மருந்தில்லாமல் குணமானக் கொரோனோவும், மதவெறி அரசியலுக்குப் பலியான வரலாறும்
S.M.S.மதார்
இன்றைக்கு இரண்டொரு தினங்களாக “கொரோனோ சிகிச்சை முடிந்து குணமாகி வீடு திரும்பினார்கள்” என்ற நியூஸ் பரவலாக எல்லா ஊடகங்களிலும் பரப்பப்படுகின்றது.
இவர்கள் அப்படி என்ன சிகிச்சைப் பண்ணினாங்க…? கொரோனோ குணமாக…!
அங்கே ஆளானப்பட்ட அமெரிக்காவே, சிகிச்சைத் தெரியாமல் திண்டாடுது…! இங்கே மோடியின் எடப்பாடி அரசு கொரோனோவைக் குணப்படுத்தியதா….?
சீனாவில் ஆர்டர் போடப்பட்டு, அங்கிருந்து அனுப்பப்பட்ட நோய்த் தொற்றைக் கண்டறியும் “ரேபிட் டெஸ்ட் கிட்” டைக் கூட மோடி அரசு கையகப்படுத்தி வைத்திருக்கும் போது…? இவர்கள் தினமும் நூற்றுக்கணக்கானோரை எப்படிக் குணப்படுத்தி இருக்க முடியும்…?
சாதாரணக் காய்ச்சலுக்கு கொடுக்கக்கூடிய “தஅ” (தலைவிதி அவ்வளவுதான்) “பாரசிட்டமால்” மாத்திரையையும், தொண்டை வலிக்குக் கொடுக்கக்கூடிய “அசித்ரோமைசினையும்” வைத்துக் கொண்டு, கொரோனோ நோயாளிகளைக் குணப்படுத்தி விட்டார்களா…? அதுவும் நூற்றுக்கணக்கில்…?
நிச்சயமாக இல்லை….!
அப்படி என்றால்….?
உண்மை என்னவென்றால்…?
அட்மிட் ஆகி, குணமானதாகச் சொல்லப்படுகின்ற யாருக்குமே கொரோனோத் தொற்றே கிடையாது.
நோயிருந்தால்தானே குணமாக…!
மருந்திருந்தால்தானே குணமாக்க…!
அப்படி என்றால்…..?
மத்திய மோடி அரசின் கையாலாகாதத் தனத்தையும், மாநிலத்தில் அதிமுக அரசின் அடிமைத்தனத்தையும் கண்டு…., ஊரடங்கால் உழைப்பின்றி, வருமானமின்றி, பசி பட்டினியில் இருக்கும் மக்கள், அரசுக்கு எதிராகத் திரும்பி விடக்கூடாது என்ற அச்சத்தில்..!
மத்திய & மாநில அரசுகள் இந்தக் கொரோனோவை வைத்து அரசியல் செய்தார்கள். அதை அப்படியே திருப்பி விடப் பார்த்தார்கள். அதற்குப் பலியாக்கப்பட்டவர்கள் தப்லீக் ஜமாஅத்தினர்.
அவர்கள் தடையை மீறியோ, தவறான நோக்கத்திலோ அல்லது ஊரடங்குப் போட்டப் பிறகோ, டெல்லியில் ஒன்று கூடவில்லை. பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
எல்லா இடங்களிலும் பரவலாக, (அவர்களுக்கேத் தெரியாமல்) நோய்த் தொற்றுஏற்பட்டது போல…., அங்குக் கூடிய ஒரு சிலருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டது.
ஆனால் அதை வைத்து இந்த மதவெறி மத்திய அரசாங்கம், கொரோனோவை முஸ்லீம்கள் பரப்புகிறார்கள் என்ற வதந்தியைத் திட்டமிட்டுக் கிளப்பி, அடிமை எடப்பாடி அரசையும் அதுபோல் தினமும் அறிக்கை விடச் சொல்லி, ஒட்டுமொத்தப் பழியையும் முஸ்லீம்கள் மேல் சுமத்தினார்கள்.*
தமிழ்நாட்டில் அதுவரை குறைவாக இருந்த (சந்தேக) நோய்த்தொற்றை, இதற்குப் பிறகு தினந்தோறும் அதிகப்படுத்திக் காட்டி, மற்ற சகோதர சமுதாயத்தினரை முஸ்லீம்கள் மேல் வெறுப்புக் கொள்ள வைத்தனர்.
எந்தளவிற்கு என்று சொன்னால்…?
குழந்தை உண்டானது முதல் மருத்துவம் பார்த்து வந்த, மருத்துவமனைக்குப் பிரசவத்திற்குச் சென்றபோது, கொஞ்சங்கூட ஈவிரக்கமின்றி, பிரசவம் பார்க்க இங்கே அனுமதி இல்லை என்று விரட்டியடிக்கப்பட்டார்கள். பசி பட்டினியில் இருந்த மக்களுக்குப் பரிதாபப்பட்டு உணவைக் கொடுக்க, ஓடோடிச் சென்ற முஸ்லீம்களை, கொரோனோவைப் பரப்ப வருவதாகச் சொல்லி விரட்டியடித்தார்கள்.
ஆனால்….! ஆனால்….!
உண்மை என்ன…?
டெல்லிக்குச் சென்றுத் திரும்பிய அனைவரும், பூரண ஆரோக்கியத்துடன் இருந்தும், அரசு அறிவித்தவுடன், தானாகப் பரிசோதனைக்கு முன்வந்தார்கள்.
அப்படிப் பரிசோதனைக்கு வந்தவர்களைப் பரிசோதிக்காமலேயே, அவர்கள் அனைவரையும் கோரோனோ நோய்த்தொற்று உள்ளவர்களாகத் தவறாகச் சித்தரித்து, தினந்தோறும் நூற்றுக்கணக்கில், டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களுக்கு நோய்த் தொற்று”* என்று, அரசே வதந்தியைப் பரப்பியது.
அப்படிப் பரப்புவதற்காகவே, அதுவரை ஊடகங்களுக்குப் பேட்டி அளித்து வந்தச் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஓரங்கட்டப்பட்டு, சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் களமிறக்கப்பட்டார்.
ஆனால்….. நடந்து என்ன…..?
பரிசோதனைக்கு வந்தவர்களில் 95 சதவீதமானவர்களுக்கு நோய்த் தொற்றே இல்லை என்று, பிறகு அரசே “வேறு வழியில்லாமல்” அறிவித்தது. காரணம், *எவ்வளவு நாளைக்குத்தான், எந்தவித நோயும் இல்லாதவர்களை, எப்படி தொடர்ந்து நோயாளியாகவே வைத்து, மீடியாக்கள் முன் சித்தரிக்க முடியும்…?*
அப்படி என்றால்…? அரசே திட்டமிட்டு வதந்தியைப் பரப்பியது என்பது அவர்கள் வாயாலேயே ஊர்ஜிதமானது.
*அப்படி, நோய்த்தொற்று ஏதும் இல்லாமல், சரியாகச் சொன்னால் “நோயே இல்லாமல், எந்தவித மருந்து மாத்திரையுமின்றி, 14 நாட்களாக வெறுமனே தனிமைப்படுத்தப்பட்டு மட்டும் இருந்தவர்கள், தற்போது விடுவிக்கப்படுகின்றார்கள்”*. அவ்வளவுதான்.
ஆனால் செய்தியோ…..?
கொரோனோ சிகிச்சை முடிந்து, குணமாகி வீடு திரும்புவதாகப் பரப்பப்படுகிறது. காரணம் ஏற்கனவே அரசே பரப்பிய வதந்தியை, நியாயப் படுத்துவதற்காக….!
நோய்த் தொற்றும் இல்லை…, நோயும் இல்லை…, நோய் வந்தால் மருந்தும் இல்லை……!
ஆனால்….!
மதவெறி மட்டும் இருக்கிறது மத்திய அரசுக்கு……!
மதவெறி மண்ணைக் கவ்வும்
– S.M.S.மதார்