நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!
Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
உலகில் கொரானாவின் பாதிப்பு ஒரு கோடியே 80 லக்சமும் இறப்பு 6 லக்சம் 89 ஆயிரமும், இந்தியா உலகில் நான்காவது இடத்தில் 18,12,770 பாதிப்பும், இறப்பு 38, 249 ம் இதுவரை உள்ளது. ஆனால் அதற்கான மருந்தும், ஊசியும் பல கோடிகள் செலவு செய்து கண்டுபிடிக்கும் நிலையில் உள்ளன, ரஷ்யா நாடு ஊசியினை கண்டு பிடித்து விட்டோம் என்று கூறினாலும் அதன் பயன்பாட்டிற்கு அக்டோபர் மாதம் ஆகும் என்று கூறுகிறது.
ஆக இந்த வருட கடைசியாகும் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் உலக சுகாதார சேர்மன் டாக்டர் டெட்ரஸ் அதனான் அவர்கள் 3.8.2020 ல் கொடுத்தப் பேட்டியில் கொரானாவிற்கு மருந்து கண்டுபிடிக்காமலும் போகலாம் என்றும், ஆகவே மக்கள் கை கால்கள் சுத்தம், மனித இடைவெளி, முகக் கவசம், மக்கள் கூடுவதினை தடுப்பதும், ஆரோக்கியமாக வாழப் பழகிக் கொள்வதோடு, மூச்சுப் பயிற்சியினை மேற்கொள்ளவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
பிறகு எப்படி கொரானா ஆபத்திலிருந்து மீண்டார்கள் என்று சொல்கின்றார்கள் என்றால், பழங்கால சித்தா, ஆயுர்வேதிக், யுனானி, மருந்துகளாலும், ரம்டசிவர் என்ற நோய் எதிர்ப்பு மாத்திரையாலும், தனிமைப்படுத்துதலாலும், தனிமனிதர் இடைவெளியினாலும், உடல் வெளி சுத்தத்தினாலும், மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியாலும், முகக்கவசம் அணிவதாலும் கட்டுப்படுத்தமுடிகிறது என்று சொல்லலாம்.
இதனையே தான் நமது முன்னோர்கள் தங்களுக்கு அருகில் கிடைக்கும் பல மூலிகைகளால் பல நோய்களை விரட்டி உள்ளார்கள்.
உதாரணத்திற்கு கொரானா ஒருவருக்கு இருக்கின்றது என்றால்
வேப்பிலை, வெற்றிலை, சுக்கு, மஞ்சள் பவுடர், கல் உப்பு,கலந்து சூடாக்கி உள் நாக்கு தொண்டை வரை படும் படி வாய் கொப்பளிக்கும் படியும்,
ஆவியினை மூக்கின் வழியாகவும், வாய் வழியாகவும் சுவாசிக்கவும்,
நாட்டு பருந்துகள் கலந்த கபசுர நீர் அருந்தியும்,
வெளியில் சென்று வந்தால் கைகால்கள் தண்ணீரால் சுத்தம் செய்யவும்,
சாவு வீட்டுக்கு சென்று வந்தால் ஆடைகளை துவைக்கச் சொல்லியும்,
வெளி காற்று உள்ளே வரும்படி வீடுகள் அமைத்து வாழ்ந்து, வயல்களில் இறங்கி குடும்பமே வேலை பார்த்தும்,
வயல்களில் கிடைக்கும் காய் கறிகள், கனி வகைகள், கம்பு, சோளம், கேப்பை போன்ற தானியங்களில் சமைத்த உணவுகள் அதிகமாக உபயோகித்ததாலும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களாக வாழ்ந்தார்கள்.
ஆனால் அவைகளை எல்லாம் மறந்ததினாலும் நாகரீக வாழ்க்கையும், துரித உணவு பழக்கங்களாலும் உடல் வலுவிழந்து இன்று கொரானா நோய் பாதிப்பில் இந்தியாவில் டாக்டர்கள் 43 பேர்கள் உள்பட 38, 249பேர்கள் மடிந்துள்ளனர் என்று நினைக்கும் போது நெஞ்சம் பதறவில்லையா?
அவ்வாறு நாம் மறந்ததினால் நோயினைக் கட்டுப் படுத்த அரசே ‘லாக் டவுன்’ என்று கட்டுப் பாடுகளை விதித்துள்ளது நான்கு மாதங்களாக. இந்தியா தன்னிறைவு அடைய வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் போது இந்த கொடிய நோய் பாதிப்பு அதனைத் தொடர்ந்த கட்டுபாடால், பொருளாதாரம், பிள்ளைகளின் படிப்பு பாதித்து, உடல் உழைப்பின்றி வீட்டினில் முடங்கிக் கிடந்து உடல் பாதித்து, பல்வேறு குடும்பப் பிரச்சனைகள் பூதாகரமாக வெடித்தும், பாலின தவறுகளும், கொலை, கொள்ளை, வழிப்பறி, மதுக்கடத்தல் போன்றவற்றில் மாணவர்கள் உள்பட சம்பந்தப் பட்டிருப்பது சமூக பிரட்சனையாக இருக்கவில்லையா?
அது மட்டுமா, லாக் டவுனால் 43 சதவீத மக்கள் மன உளைச்சலில் உள்ளனர் என்று மன நல ஆய்வாளர்கள் சொல்லுகின்றனர். இந்தியாவில் மார்ச் மாதம் கொரானா நோய் பரவ ஆரம்பித்ததுமே உலக சுகாதார நிறுவனம், மும்பையிலுள்ள தாராவியில் அதிக பாதிப்பும், இறப்பும் ஏற்படும் என்று கூறின.
ஏன் அவர்கள் அப்படி கூறினார்கள் என்றால் 2.5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள தாராவியில் 10 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அதனால் மஹாராஷ்டிரா அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. ஆனால்அதற்கு மாறாக அங்கு பாதிப்பு குறைவே. அதற்கு காரணம் என்ன என்று ஆய்வாளர்கள் கூறும்போது 57 சதவீத மக்கள் உழைப்பாளர்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் தாராவி மக்கள் கொரானா பாதிப்பில் பெரிதும் பாதிக்கவில்லை.
சென்னையில் தான் தமிழ்நாட்டிலே பாதிப்பு அதிகம். ஆனால் பாதையோர மக்களை நோய் பாதித்ததா அல்லது அவர்கள் மிகக் கவசம் அணிகிறார்களா என்றால் குறைவே எனலாம். ஏனென்றால் அவர்களில் பெரும்பாலும் உடல் உழைப்பால் வாழ்க்கை நடத்துபவர்கள், ஏதாவது நோய் ஏற்பட்டால் அருகில் கிடைக்கும் பொருளை வைத்து சுகமாக்கிக் கொள்வார்கள், ஏனென்றால் அவர்களால் எங்கே ரூபாய் ஐநூறு ஆயிரம் என்று டாக்டர் பீஸ் கொடுக்க முடியும்? அல்லது லக்ஷ கணக்கில் செலவழித்து மருத்துவமனையில் சிகிச்சை பெறமுடியும்? ஆகவே நாமும் வருமுன் காப்பாற்றிக்கொள்ள என்னென்ன நடவடிக்கையோ அவைகளை நமது தாத்தா -பாட்டி எப்படி கடைப் பிடித்தார்களோ அதேபோன்று நடந்து கொள்ள வேண்டும்.
அப்படி என்னென்ன பொருள்களைக் கொண்டு நோய்களை தடுத்தார்கள் என்று கீழ்கண்டவாறு காணலாம்:
1) இருமல், கக்குவான், சளித்தொல்லை என்றால் வீட்டின் முன்போ அல்லது, வீட்டின் பின்போ வளர்க்கும் ஓம வள்ளி இலை, துளசி இலை ஆகியவற்றை கொதிக்க வைத்துதேனுடன் கலந்து சாப்பிட்டும், ஆவி பிடித்தும் வந்தால் இருமல், சளித்தொல்லை படிப்படியாக குறையும்.
2) மனிதனுக்கு மலம், ஜலம் சரியான நேரத்தில் வந்து விட்டால் உடலில் கழிவு ஓடிவிடும். ஆனால் மலச்சிக்கல் ஏற்பட்டால் அவஸ்திப் படுவதுடன், மூல நோய்க்கும் வழிவகுக்கும். ஆகவே அமெரிக்காவின் தெற்கு கரோலினா பல்கலைக் கழக பேராசிரியர் டாக்டர் புசிவிஸ் ஆளி விதைகளை பொடி செய்து ஒரு நாளைக்கு 2 அல்லது 3 தேன் கரண்டி அளவிற்கு சாப்பிட்டு வந்தால் ஆளி விதையில் நார் சத்து இருப்பதினால் மலச்சிக்கல் குறையும் என்று கூறுகிறார்.
3) மனச்சோர்வு அல்லது மனக்கவலையுடன் இருந்தால், ஏலக்காய் பவுடரில் கொதிக்க வைத்த டீயினை 2 அல்லது 3 தடவை குடித்து வந்தால் மனசோர்வு குறையும் என்று மும்பையில் இருக்கும் தலை சிறந்த ஊட்டச்சத்து நிபுணர் சார்மின் டி. ஸ்யோசா கூறுகின்றார்.
4) டெல்லியினைச் சார்ந்த ஊட்டச்சத்து நிபுணர் லங்கேட் பத்ரா அவர்கள் டயாரியா வயிற்றுப்போக்கினை தவிர்க்க வாழைப் பழம் சாப்பிட பரிந்துரைத்துள்ளார். ஏனென்றால் வாழைப் பழத்தில் ‘பெக்டின்’ என்ற வேதியம் இருப்பதால் குடலில் உள்ள நீரை உறுஞ்சி டயாரியாவினை கட்டுப் பாட்டுக்குள் வைப்பதுடன், மலச்சிக்கலையும் சரி செய்யும் என்று கூறுகிறார்.
5) அதிக நேரம் விழித்திருந்தால் கண்ணெரிச்சல் ஏற்படும். அப்போது வெள்ளரிக்காயினை நறுக்கி இரண்டு கண் இமையின் மேல் வைத்து 15 நிமிடம் கண்ணை மூடிக் கொண்டு படுத்திருந்தகள் கண்ணுக்கு ஓய்வு கொடுத்ததுடன், கண் எரிச்சலும் சரியாகும்.
6) காய்ச்சல் 100 டிகிரிக்கு மேல் வந்தால், வெந்தயத்தினை வறுத்து, மிளகு, கருஞ்சீரகம், இலவங்க பட்டை பவுடர் ஆகியவற்றினை கலந்து கொதிக்க வைத்து குடித்தால் காய்ச்சல் பறக்கும் என்று மும்பை நிபுணர் டி.சோஸா கூறுகின்றார்.
7) சிலருக்கு ஜீரணிக்காமல் சாப்பிட்ட உணவு வயிற்றிலிருந்து தொண்டை வரை reflux என்று சொல்லுவது போல வந்தால் அமிர்த வள்ளி இலை, கொய்யா இலை ஆகியவற்றினை கொதிக்க வைத்து குடித்து வந்தால் மேல் நோக்கி சாப்பிட்டது வருவதனை தடுக்கலாம். அத்துடன் காரமான உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
8) கவுட்’ என்று ஆங்கிலத்தில் சொல்லப் படும் யூரிக் ஆசிட் கை, கால் மூட்டுகளில் வீக்கம் ஏற்பட்டு வேதனை ஏற்பட்டால் கோகிலாக்ஸ்சா என்ற நீர் முள்ளி இல்லை, பூவினை கொதிக்க வைத்து குடித்தால் கவுட் குறைந்து விடும்.
9) வேலைப் பழு, மன அழுத்தம் ஏற்படும்போது பருப்புக் கீரையினை சமைத்து சாப்பிட்டாலும், அதன் எண்ணெயினை நெற்றியில் தடவினாலும் குறைந்து விடும்.
10) விக்கல் ஏற்படும்போது ஒரு கட்டி சீனியினை சாப்பிட்டால் அது ஈரலுக்கும், குடலுக்கும் இடையே உள்ள சவ்வில் பரவி விக்கலை நிறுத்தும் என்று அமெரிக்கா கலிபோர்னியா ஓக்லாண்ட் ஊட்டச்சத்து நிபுணர் கிளார் மார்ட்டின் கூறுகின்றார்.
11) சாப்பிட்ட பொருள் ஜீரணமாவதற்கு பெரும்சீரகத்தினை கொஞ்சம் சாப்பாட்டிற்கு பின்பு சாப்பிட்டால் இலகுவாக ஜீரணிக்கும். பெரும்பாலான பெரிய ஹோட்டல்களில் இதனை பில்லுடன் சேர்த்து தருவதினைக் காணலாம்.
12) தூக்கமின்றி தவிக்கும்போது அமுக்கிரா செடியிலிருந்து தயாரிக்கப் படும் அஸ்வகந்தா சாப்பிட்டு வந்தால் நரம்பினை இலகுவாக்கி சீக்கிரத்தில் தூக்கம் வரும்.
13) கிட்னியில் கால்சியம் சேராமல் தடுப்பதற்கு ஒரு நாளைக்கு 100-120 மில்லி எலுமிச்சை சாறு சாப்பிட்டால் கால்சியம் சேருவதினை தடுக்கலாம்.
14) பெண்களின் ரத்தப் போக்கு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு பிரியாணி இலை, மிளகு பவுடர், சீரகம், மஞ்சள் பவுடர் ஆகியவற்றினை நீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் ரத்தப் போக்கு சீராகும் என்று டாக்டர் டி சோசா கூறுகிறார்.
15) மயக்கம் வருவதுபோலோ அல்லது கற்பிணி பெண்கள் ‘மார்னிங்’ சிக்கன்ஸ் என்ற மயக்கம் ஏற்பட்டாலோ இஞ்சியினை சாராக்கி சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் மயக்கம் சரியாகும்.
16) சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் குருதி நெல்லி அல்லது சீமை களாக்காய் என்று அழைக்கப் படும் ‘கிரேன் பெரி’ என்ற பழத்தின் சாறை குடித்து வந்தால் சிறு நீரக பாதையில் ஏற்படும் நோய் தடுக்கப் படும் என்று 373 பாதிக்கப் பட்ட பெண்களிடம் ஆய்வு செய்ததில் நல்ல பலன் கிட்டியதாக சொல்லப் படுகிறது.
17) சித்த, ஆயுர்வேத மருத்துவங்களிலும் ஆப்ரிக்கா, சீன மருத்துவத்தில் பெரிதும் பயன் படத்தப் படும் மூலிகை Gotukola என்ற வல்லாரையாகும். இந்த செடியின் இலையை எடுத்து வேகவைத்து வடிகட்டி அந்த தண்ணீரை குடித்து வந்தால் குட்டம், கால் நரம்புகள் சுருங்கி முடிச்சு விழுவது(vericos vein) தடுக்கப் பட்டும், நினைவு சக்தி குறைவு, பெண்களுக்கு வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு மருந்தாகும்.
19) கண் பார்வை சீராக அமைய மீன்கள் சாப்பிடுவது அவசியம். அது மட்டுமல்லாமல் டூனா,வஞ்சரம், நங்கூர மீன், சால்மன் என்ற கிழங்கன் என்ற மீன்களில் தயாரிக்கப் படும் ‘cod liver oil’ கண்ணில் உள்ள நரம்புகளில் ரத்த ஓட்டம் அதிகப் படுத்தும்.
20) தேன் பலவகைகளில் மருத்துவ குணங்கள் கொண்டது. தீக்காயம் பட்டால் அந்த இடத்தில் தடவவும், தீட்டு நின்ற நடுத்தர பெண்களுக்கு சத்துக் குறைவினை ஈடு கட்டவும், வாய், பெண் உறுப்பில் அரிப்பு ஏற்பட்டால் தடுத்து நிறுத்தவும் உதவும்.
ரத்தத்தில் சுகர் அளவினை சீராக்க ஸ்வீட்ட்னர் என்ற சீனி கட்டிக்கு பதிலாகவும், கிட்னியில் ஏற்படும் கேன்சர் நோய் பரவாமல் கட்டுப் படுத்த, மூல நோய், மலத்தில் ரத்தம் பரவாமல் தடுக்க, காயங்கள் ஏற்படும் போது குணமாக, கர்ப்பம் உண்டாக்க ஆண் மற்றும் பெண் அணுக்கள் உற்பத்தியாக, தோல் அரிப்பு நோயை தடுக்கவும் தேன் சிறந்த மருந்தாகும்.
21) வைட்டமின் சி அடங்கிய ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை பழச்சாறு இருமல், வயிற்றுப் போக்கு, மூச்சுத்திணறல் போன்றவற்றை தடுத்து நிறுத்தும்.
22) காட்டு சீதா பழங்கள் புற்று நோயிக்கு மிகவும் சிறந்த மருந்தாகும்.
நான் மேலே சொன்ன தகவல் ஆய்வுக்குப் பின்னர் குணமடைந்து வெளியிட்ட தகவல்கள். அவை அனைத்தும் நம் கண்முன்னே கிடைக்கின்றன. நம் முன்னோர்கள் எத்தனை பேர்கள் ஆங்கில மருந்துக்காக ஆஸ்பத்திரி நோக்கி படையெடுத்தார், சொல்லுங்கள் பார்ப்போம். நான் சிறு பின்னையாக இருந்தபோது கபடி, கால்பந்து விளையாட்டில் அடிபட்டால் என்னுடைய தாய் அம்மிக்கல்லில் மஞ்சள் அரைத்து அதன் மேல் போட்டால் அடுத்த நாள் சரியாகிவிடும்.
சளி தொல்லையிருந்தால் துளசி செடி சாற்றை பிழிந்து தேன் கலந்து கொடுத்து சரி செய்து விடுவார்கள். அல்லது அருகில் உள்ள நாட்டு வைத்தியரிடம் காட்டி மருந்து வாங்கி சரி செய்வார்கள். அதனையெல்லாம் நாம் நம் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்ல மறந்தோம். ஆகவே நம் பிள்ளைகள் மருத்துவமனை மருத்துவமனையாக அழைத்து கொண்டுள்ளார்கள்.
நமது வீட்டின்கொல்லைப் புறத்திலோ, மொட்டை மாடியிலோ, பால்கனியிலோ துளசி, ஓமவல்லி, அலோ வேரா என்ற கத்தாழை போன்ற செடிகள் வளர்க்க வேண்டும். வீட்டில் தேன் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வைத்திருக்க வேண்டும், துரித உணவு வகைகளை ஊக்குவிக்கக்கூடாது. கம்பு, கூலு, கேட்பை போன்ற உணவுகளை அதிகமாக குழந்தைகளுக்கு கொடுத்து உடலில் ஊட்டச்சத்தினை கொடுத்தால் எந்த நோயையும் எதிர் கொள்ளலாம்.
– A.P.முஹம்மது அலி,