இஸ்லாமிடம் வலுவிழந்த நாத்திகம்
Aashiq Ahamed
நிகழ்கால வரலற்றில் இந்த விவாதத்திற்கு மிக ஸ்பெஷலான இடமுண்டு. “இஸ்லாமா? நாத்திகமா? எது அறிவுக்கு ஒத்துவருகிறது” என்ற தலைப்பில் ஏழு வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த விவாதம், யூடுயூப்-பில் 30 இலட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை தற்போது வரை பெற்றிருக்கிறது.
ஏன் இந்த விவாதம் தனித்துவமானது என்ற கேள்விக்கான பதில், இதில் நாத்திகர்கள் சார்பில் கலந்துக்கொண்ட நபர் தான்.
பேராசிரியர் லாரன்ஸ் க்ராஸ், மேற்கத்திய நாத்திகர்களால் ரிச்சர்ட் டாகின்ஸ்க்கு அடுத்த இடத்தில் வைத்து கொண்டாடப்பட்ட இயற்பியல் விஞ்ஞானியாவார். இவரின் புகழுக்கு சிறப்பான முறையில் முஸ்லிம்கள் முடிவுரை எழுதிய விவாதம் என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.
முஸ்லிம்கள் சார்பில் சகோதரர் ஹம்சா ஜார்சிஸ் கலந்துக்கொண்டார். முஸ்லிம்கள் அறிவியலுக்கு என்றும் எதிரியாக இருந்ததில்லை என்பதற்கு ஆயிரம் ஆண்டுகள் நீடித்த இஸ்லாமிய அறிவியல் பொற்காலமே சாட்சி என்பதை சுட்டிக்காட்டிய ஹம்சா, அதே நேரம் கண்மூடித்தனமாக எல்லாவற்றையும் நம்பவும் முடியாது என்றார்.
அறிவியலால் எல்லாவற்றிக்கும் விடை சொல்ல முடியாது, ஒழுக்கத்தின் எல்லைகளை எப்படி அறிவியலால் வரையறுக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய ஹம்சா, உதாரணத்திற்கு தன் பாலின உறவை (Homo sexuality) சுட்டிக்காட்டினார். இஸ்லாமிய ரீதியில் அதனை ஏற்க முடியாது என்ற ஹம்சாவிற்கு பதிலாக, தன் பாலின உறவுமுறை அறிவியல் ரீதியாக தவறில்லை என்றும் இருவரும் மனம் ஒத்து போனால் (கொடும) என்ன தப்பு என்றும் க்ராஸ் கேட்டார்.
ஹம்சா: சரி, அப்படியானால் incest (மொழி பெயர்க்க விரும்பவில்லை) குறித்து உங்கள் கருத்தென்ன? அது சரியா?
க்ராஸ்: நான் அதை பரிந்துரைக்கவில்லை, ஆனால் அறிவியல்ரீதியில் இது தவறில்லை. இருவரும் இயல்பாக மனம் ஒத்துபோனால் அறிவியல் ரீதியாக இதில் தவறு சொல்ல முடியாது.
இப்படி க்ராஸ் சொன்னது தான் தாமதம், பார்வையாளர்கள் மத்தியில் இருந்து “ஊ ஊ ஊ ஊ” என்ற பலத்த சத்தம். உண்மையில் க்ராஸ் சொன்னது சரியே. தன் பாலின உறவு, Incest போன்ற ஒழுக்க கேடுகளை அறிவியலால் தவறு என சொல்ல முடியாது. அப்படியானால், எது ஒழுக்கம் என வரையரை செய்வது யார்? எப்படி? கண்மூடித்தனமாக அறிவியலை மட்டுமே நம்பினால் ஒழுக்ககேட்டை கூட நாம் ஆதரிக்க வேண்டி வரும்.
எது ஒழுக்கம் என்பதை தனி மனிதர்களாலும் வரையறுக்க முடியாது, காரணம், ஒவ்வொருவரும் ஒவ்வொரு அளவீட்டை கூறுவார்கள். ஒழுக்கத்தின் வரையரையை தெளிவாக தீர்மானிக்க நம்மை படைத்தவனால் மட்டுமே முடியும். இஸ்லாம் இதனை தெளிவாக செய்கிறது. அப்படியானால், ஒழுக்க அளவீட்டில், எது அறிவுக்கு ஒத்துவருகிறது இஸ்லாமா? நாத்திகமா? என ஹம்சா ஜார்சிஸ் கேட்டதற்கு க்ராஸ்சிடம் பதிலில்லை.
ஒருகட்டத்தில், Incest-ஐ ஆதரிக்கும் க்ராஸ்-சிற்கு இஸ்லாமிய பெண்களின் உடையை விமர்சிக்க எந்த தார்மீக உரிமையும் இல்லை என ஹம்சா சொல்ல அரங்கத்தில் கைதட்டல் பறந்தது.
மற்றுமொரு தருணத்தில் ஒரு இயற்பியல் யுக்தியை ஹம்சா சுட்டிக்காட்ட, அது தவறு என்றார் க்ராஸ். அப்படியா, நீங்க சொன்னத தான் நான் சொன்னேன் என க்ராஸ் எழுதிய புத்தகத்தை எடுத்து 81-வது பக்கத்தை ஹம்சா காட்ட க்ராஸ் திணறிபோய் தன் இருக்கையில் இருந்து எழுந்து தன் டென்ஷனை காட்ட, பார்வையாளர்கள் மத்தியில் பலத்த சிரிப்பு சத்தம். இந்த தருணத்திலேயே க்ராஸ் வீழ்ந்து விட்டார்.
எந்தவொரு விசயத்தையும் அவர் சொன்னார் இவர் சொன்னார் என நம்பாமல் நீங்களே செய்து பார்த்து நம்புங்கள் என்ற க்ராஸ்-சிடம்,
ஹம்சா: ‘அப்படியா அப்ப நீங்க பரிணாமத்தின் எல்லா துறைகளிலும் ஆய்வு செய்திருக்கிறீர்களா?’
க்ராஸ்: இல்லை!
ஹம்சா: அப்படியானால், பரிணாமத்த ஏன் நம்புகிறீங்க?
க்ராஸ்: ‘ஆ வந்து’ என இழுக்க பார்வையாளர்கள் மத்தியில் ஆரவாரம் அடங்க நேரமானது. முடிவில், நாத்திகம் உள்ளிட்ட எந்தவொரு நம்பிக்கையையும் அறிவியல் ஆதரிக்காது, அது நடுநிலையானது என்பதை ஒப்புக்கொண்ட க்ராஸ், அதே நேரம், அறிவியல் கொடுக்கும் ஆதாரங்களை வைத்து, கடவுள் இல்லையென தான் நம்புவதாக கூறினார். அப்படியானால், அறிவியல் கொடுக்கும் ஆதாரங்கள் தங்கள் இறைநம்பிக்கையை வலுப்படுத்துவதாக ஆத்திகர்கள் நினைப்பதிலும் தவறில்லை தானே.
இந்த விவாதம் நடந்து ஏழு ஆண்டுகள் ஆகிறது. பலரையும் இந்த உறையாடல் இஸ்லாமை நோக்கி ஈர்த்திருக்கிறது என்பதை இவ்விவாதத்தின் கமெண்ட் பகுதியை பார்த்தால் தெரியும். 60,000 – த்திற்கும் அதிகமான கருத்துக்கள் கொண்டுள்ள இவ்விவாதத்தின் கமெண்ட் பகுதியில், பெருவாரியாக நாத்திகர்களும் இந்த விவாதத்தில் க்ராஸ் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.
ஒரு நாத்திகர் கூறுகிறார், ‘3.5 வருடங்களுக்கு முன்பு இந்த விவாதத்தை பார்த்தேன். உண்மையில் க்ராஸ் கூறிய அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முயற்சித்தேன். இஸ்லாமை அம்பலப்படுத்துவார் எனவும் எதிர்பார்த்தேன். ஆனால், இல்லை, க்ராஸ் முழுமையாக தோல்வியடைந்து விட்டார். இன்றோ, நான் ஒரு முஸ்லிம். நாத்திகத்தின் ஒழுக்க நெறி பிரச்சனைகளை அப்போது ஏன் என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை? மனித ஒழுக்கத்திற்கு நாத்திகத்தின் பதில் என்ன? இந்த கேள்விக்கான பதில் என்னை இஸ்லாமை நோக்கி தள்ளியது’.
மிக நிதானமாக சூழ்நிலையை கையாள்வதுடன், ஒன்றுக்கு இரண்டாக திருப்பி கொடுப்பதிலும் கை தேர்ந்தவர் ஹம்சா. க்ரீஸ் நாட்டை சேர்ந்த ஹம்சா ஜார்சிஸ் நாத்திகத்திலிருந்து இஸ்லாமை ஏற்றுக்கொண்டவர் ஆவார்.
கடந்த 2018-ஆம் வருடம், பெண்களிடம் தவறாக நடந்துக்கொண்டது நிரூபிக்கப்பட்டதின் பெயரில் தன் பல்கலைக்கழக டைரக்டர் பதவியை இழந்தார் க்ராஸ். அறிவியலில் ஒழுக்கம் என்றெல்லாம் ஒன்றுமில்லை என்று சொன்ன க்ராஸ் இப்படியாக செயல்பட்டதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை.
படம்: விவாதத்தில் லாரன்ஸ் க்ராஸ், ஹம்சா ஜார்சிஸ் மற்றும் நடுவரான யூசுப் சேம்பர்ஸ்.
இந்த விவாதத்தை முழுமையாக இங்கே பார்க்கலாம்: https://youtu.be/uSwJuOPG4FI