நான் ஸூறா முல்க் பேசுகிறேன்…
நான் ஸூறா முல்க். மக்கா தான் என் ஊர். என்னை அறியாதவர்கள் உங்களில் எவரும் இருக்கமாட்டார்கள். எல்லோரும் என்னை ஸூறா முல்க் என்பதற்கு பதிலாக ஸூறா தபாறக்கா என்று அழைப்பார்கள்.
இஷா – மஃரிப் இடையேயான நேரங்களில் தான் அதிகமாக ஓதப்படுவேன். எனக்கு முப்பது வசனங்கள் இருக்கிறது. என்னை ஓத சில நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால் பலர் என்னை ஓத சோம்பறியாகவே உள்ளனர்.
ஆனால் எவரும் துணைக்கு இல்லாத போது நான் தான் அவர்களின் நண்பன் என்று அவர்களுக்கு தெரியாது.
யாராவது என்னை ஓதினால் அவர்கள் கப்றில் (மண்ணறையில்) வெளிச்சம் பெறுவார்கள். என்னை ஓதக்கூடியவர்கள் சுவனத்தில் நுழையும் வரை நான் அவர்களுக்காக வாதிடுவேன்.
மக்கள் இன்னும் என்னை கண்டுகொள்ளாமல் இருப்பதால் நான் மிகவும் வருத்தமாக இருக்கிறேன். உன் சிறந்த நண்பனாக என்னை உனக்கு ஆக்கி கொள்ள முடியாதா?
என்னைப்பற்றி வந்த ஹதீஸ்களின் மூலம் என்னை அதிகம் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.
*ففي الحديث أنه صلى الله عليه وسلم قال: سورة تبارك هي المانعة من عذاب القبر. رواه الحاكم،*
*وعن أبي هريرة ـ رضي الله عنه ـ عن النبي صلى الله عليه وسلم قال: إن سورة في القرآن ثلاثون آية شفعت لرجل حتى غفر له، وهي: تبارك الذي بيده الملك. رواه أبو داود والترمذ[12/08,*
*11 وعن ابن عباس قال: ضرب بعض أصحاب النبي صلى الله عليه و سلم خباءه على قبر ـ وهو لا يحسب أنه قبر ـ فإذا فيه إنسان يقرأ سورة تبارك الذي بيده الملك حتى ختمها، فأتى النبي صلى الله عليه و سلم فقال: يا رسول الله إني ضربت خبائي على قبر ـ وأنا لا أحسب أنه قبر ـ فإذا فيه إنسان يقرأ سورة تبارك الملك حتى ختمها. فقال رسول الله صلى الله عليه وسلم: هي المانعة، هي المنجية تنجيه من عذاب القبر. رواه الترمذي،*
பரிசுத்த குர்ஆனிலே 67-ம் அத்தியாயமான தபாறக்கா என்ற பெயரில் அறியப்படும் ஸூறாவிற்கு சில விஷேசமான சிறப்புகள் உள்ளது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லித் தந்துள்ளார்கள்.
30 வசனங்கள் அடங்கிய இந்த அத்தியாயத்தின் மிகப்பெரிய சிறப்பு கப்ற் வேதனையிலிருந்து விடுதலை பெறுவது என்பதாகும்.
நரக விடுதலையும், ஸிறாத் பாலத்தின் மீது பாதுகாப்பும், நபிகளாரின் ஷஃபாஅத்தும் இதன் மற்ற சிறப்புகளாகும்.
விசுவாசிகளின் மிக இக்கட்டான நிலையில் காப்பாற்ற வருகின்ற ஸூறாவாக இந்த ஸூறாவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிமுகப்படுத்தியதை ஹதீஸ்களில் பார்க்க முடியும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்;
‘குர்ஆனில் முப்பது வசனங்கள் அடங்கிய ஒரு ஸூறா இருக்கிறது. அதை ஓதுகிறவர்களுக்கு பாவ மன்னிப்பு கிடைக்கும் வரைக்கும் அது சிபாரிசு செய்து கொண்டிருக்கும். அது தபாறக்கா என்ற ஸூறாவாகும்.”
இமாம் குர்துபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அறிவிக்கிறார்கள்;
“இந்த ஸூறாவை தினமும் ஓதும் நபருக்கு எந்த ஃபித்னாவும் (குழப்பவும்) அவரை பாதிக்காது.”
“குர்ஆனில் முப்பது வசனங்கள் அடங்கிய ஒரு ஸூறா இருக்கிறது. அதை ஓதுபவன் சுவனம் செல்லும் வரைக்கும் அது சிபாரிசு செய்து கொண்டிருக்கும் அது தபாறக்கா என்ற ஸூறாவாகும்.” (கஸீனத்துல் அப்றார்)
தபாறக்கா ஸூறத்தினுடைய பொருள் உட்கொள்ளுவது அந்த ஸூறாவின் முதல் பகுதியிலாகும்.
‘யாராவது ஸூறா முல்க் ஓதுவதை வழமையாக்கினால் அதில் விவரிக்கப்பட்ட விஷேச குணங்கள் அனைத்தும் அல்லா நாடினால் அவரில் சங்கமிக்கும். உயர்ந்த மகத்துவங்களும், பதவிகளும் அவருக்கு கிடைக்கும். அதிகாரம், செல்வாக்கு, பணம் கிடைக்கும் மற்றும் மக்களின் அன்பை பெற இந்த ஸூறா ஓதுவதை வழமையாக்கவும்.” (கஸீனத்துல் அப்றார்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்;
“தபாறக்கா ஸூறா எல்லா விசுவாசிகளின் இதயங்களிலும் இருக்க வேண்டுமென நான் ஆசைப்படுகிறேன்.” (தத்கிறத்துல் குர்த்துபி,ஹாக்கீம்)
கப்றுக்குள் (மண்ணறைக்குள்) கிடக்கும் மனிதனின் பாதத்தின் சுற்றுப்புறத்தில் அல்லாஹ்வின் தண்டனை வரும் போது அவனுடைய பாதங்கள் என்னை நெருங்க வழியில்லை என்று சொல்லும் காரணம் அவர் ஸூறா முல்க் ஓதுபவராக இருந்தார்.
நெஞ்சு, மற்றும் வயிற்றைக்கடந்து அல்லாஹ்வின் தண்டனை வரும் போது நீங்கள் இதை கடந்து வரமுடியாது என்று அவைகள் சொல்லும். ஏனெனில் அவர் ஸூறா முல்க் வழமையாக ஓதி வந்தார் என்று அவைகள் பதில் கூறும்.
பிறகு தலைவழியாக தண்டனை வரும் போது நீங்கள் இதை கடந்து வர இயலாது என அவை பதிலளிக்கும். ஏனெனில் இவர் ஸூறா முல்க் ஓதுபவராக இருந்தார் என்று தலை பதிலளிக்கும். (ஹாக்கீம்)
இந்த ஸூறா கப்ரின் வேதனையை, தண்டனையை தடுக்கும். இதை ஒரே இரவில் ஓதுபவர்களுக்கு நிறைய வெகுமதிகள் கிடைக்கும். தவ்ராத் வேதத்தில் இதன் பெயர் ஸூறா முல்க் என்பதாகும். (ஹாக்கீம்)
இதோ ஸூறா முல்க் பற்றிய மற்றொரு நபிமொழி…
இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அன்னவர்களிடம் ஒரு தோழர் வந்து சொன்னார்;
யா ரஸுலுல்லாஹ்! ஒரு கப்ருக்கு மேலே அது கப்ர் என தெரியாமல் கூடாரம் அமைத்து தங்கினேன் அப்போது கப்ருக்குள்ளே இருந்தவர் ஸுரா முல்க்கை முழுமையாக ஓதினார்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்; ‘அந்த( முல்க்) அத்தியாயம் நரக வேதனையை தடுக்கும். ஈடேற்றத்தை கொடுக்கும்.’ (அறிவிப்பு: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி 2815)
குர்ஆனில் முப்பது வசனங்கள் அடங்கிய ஒரு அத்தியாயம் இருக்கிறது. அதை ஓதுபவன் சுவனத்தில் நுழையும் வரை அது அவனுக்காக சிபாரிசு செய்து கொண்டிருக்கும். அந்த ஸூறாவின் பெயர் தபாறக்கா என்பதாகும். (கஸீனத்துல் அப்றார் 169)
ஸூறா முல்க் முப்பது வசனங்களும், 333 வாக்கியங்களும், 1321 எழுத்துக்களும் அடங்கிய ஒரு ஸூறாவாகும். (கஸீனத்துல் அப்றார்.)
கப்றின் தண்டனையிலிருந்து விடுதலை, பாவமன்னிப்புக்கு வழிவகுத்தல், தினமும் ஓதுபவர் சுவனம் செல்லும் வரைக்கும் சிபாரிசு செய்தல், அல்லாஹ்வுக்கு முன் ஓதுபவருக்காக சிபாரிசு, தினமும் ஓதுபவருக்கு நஷ்டங்கள் வராமலிருத்தல், தபாறக்கா ஸூறாவின் முதல் பகுதியில் கூறப்பட்ட விஷேசங்கள் அதை ஓதுபவரில் சங்கமித்தல், மக்கள் செல்வாக்கும், அதிகாரமும் பெறுதல், பொருளாதார முன்னேற்றம் கிடைத்தல்.
நான் எதிர்பார்த்தது போலவே நீ என்னை புரிந்து கொண்டாய் என்று நான் நம்புகிறேன். அதுப்போன்று உன்னுடைய சிறந்த நண்பனாகவும் நான் இருப்பேன் என்று நம்புகிறேன்.
உங்கள் வாழ்க்கையை அழகாக்க பணத்தை தேடித் தேடி அலைகிறீர்கள். பிறகு பத்திரமாக வங்கியில் பத்திரப்படுத்துகிறீர்கள். அதுப்போன்று கப்ற் என்கிற முதல் வீட்டில் நீங்கள் என்னை வைத்து அழகுப்படுத்துவீர்கள் என நான் நம்புகிறேன்.
நண்பர்களே!
குடும்பத்தினரும், நமக்கு சொந்தம் என்று பெருமையடித்து கொண்டு நடக்கும் நம் சொத்துக்களும், பணவும் எல்லாம் இங்கே தூக்கி வீசிவிட்டு தன்னந்தனியாக கப்ற் என்கிற வீட்டில் செல்ல உள்ளோம்.
அந்த வீட்டில் நாம் நுழையும் போது சில வேளை உங்களுடைய உற்ற நண்பர்களாக வரக்கூடியது பாம்புகளும், புழுக்களும், இருள் சூழ்ந்த கப்றில், நிமிர்ந்து நிம்மதியாக கிடக்க முடியாத சூழ்நிலையில் வெளிச்சமாக நான் உங்கள் முன் நிற்பேன்.
நீ என்னை நினைத்தால்(ஓதினால்) மட்டுமே போதும்.நான் உனக்காக மஹ்ஷரில் காத்து நிற்பேன்.