முஸ்தஃபா கமால்: துருக்கியின் தந்தையா, துரோகியா?
M S Abdul Hameed
யார் இந்த முஸ்தஃபா கமால்?
“அதாதுர்க்” (துருக்கியின் தந்தை) என்றழைக்கப்படும் முஸ்தஃபா கமால் உண்மையிலேயே துருக்கியின் தந்தையா அல்லது துருக்கியின் துரோகியா?
ஏகாதிபத்தியவாதிகள், ஸியோனிஸவாதிகள் ஆகியோரின் உதவியுடன் உதுமானியப் பேரரசை வீழ்த்தி, துருக்கியின் ஆட்சியைப் பிடித்தவர்தான் முஸ்தஃபா கமால்.
கிரேக்க நாட்டில் பிறந்த இவர் கிரிப்டோ யூத இனத்தைச் சார்ந்தவர். தங்கள் நாட்டின் வரலாறையும் துருக்கி நாட்டின் வரலாறையும் நன்கறிந்த கிரேக்கர்கள் முஸ்தஃபா கமால் இனரீதியாக ஒரு யூதர்தான் என்பதைத் தயங்கமால் கூறுவார்கள்.
கிரேக்க நாட்டில் சலோனிகா (தெஸ்ஸலோனிக் என்றும் அழைக்கப்படும்) என்ற நகரில் ஒரு டோயன்மே (Doenmeh) யூதக் குடும்பத்தில் பிறந்தார் முஸ்தஃபா கமால். இரண்டாம் உலகப் போர் முடியும் வரை இந்நகரம் அதிகமான யூத மக்களைக் கொண்டிருந்தது.
ஸிமோன் ஸ்வி (Simon Zvi) என்ற டோயன்மே மதத் தலைவர் நடத்திய பழமைவாத மரபுவழி யூதக் கல்விக்கூடத்தில் முஸ்தஃபா கமால் படித்தார்.
இதாமர் பென்-அவி (Itamar Ben-Avi) என்ற ஹீப்ரூ பத்திரிகையாளர் அவரது தன் வரலாறு நூலில் முஸ்தஃபா கமாலின் தந்தை ஒரு டோயன்மே இனத்தைச் சார்ந்தவர் என்று உறுதிப்படுத்துகிறார்.
உலகில் பல நாடுகளிலிருந்தும் வெளியேற்றப்பட்டு, நடோடிகளாகத் திரிந்த யூதர்கள் இஸ்லாமிய ஆட்சிகளில்தான் நிம்மதியாக வாழ்ந்தனர். அந்த அடிப்படையில் 16ம் நூற்றாண்டில் ஸ்பெயினிலிருந்து வெளியேற்றப்பட்ட யூதர்களுக்கு உதுமானிய சுல்தான்கள் துருக்கியில் அடைக்கலம் அளித்தனர். அந்த யூதர்களின் வாரிசுகள்தான் யூத மதத்திலுள்ள இரகசிய இனமான டோயன்மே (அல்லது கிரிப்டோ யூதர்கள்) என்ற இனத்தைச் சார்ந்தவர்கள்.
இப்படி துருக்கியில் அடைக்கலம் தேடி வந்த யூதர்களில் பெரும்பாலோர் 17ம் நூற்றாண்டின் பொய்யான யூத மதத் தூதுவர் ஸப்பதாய் ஸ்வி (Sabbatai Zwi) என்பவரைப் பின்பற்றினர். இதனால் இவர்கள் “ஸப்பதாயியன் யூதர்கள்” என்றாயினர். இதன் மறுபெயர்தான் “டோயன்மே”.
இவர்களின் சிறப்பம்சம் என்னவெனில், வெளியில் முஸ்லிம்கள் மாதிரி நடிப்பார்கள். ஆனால் உள்ளுக்குள்ளே யூத மத நம்பிக்கையைக் கடைப்பிடித்து ஸப்பதாய் ஸ்வி என்பவரைத் தங்கள் இறைத்தூதராகப் பின்பற்றுவார்கள்.
இந்த இரகசிய யூத இனத்தைச் சார்ந்த முஸ்தஃபா கமாலின் நோக்கம் என்னவாக இருந்ததெனில், “துருக்கிய தேசியவாதம்” என்ற முகமூடியின் கீழ் துருக்கியை ஒரு மதச்சார்பற்ற நாடாக மாற்றவேண்டும் என்பதுதான்.
பிரித்தானிய, ஸியோனிஸ முகவராக இருந்த முஸ்தஃபா கமால் உதுமானியப் பேரரசுக்குள் ஊடுருவுவதற்கு அபரிமிதமான பயிற்சிகள் கொடுக்கப்பட்டார்.
துருக்கியின் தேசபக்தர்கள் என்ற போர்வையில் தங்கள் யூதப் பின்னணியை மறைத்துக்கொண்டு நிறைய இரகசிய யூதர்களான டோயன்மேக்கள் துருக்கியில் இருந்தனர். துருக்கிய மக்களை வழிகெடுத்து, முஸ்லிம்களிடமிருந்து ஆட்சியதிகாரத்தைப் பிடுங்குவதே இவர்களின் நோக்கமாக இருந்தது.
உதுமானியப் பேரரசுக்குள் இந்த டோயன்மேக்கள் ஊடுருவி, உடைத்தனர் அதனை! “துருக்கியக் குடியரசு‘’ என்ற பெயரில் ஒரு புதிய ஆட்சியை அமைத்தனர். இந்தப் புதிய ஆட்சியின் தலைவர்தான் முஸ்தஃபா கமால். அவரது டோயன்மே அடையாளத்தை மறைப்பதற்காக “அதாதுர்க்” என்று தன் பெயருக்குப் பின்னால் சேர்த்துக்கொண்டார்.
இந்த வரலாறு எந்தத் துருக்கியப் பள்ளிகளிலும் சொல்லிக் கொடுக்கப் படுவதில்லை. ஊடகங்களிலும் இதனைச் சொல்வது அனுமதிக்கப்பட்டதில்லை. முஸ்தஃபா கமாலின் உத்தியோகப்பூர்வ தன் வரலாற்று நூல் மறைக்கப்பட்டுள்ளது. அவரது உண்மையான இயற்பெயர் என்ன என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அது உறுதியாக “முஸ்தஃபா கமால்” இல்லை.
உதுமானியப் பேரரசு வீழ்ந்தவுடன் முஸ்தஃபா கமாலின் தலைமையிலான இந்தக் கிரிப்டோ யூதர்கள் மிக நீண்ட காலமாக துருக்கியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். இப்போதைய துருக்கிய அதிபமர் ரஜப் தய்யிப் எர்துகானின் இஸ்லாமியவாத ஏகே கட்சியின் எழுச்சிக்குப் பிறகு, கடந்த 10 வருடங்களாகத்தான் டோயன்மேக்களின் செல்வாக்கு குறைந்திருக்கிறது.
ஆனால் அவர்களது அதிகாரம் முழுவதுமாக இன்னும் அழிக்கப்படவில்லை. துருக்கி நாட்டின் உறுதியான அமைப்பான துருக்கிய இராணுவத்தில் டோயன்மேக்களின் செல்வாக்கு இன்னும் குறையவில்லை என்று சொல்லப்படுகிறது.
முஸ்தஃபா கமால் தனது ஆட்சியின்பொழுது நிறைய டோயன்மே கிரிப்டோ யூதர்களை இராணுவத்தில் இணைத்தார். சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட துருக்கிய மதச்சார்பற்ற ஆட்சியில் அனகேமாக அனைத்து இராணுவத் தளபதிகளும் கிரிப்டோ யூதர்களாகவே இருந்துள்ளனர். இன்றும் அந்த டோயன்மேக்களின் வாரிசுகள் இராணுவத்தில் இருக்கிறார்கள்.
எர்துகான் அரசு பதவியேற்ற பிறகு இந்த டோயன்மேக்களின் ஆதரவாளர்களால் இதுவரை நான்கு அரசுக் கவிழ்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அத்தனையும் தோல்வியில் முடிந்தன.
முஸ்தஃபா கமால் தனது ஆட்சியில் இன்னொரு கொடுமையையும் அரங்கேற்றினார்.
அதுதான் இஸ்லாமையும் துருக்கியையும் பிரித்தெடுப்பது. 1923ல் ஆட்சியில் அமர்ந்த அவர், இஸ்லாமையும் இஸ்லாமியக் கலாச்சாரத்தையும் துருக்கியிலிருந்து எடுபட வைத்திட பகீரத முயற்சிகளை மேற்கொண்டார்.
அதற்காக “சீர்திருத்தங்கள்” (Reforms) என்ற பெயரில் மேற்குலகை நோக்கி துருக்கியை வழிநடத்தினார். முஸ்லிம் நாடுகளிடமிருந்து முடிந்தவரை துருக்கியைத் தூரமாக்கினார். முஸ்லிம்கள் திரும்ப எழுச்சி பெற்று துருக்கியைக் கைப்பற்றாமலிருக்க அல்லது புரட்சி செய்யாமலிருக்க முஸ்தஃபா கமாலுக்கு இது மிகவும் அவசியமாயிற்று.
இந்தப் போக்கில் முஸ்தஃபா கமால் செய்த முக்கியமானது உதுமானிய துருக்கி மொழியைக் கைவிட வைத்து, புதிய துருக்கி மொழியை உருவாக்கியது. இது ஆங்கில லிபியைக் (எழுத்துகளைக்) கொண்டது. உதுமானிய துருக்கி மொழி அரபி லிபி/அரமைக் லிபியைக் கொண்டது.
தான் உருவாக்கிய ஆங்கில எழுத்துகள் கொண்ட புதிய துருக்கி மொழியை துருக்கியின் உத்தியோகப்பூர்வ மொழியாக அறிவித்து, முந்தைய அரபி லிபி துருக்கி மொழியைத் தடை செய்தார் முஸ்தஃபா கமால்.
அல்லாஹ்வின் உதவியால் முஸ்தஃபா கமால் அணிந்திருந்த முகமூடி துருக்கியில் இப்பொழுது கிழிந்து தொங்குகிறது. துருக்கியின் ஆற்றல்மிக்க இராணுவம் தவிர மற்ற அனைத்துத் துறைகளிலும் முஸ்தஃபா கமாலின் செல்வாக்குகள் வெகுவாகக் குறைந்துவிட்டன.
துருக்கிய முஸ்லிம்கள் இப்பொழுது தங்களின் உன்னத மார்க்கமான இஸ்லாமியத் தென்றல் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கிவிட்டார்கள். மிக நீண்ட காலமாக அவர்கள் தங்கள் இஸ்லாமியத் தேனைப் பருகவிடாமல் தடை செய்யப்பட்டிருந்தார்கள்.
அவர்களின் பள்ளி, கல்லூரிகளில் முஸ்தஃபா கமாலின் கொள்கைகளை நேசிக்கவும் மகிமைப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டார்கள். காலனியவாதிகளின் துணையுடன் துருக்கிய சமூகத்திலிருந்து இஸ்லாமைத் துடைத்தெறிய விரும்பிய முஸ்தஃபா கமால் என்ற சர்வாதிகாரியின் கைகளில் சிக்கி சின்னாபின்னமானது துருக்கி.
ஆனால் துருக்கிய முஸ்லிம்கள் அனைத்தையும் உணர்ந்துவிட்டனர். ஏகாதிபத்தியவாதிகளின் கைக்கூலியாக எவ்வாறு முஸ்தஃபா கமால் செயல்பட்டார் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டனர்.
டாக்டர் ஜோச்சிம் பிரின்ஸ் (Dr. Joachim Prinz) எழுதிய “The Secret Jews” (இரகசிய யூதர்கள்) என்ற நூலில் பக்கம் 122ல் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
“1908ல் ஸுல்தான் அப்துல் ஹமீது அவர்களின் ஆட்சிக்கெதிராக சலோனிகாவிலுள்ள இளம் துருக்கியர்களால் கலகம் உருவாக்கப்பட்டது. அதற்குத் தலைமையேற்று நடத்திய முக்கியமானவர்கள் ஜாவித் பே, முஸ்தஃபா கமால் ஆகியோர் ஆவர். இந்த இருவரும் டோயன்மே யூதர்கள். ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின் ஜாவித் பே நிதியமைச்சரானார். முஸ்தஃபா கமால் ஆட்சித் தலைவரானார்.
அவர் தனக்குத்தானே “அதாதுர்க்” என்று பெயர் சூட்டிக்கொண்டார். அவருடைய எதிர்ப்பாளர்கள் அவரது டோயன்மே பின்னணியைத் தோலுரித்துக் காட்டி அவரை ஆட்சியிலிருந்து அகற்ற முனைந்தனர். ஆனால் அது தோல்விலேயே முடிந்தது. இந்தப் புதிய அரசில் பங்குபெற்ற அதிமான இளம் துருக்கியர்கள் அல்லாஹ்வைத் தொழுதனர். ஆனால் அவர்களின் இறைத்தூதராக சபதாய் ஸெவியையே அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர்.”
ஹீப்ரூ பத்திரிகையாளர் இதாமர் பென்-அவியின் (Itamar Ben-Avi) தன்வரலாறு நூலில் வந்த ஒரு சுவையான நிகழ்வை ‘நியூயார்க் சன்’ (New York Sun) பத்திரிகை வெளியிட்டிருந்தது. ஹில்லல் ஹல்கின் (Hillel Halkin) எழுதியுள்ள “Ataturk’s Turkey Overturned” என்ற அந்தக் கட்டுரையில் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
“பென்-அவி தனது தன்வரலாறு நூலில் ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறார். 1911ல் குளிர்காலத்தில் மழைபெய்து கொண்டிருந்த ஓர் இரவில் ஜெரூசலமிலுள்ள ஒரு விடுதியில் அங்குள்ள மதுக்கூடத்தில் ஓர் இளம் துருக்கிய கேப்டனை பென்-அவி சந்தித்தார். அளவுக்கதிகமாக மதுவருந்தி போதையிலிருந்த அவன் பென்-அவியை ஒரு யூதர் என்று நம்பி, ஷிமா இஸ்ராயீல் என்ற ஹீப்ரூ மொழியிலுள்ள பிரார்த்தனைப் பாடலின் முதல் வரியைப் பாடினான். இது யூதர் அல்லது டோயன்மே அல்லாமல் வேறு எந்தத் துருக்கிய முஸ்லிமுக்கும் தெரியாத பாடல் வரிகள்.
பத்து வருடங்கள் கழித்து, பென்-அவி செய்திகளைப் படிப்பதற்காக ஒரு செய்தித்தாளைத் திறந்தார். துருக்கியில் நடந்த ஓர் ஆட்சிக் கவிழ்ப்பு பற்றி அதில் தலைப்புச் செய்தி வந்திருந்தது. அந்த ஆட்சிக் கவிழ்ப்பை நடத்திய தலைவரின் படத்தைப் பார்த்து பென்-அவி அதிர்ந்துவிட்டார். அவர் அன்று ஜெரூசலமில் சந்தித்த, ஹீப்ரூ மொழியில் யூதர்களின் பிரார்த்தனைப் பாடலைச் சரளமாகப் பாடிய துருக்கிய கேப்டன்!”
துருக்கியின் முந்தைய பெயர் அனடோலியா. ‘நியூயார்க் சன்’ பத்திரிகையில் அதே கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
“சர்வாதிகாரி முஸ்தஃபா கமால் இவ்வாறு கூறினார்:
‘அனடோலியாவின் பொறுப்பை பிரிட்டிஷார் எடுப்பார்களேயானால், அவர்களுக்குக் கீழ் பணிபுரிய அனுபவமுள்ள துருக்கிய கவர்னர்களின் ஒத்துழைப்பு அவர்களுக்குத் தேவைப்படும். நான் அந்த அடிப்படையில் எனது முழுத் திறனையும் காட்டி என் சேவைகளை அவர்களுக்குச் செய்ய விரும்புகிறேன்.” (ஆதாரம்: Ataturk, The Rebirth of a Nation)
தற்போது துருக்கியில் 15 இலட்சம் டோயன்மே கிரிப்டோ யூதர்கள் வாழ்கிறார்கள். மேற்கிலுள்ள இஸ்தான்புல், இஸ்மிர் ஆகிய நகரங்களில் இவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். 1948ல் இஸ்ரேல் என்னும் கள்ள நாடு உருவானபோது பெரும்பாலான டோயன்மேக்கள் இஸ்ரேலுக்குப் புலம் பெயர்ந்து சென்றுவிட்டார்கள். அதற்கு முன்பு துருக்கியில் டோயன்மேக்களின் மக்கள்தொகை மிக அதிகமாக இருந்தது.
இஸ்ரேலை முந்திக்கொண்டு அங்கீகரித்த முதன்மையான நாடுகளில் ஒன்றுதான் “மதச்சார்பற்ற துருக்கிய குடியரசு” என்று முஸ்தஃபா கமால் பெயர் சூட்டிக்கொண்ட துருக்கி.
1934ம் ஆண்டு துருக்கிய பாராளுமன்றம் முஸ்தஃபா கமாலுக்கு “அதாதுர்க்” (துருக்கியின் தந்தை) என்ற பட்டத்தைச் சூட்டியது. அதாவது அவரது தலைமையிலான பாராளுமன்றம் அவருக்கு இந்தப் பெயரைச் சூட்டியது. இந்தப் பெயரைக் கூறி முஸ்லிம்கள் அவரை மகிமைப்படுத்தாமல் இருப்பது நல்லது.
15 வருடங்கள் துருக்கியை ஆண்ட முஸ்தஃபா கமால், 1938ம் ஆண்டு, நவம்பர் 10ம் தேதி தனது 57வது வயதில் மரணித்தார். அவரது ஆட்சியில் மிக நீண்ட காலமாக தலைமை அமைச்சராக இருந்த இஸ்மத் இனோனு துருக்கியின் அடுத்த அதிபரானார்.
துருக்கியின் தற்போதைய அதிபர் எர்துகான்
இன்று மீண்டும் ஓர் இஸ்லாமிய எழுச்சி துருக்கியில் உருவாகியிருக்கிறது. துருக்கி கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமியமயமாகி வருகிறது. மக்கள் தங்கள் புனித மார்க்கமான இஸ்லாமை இறுகப் பற்றிக்கொண்டு வாழ ஆரம்பித்துள்ளனர்.
மீண்டும் ஓர் உதுமானியப் பேரரசு அங்கே உருவாகவேண்டும் என்பதே பெரும்பாலான முஸ்லிம்களின் பேரவாவாக இருக்கிறது.
முற்றும்.
Sources:
1. “The Secret Jews” by Dr. Joachim Prinz, published by Random House in 1973.
2. The article “Ataturk’s Turkey Overturned” written by Hillel Halkin in New York Sun.
3. Ataturk, The Rebirth of a Nation.
4. Hebrew Journalist Itamar Ben-Avi’s Autobiography.
MSAH வரலாற்றுத் துளிகள்
source: https://www.facebook.com/MSAH2020/posts/2628890250762685