுதி ஆகிய இரு பரப்புகளை இணைக்கும் ‘போஸ்னியா காரிடார்’ என்ற நிலப்பகுதி யாருக்கு என்பதில் நிறைய வெப்ப விவாதங்கள்!
தொடர்ந்தன கலவரங்கள்.
போஸ்னியாவின் முஸ்லிம்கள், செர்புகள் மற்றும் க்ரோட்டுகள் ஆகியோருக்கிடையே தோன்றிய பகை தீரவில்லை.
வரலாறு காணாத அதிசயமாக ஐ.நா.சபையின் அமைதிப்படை போஸ்னியாவில் டென்ட் அடித்தது.
ஐ.நா.ராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள், ‘‘இவ்வளவு நடந்த பிறகும் நீங்கள் வேற்றுமை பாராட்ட லாமா?’’ என்று வெவ்வேறு தரப் பைச் சேர்ந்தவர்களைக் கேட்க, ‘‘இவ்வளவு நடந்த பிறகும் நாங்கள் ஒற்றுமையாக இருக்க முடியுமா? ’’ என்று எதிர் கேள்வி கேட்டனர் மக்கள்!
போருக்குப் பிறகு ஏற்பட்ட உடன்பாட்டின்படி ஜோரன் ஜிந்த்ஜிக் என்பவர் போஸ்னி யாவின் பிரதமரானார். போஸ்னி யாவின் கம்யூனிஸ்ட் கட்சியைச் சாராத முதல் பிரதமர் இவர்தான்.
ஆனால் ஒரு சில ஆண்டு களிலேயே அவர் படுகொலை செய்யப்பட்டார். மிலோசெவிக் ஆண்டபோதே அவருக்கு எதிராக ஊர்வலங்கள் நடத்திய ஜனநாயக வாதி இவர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்தப் படுகொலை போஸ் னிய மக்களை கவலையடையச் செய்தது.
போஸ்னியாவை ஆண்ட முஸ்லிம் அரசு, இயங்காத நிலை ஏற்பட்டது. அங்குள்ள செர்பு பிரிவினர் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் ஆக்கிரமிப்பு பகுதியை அதிகரித்துக் கொண்டே வந்தனர். ஐ.நா. அமைதியை ஏற்படுத்துவதற்காக போஸ்னி யாவுக்கு அனுப்பிய அமைதிப் படையால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சொல்லப் போனால் இந்த அமைதிப் படையின் மீது கூட குண்டு வீச்சுகள் நடந்தன.
போதாக்குறைக்கு அந்தப் படையினரில் சிலரையே பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு, “ஐ.நா. சபை தன் இடையூறை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று எச்சரித்தனர் செர்பு பிரிவினர்.
‘போஸ்னியாவில் அமைதி தேவை’ என்ற பொதுவான அறிக்கையையாவது மற்ற அனைத்து ஐரோப்பிய நாடுகளும் சேர்ந்து வெளியிட வேண்டும் என்ற ஜெர்மனியின் கோரிக்கையைக்கூட ஏற்க மறுத்து செர்பு பிரிவினரை வெளிப்படையாகவே ஆதரித்தது ரஷ்யா.
“ஐ.நா.வின் அமைதி முயற்சியில் எந்தப் பயனும் இல்லை. பேசாமல் அது தன் முயற்சி யிலிருந்து பின் வாங்கி விடலாம்” என்று பிரெஞ்சு அதிபர் வெளிப் படையாகவே விமர்சித்தார்.
இப்படி அமைதியை மேலும் மேலும் குலைக்கும் வழியில்தான் செய்திகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் இந்த நிலையில் சில திடீர் மாற்றங்கள் ஏற்பட்டன.
ஐ.நா.வின் ராணுவப் பிரதிநிதி போஸ்னியாவில் உள்ள முஸ்லிம் அரசு மற்றும் செர்பு பிரிவு தலைவர் ஆகியோரிடம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு ஒருவழியாக பலன் கிடைக்கத் தொடங்கியது.
முதல் கட்டமாக ஒரு வாரம் போர் நிறுத்தத்துக்கு ஒத்துக் கொண்டனர் இரு தரப்பினரும். அதைத் தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு போர் நிறுத்தத்தைத் தொடரவும் சம்மதித்தனர். முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டருக்கும் இந்த அமைதி முயற்சியில் பங்கு உண்டு.
இருந்தாலும் பல விஷயங்கள் சங்கடத்தை ஏற்படுத்தின. இரு தரப்பினரும் கைகுலுக்கிக் கொள்ள வோ, ஏன் ஒரே இடத்தில் சேர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவோ கூட மறுத்து விட்டனர்.
போஸ்னியாவின் தலை நகர் சர்ஜேவோவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் போஸ்னிய அதிபரும் அந்நாட்டு ராணுவத் தளபதியும். பிறகு அந்த ஒப்பந்தம் அங்கிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பலே என்ற இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. (அது ‘செர்பு பிரிவினரின்’ கோட்டை என்று வர்ணிக்கப்படும் இடம்).
அங்குள்ள போஸ்னிய செர்பு பிரிவினரின் தலைவரிடமும், அந்தப் பிரிவின் கமாண்டரிடமும் கையெ ழுத்து பெறப்பட்டது. இந்த ஒப்பந்தத் தில் ஐ.நா. தன் அமைதிப் பணி களை தொடர இருதரப்பும் ஒத்துக் கொண்டதோடு, வேற்று நாட்டு ராணுவம் போஸ்னியாவில் நுழையாமல் பார்த்துக் கொள்வ தற்கும் சம்மதித்திருக்கிறார்கள்.
அதனை தொடர்ந்து சுமார் மூன்று வருடங்களாக நடந்து வந்த கடுமையான உள்நாட்டுக் கலவரம் முடிவுக்கு வந்தது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளின் விளைவால் போஸ்னியாவில் நடைபெற்ற உள்நாட்டுக் கலவரங்களில் முஸ்லிம்களை கொன்று குவித்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட போஸ்னியா செர்ப் இன மக்களின் அரசியல் தலைவர் ரடோவன் கராதிக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு எதிர்ப்பையும் சோதனையும் கடந்து இன்றும் முஸ்லிம் பெரும்பாண்மை நாடாக போஸ்னிய திகழ்கிறது.
[ போஸ்னிய மதரஸா ஒன்றில் மார்க்க கல்வி கற்று பட்டம் பெற்ற மாணவிகளை தான் படத்தில் பார்கின்றீாகள்.]