பத்து நாட்கள் தான் படித்தேன்.. இது மனிதர்கள் எழுதிய நூலல்ல என்று புரிந்து கொண்டேன்!
கொரோனா நேரத்தில் படிக்க புத்தகம் இல்லாமல் நண்பர் இடத்தில் திருகுர்ஆன் வாங்கி படித்து இஸ்லாத்தை ஏற்று கொண்ட பிரபல அறிவியல் கல்லூரி மாணவி!
ரஷியாவில் அறிவியல் கல்லூரி மாணவி பேலட்னி தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் இஸ்லாத்தை ஏற்று கொண்டு உள்ளார். அவர் இஸ்லாம் தனக்கு வந்தது குறித்து முகநூலில் பதிவு செய்து உள்ளார்.
நான் இத்தாலியில் தான் கல்லூரி படிப்பு படித்து கொண்டு இருந்தேன். அப்போது கொரோனா வைரஸ் குறித்து ரஷ்யா சேர்ந்த மாணவர்கள் மாணவிகள் நாங்கள் நாடு வந்து சேர்ந்தோம்.
வந்த நேரத்தில் இத்தாலியில் இருந்து வந்த காரணமாக வீட்டிலேயே இருந்தேன். அப்போது வீட்டில் இருக்கும் அனைத்து புத்தகங்களைப் படித்து படித்து முடிந்து அருகில் உள்ள இஸ்லாமிய வீட்டில் உள்ள சகோதரி இடத்தில் புத்தகங்களை படிக்க கேட்டபோது எங்கள் இடத்தில் திருகுர்ஆன் மட்டும் தான் இருக்கிறது என்று கூறினார். நான் பரவாயில்லை கொடுங்கள் என வாங்கி படிக்க ஆரம்பித்தேன்.
பத்து நாட்கள் படித்தேன் படிக்க ஆரம்பிக்கும் போதே ஒவ்வொரு வார்த்தையும் மனிதர்கள் எழுதியது இல்லை எனக்கு புரிய ஆரம்பித்தது. பின்னர் நான் அறிவியல் ரீதியாக படித்து கொண்டு உள்ளதால் திருகுர்ஆன் வசனங்களில் உள்ள அறிவியல் சார்ந்த பல ஆய்வுகளுக்கு பதில் கிடைத்தது போல் இருந்தது. உடனே முழுவதும் படித்தேன்.
படித்து முடிக்கும் போது என் மூளை இதயம் எண்ணம் எல்லாம் இஸ்லாத்தை ஏற்று கொள்ள வேண்டும் என இரூந்தது. எனக்கு தந்தை மட்டும் தான் தாய் இறந்து விட்டார். உடனே தந்தை இடத்தில் இஸ்லாத்தை ஏற்று கொள்ள வேண்டும் என கூறினேன். அவர் எனது மன நிலையை அறிந்து கொண்டு உடனே அனுமதி வழங்கினார்.
நான் ரமலான் துவங்கும் சில நாட்களுக்கு முன்னால் இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்று கொண்டேன். ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கிறேன். நான் நோன்பு வைக்கும் போதும் நோன்பு திறக்கும் போதும் என் தந்தை உணவு தயாரித்து தருகிறார். எனக்கு மன நிறைவு தருகிறது என கூறி உள்ளார்..
اُولٰٓٮِٕكَ عَلٰى هُدًى مِّنْ رَّبِّهِمْ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ
இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் : 2:5)
வீட்டில் இருந்தால் கூட அல்லாஹ் தான் நாடியோருக்கு இஸ்லாத்தை கொடுக்கிறான் என்ற திருகுர்ஆன் வசனங்கள் மெய்பித்து காட்டுகிறது. இஸ்லாம் ஏதோ ஒரு மூலையில் வளர்ந்து கொண்டே உள்ளது. தனது மார்க்கத்தை அல்லாஹ் மேலோங்க செய்து கொண்டே இருக்கிறான். நாமும் நம்மை சுய பரிசோதனை செய்து கொள்வோம். நன்மைகளை செய்து இறைவன் பொருத்ததை பெறுவோம்.
தமிழாக்கம்: A.யாசர் அராபத்.
தகவல்: ISLAM IS WORLD MEDIA.
THOWHEEDISM மீடியா செய்தி பிரிவு.