மண்ணறைகள் அன்றும் இன்றும்
முதன் முதலாக உலகில் தோண்டப்பட்ட மண்ணறை
ரஹ்மத் ராஜகுமாரன்
ஆதிகாலத்து மனிதருக்கு இறந்த உடலை எவ்வாறு மறைப்பது என்பது தான் கவலையாக இருந்தது. இப்போதுள்ள நவீன மக்களுக்கு தாங்கள் இறந்த பிறகு தங்கள் உடலை எப்படி மறைப்பது என்ற கவலை அதிகமாகிவிட்டது.
உலகத்திலேயே ரொம்பவும் காஸ்ட்லியான சாவு என்பது ஜப்பானியர்களுக்கத்தான் நேருகிறது. அங்கு தனி ஒருவரின் இறுதிச் சடங்குக்கு சராசரியாக 15 முதல் 20 லட்சம் வரை செலவாகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஜப்பானின் சாவு பிசினஸ் என்பது ஒரு லட்சம் கோடி ‘யென்’ வரை பணம் புரள்கிறது.
மரணம் நிறைய பணம் புரளும் ஒரு பெரிய இண்டஸ்ட்ரி. ‘மெமோரியல்’ எனப்படும் சடங்கு செய்ய நட்சத்திர ஓட்டல்களும், மண்டபங்களும் வாடகைக்கு விடுகின்றனர். தனியார் கம்பெனிகள் கலர்கலரா அச்சடித்த விலை விபரப் பட்டியலுடன் ஃப்யுனரல் சர்வீஸ் என்று ஆரம்பித்து காரியம் முழுவதையும் காண்ட்ராக்ட்டில் செய்து தருகிறார்கள்.
எங்கேயாவது ஒரு மரணம் வந்தால் போதும் கழுகு மாதிரி வந்து சூழ்ந்து கொண்டு விடுவார்கள் துக்கத்தில் இருக்கும் உறவினர்கள் அந்த நேரத்தில் பிசுகிப் பிசுகிப் பேரம் பேச கூச்சப்படுவார்கள் என்பதை சாதகமாக்கிக் கொண்டு ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ் முதல் பூசாரி, பூக்காரி என்று எல்லோரும் கூட்டு சேர்ந்து கொள்ளை லாபம் அடிக்கிறார்கள்.
கைக்குட்டையில் பரப்பளவை உள்ள ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இடுகாடுகள் இடநெருக்கடி ரியல் எஸ்டேட் விலை எல்லாம் ஏகத்துக்கு ஏறி கிடப்பதால் செத்தவர்களை பிழைக்க இடமில்லை.. எரித்துவிடலாம் என்றாலோ சுற்றுச்சூழல் கெடுகிறது மத நம்பிக்கைகள் மற்றும் பிசாசு பயத்தினாலும் பிணங்களை எரிக்க தயங்குகிறார்கள் விளைவு கல்லறைகள் முழுவதும் நிரம்பி மூச்சு விடுத் திணறுகின்றன
பல ஐரோப்பிய மையங்கள் பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்டவை. லண்டனில் பழமையான இடு காடுகளை எல்லாம் ஹவுஸ்புல் போர்டு போட்டு ஒவ்வொன்றாக மூடிக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் 10 வருடத்தில் யார் செத்தாலும் “நோ அட்மிஷன் திரும்பிப்போ” என்று துரத்தப் போகிறார்கள்.
வருடாவருடம் குடும்பத்தினருடன் சென்று மலர்கொத்து வைப்பதற்காக சமாதிகளை பாதுகாக்க வேண்டிய அவசியம். உடலை புதைக்கும் போது 80 சதவிகித மேட்டர் விரைவில் கரைந்து போய் விட்டாலும் எலும்பு மண்டையோடு போன்ற கடினமான பகுதிகள் வருடக்கணக்கில் அப்படியே இருக்கும் அண்டை நாடான அமெரிக்காவில் இருக்கும் இடுகாடுகள் பிரச்சனை இப்போது உள்ள காடு கரம்புகள் எல்லாம் 2040 வரைதான் தாங்கும் என்கிறார்கள்
அரசாங்க அதிகாரிகள் கமிட்டி போட்டு புறம்போக்கு நிலம் ஏதாவது அகப்படுகிறதா என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். செயின்ட் லாரன்ஸ் இடுகாடு 100 ஏக்கருக்கும் நெருங்கிவிட்டதால் டபுள் டெக்கர் பஸ் மாதிரி ஒன்றன் மீது ஒன்றாக புதைக்க ஆரம்பித்துவிட்டார்கள் .
தனியார் நடத்தும் இடுகாடாக இருந்தால் ஆறு நிலத்தை லீசுக்கு எடுத்து வருடாவருடம் வாடகை கட்ட வேண்டும். செத்த பிறகு திரும்பி வரப் போகிறார்கள் என்ற எண்ணத்தில் பிள்ளைகள் பெற்றோர்களை நாய் நரிக்கு தூக்கிப் போட்டு விடுவார்கள் என்ற கவலை அங்கு உள்ள பெற்றோர்களுக்கு இப்போதே கவலை தொற்றிக் கொண்டுள்ளது எனவே பெற்றோர்கள் இப்போதே தன் இடத்தை துண்டு போட்டு ரிசர்வ் செய்ய தான் சம்பாதித்த மொத்த பணத்தையும் செலுத்துகிறார்கள்.
லண்டனில் மரணிக்க விரும்புபவர்கள் 4 ஆயிரம் பவுண்ட் கொடுத்து முன்பதிவு செய்து வைக்க வேண்டும்.50 வருஷத்திற்கு லீஸ் நகர்ப்புறங்களை ஒட்டிய இடங்களில் விவசாயம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் நிலத்தை இப்படி லீசுக்கு விடுவது லாபம் தருகிறது என்று கண்டு கொண்டு வேகமாக சமாதி பிஸினஸுக்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் ரவுசு தாங்காமல் பெரிய நிறுவனங்கள் பென்ஷன் பிராவிடண்ட் பண்ட்
சலுகைகள் தருவது போல தங்கள் ஊழியர்களுக்காக மயான்கள் கூட நடத்த ஆரம்பித்து விட்டார்கள். கம்பெனி பெயர் பொறித்து ஓடாய் உழைத்த ஒரு ஜெனரல் மேனேஜர் இங்கு உறங்குகிறார் என்று கல்வெட்டு நடுகிறார்கள் .
மக்கள் உயிர் வாழ்வதற்கு இடமில்லாத ஜப்பானில் மாண்டவர் ஒவ்வொருவருக்கும் ஆறடி நிலம் ஒதுக்குவது சாத்தியமில்லை. எனவே ஓஹாகா மேன்சன் என்று அடுக்குமாடி கட்டிடங்களில் இடுகாடு அமைத்துத் தருகிறார்கள்.
முதல் மாடி கார் பார்க்கிங் அதற்கு மேலே இறுதிச்சடங்கு பிராத்தனை எல்லாம் செய்யும் கூடங்கள் மூன்றாவது மாடியிலிருந்து இடுகாடு ஆரம்பம் வரிசை வரிசையாக பேங்க் லாக்கர் போன்ற இழுப்பறையில் இறந்தவர்களை சீல் செய்து விடுகிறார்கள். லாக்கர் முகத்தில் சின்னதாக கம்ப்யூட்டர் தொடுதிரை அதை தொட்டால் உள்ளே உறங்குபவரின் படம் ,அவர் வாங்கிய பட்டங்கள், வென்ற போர்கள் கட்டின மனைவிகள் எல்லாம் விரிகின்றன. பார்வையாளர்கள் அதிலேயே தங்கள் இரங்கல் செய்தியையும் பதிவு செய்து கொள்ளலாம் “எங்கள் லாக்கருக்கு யென்தான் சல்லிகள் சாகலாம் வாரீர்” என்ற விளம்பரம் வேறு! இதைக் கண்டு நொந்த சில புத்த பிட்சுகள் இயற்கை வழியில் ஆங்காங்கே மரத்தடியில் உடல்களை புகைக்கும் பழக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்
வேறு ஒரு கோஷ்டியினர் தரையில் புதைக்க இடமில்லை என்று சொல்லாதீர்கள் நாங்கள் நீர் நிலம் நெருப்பு ஆகாயம் காற்று என பஞ்ச பூதங்களையும் ஒரு கை பார்த்து விடுகிறோம் என்று ஆரம்பித்து விட்டார்கள். அமெரிக்காவில் கடற்படை அதிகாரி இறந்தால் உடல் ராணுவ மரியாதையுடன் கடலில் சேர்ப்பது இன்னும் தொடர்கிறது.
ஆனால் ஹைடெக் புதையல் என்றால் விண்வெளி புதையல்தான். 1999இல் விஞ்ஞானி சூமேக்கர் இறந்தபோது அவரது சாம்பலை சந்திரனுக்கு அனுப்பினார்கள். இன்னும் கொஞ்சம் சுலபமாக செய்ய வேண்டுமென்றால் இறந்தவரின் சாம்பல் அல்லது செல்லமாக அவர் வளர்த்த வளர்ப்புப் பிராணிகளின் சாம்பல் கூட சின்ன டப்பாவில் அடைத்து வைத்து மேலே அனுப்பி “பூமியை சுற்றி வா” என்று ஏவி விடுவதற்கு தனியார் ஸ்பேஸ் நிறுவனங்கள் இருக்கின்றன.
Death Is a High-Tech Trip in Japan’s Futuristic Cemeteries
இதுவரை விண்வெளியில் நூற்றுக்கணக்கானவர்கள் இப்படி விண்வெளியில் புதைக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலே சென்றது குறைந்தது 250 வருடமாவது பூமியை சுற்றிக் கொண்டிருக்கும். “எங்க வீட்டுக்காரரை விண்வெளியில் அல்லவா வைத்திருக்கிறோம்” என்று பெருமை அடித்துக் கொள்வதற்கு மனைவிகள் ஆயிரக் கணக்கான டாலர்கள் செலவழிக்கிறார்கள் .
மரணம் விற்கிற விலையை பார்த்தால் கூடியவிரைவில் கொழுத்த பணக்காரர்களுக்கு மட்டும்தான் சாவதற்கு கட்டுபடியாகும் போலிருக்கிறது உணர்வுபூர்வமான எந்தப் பிரச்சினைக்கும் இரக்கமில்லாத தீர்வு ஒன்று வைத்திருக்கும் விஞ்ஞானம் இதற்கும் விடை சொல்கிறது.
இறந்தவர்களை ஆல்கலைன் ஹைட்ராலிஸிஸ் செய்தால் போதும் என்கிறது விஞ்ஞானம்! அதென்ன?
இறந்தவர் உடலை ஆள் சைஸ்க்கு உள்ள பிரஷர் குக்கரில் சோடா காரம் சேர்த்து வேக வைத்து அப்படியே கஞ்சி மாதிரி காய்ச்சி விடலாம். அந்த வெப்பத்திலும் கெமிக்கல் காரத்திலும் எலும்புகள் என்ன கிருமிகள் பாக்ட்ரியாக்கள் ஏதும் மீதி இருக்காது. கரும் பழுப்புத் தேன் போல இருக்கும். அந்த திரவத்தை அப்படியே பாய்லெட்டில் கொட்டி 4 பக்கெட் தண்ணீரை ஊற்றினால் பிரச்சனை தீர்ந்தது . விஞ்ஞானிகள் பேச்சை கேட்டு நெருங்கிய உறவினர்களை சாக்கடையை கரைத்துவிட, அங்கு என்னவெல்லாம் மிதக்குமோ எத்தனை பேருக்கு மனம் வரும் என்பது தெரியவில்லை. ஆனால் அமெரிக்காவில் இரண்டு மாநிலங்களில் ஹைட்ராலிஸிஸ் சட்டப்படி செல்லும்.
விலைவாசி இருக்கிற இருப்பில் மற்றவர்களும் வேறு வழியின்றி இந்த புது டெக்னாலஜி மாறும் நாள் அதிக தொலைவில் இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள் . அதுசரி பாத்ரூமுக்கு போகும் போதெல்லாம் ஹைட்ராலிஸிஸ்
செய்யப்பட்ட பெரியப்பா ஞாபகம் வந்தால் என்ன செய்வது ?
இஸ்லாத்தில் மட்டும்தான் மரணத்தின் செலவு குறைவு.
இதெல்லாம் நவீன கால மரணத்தின் பிரச்சனைகள் ஆதிகாலத்தில் ஆதி முதல் மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் மகன்களில் ஒருவரான காபீல் தன் சகோதரான ஹபீலை ஒரு பெண் விஷயத்திற்காக கொன்ற போது, அந்த பிணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் மரஞ்செடி முதலியவை இல்லாத ஒரு காட்டில் போட்டு விட்டார் என்றாலும் மிருகங்கள் தன் சகோதரனின் உடலைத் தின்று விடுமோ
என்ற எண்ணத்தால் அதனை ஒரு கூடையில் போட்டு தனது முதுகின் மீது வைத்து நாற்பது நாட்கள் வரை சுமந்து கொண்டு அலைந்தார், ஒரு வருடம் சுமந்து திரிந்த தாகவும் கூறப்படுகிறது
பிறகு இறைவன் இரண்டு காகங்கள் அனுப்பினான் அவைகள் சண்டை போட்டுக்கொண்டு இறுதியாக ஒன்று செத்தது. மற்றொன்று தனது அலகினாலும், காலினாலும் பூமியில் பள்ளம் பறித்து அதற்குள் அக்காகத்தை இழுத்துக்கொண்டு வந்து தள்ளி மணலைப் போட்டு மூடி விட்டது. இதனை காபீல் பார்த்துக் கொண்டிருந்து தனது சகோதரின் உயிரற்ற உடலை மண்ணறை தோண்டி அதில் அடக்கினார். எனவே உலகத்தில் முதன்முதலில் மண்ணறை தோண்டியது காகமே!
فَبَـعَثَ اللّٰهُ غُرَابًا يَّبْحَثُ فِىْ الْاَرْضِ لِيُرِيَهٗ كَيْفَ يُوَارِىْ سَوْءَةَ اَخِيْهِ قَالَ يَاوَيْلَتٰٓى
اَعَجَزْتُ اَنْ اَكُوْنَ مِثْلَ هٰذَا الْغُرَابِ فَاُوَارِىَ سَوْءَةَ اَخِىْ فَاَصْبَحَ مِنَ النّٰدِمِيْنَۛ ۙ
பின்னர் தம் சதோதரரின் பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமென்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்; அது பூமியை தோண்டிற்று (இதைப் பார்த்த) அவர் “அந்தோ! நான் இந்த காகத்தைப் போல் கூட இல்லாதாகி விட்டேனே! அப்படியிருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே!” என்று கூறி, கை சேதப்படக் கூடியவராகி விட்டார். (அல்குர்ஆன் : 5:31)
ர.ரா