“எனக்கு மரணத்தை குறித்து எந்த அச்சமும் இல்லை, இறைவனிடத்தில் கிடைக்கும் சொர்க்கம் தான் இலக்கு”
மரண தருவாயில் மருத்துவமனையில் இஸ்லாத்தை ஏற்று கொண்டு தற்போது குணமாகி இறை கடமைமைகளை செய்து வரும் 85 வயது சகோதரி புது வாழ்க்கை வாழுவதாக தெரிவித்து உள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் பிராமாண்டோ பகுதியில் வசித்து வந்தவர் 85 வயது நிறைந்த மர்யம் கிருஸ்துவ மதத்தில் இருந்தவர். திடிரென சில மாதங்களுக்கு முன்னர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டார்.
கணவன் மறைந்து சில வருடங்கள் ஆகிறது. குழந்தைகளும் இல்லை. பணி பெண் மட்டும் அவர்கள் இல்லத்தில் இருக்கிறார். சொத்து அதிகம் இருப்பதால் பரமாறிப்பு ஆட்கள் இருந்து உள்ளார்கள்.
அப்போது மருத்தவர்கள் அவரது பணி ஆட்கள் இடத்தில் மர்யம் அவர்களுக்கு வயதாகி விட்டது, அதனால் மூச்சு திணறல் உள்ளது உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை.
அவரது பணம் அதிகம் இருப்பதால் அவர் உயிரோடு இருக்கும் சில நாட்களுக்கு மருத்துவம் செய்யலாம் என கூறி அவருக்கு மேலோட்டமாக சிகிச்சை கொடுத்து அவருக்கு முஸ்லிம் மருத்துவ பணி ஆள் ஒருவரை நியமித்து உள்ளனர்.
அந்த மருத்துவ பணிப்பெண் சகோதரி தினமும் மர்யம் அவர்களை கவனித்து இடையை மர்யம் அவர்கள் ரெஸ்ட் எடுக்கும் நேரத்தில் இந்த சகோதரி திருகுர்ஆன் படிப்பார்.
அப்போது மர்யம் அவர்கள் ஒரு நாள் அந்த முஸ்லிம் சகோதரி இடத்தில் உங்கள் இஸ்லாத்தில் மரணத்தை குறித்து என்ன சொல்லுறது என்று கேட்கும் போது, ”இறை நம்பிக்கையாளர்களுக்கு இந்த உலகம் வெறும் சோதனை களம் தான் மரணத்திற்கு பின்னர் மறுமையில் இறைவன் மிக பெரிய வாழ்க்கை வைத்து உள்ளான் அது தான் முஸ்லிம்களுக்கு இலக்கு” என்று கூறி உள்ளார்.
இதற்கு இடையில் திருகுர்ஆனை வாங்கி சில நேரங்களில் மர்யம் அவர்கள் படித்து உள்ளார். ஒரு நாள் மூச்சு திணறல் அதிகம் ஆகி உள்ளது. அப்போது மருத்தவர்கள் மருத்துவ சிகிச்சை கொடுத்து கொண்டு இருக்கும் போது வயதான மர்யம் அவர்கள் அந்த முஸ்லிம் பணிப்பெண்ணை வர சொல்லி மருத்தவர்கள் இடத்தில் கூறி உள்ளார். அவர் வந்த உடனே தான் இஸ்லாத்தை ஏற்று கொள்ள வேண்டும் என கூறி உள்ளார்.
அந்த பெண் மரணத்தை கண்டு அஞ்சிய நிலையில் இஸ்லாத்தை ஏற்று கொள்வது பயந்ததை போல் ஆகி விடும் என கூறி உள்ளார். இறைவன் தன்னை மன்னித்து விடுவார் எனக்கு இஸ்லாத்தை ஏற்று கொள்ள வேண்டும் என கூறி சத்திய கலிமாவை சொல்லி உள்ளார். மருத்துவர்கள் சிகிச்சை இன்னொரு பக்கம். அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட புத்துணர்ச்சியில் மர்யம் நலமாகி உடல் நிலை சீராகி குணம் அடைந்து உள்ளார்.
தற்போது 85 வயதில் இஸ்லாத்தை ஏற்று கொண்டு ரமலான் நேரத்தில் நோன்பு வைத்து தொழுது ஆரோக்கியமாக வாழ்வாதாகவும் தான் புதிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உள்ளேன். ”இப்போது எனக்கு மரணத்தை குறித்து எந்த அச்சமும் இல்லை இறைவன் இடத்தில் கிடைக்கும் சொர்க்கம் தான் இலக்கு” என கூறி உள்ளார். இதனை இங்கிலாந்து இஸ்லாமிக் அப்ஸாட் என்ற வலைதள நிறுவனம் அந்த மூத்தாட்டி வாழ்க்கை குறித்து அறிந்து பேட்டி எடுத்து பதிவு செய்து உள்ளனர்..
اَيْنَ مَا تَكُوْنُوْا يُدْرِكْكُّمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِىْ بُرُوْجٍ مُّشَيَّدَةٍ وَاِنْ تُصِبْهُمْ حَسَنَةٌ يَّقُوْلُوْا هٰذِهٖ مِنْ عِنْدِ اللّٰهِ وَاِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ يَّقُوْلُوْا هٰذِهٖ مِنْ عِنْدِكَ قُلْ كُلٌّ مِّنْ عِنْدِ اللّٰهِ فَمَالِ ھٰٓؤُلَۤاءِ الْقَوْمِ لَا يَكَادُوْنَ يَفْقَهُوْنَ حَدِيْثًا
“நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (அல்குர்ஆன் : 4:78)
இந்த திருகுர்ஆன் வசனத்தில் மரணம் குறித்து தெளிவாக இறைவன் கூறுகிறான் திருகுர்ஆன் வசனத்தில் இன்னொரு இடத்தில் மரணத்தை கண்டு அஞ்சிய நிலையில் பாவ மன்னிப்பு தேடி அவர்கள் இறைவனை ஏற்று கொண்டால் அவர்கள் இறைநிராகிக்க பட்டவர்களாக மரணிப்பதாக அல்லாஹ் கூறுகிறான் ஆனாலும் நிய்யத் என்பதற்கு தான் கூலி.
இந்த சகோதரி இஸ்லாத்தை ஏற்று கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் கொண்டு உள்ளார் மரணம் குறித்து அச்ச பட வில்லை இறைவனும் அவருக்கான வாழ்க்கை என்பதை நீட்டித்து மரணம் நேரம் அது இல்லை தான் நாடியோருக்கு இஸ்லாம் கிடைக்கிறது என்பது உறுதியாகிறது இதில் நமக்கான படிப்பினைகள் பெற்று இருக்கும் காலங்களில் இறை கடமைகளை செய்து ஈமானை வலுப்படுத்துவோம் இன்ஷா அல்லாஹ்..
தமிழாக்கம்: A.யாசர் அராபத்
தகவல்: ISLAM IS WORLD MEDIA.
THOWHEEDISM மீடியா செய்தி பிரிவு.