ஹாஜியா சோஃபியா (ஆயா சோஃபியா)வில் 80 ஆண்டுகளுக்குப்பிறகு கேட்கும் பாங்கொலி! (1)
80 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டெழும் மஸ்ஜித்!
ஹகியா ஸாேபியா. கி.பி 537ல் கான்ஸ்டான்டி நோபிளில் கட்டப்பட்ட இந்த சர்ச் தான் உலகின் மிகப்பெரிய தேவாலயம் எனும் பெருமை மிக்கது.
பைசாந்திய கட்டிடக்கலையில் சிறப்பாக கட்டப்பட்ட இது ரோமன் கத்தோலிக்கர்களின் புனித தலமும் கூட.
எல்லாம் 1453ல் சுல்தான் பாத்திஹ் முஹம்மத் கான்ஸ்டான்டி நோபிளை கைப்பற்றும் வரை தான். அதற்கு பிறகு மஸ்ஜிதாக மாறியது.
சுல்தான் அதை பள்ளிவாசலாக வக்ஃபு செய்தார்.
கிறிஸ்தவ அடையாளங்கள் மறைந்து இஸ்லாமிய அடையாளங்கள் முளைத்தன
.
19-ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய கிலாபத் வீழ்த்தப்பட்டு, துருக்கி முஸ்தபா கமால் எனும் துரோகியின் கையில் சிக்கியதும் அங்கே இஸ்லாம் தடை செய்யப்பட்டது. எல்லாவற்றையும் சிதைத்த கமால் இப்பள்ளியையும் அருங்காட்சியமாக மாற்றினான்.
1931 முதல் அருங்காட்சியமாக இருந்தது 10/7/2020 முதல் மஸ்ஜிதாக மீண்டிருக்கிறது.
எர்துகான் மூலமாக துருக்கியில் எழுந்திருக்கும் இஸ்லாமிய விழிப்புணர்வு காரணமாக இம்மஸ்ஜிதை மீட்க மக்கள் ஆவல் கொண்டார்கள்.
வழக்கும் தாக்கல் செய்தார்கள்.
அருங்காட்சியகத்தை மஸ்ஜிதாக மாற்ற அனுமதிக்க கூடாது என்று எதிர் தரப்பு வாதாடியது.
இப்போது அது அருங்காட்சியகம் தான். ஆனால் ஆரம்பத்தில் மன்னர் பாதிஹ் முஹம்மது அதை பள்ளிவாசலாக்கிவிட்டார்.
மன்னர்கள் கைப்பற்றிய இடம் அவர்களுக்கு உரியது; அவர்கள் எப்படி வேண்டுமானாலும் அதை பயன்படுத்தலாம் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதி.
மன்னர் பாதிஹ் முஹம்மது அவ்விடத்தை பள்ளிவாசல்என்று வக்ஃபு செய்துவிட்டார். எனவே அது பள்ளிவாசலாகத்தான் இருக்க வேண்டும் என முஸ்லிம்கள் தரப்பு வாதாடியது.
அதை ஏற்று சுப்ரீம் கோர்ட்டும் தீர்ப்பளித்துவிட்டது. இந்திய நேரம் நாலு மணியளவில் கோர்ட் உத்தரவிட, வேகவேகமாக ஆறுமணிக்குள் அரசும் அதை மஸ்ஜித் என்று அங்கீகாரமளித்துவிட்டது. இனி தொழுகை நடக்கும் என நினைக்கிறேன். உலகம் முழுக்க எதிர்ப்பு எழுந்திருக்கிறது.
ஆனால் துருக்கி மக்கள் மகிழ்வுடன் அதை கொண்டாடுகிறார்கள். நூறாண்டுக்கு பிறகு ஒலித்த பாங்கோசை கேட்டு குதூகலிக்கிறார்கள்.
மன்னர்கள் ஒதுக்கிய நிலம் செல்லாது என்றால் உலகம் முழுக்க நிறைய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
ஏகப்பட்ட பள்ளிகள், கோவில்கள், தேவாலயங்கள், இன்ன பிற பலவும் மன்னர்களால் வழங்கப்பட்டவை தான். அதை மாற்றுவது சாத்தியமில்லை.
அந்த வகையில் தான் இதுவும். மட்டுமல்ல; ஒரு பள்ளிவாசல் வக்ஃபு செய்யப்பட்டால் அது இறுதிவரை பள்ளிவாசல் தான். எவரும் அதை மாற்ற முடியாது.
இப்பள்ளி விசயத்தில் இடையில் வந்து கமால் செய்த கோமாளித்தனம் முறியடிக்கப்பட்டு அருங்காட்சியமாக மாற்றப்பட்ட பள்ளிவாசல் மீண்டும் பள்ளிவாசலாக மீண்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியே!
– M S Abdul Hameed
தொடர்ச்சிக்கு…
http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=9450