சதை பிண்டத்தின் போர்வை தோல்
ரஹ்மத் ராஜகுமாரன்
தோல் சதை பிண்டத்தின் போர்வை தோல். மனித உடலில் பெரிய உறுப்பு தோல்தான். சராசரி மனிதனின் தோல் எடை சுமார் 27 கிலோ. தோலின் பரப்பளவு சுமார் 20 சதுரஅடிகள்.
தோலின் தடிப்பு சராசரி இரண்டு மில்லிமீட்டர். உள்ளங்கை பாதம் பிட்டம் போன்ற இடங்களில் இது இன்னும் கொஞ்சம் அதிகமாக இருக்கும். இந்த தடிப்பிற்குள் ஐந்து அடுக்குகள் தோலுக்கு உண்டு.
உடைகளில் உள்ளாடை மேலாடை இருப்பது போல் நமது தோளிலும் புறத்தோல் அகத்தோல் என்று இருக்கிறது.
அகத் தோலுக்கு கீழே வேர்வை சுரப்பி, எண்ணெய் சுரப்பி, வாசனை சுரப்பி மற்றும் மிக முக்கியமான வலிஉள்வாங்கிகள் மற்றும் நிறைய தோல் சார்பு உறுப்புகள் உள்ளன. இந்த தோல் சார்பு உறுப்புகள் நமக்குச் செய்யும் பணிவிடை கொஞ்சம் நஞ்சமல்ல; அல்லாஹ் நமது உடலை எப்படியெல்லாம் பாதுகாக்கிறான் என்பதற்கு மிகச் சிறந்த ஓர் அத்தாட்சி ஆகும்.
தோல் நமது சதையின் போர்வை மட்டுமல்ல நமது வடிவத்திற்கும் பளபளப்பை கூட்டி அழகு ஊட்டுவதும் இந்த தோல்தான்.
“திட்டமாக நாம் மனிதனை மிக அழகான வடிவத்தில் படைத்தோம்” என்று குர்ஆன் (95:04) கூறுவது கூட தோலால் அழகுப்படுத்தியது பற்றிதானோ?
வேர்வை சுரப்பிகள் மிகவும் இன்ட்ரஸ்டிங்கானது. இதுதான் நம் உடம்புக்குள்ளேயே இருக்கும் ஏர்கூலர். வெயில் சூடாகும் போதெல்லாம் இந்தச் சுரப்பிதான் வேர்வையை உடம்புக்கு வெளியே அனுப்புகிறது .உஷ்ணத்தால் வேர்வை நீர் ஆவியாகும் போது நமது உடம்பு குளிர்ச்சியடைந்து சமநிலை அடைகிறது இதனால் நம் உடம்பில் இருக்கும் தேவையில்லாத நீரை வெளியேற்றி சிறுநீரகத்திற்கும் இது நிறைய உதவி செய்கிறது
ஆனால் மழை காலத்தில் வியர்வை சுரப்பிகள் சிறுநீரகத்திற்கு உதவி செய்ய முடிவதில்லை இதனால் சிறுநீரகம் ஓவர்டைம் கொடுக்கிறது மழை காலங்களில் நாம் அடிக்கடி சிறுநீர் கழிப்பது இதனால்தான்
எண்ணெய் சுரப்பிகள் இந்த சுரப்பிகள் மட்டும் இல்லாவிட்டால் உடம்பில் எண்ணெய் பசையை இருக்காது உடம்பு முழுவதும் பாளம் பாளமாக வெடித்து விடும் அல்லாஹ்வுடைய பாதுகாப்பு ஏற்பாட்டை இதில் கவனிக்க முடிகிறது. ஆணும் பெண்ணும் பருவ வயதை கடக்கும்போது முகப்பரு வருவதற்கும் இந்த சுரப்பிதான் காரணம் பருவ வயதில்தான் இது அதிகமாக சுரக்கும்.
‘சுரக்கும்’ என்று சொல்வது கூட ஒரு வகையில் தவறு. காரணம் வேர்வை மாதிரி இந்த எண்ணெய் சுரப்பிகள் எந்த திரவத்தையும் சுரப்பதில்லை மாறாக இந்த எண்ணெய் சுரப்பிகளின் நுண்ணிய அறைகளை செல் உடைத்து கொழுப்பு மாதிரி மேல் தோலுக்கு வெளியே வரும்.
வாசனை சுரப்பி இது மிகவும் வசீகரமானது மனித இனம் அழியாமல் இருப்பதற்கு இந்த வாசனை சுரப்பி பெரும் சேவை செய்கிறது அதாவது மனிதனுக்கு இன உணர்ச்சியை உண்டாக்க இந்த வாசனை சுரப்பி ஒரு முக்கிய காரணம். இது இருப்பது கக்கம் இனவிருத்தி உறுப்பு என்று இரண்டு இடங்களில் மட்டும்தான் உள்ளது.
பாலூட்டி இனத்தைச் சேர்ந்த எல்லா மிருகங்களுக்கும் இந்த வாசனைக்கு உண்டு என்றாலும் கஸ்தூரி மான்கள்தான் இந்த வாசனை சுரப்பிற்கு சிறப்பு மிக்க ஓர் இலக்கிய அந்தஸ்து கிடைத்துள்ளது . பல சமயங்களில் பெண் மான்களுக்கு இன உணர்ச்சி அதிகரிக்கும் போது பெண் மானின் உடம்பில் இருக்கும் வாசனை சுரப்பி சுரந்து 2 அல்லது 3 கிமீ சுற்றளவில் காட்டையே கமகமக்க வைத்து விடும் அதோடு ஆண்மான் எங்கு இருந்தாலும் இந்த வாசனை பட்டதும் உடனே வந்துவிடும்.
இது மாதிரியே மனிதர்களிடமும் வாசனை சுரப்பிகள் சுரந்து ஒவ்வொரு மனிதர்களிடமும் மணம் வீசும் அந்த மணத்தை அவர்களிடம் நெருங்கிப் பழகி கொள்பவர்கள் எளிதில் இனம் கண்டு கொள்வார்கள். அவர்களிடம் எந்நேரமும் கஸ்தூரி வாசனை கமழ்ந்து கொண்டே இருக்கும். நபி ஸல் அவர்கள் இருந்த இடத்தில் வேறு யாரேனும் வந்தால் வந்தவர்கள் அந்த இடத்தின் வாசனையை நுகர்ந்து கொண்டு நபி அவர்கள் இங்கு வந்தார்களா என்று கேட்டு விடுவார்கள் அந்த அளவிற்கு அவர்களின் வாசனை வெளிப்பட்டது
குர்ஆனில் நபிமார்களின் வாசனை பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான். நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாடையை அவர்களின் தந்தை நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ரொம்பவும் பரிச்சயம் அதாவது சிறு வயதில் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காணாமல் போனபோது நுகர்ந்த நறுமணம் அவர்களிடம் என்றென்றும் ஞாபகத்தில் இருக்க நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வாலிபப் பருவத்தில் எகிப்திலிருந்து தன் சட்டையை தன் தந்தையாருக்கு அனுப்பி வைத்தபோது நபி யாகூப் அலை கண் தெரியாமல் இருந்தார்கள். அந்த சட்டை தூரத்தில் கொண்டு வரும்போது தன் மகனின் வாசனையை தன்பக்கம் வருகிறது என்பதை உணர்ந்து கொண்டார்கள் என்பதாக குர்ஆனில் அல்லாஹ்…
“அவர்களின் தந்தை இதோ யூசுபுடைய வாடையை நிச்சயமாக நான் நுகர்கிறேன். இதனால் நீங்கள் என்னை பைத்தியக்காரென்று எண்ணாமல் இருக்க வேண்டுமே என்றார்.” (குர்ஆன் 12: 94)
தோலில் வழி உள்வாங்கி அமைந்திருப்பதை தற்காலத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது உடலில் ஏற்படும் வலியை உணரும் தன்மை மனித மூளையில்தான் உள்ளது என்று ஆரம்பத்தில் எண்ணினார்கள் .ஆனால் அண்மைக்கால கண்டுபிடிப்புகள் வலி உள்வாங்கிகள் தோலிலேயே அமைந்திருப்பதால்தான் ஒரு மனிதன் வலியை உணர்கிறேன் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வலிஉள்வாங்கிகள் இல்லையெனில் உடலில் ஏற்படும் வலியை உணர இயலாது அதுமட்டுமல்லாமல் தோலின் மீது ஏற்படும் காயங்களால் வலிகள் உணராமலேயே அந்த உறுப்புகள் சேதப்படும்.
திருக்குர்ஆனில் மனித உடலில் தோலில் வழி உள்வாங்கி கள் அமைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டும் வசனம்
“எவர் நம்முடைய வேத வசனங்களை நிராகரிக்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக நாம் மறுமையில் நரகத்தில் சேர்த்துவிடும் அவர்கள் வேதனையை சதா அனுபவிப்பதற்காக அவர்களுடைய தோல் கருகிவிடும் போதெல்லாம் மற்றொரு புதிய தோலை மாற்றிக் கொண்டே இருப்போம். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தோனும் ஞானமுடையோனுமாக இருக்கின்றான் (குர்ஆன் 4 : 56)
தாய்லாந்தில் உள்ள சியாங்மாய் பல்கலைக்கழகத்தில் உடற்கூறு துறையின் தலைவராக இருப்பவர் பேராசிரியர் டாக்டர் தகாட்ட தெஜாஸன் என்பவர் இவர் தோலில் உள்ள வலி உள்வாங்கிகள் குறித்து நீண்ட நெடுங்காலமாக ஆய்வு மேற்கொண்டவர்.
1400 ஆண்டுகளுக்கு முன் இந்த அறிவியல் உண்மை திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளதை அவரால் ஆரம்பத்திலேயே நம்ப முடியாமல் இருந்தது இந்த திருக்குர்ஆன் வசனத்தின் மொழிபெயர்ப்பை உண்மையை கண்டறியும் நோக்கோடு இவர் ஆராய்ந்தார். மிக மிகத் துல்லியமான அறிவியல் பேருண்மையை திருக்குர்ஆன் என்னும் கருத்து பெட்டகத்தில் உட்பொதிந்த கிடப்பதை கண்ட பேராசிரியர் ஆச்சரியப்பட்டார் இந்த இறைவசனம் அவருடைய உள்ளத்தில் கண் தாக்கத்தை பதிவு செய்தது .
சவுதியின் தலைநகர் விழாவில் திரு குர்ஆன் மற்றும் சுன்னாவின் அறிவியல் அத்தாட்சிகள் என்னும் தலைப்பில் நடைபெற்ற எட்டாவது சவூதி மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்ட பேராசிரியர் தெஜாஸன் இஸ்லாத்தை ஏற்றார்.
நம்முடைய தோலில் தடிப்பு 2 மில்லி மீட்டர் இதில் எபிடெர்மிஸ் டெர்மிஸ் ஹைப்போ டெர்மிஸ் என மூன்று பகுதிகள் உண்டு இங்கேதான் நம் தோழி நேரத்தின் சூட்சுமம் புதைந்திருக்கிறது
மருத்துவ ரீதியாக வெள்ளைத்தோல் சிறந்ததா கருப்பு தோல் சிறந்ததா என்று கேட்டால் கருப்பு தோல் தான் அதிகமா அதற்கு அடுத்தபடியான மாற்றம் ஒன்றுதான் கருப்பு மற்றும் பிரவுன் தோல் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் ஸ்கின் கேன்சர் நோய் வருவதில்லை வெள்ளைக்காரர்களுக்கு வரும் தோல் வியாதிகள் பலவற்றின் பெயர்கள் கூட நாம் பக்கம் தலைவைத்துப் படுப்பதில்லை காரணம் நம் தோலின் வண்ண சிற்றறைகளில் தோளில் மேல் பகுதி மற்றும் கண்ணாடி பகுதி ஆகியவை தோல்நோய்கள் பல நம்மை நெருங்க விடாமல் தடுத்து விடுகின்றன
“உங்களுடைய மொழிகளும் நிறங்களும் வேறுபட்டு இருப்பது அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.” (குர்ஆன் 30 : 22)
பூகோளப்படி மனித நிறங்கள் பூமத்திய ரேகை உள்ள ஆப்பிரிக்க நாட்டில் சூரியன் செங்குத்தாக கதிர்கள் விழுவதால் அங்குள்ள மக்கள் கறுப்பர்களாகவும், சூரிய கதிர்கள் தொடர்ந்து சாய்வாக விழும் நாட்டின் மக்கள் கோதுமை நிறம், மஞ்சள் நிறம், வெள்ளை நிறங்களை கொண்டுள்ளனர்.
தோலில் சாலை விபத்து தீ விபத்து பிறவியிலேயே உதடு கிழித்துக்கொண்டு தொங்கிக்கொண்டு காது மடித்துக்கொண்டு பிறந்தவர்களுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்படுகிறது முகத்தின் அழகை கூட தோலை மாற்றம் செய்வதன் மூலம் அழகு படுத்தப்படுகிறது .
மூக்கு இல்லை என்று நடிகை ஸ்ரீதேவி தோலில் செய்தது காஸ்மெடிக் சர்ஜரி மறைவான உறுப்புகள் மற்றும் மார்புகள் உப்பலாக இருக்கவேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த காஸ்மெட்டிக் சர்ஜரி செய்கிறார்கள்.
நீக்ரோ இனத்தைச் சேர்ந்த மைக்கேல் ஜாக்சன் வெள்ளைக்காரன் போல ஆசைப்பட்டு தன் தோலை வெளுக்க செய்ததும் காஸ்மெடிக் சர்ஜரி நெற்றியை மேடாக்க நடு மண்டையில் இருந்து தோலைப் கிழித்துக் கொண்டு நெற்றி வரை வந்து பின் ஜெல்லியை அடைத்து உப்பலாக ஆக்கி சரி செய்யப்படுகிறது. மூக்கை சரிசெய்ய மூக்குத் துவாரத்தின் வழியாக வேலை செய்கிறார்கள்.
உலகில் முகத்தை மாற்றி அமைத்தவர்கள் 29 பேர் என்றும் 27 பேர் என்றும் நாஃபிவுள் முஸ்லிமீன் என்ற ஹதீஸ் கிரந்தம் சொல்கிறது.
அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், “இறைவன் எத்தனை பேரின் முகங்களை மாற்றி அமைத்தான்?
13 பேர்கள்.
அவர்களில் ஜுஹ்ரா ஒருத்தி என்றும் அவள் ஓர் அரச திருமகள் என்றும், ஹாரூத் மாரூத் முகம் மாற்றம் செய்யப்பட்டு மனிதர்களாக பூமிக்கு வந்தனர் என்றும் (குர்ஆன் 2: 102) இவர்கள் இருவரையும் ஜுஹ்ரா தன் வசப்படுத்தினாள் என்றும் கூறப்படுகிறது.
அல்லாஹ் மறுமை நாளின் போது ஒவ்வொரு மனிதனின் அங்கங்கள் பேசும் என்பதாக குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
“பாவம் செய்த அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவிகளும் அவளுடைய கண்களும் அவர்களுடைய மாமிச தொலிகளும் (தோல்களும்) அவர்கள் செய்து அவர்களைப் பற்றி சாட்சி கூறும். (குர்ஆன் 41:20)
மறுமை நாளில் தீர்ப்பின்போது அங்கங்கள் கண்டிப்பாக பேசும் என்பதற்கு ஆதாரமாக இம்மையிலேயே இந்த உலகத்திலேயே மனிதர்களின் தோல்கள் பேசுகின்றன உடம்பின் தற்போதைய நிலை,முன்னாலிருந்த நிலை, இந்த வியாதிக்கு உரிய காரணங்கள் என்ன என்றெல்லாம் விலாவாரியாக மருத்துவரிடம் தோள்கள் பேசுகின்றன எந்தெந்த வியாதிக்கு தோல் எப்படி எல்லாம் பேசும் என்பதை ஒரு சில வியாதிகள் மற்றும் விசாரணை செய்வோம்.
நான்கு நாட்களாக உள்ளங்கை அரிப்பு எடுக்கிற சாதாரணமானவர்கள் பணம் வரும் என்று தானே எதிர்பார்த்து சந்தோஷமாக இருப்பார்கள். அது தான் இல்லை இந்த அரிப்பு இரண்டு உள்ளங்கைகளும் லேசான தடுப்பை ஏற்படுத்தி இருந்தால் அந்நபரின் பெருங்குடலில் கேன்சர் நோயின் ஆரம்பநிலை என்று தோல் பேசுகிறது.
அடுத்து சிலர் அருகில் வந்தாலே மூக்கை இரண்டு கைகளாலும் பொத்திக் கொள்ளும் அளவிற்கு கெட்ட நாற்றம் அவரிடமிருந்து அடிக்கும் இவர் குளித்து எத்தனை நாளோ என்று கூட நினைக்கத் தோன்றும். ஆனால் அந்த நபரை விசாரித்தால் தினம் இரண்டு முறை குளிப்பதாக சொல்வார் அப்படி என்றால் இந்த கெட்ட வாடைக்கு என்ன காரணம் அந்த நபரின் கிட்னி பழுதுபட்டு யூரியா இரத்தத்தோடு கலந்து உடம்பு முழுவதும் துர்நாற்றம் வீசும் தோல் அவருக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்கிறது.
மெழுகால் செய்த சிற்பம் மாதிரி அந்தப் பெண் இருக்கிறார் என்று சொல்கிறோம் மருத்துவரீதியாக அந்த உதாரணம் ரொம்ப தவறானது .ஒருவருக்கு தோல் மெழுகு போல் இருந்தால் அது இதய நோய்க்கான அறிகுறி என்று தோல் பேசும்.
ஒருவருடைய மாரடைப்பு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் உஷார் ஜாக்கிரதை ஆம்புலன்சுக்கு போன் செய் என்று அபாய குரல் கொடுப்பது கூட தோள்கள்தான் காரணம் மாரடைப்பு வரும்போது அந்த நபர் போட்டிருக்கும் சட்டையே நனையும் அளவுக்கு குப்பென்று வியர்த்து விடுகிறது. தோல் தான் அந்த நபருக்கு மாரடைப்பு வருகிறது என்று அபாயம் தெரிவிக்கிறது.
கல்லீரலில் பித்த பை ஒன்று இருக்கிறது கல்லீரல் கெடும் போது இந்த பித்தப் பையில் இருக்கும் பித்த நீர் ரத்தக்குழாய்களோடு கலந்து விடும் இரத்தத்தில் பித்த நீர் கலக்கும் போது தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறி விடுகிறது இதுதான் மஞ்சள் காமாலை என்று தோல் பேசும் .
சிலருக்கு ரத்தத்தில் இரும்பு சத்து குறைந்து போகும் இதைக் கண்டுபிடிக்காமல் விட்டுவிட்டால் இதயம் மூளை பேச்சு என்று எல்லாமே பாதித்துவிடும். உடம்பில் ரத்த சோகை இருக்கிறது, உடனே கவனி என்று உடம்பு தோலின் வழியாகதான் முதலில் எச்சரிக்கை கொடுக்கும். அந்த எச்சரிக்கை தான் தோல் பளபளப்பு இழந்து வெளுத்துப் போவது தெரிகிறது.
இப்படி எல்லாம் பேசும்.
தோல் மற்றொரு பரிபாஷையில் பேசும் அதுதான் மச்சங்கள் மருக்கள்.
மச்சம் உண்டாவதற்கு சுரப்பிகள் கூட சில சமயம் காரணமாக இருக்கும் இந்த வகை மரங்கள் மஞ்சள் அல்லது பிரவுன் நிறத்தில் இருக்கும் உள்ளங்கை அகலத்துக்கு கூட மச்சம் வரலாம் அதற்கு மேலும் வரலாம் Swiming Trunk என்று ஒரு மச்சம் வகை உண்டு இதன் பெயரைப் போலவே நீச்சலுடை போட்டதுபோல் இடுப்பைச் சுற்றி அது இருக்கும்.
Malignant Melenoma என்ற ஒரு வகை மற்றும் முன்பு வெளி நாடுகளில் இந்த வகை மச்சத்தின் பெயரை சொன்னாலே அலறுவார்கள் காரணம் கேன்சரின் ஊற்றுக்கண் இந்த மச்சம்தான்.
Vercucour Nevi என்று ஒரு மச்சம் முன்பு இந்த மச்சம் உடம்பில் சம பரப்பில் இல்லாமல் ‘மரு’ மாதிரி தோலிலிருந்து கொஞ்சம் உப்பிக்கொண்டு வெளியே நிற்கும்.
சில மச்சங்கள் வயதான காலத்தில் உடம்பில் வர ஆரம்பிக்கும் இதற்கு Seborrheic keratoses என்று பெயர் சுருக்கமாக Warts என்று அழைப்பர். தொட்டால் பஞ்சு மாதிரி மிருதுவாக இருக்கும் இதுவும் பிரவுன் நிறத்தில் தோலின் மேற்பரப்பில் கொஞ்சம் உப்பிக்கொண்டு வெளியே நிற்கும். இது முகத்திலும் முதுகிலும் தான் அதிகமாக வரும் இந்த மச்சத்தின் பேச்சு “உடம்பு ரொம்ப வயதாகிக் கொண்டிருக்கிறது” என்று சொல்கிறது.
இதுவரை பார்த்த மச்சங்கள் மருக்கள் எல்லாம் அச்சங்களை கொடுக்கலாம், நோய்களை பறைசாட்டலாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முதுகில் வலது புறத்தில் நபித்துவத்தின் முத்திரையாக , நுபுவத்தின் அடையாளமாக மச்சம் மாதிரியே முத்திரையைப் பதித்தான் அல்லாஹ். அந்த புனித முத்திரையும் பேசியது: “வந்திருக்கும் இவர்கள்தான் இறுதித்தூதர்” என்று.
– ரஹ்மத் ராஜகுமாரன்
source : https://www.facebook.com/rahmath.rajakumaran.9?__tn