இரட்டைக் குழந்தைகள் பிறக்க என்ன செய்ய வேண்டும்?
ரஹமத் ராஜகுமாரன்
என்ன சாப்பிட?
இரட்டைக் குழந்தைகள் பிறக்கவேண்டும் என்பது பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக இருக்கும். இரட்டைக் குழந்தைகளைப் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது என்றே சொல்லலாம். அதிலும் கர்ப்ப காலத்திலேயே, இரட்டையர்களில் ஒரு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை வேண்டும் என ஆசைப்படுபவர்களையும் நாம் பார்க்கிறோம்!
முன்பைவிட இப்பொழுது அதிக அளவில் இரட்டையர்கள் பிறக்கிறார்கள் என்கிறது சர்வே தகவல்கள். நம்மாலும் அதை உணரமுடிகிறது. இரட்டைக் குழந்தைகள் (irattai kulanthaikal) பெற்றெடுப்பது என்பது முன்பெல்லாம் எட்டாக்கனியாக இருந்தது. இப்போது அது வெகு சாதாரணமாகிவிட்டது.
இரட்டைக் குழந்தைகளை திரைப்படங்களில் பார்த்து மகிழ்ந்திருக்கிறோம். வெளியில் அப்படி யாரையாவது பார்த்தால் நமக்கும் ஆசைவரும். ஆனால் என்ன செய்தால் இரண்டு குழந்தைகள் ஒன்றாகப் பிறக்கும் என்பது தெரியாது.
ஏதாவது ஸ்பெஷலாக சாப்பிட வேண்டுமோ என்ற எண்ணத்துடன் இருப்பவர்களுக்காவே இந்தப் பதிவு! என்ன சாப்பிட்டால், செய்தால் இரட்டையர்கள் பிறப்பார்கள் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
இரட்டைக் குழந்தைகள் பிறக்க என்ன செய்ய வேண்டும்?
அறிவியல் ரீதியாக இரட்டைக் குழந்தைகளை இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள்.
ஒரே உருவ ஒற்றுமையுடைய குழந்தைகள்(Identical Twins)
உருவ வேறுபாடுள்ள குழந்தைகள் (Fraternal Twins).
ஒரு குறிப்பிட்ட விந்தணுவினால் உண்டாகும் இருவேறு கருக்களை ஒரே உருவ ஒற்றுமையுடைய ட்வின்ஸ் என்கிறார்கள். அதே இருவேறு விந்தணுவிலிருந்து உண்டாகும் இருவேறு கருக்களை உருவ வேறுபாடுள்ள ட்வின்ஸ் என்கிறார்கள். இப்போது இரட்டையர்கள் பிறப்பதற்கான வாய்ப்புகள், என்ன செய்யவேண்டும் என்பது பற்றியெல்லாம் பார்க்கலாமா? உங்களுக்கு கண்டிப்பாக இரட்டைக் குழந்தைகள் வேண்டுமானால், பின்வருவனவற்றை முயற்சித்துப் பாருங்கள்.
வயது அதிகமாக அதிகமாக:
பெண்களின் வயதானது அதிகமாக அதிகமாக இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது என்கிறது ஆய்வு முடிவுகள். அதிலும் குறிப்பாக மெனோபாஸ்-க்கு முன்பான சூழ்நிலைகளில் இருப்பவர்களுக்கு இரட்டை குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாம். 35 வயதிலிருப்பவர்கள் குழந்தை பெற முயற்சிக்கும்போது, இரட்டையர்கள் பிறப்பதற்கான பெரும்பாலான சாத்தியக்கூறுகள் இருப்பதாக மருத்துவர்களும் கருதுகிறார்கள். எனவே, ட்வின்ஸ் வேண்டுமென நினைப்பவர்கள் இந்த சூழலில் முயற்சிக்கலாம். இதில் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதும் மிக முக்கியம்.
செயற்கை கருத்தரித்தல்:
ஐவிஎப்(IVF) போன்ற செயற்கை கருத்தரித்தல்செய்யும்போது, இரட்டைக் குழந்தைகளுக்கான வாய்ப்பு இயல்பாகவே அமைந்துவிடுகிறது. கருப்பையில் ஒன்றிற்கும் மேற்பட்ட கருமுட்டைகளை உருவாக்கும்போது இந்த வாய்ப்பானது மேலும் எளிதாகிறது. பல்வேறு நாடுகளில் ட்ரிப்லட்ஸ் அல்லது நான்கு குழந்தைகள் கூட ஒரே சமயத்தில் பிறக்கவைப்பதற்கான சாத்தியக்கூறுகள் செயற்கைக் கருத்தரித்தலில் இருப்பதை மறுக்க முடியாது. எனவே ஐவிஎப்(IVF) போன்ற முறைகளில் இரட்டையர்கள் பிறக்க வைப்பது எளிது. எனவே, ட்வின்ஸ் வேண்டுமென நினைப்பவர்கள் இந்த சிகிச்சையை முயற்சிக்கலாம்.
கருத்தடை நிறுத்தினால்:
நீங்கள் கருத்தடை சாதனங்களை, கருத்தடை மருந்துகள் எடுத்துவருபவர் எனில், அதை நிறுத்தியவுடன் கருவுற முயற்சித்தால் இரட்டைக் குழந்தைகளுக்கு வாய்ப்பு அதிகம். கருத்தடை மருந்துகளை நிறுத்தியவுடன், கருமுட்டைகள் அதிக அளவில் உருவாகும். அந்த மாதிரியான சமயங்களில் உடலுறவு வைத்துக்கொண்டால் நிச்சயமாக இரட்டையர்கள் பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இதை முயற்சியுங்கள். கண்டிப்பாக ட்வின்ஸ் கிடைக்கும்.
மாத்திரைகள் மூலமும் சாத்தியம்:
உங்களுக்கு இரட்டைக் குழந்தை வேண்டுமென முடிவெடுத்தால், ஆரம்பத்திலிருந்தே ஃபோலிக் ஆசிட் தொடர்பான மாத்திரையாக்களை எடுத்துக்கொள்ளுங்கள். மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் குறிப்பிட்ட அளவில் எடுத்துக்கொள்வது மிக மிக நல்லது. இந்த ஃபோலிக் ஆசிட் வகை மாத்திரைகள் இரட்டையர்கள் பிறக்கும் வாய்ப்பை அதிகப்படுத்துவதாக நம்பப்படுகிறது. மேலும் கிளாமிட் போன்ற மாத்திரைகளும் இரட்டைக் குழந்தைகளுக்கான சாத்தியங்களை எளிதாக்குகிறது. மருத்துவரின் பரிந்துரையில்லாமல் இதை முயற்சித்தால் பக்கவிளைவுகள் வரலாம்! எனவே உஷார் மக்களே!
இரண்டாம் குழந்தையாக முயற்சித்தல்:
உங்களுக்கு ஏற்கனவே குழந்தை இருந்து, இரண்டாம் குழந்தையாக இரட்டைக் குழந்தைகள் வேண்டுமென முயற்சித்தால் நடக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால், முதல் குழந்தைக்கு நிறைய நாட்கள் தாய்ப்பால் தந்திருக்க வேண்டும். அதிக நாட்களுக்கு தாய்ப்பால் தரும்போது, அடுத்த குழந்தை ட்வின்ஸ்-ஆக இருப்பதற்கு வாய்ப்புகள் எக்கச்சக்கம் என்கிறது மருத்துவ உலகம்.
சிறுத்தைக் குட்டிகள் போன்று இரட்டை குழந்தைகள் வேண்டுமா? அப்பொழுது நீங்கள் சக்கரைவள்ளிக் கிழங்கு, மரவள்ளி போன்ற கிழங்கு வகைகளை விரும்பிச் சாப்பிட வேண்டும். இதிலுள்ள இயற்கையான சத்துக்கள் இரட்டையர்கள் பிறப்பதை சாத்தியப்படுத்தும். மேலும், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் ஜிங்க் சத்துக்களைக் கொண்ட உணவு வகைகளும் ட்வின்ஸ் வாய்ப்பை அதிகப்படுத்தும். இச்சத்துக்கள் உள்ள சில உணவுகளாவன..பாதாம், பேரிச்சை, ஆரஞ்சு போன்றவை.
மேலே சொல்லப்பட்டுள்ள அனைத்தையும் அல்லது சிலவற்றை முயற்சித்துப் பாருங்கள். இந்த நவீன கால மருத்துவத்தில் முடியாதது என்பதே கிடையாது. எதையும் முழுமையாக முயற்சிக்கும் முன்பு உங்களது மருத்துவரை அணுகுவது சிறந்தது.
தாயின் கர்ப்பத்தில் 10 வது வாரத்தில் வளரும் விரல்களில் 17 வது வாரத்திற்குள் விரல் ரேகைகள் பதியப்பட்டு முடிந்து விடும்.பிறகு அதன் ஆயுள் வரை மாறுவதில்லை.இதிலும் ஆச்சரியம், ஒத்த உருவமுள்ள இரட்டைக் குழந்தைகள் விரல் ரேகைகளும் ஒன்றுபோல் இருப்பதில்லை.இன்றைய நவீன அறிவியல் வளர்ச்சியில் உருவான குளோனிங் முறையில் அச்சு அசலாக தாயைப்போல சேய் பிறந்தாலும் பிறக்கும் குழந்தையின் விரல் ரேகை ஒன்று போல் இருக்காது. காரணம் விரல் ரேகையை டிஎன்ஏ என்னும் மரபணு ஜீன்களால் உருவாவதில்லை. தாயின் கர்பத்தில்தான் ரேகைகள் தீர்மானிக்கப்படுகின்றன.
ர.ரா
source: https://www.facebook.com/photo?fbid=2684858741773464&set=a.1412423615683656