Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

கருத்துச்சுதந்திரத்தின் எல்லையை மீறும் ஃபிரான்ஸ்

Posted on November 1, 2020 by admin

கருத்துச்சுதந்திரத்தின் எல்லையை மீறும் ஃபிரான்ஸ்

 

யூதர்களுக்கு எதிரான கருத்துகள் என்றாலோ… சினிமா, புத்தகம், பாடல் ஆகியவற்றுக்கு தடை போடும் நாடு!

 ஆனால், இஸ்லாமுக்கு எதிரான ஒன்று என்றால் மட்டும் அதில் கருத்துச்சுதத்திர கத்திரிக்காய் எல்லாம் பேசும் நாடு!

ஆடை அணிவதும் அணியாமல் போவதும் அவரவர் சுதந்திரம் என்று கூறும் நாடு ஃபிரான்ஸ்! ஆனால்… முஸ்லீம் பெண்கள் அவர்கள் விரும்பிய ஆடையை அணிந்து செல்ல தடைபோடும்.

ஃபிரான்ஸ் நாட்டில் நடப்பது என்ன?

இதை அறிய வேண்டும் எனில், வரலாறு அறிதல் முக்கியம்.

9-2-2006ல், சார்லி ஹெப்டோ என்கிற ஒரு ஃபிரெஞ்சு வாரப்பத்திரிக்கை, இஸ்லாமியர்கள் தம் உயிராக மதிக்கும் இறைத்தூதரை கற்பனையான உருவம் கொடுத்து தலைப்பாகையை வெடிகுண்டு மாதிரி கேலிச்சித்திரமாக்கி, நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பயங்கரவாதிபோல உருவகித்து, இஸ்லாமை பயங்கரவாத மார்க்கமாக முன்னிறுத்தி முதன்முதலில் நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றிய 3 கார்டூன்களை வெளியிட்டது.

இதற்கு அப்பத்திருக்கைக்கு எவ்வித நியாயமான எதிர்வினையோ பதில் வன்மமோ காரணமாக இருக்கவில்லை. இப்படங்கள் அப்பட்டமான அவதூறு, இஸ்லாம் & முஸ்லிம்கள் மீதான மதவெறி காழ்ப்புணர்ச்சி தாக்குதல் என எதிர்த்த… The Grand Mosque of Paris, the Muslim World League and the Union of French Islamic Organisations ஆகிய 3 தரப்பினர் ஃபிரான்ஸ் நாட்டு தீர்ப்பு மன்றத்தில் நீதியை கேட்டு வழக்கு தொடுத்தனர்.

22-3-2007ல் வந்த தீர்ப்பில், ‘இதெல்லாம் #ஊடகதர்மம், #கருத்துச்சுதந்திரம், முஸ்லிம்களையும் இஸ்லாமையும் தூற்றவில்லை’ என்று தீர்ப்பளித்த தீர்ப்புமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து சார்லி ஹெப்டோ பத்திரிக்கையை வழக்கிலிருந்து விடுவித்தது.

அடுத்து…

3-11-2011ல், தம் பத்திரிகை பெயர் தலைப்பை “ச்சரியா ஹெப்டோ” என்று பெயர் மாற்றி மீண்டும் ஒரு கற்பனை முண்டாசு கார்டூன் முகத்தை அடடைப்படமாக வரைந்து, அந்த முகம்தான் நபி என்றும் இப்பத்திரிக்கையின் தலைமை எடிட்டர் என்றும் கூறி… அந்த ‘எடிட்டர்’ கூறுவதாக கேவலமான ஒன்றை அப்படத்தில் எழுதி வெளியிட்டது.

இதற்கு காரணம் என்னவென்றால்… அப்போது அந்த 2011ஆம் வருஷத்தில் துணிசியா நாட்டில் மக்கள் புரட்சி வெடித்து மேற்கத்திய கலாச்சார சர்வாதிகார ஆட்சி வீழ்ந்து, முதன்முறையாக பொதுத்தேர்தல் நடந்து, அதில், முன்னர் எப்போதோ தடை செய்யப்பட்டிருந்த துணிசிய இஸ்லாமிய கட்சி ஒன்று பெருவாரியான வாக்குகளில் தேர்தலில் வென்று 23-10-2011 அன்று இஸ்லாமிய மக்களாட்சியை அமைத்ததும்… சார்லி ஹேப்டோவுக்கு வயிறு எரிந்தது. அதன் விளைவே… அடுத்த இதழில் மேற்படி “ச்சரியா(ஷரியா) ஹெப்டோ” என நபிகள் பற்றிய கேலிச்சித்திரங்கள்..!

இம்முறை, ஃபிரான்ஸ் நாட்டில் முஸ்லிம்கள் யாருமே கோர்ட்டுக்கு போகவில்லை. போனாலும் தள்ளுபடி செய்யப்படும் என்பது தெரிந்து விட்டதால்… கண்டிக்கக்கூட விருப்பமின்றி கண்டுகொள்ளாமல் சகித்துக்கொண்டு இருந்து விட்டனர். ஆனால், அப்பத்திரிகையின் ஒரு கிளை குடோன் ஒன்று நள்ளிரவில் மர்ம நபர்களால் தீவைக்கப்பட்டது. இதில் யாருக்கும் எந்த உயிர் சேதமும் உடல் சேதமும் இல்லை. இந்த தீ வைப்பு சம்பவத்தை பிரான்ஸ் நாட்டு முஸ்லீம் அமைப்புகள் உட்பட ஆட்சியாளர்கள் எல்லோருமே வன்மையாக கண்டித்தனர்.

பிறகு…

2012 செப்டம்பர் மாத வாரப்பத்திரிகைகளில்… இறைத்தூதரை ஆபாசமாக, நிர்வாணமாக, உடலுறவு படங்கள் எல்லாம் போட்டு கற்பனை அவதூறு உருவங்கள் தீட்டி முஸ்லிம்களை அசிங்கப்படுத்தி கார்டூன்களை வரைந்து தொடர்ந்து வெளியிட்டது. இதற்குக் காரணம், அப்போது… ‘இன்னொசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ்’ என்கிற ஆங்கில திரைப்படம் ஒன்று… நபியவர்களையும் முஸ்லிம்களையும் அவதூறு கற்பித்து இழிவுபடுத்தி எடுத்ததை எதிர்த்து பல்வேறு நாடுகளில் முஸ்லிம்கள் கண்டன ஊர்வலம் & ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனால்… வயிறு எரிந்த பத்திரிகை… எரியும் தீயில் எண்ணையை ஊற்றும் விதமாகவே மேற்படி ஆபாசக்கார்ட்டூன்களை அப்பத்திரிக்கை அம்மாதம் தொடர்ந்து வெளியிட்டது. இதுதான், கருத்துச்சுதந்திரம் என்று பத்திரிகை பேச, ஆட்சியாளர்கள் பத்திரிக்கையை ஆதரிக்க… இதனால், ஃபிரெஞ்சு முஸ்லீம்கள் மேலும் நொந்துபோய், ‘அமெரிக்க படத்தை கண்டித்துக்கொண்டு இருந்த நமக்கு இப்போது இன்னொரு போராட்டமா.?’ என சோர்ந்து போய் மூலையில் முடங்கினர்.

அதன் பின்னர்…

2015 ஜனவரி 7ல்தால்... துப்பாக்கி ஏந்திய 2 அல்ஜீரியா நாட்டு வம்சாவழி பயங்கரவாதிகளால்… சார்லி ஹெப்டோ பத்திரிகை சுடப்பட்டு… அங்கே பணியாற்றியவர்களில் 12 பேர் இறந்து போனார்கள். 11 பேர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட இருவரும் தப்பித்து செல்ல… துரத்திக்கொண்டு சென்ற ஃபிரான்ஸ் காவல்துறை 2 நாள் கழித்து இருவரையும் சுட்டுக்கொலை செய்துவிட்டு அவர்கள் ‘அல்கொய்தா பயங்கரவாதிகள்’ என்று அறிவித்தனர்.

பின்னர், அவர்களின் குடும்பத்தார், நண்பர்கள், உடன் பணியாற்றிய அலுவலர்கள் என்று பலரை விசாரித்து சிலர் மீது வழக்கு போட்டு… அந்த வழக்கு… இவ்வருஷம் 2020ல் செப்டம்பர் மாதம் 2ல் இறுதி விசாரணைக்கு வந்து இம்மாதம் கோர்ட்டில் தீர்ப்புக்கு நெருங்குகிறது.

இந்நிலையில்தான்…

அந்த பத்திரிகை… “எல்லாம் இதற்காகத்தான்” என தலைப்பிட்டு… இதுவரைக்கும் அது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றி வெளியிட்ட அத்தனை கார்டூன்களையும் மீண்டும் செப்டம்பர் முதல்வாரம் தன் பத்திரிக்கையில் வெளியிட்டது.

வழக்கு கோர்ட்டில் இருக்க மீண்டும் அப்படங்களை வெளியிட்டதும்… கருத்துரிமை என்றே பேசப்பட்டது.

அப்படங்களை… இம்மாதம், ஒரு பள்ளி ஆசிரியர் தன் வகுப்பில் தொங்கவிட்டு, ‘இப்படங்களை சகிக்க முடியாத முஸ்லிம் மாணவர்கள் வெளியே போகலாம்’ என்று கூறிவிட்டு பிற மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.

இதுகுறித்து வகுப்பில் இருந்த ஒரு மாணவி எடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆக, ரஷ்ய வம்சாவழி மாணவன் ஒருவன் அந்த ஆசிரியரை சென்ற வாரம் கொன்றுவிட்டதாக கூறி, அந்த மாணவனை அன்றே சுட்டுக்கொலை செய்துவிட்டது ஃபிரான்ஸ் போலீஸ்.

இது மீண்டும் பெரிய சர்சையாக… ஃபிரான்ஸ் முஸ்லீம்கள் மட்டுமின்றி உலக முஸ்லீம்கள் அனைவருமே இந்த கொலையை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்க… பிரான்ஸ் அரசோ… நாட்டிலுள்ள 73 பள்ளிவாசல்களையும் மற்றும் பல இஸ்லாமிய கல்வி நிலையங்களையும் மூட உத்தரவு இட்டது.

அதுமட்டுமின்றி…

ஃபிரான்ஸ் அரசே தன் நாட்டின் அரசு அலுவலகங்களில், சார்லி ஹெப்டோ வரைந்து வெளியிட்டிருந்த அந்த அருவருக்கத்தக்க ஆபாச கார்டூன்களை தொங்கவிட்டு…

“இதுதான்டா #கருத்துரிமை” என்று கூறிய பிரான்ஸ் அதிபர் மெக்ரான், “உலகம் முழுக்க இஸ்லாம் ஒரு பிரச்சினை” என்றும் கூறினார்.

இது ஃபிரான்ஸ் நாட்டு முஸ்லிம்களின் மனதை புன்படுத்தும் என்றோ… உலக முஸ்லீம்களின் மனதை புன்படுத்தும் என்றோ கிஞ்சித்தும் கருதவில்லை. உலகின் அனைத்து முஸ்லீம்களையும் கொலையாளிகளாகவும்… அந்த கொலையை செய்ய தூண்டும் தூதராக நபியையும், பள்ளிவாசல்களையும் இஸ்லாமையும் பார்த்தார், அதிபர் மக்ரோன்.

துருக்கி அதிபர் எர்துகான், இதற்கு கண்டனம் தெரிவித்து, “பிரான்ஸ் அதிபருக்கு மனநல சிகிச்சை தேவை” என்றார்.

உடனே, பிரான்ஸ் தன் துருக்கி தூதரகத்தை மூடிவிட்டு தூதரை அழைத்துக்கொண்டு விட்டது. ஐரோப்பிய யூனியன், எர்துகான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, எர்துகான் அப்படி கூற அவருக்கு கருத்துச்சுதந்திரம் கருத்துரிமை போன்ற ஈரவெங்காயங்கள் ஏதுமில்லை என்று அறிவித்துவிட்டது.

இதனால், ஒரு நாடே, ஐரோப்பிய கண்டமே அந்த கேவலமான பத்திரிக்கையாகவே மாறிவிட்டதால்… வெகுண்டெழுந்த உலக முஸ்லீம்கள் குறிப்பாக அரேபிய முஸ்லீம்கள், பிரெஞ்சு பொருட்களை பகிஷ்கரிக்க Boycott French Products மற்றும் Boycott MadeIn France என்கிற டிவிட்டர் ஹேஷ் டேக்ஸ் போட்டு நேற்று முன்தினம் ட்ரெண்டிங் செய்தனர்.

ஒரே நாளில் அதன் தாக்கம் பிரெஞ்சு பொருளாதாரத்தில் எதிரொலிக்கவே…இதோ… நேற்று ஃபிரான்ஸ் அதிபர் அரேபிய முஸ்லிம்களிடம் கெஞ்சுகிறார். இஸ்லாமோஃபோபியா நோய்க்கு எது சிறந்த மருந்து என்பதை அரேபிய முஸ்லிம்கள் புரிந்து கொண்டனர்.

இதன் தாக்கம்…

பிரான்ஸ் நாட்டு தீர்ப்பு மன்றத்தில் மட்டுமின்றி… சார்லி ஹெப்டோவில் கூட எதிரொலிக்கலாம்.

ஃபிரான்ஸ் ஒன்றும் கருத்துரிமை காவலில் நடுநிலை பேணும் நாடெல்லாம் அல்ல. கிருஸ்துவ கத்தோலிக்க நம்பிக்கைகளுக்கு எதிரான படம் என்றாலோ… யூதர்களுக்கு எதிரான கருத்துகள் என்றாலோ… சினிமா, புத்தகம், பாடல் ஆகியவற்றுக்கு தடை போடும் நாடுதான் ஃபிரான்ஸ்.

ஆனால், இஸ்லாமுக்கு எதிரான ஒன்று என்றால் மட்டும் அதில் கருத்துச்சுதத்திர கத்திரிக்காய் எல்லாம் பேசும் நாடுதான் ஃபிரான்ஸ். ஆடை அணிவதும் அணியாமல் போவதும் அவரவர் சுதந்திரம் என்று கூறும் நாடு ஃபிரான்ஸ். ஆனால்… முஸ்லீம் பெண்கள் அவர்கள் விரும்பிய ஆடையை அணிந்து செல்ல தடைபோடும். இப்படியாக… அதன் சுதந்திரம் அவ்வப்போது முஸ்லிம்கள் விஷயத்தில் மட்டும் பல் இளிக்கும் நீண்ட நெடிய வரலாறு உண்டு.

மொத்தத்தில்…

சார்லி ஹெப்டோ துணையோடு… கொரோனா மரணங்களை மறக்கடித்து… மக்கள் ஆதரவை பெற்று தேர்தலில் வெல்ல முயல்கிறார் மெக்ரான்.
ஆம், முஸ்லீம் வெறுப்பு’தான் அரசியல் வெற்றிக்கான எளிய மூலதனம் என நினைக்கிறார்.

– சாட்டை சு.அப்துல் ஹாதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 3 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb