Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நூற்றாண்டின் முன்மாதிரிப் பிரதமர்

Posted on October 24, 2020 by admin

நூற்றாண்டின் முன்மாதிரிப் பிரதமர்

[ எத்தியோப்பிய வரலாறு இணைக்கப்பட்டுள்ளது ]

2019 அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா பிரதமரான அபி அஹமது அலி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவரை பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. 

அதற்கு காரணம் ஊடக வன்முறை.

இவர் நோபல் பரிசை பெறுவதற்கு நூறு சதவீதம் தகுதியுடையவர்.

சரி, இவரைப் பற்றி நாம் கொஞ்சம் அறிவோமா?  #எத்தியோப்பியா பெரும் ஆயுத போராட்ட வன்முறையில் சிக்கி சீரழிந்து கொண்டிருந்த வேளையில், 2018 ஏப்ரலில் இவர் ஆட்சியை பிடித்தார்.

ஆட்சிக்கு வந்தவுடன், அங்கு இருந்த அவசர நிலை பிரகடனத்தை ரத்து செய்தார்.

அரசியல் கைதிகளை எந்த நிபந்தனையும் இன்றி விடுவித்தார்.

அதன் பின் செய்தது என்ன?  அங்கு போராடிய ஆயுத இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நாட்டில் அமைதியை நிலைநாட்டினார்.

அவர்களுக்கு அரசியல் அதிகார பதவிகளை வழங்கினார்.

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் ஆட்சியதிகாரத்தில் பெண்கள் மூன்றில் ஒரு பங்கு அரசியல் அதிகாரத்துக்கு போராடி வரும் நிலையில், இவர் செய்தது என்ன?  அதே காலகட்டத்தில், எத்தியோப்பிய நாட்டு ஆட்சியதிகாரத்தில் பெண்களுக்கு 50 சதவீத பிரதிநிதித்துவம் கிடைக்கும்படி செய்தார்.

இங்கே இந்தியா காஷ்மீர் போல, எத்தியோப்பியாவுக்கும் எரித்திரியா என்ற சிறிய நாட்டிற்கும் நீண்ட காலமாக இருந்துவந்த சிக்கலை முழு மூச்சாக முடிவுக்கு கொண்டு வந்தார்.  எரித்ரியா வின் முழு சுதந்திரத்தை அங்கீகரித்தார்.

தனது அண்டை நாடான சூடான் ல் நடைபெற்ற பிரச்சனையில் தலையிட்டு அங்கு அமைதி நிலவ பெரிதும் காரணமாக இருந்தார்.

#பிரேசில் நாட்டில் கார்ப்பரேட் நலன்களுக்காக காடுகள் தீவைத்து எரிக்கப்படுகிறது.? ஆனால் #எத்தியோப்பியா வில்? பிரதமரான இவர்  சுற்றுச் சூழலை மேம்படுத்த, எத்தியோப்பிய பள்ளிக்கூட பிள்ளைகளை வைத்து “ஒரு மில்லியன்” மரக்கன்றுகளை நடச் செய்தார்.

எத்தியோப்பியா விமான சேவையை உலக தரத்திற்கு உயர்த்தினார்.

இன்று விமான சேவையில் உலகிலேயே சிறந்தது எத்தியோப்பியாதான் என்பது உறுதியாகியுள்ளது.

இதையெல்லாம் தான் “ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே” செய்து முடித்தார் என்பது சிறப்பு.

1984 இல் எத்தியோப்பியாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டு ஒரு மில்லியன் மக்கள் வரை கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து ஏற்பட்ட உள்நாட்டுப் போர் 1991 இல் டேர்க்கின் வீழ்ச்சியுடன் முடிவடைந்தது.

எத்தியோப்பியா இன்னும்ம் ஏழை நாடாகவே இருந்தபோதும், அதன் பொருளாதாரம் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது.

எத்தியோப்பியா மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

அவர்களுக்கு “ஒரு செயல்படும் பிரதமர்” கிடைத்திருக்கிறார்!

– Umar Sharief

இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் எத்தியோப்பிய பிரதமர்

எத்தியோப்பியா வரலாறு

அடல் சுல்தானேட்
கூ.செ.செய்யது முஹமது

1990 வரையிலும் எத்தியோப்பாவின் பகுதியில் குடியேறியவர்களைப் பற்றி ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதானிருந்தது. எத்தியோப்பாவின் தென்மேற்கிலிருந்து வடகிழக்கு வழியாக செல்லும் கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்கா வழியாக சிலர் குடியேறி இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. 1974 ல் நடந்த சில ஆராய்ச்சியில் அவாஷ் ஆற்றின் கரையில் சில மனித படிவங்கள் கிடைத்தன. முதல் எத்தியோப்பியா பேரரசு ஹபீஷா மக்களால் தான் (அபிசீனியர்கள்) அமைக்கப்பட்டது.

எத்தியோப்பாவில் ஆஃப்ரோ ஏஷியாடிக் மொழி பரவலாக இருக்கிறது. மேலும், ஓமோடிக், குஷிடிக், செமிடிக் மொழிகளும் உண்டு. இதில் ஓமோடிக் 13,000 B.C. க்கு பிறகு தென்பகுதி வழியாக மத்திய மற்றும் தென்மேற்கு எத்தியோப்பாவில் பரவியது. கிறிஸ்துவத்துக்கு முன்பு வரை இவர்கள் காட்டு புல் மற்றும் தானிய வகைகள் பயிரிட்டார்கள்.

முதலாம் நூற்றாண்டில் தென்மேற்கு அரேபியாவிலிருந்து செங்கடலைக் கடந்து எத்தியோப்பாவின் கரைகளிலும் சிலர் பரவினர். ஹீப்ரு ஷிபா என்றழைக்கப்பட்ட இவர்கள் ஹாமைட் என்ற பகுதியை வெற்றிகொண்டு எத்தியோப்பியாவாக உருவாக்கினார்கள். இரண்டாம் நூற்றாண்டில் ஆக்ஸும் பேரரசு உருவாகியது. இதை சாலமோனிட்கள் ஆண்டார்கள். இவர்கள் பைபிளில் சொல்லப்பட்ட சாலமோனும், ராணி ஷீபா வழிவந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். துறைமுக நகரமான அடுலிஸ், குடியேறுபவர்களுக்கு பெரிதும் பயன்பட்டது.

கிறிஸ்துவத்துக்குப் பிறகு, அக்ஸுமைட் கலாச்சாரம் கிழக்கிலும், மேற்கிலும் உருவாகியது. பின்னாளில் அக்ஸுமைட் மாநிலம் என்றும் உருவானது. பத்தாம் நூற்றாண்டில் சாலமோன் பேரரசு வீழ்த்தப்பட்டு ஸாக்வி பேரரசு உருவானது. மீண்டும் போராடி சாலமோன்கள் எத்தியோப்பியாவின் பகுதிகளை வென்றார்கள்.

அடல் என்னும் இஸ்லாமிய பகுதியைச் சேர்ந்த கிரான் அஹ்மத் என்பவர் 1527 ல் எத்தியோப்பா மீது படையெடுத்து வென்றார். அடல் சுல்தானேட் என்பது ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒரு ஆட்சிவம்சம். அரபுமொழியில் அடல் என்றால் நீதி என்று பொருள். அடல் சுல்தானேட் தற்போதைய சோமாலியா, எத்தியோப்பியா, திபோத்தி, எரிட்ரியா ஆகிய பகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

இஸ்லாம் பரவ ஆரம்பித்த 7 ம் நூற்றாண்டிலேயே வேகமாக ஆப்பிரிக்காவில் பரவியதற்கு ஆதாரமாக சோமாலியாவில் கட்டப்பட்ட மிஹ்ரப் அல் கிப்லதைன் மஸ்ஜித் ஆதாரமாக இருக்கிறது. சோமாலியாவில் ஸெய்லா நகரத்தைத் தலைநகரமாகக் கொண்ட இவர்கள் 14 ம் நூற்றாண்டில் அபிசீனிய மன்னன் அம்டா சியோன் கிறிஸ்தவர்களை எதிர்த்துப் போர் இருந்திருக்கிறான்.

இவர்களின் பெரும் பகுதியான இஃபாத் பகுதியிலிருந்த சாஃஅத்தீனை எத்தியோப்பிய மன்னன் முதலாம் தாவித் செய்லா போரில் கொன்றுவிட, அவர் மகன்கள் ஏமனுக்கு தப்பிச் சென்றார்கள். 15 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் திரும்பிவந்த அவர் மகன் இரண்டாம சாஃஅத்தீன் தன் சகோதரர் முஹம்மதுவின் உதவியுடன் டக்கார் பகுதியில் அடல் ஆட்சிவம்சத்தை மீண்டும் துவக்கினார்.

இவர் தந்தையாருடன் முன்பு இருந்தவர்கள் இவருடன் சேர்ந்து கொண்டார்கள். முதலில் எத்தியோப்பியாவில் எதிரியாக இருந்த சிலரை செர்ஜான், ஸிக்ர் அம்ஹாரா போர்களில் வென்றார். யெஷாக் என்பவன் பெரிய படைகொண்டு, இரண்டாம் சாஃஅத்தீன் வீரர்களை விரட்ட முதலில் ஓடியவர்கள் பிறகு, மேலும் சிலரை சேர்த்துக் கொண்டு, யெஷாத்தின் பகுதிகளில் கொள்ளையடித்து கோட்டையை முற்றுகை இட்டார்கள்.

இதில் இவர் படைகள் கொல்லப்பட இரண்டாம் சாஃஅத்தீன் தப்பித்தார். ஆனால், இயற்கையாக 1422 ல் இறந்து போனார். இவர்களுக்கு போட்டியாக முஸ்லீம்களின் ஆட்சியாக இன்னொரு வலாஷ்மா ஆட்சிவம்சம் இருந்தது. அவர்களை இரண்டாம சாஃஅத்தீன் சந்ததிகள் யாரும் விரும்பாமல் எதிர்த்தார்கள். சந்ததியின் பத்லாய் என்பவரின் மகன் முஹம்மது இப்ன் பத்லாய் அடல் ஆட்சிவம்சத்தின் சுல்தானாய் இருந்தார்.

இவர் வலாஷ்மாவின் பயீதா மர்யமுடன் ஆண்டு கப்பம் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து கொண்டு, அப்பகுதியில் அமைதி ஏற்படுத்தினார். ஆனால், வளம்கொழிக்கும் ஸெய்லா பகுதியிலிருந்த எமிர் இது அடல்களை ஏமாற்றும் செயல் என்று கப்பம் செலுத்த மறுத்தார். அடல்களின் இராணுவம் சப்ர் அத்தீன், மன்சூர் அத்தீன், ஜமால் அத்தீன், ஷம்ஸ் அத்தீன் மற்றும் ஜெனெரல் மஹ்ஃபூஸ் ஆகியோரின் கீழ் அபிசீனியாவின் ஆதிக்கத்தை எதிர்க்க போராடிக் கொண்டிருந்தார்கள்.

இதில் மஹ்ஃபூஸ் வெற்றிகரமாக போராடி பேரரசர் நஃஓதைக் கொன்றார். ஆனால், இவரை இரண்டாம் தாவித் என்பவர் 1517 ல் கொன்றார். அடல்களுக்குள் உள்நாட்டுப்போர் வர இரண்டாண்டு காலத்தில் ஐந்து எமிர்கள் ஆட்சி செய்தார்கள். இவர்களில் கரட் அபூவுன் அத்துஸ் என்பவர் பலத்துடனும், மக்களின் பெரும் ஆதரவுடனும் ஆட்சிக்கு வர அவரை சுல்தான் அபுபக்கர் இப்ன் முஹம்மது கொன்று 1554 ல் ஆட்சிக்கு வந்தார்.

ஹராரை தலைநகராகக் கொண்டு ஆண்ட இவரை இமாம் அஹ்மத் இப்ன் இப்ராஹீம் அல் காஸி என்பவர் தோற்கடித்துக் கொன்று தன் சகோதரர் உமர்தின் என்பவரை சுல்தான் ஆக்கினார். இவர் புகழ்பெற்ற அபிசீனிய போரை ஓட்டோமான்கள் கொடுத்த பீரங்கிகளுடன் போர்ச்சுகீசியர்களை எதிர்த்தார். இதில் எத்தியோப்பியாவின் உயர்பகுதிகள் பலவற்றைக் கைப்பற்றினார்.

இந்த அடல்கள் பிரிந்து எத்தியோப்பியாவின் ஆஸ்ஸா, ஹரார் பகுதிகளை பல சுல்தானேட் பகுதிகளாக ஆண்டார்கள். இதில் ஹரார் பகுதியும் சிதைந்து போக ஆஸ்ஸா சுல்தானேட் இமாம்களால் வரிசையாக ஆளப்பட்டது. அதை அவர்கள் முதைய்தா ஆட்சிவம்சம் என்று கூறிக்கொண்டு, சுல்தான்கள் கையில் ஒரு வெள்ளி தடியை வைத்திருப்பார்கள். அது அவர்களுக்கு சக்தி அளிப்பதாகக் கூறிக்கொண்டார்கள்.

ஈதுல் அள்ஹா தொழுகைக்காக கூடியிருக்கும் மக்கள்

1543 ல் மீண்டும் கிறிஸ்தவ அமைப்புகள் முஸ்லீம்களை வென்று, எத்தியோப்பா மன்னனை காப்டிக் கிறிஸ்துவத்திலிருந்து ரோமன் கத்தோலிக்கத்துக்கு மாற்ற முயன்றனர். பின் பல கலவரங்களுக்குப் பின் ஃபசிலாதாஸ் என்பவரும் , தொடர்ந்து அவர் மகன் முதலாம் ஜோஹன்னசும் ஆண்டனர். பதினேழாம் நூற்றாண்டில் மேற்கத்திய மற்றும் இஸ்லாமிய கலாச்சாரத்துடன் எத்தியோப்பியா உருவானது. இது முதலாம் ஜோஹன்னசின் மகன் இயாஸுஸ் காலத்தில் 1682 ல் நடந்தது. இவர் கலைகளில் நாட்டமுள்ளவராய் இருந்து பல அழகிய கட்டிடங்களையும் கட்டினார். 1706 ல் இயாஸிசின் மரணத்திற்கு பிறகு, குழப்பங்கள் நிலவி எத்தியோப்பியா பல பகுதிகளாகப் பிரிந்தது. 1855 ல் கஸ்ஸா ஹைலு பல போராட்டங்களுக்குப் பிறகு, இரண்டாம் தியோடராக பதவியேற்றார்.

இவர் சிறிய கவர்னர்களைக் கலைத்து விட்டு, ஒரே தலைமையின் கீழ் கொண்டு வந்தார். இதனால் பிரிட்டிஷாருடன் பதட்டம் நிலவியது. தியோடர், பிரிட்டிஷ் கான்சுலர் உள்பட, பல பிரிட்டிஷாரை கைது செய்தார். பிரிட்டிஷார் லார்ட் ராபர்ட் நேப்பியர் என்பவர் தலைமையில் நடவடிக்கை எடுக்க, பேரரசர் தற்கொலை செய்து கொண்டார். பின் பலர் அரசாட்சிக்கு முயற்சிக்க டிஜாச் கஸ்ஸாய் என்பவர் டிக்ராய் பகுதியைக் கைப்பற்றி நான்காம் ஜோஹன்னசாகப் பொறுப்பேற்றார். இவரது ஆட்சியும் உள்நாட்டு குழப்பங்களாலும், 1876 ல் எகிப்தியர்களின் ஆக்கிரமிப்பாலும் 1881 ல் சூடானின் படையெடுப்பாலும் தடுமாறியது. பின் சூயஸ் கால்வாயின் பயன்பாட்டால் இத்தாலி, ஃப்ரான்ஸ் மற்றும் பிரிட்டனின் நடமாட்டம் அதிகமாகியது. பின் 1889 ல் இரண்டாம் மெனெலிக் என்பவர் அட்டிஸ் அபாபாவை தலைநகராகக் கொண்டு, டிக்ரேய், அம்ஹரா மற்றும் ஷிவா பகுதிகளை இணைத்து ஒரு ஆட்சியை உருவாக்கினார்.

19 ம் நூற்றாண்டில் நிறைய ஐரோப்பிய நாடுகள் ஆப்பிரிக்காவில் காலூன்ற சந்தர்ப்பம் பார்த்தன. குறிப்பாக இத்தாலி எத்தியோப்பியாவைக் குறி வைத்தது. இத்தாலிக்கும், எத்தியோப்பியாவுக்கும் இடையே பல குழப்பங்களுக்கிடையில் 1895 ல் அத்வா என்ற இடத்தில் போர் நடந்தது. இதில் மெனெலிக் வென்று எத்தியோப்பியாவை சுதந்திர நாடாக அறிவித்தார். அவருக்குப் பின் அவரது மகள் 1917 ல் ஸௌடிது ஆட்சி செய்தார். அவர் இறந்த பிறகு, முதலாம் ஹைலி செலஸ்ஸி 225 வது சாலமோனிக் பேரரசரானார்.

முதல்முறையாக எழுத்து பூர்வமான சட்டம் இயற்றினார். எத்தியோப்பியாவை 1932 ல் ஐக்கிய நாட்டு சபையுடன் இணைத்தார். 1936 ல் முசோலினி எத்தியோப்பியா மீது படையெடுத்து வென்று மன்னர் மூன்றாம் விக்டர் இம்மானுவேலை அரசராக்கினார். ஹைலி செலாஸ்ஸி தப்பி இங்கிலாந்துக்கு சென்றார். மீண்டும் 1941 ல் பிரிட்டிஷ் எத்தியோப்பியா படைகளின் உதவியுடன் ஹைலி செலாஸ்ஸி வென்றார்.

1960 ல் பொருளாதார முன்னேற்றம், சமூக சீரமைப்பு போன்ற நடவடிக்கைகளை எடுக்கும் போது ஹைலி செலஸ்ஸி மீண்டும் பதவியிலிருந்து எறியப்பட்டார். பல பிரச்சினைக்குப் பிறகு, எத்தியோப்பியாவில் ஒரோமோ, அஃபர்ஸ், சோமாலி மற்றும் எரிட்ரியன் என்று பல போராளி குழுக்கள் உருவாகின. எத்தியோப்பியாவின் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்ட ஹைலி செலஸ்ஸியின் முயற்சிகளை வீணாக்கி ஐரோப்பிய நாடுகள் எத்தியோப்பியாவை உலகின் மிகவும் வறுமையான நாடாக ஆக்கியது.

source:  http://islamiyaatchivaralaru.blogspot.com/2016/04/blog-post_11.html

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

58 + = 59

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb