அசாதரண (கொரோனா) சூழ்நிலையில் (ஜும்ஆ) தொழுகை!
இன்று ஜும்ஆ தினம். முஸ்லிம்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.
தற்போது அசாதரண (கொரோனா) சூழ்நிலையில் பள்ளிவாசலில் தொழுகை நடைபெறுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பல கிராம பள்ளிவாசல்களில் “வக்த்து தொழுகை”யில் கூட புதிதாக வலியுறுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் பேணப்படுவதில்லை.
சில இடங்களில் சாதாரண சூழ்நிலையில் இருப்பதுபோல் நெருக்கமாக நின்றே தொழும் காட்சிகளை பார்க்க முடிகிறது.
ஒவ்வொரு ஊரின் நிர்வாகமும் எச்சரிகை செய்தாலும் பள்ளியில் அது சரியான முறையில் பேணப்படுவதில்லை.
பள்ளி இமாமாக இருப்பவர்கள் பள்ளியில் தொழுகையாளிகளிடம் இதைப்பற்றி எடுத்துச்சொல்லி சரிசெய்ய வேண்டும்.
பள்ளிவாசலைப் பொருத்தவரை அமல்களின் விஷயத்தில் நிர்வாகிகள் சொல்வதைவிட இமாம்களின் சொல்லுக்கே தொழுகையாளிகள் கட்டுப்படுவார்கள். எனவே ஒவ்வொரு இமாம்கள் மீதும் இந்த பொறுப்பு உள்ளது என்பதை மறந்திட வேண்டாம்.
அலட்சியம் வேண்டாம். எவரேனும் ஒருவருக்கு கொரோனா இருந்தாலும் அனைவருக்கும் பிரச்சனை தான். எனவே கட்டுப்பாடுகளை முறையாகப் பேணவேண்டியது மிக மிக அவசியம்.
ஈமானுக்கு அடுத்து ஆரோக்கியத்தைத்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் கேட்கச் சொன்னார்கள். எனவே ஆரோக்கியமாக இருப்பது மிக முக்கியம்.
“சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.”
அலட்சியம் வேண்டாம். அல்லாஹ்வே அறிந்தவன்.
– M.A.Mohamed Ali