ரமளான் மாதத்தை வீணாக்கிவிட வேண்டாம்
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்” (அல்-குர்ஆன் 2:183)
“உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்” (அல்-குர்ஆன் 2:185)
நாம் வாழ்க்கையில் நம்முடைய நேரங்களை வீணாக கழித்துக்கொண்டுதான் இருக்கிறோம்! பொழுதை கழிப்பதாக சொல்லிக்கொண்டு நாம் ஏதாவது ஒன்றை வீணாக செய்துகொண்டுதான் வருகிறோம்! பொழுது எப்படியும் அது கழிந்துவிடும். நாம் சும்மா இருந்தாலும் அல்லது ஏதாவது செய்துகொண்டு இருந்தாலும் நேரம் கழிய தான் செய்யும்! ஓகே நல்லது!
இன்ஷாஅல்லாஹ் ரமலான் நம்மை நோக்கி வந்துகொண்டுயிருக்கிறது. இன்று நம்மில் நிறைய பேர்கள் கொரோனாவை பற்றி தான் பேசுகிறார்கள், ரமலான் பற்றி இன்னும் யாரும் பதிவு போடவில்லை. சமூகவலைத்தளங்களில் நாம் பெரும்பாலும் நேரத்தை கழிக்கின்றோம்.
சிலர் டிவியில் நேரத்தை கழிக்கிறார்கள்! இப்பொழுது உலகமே வீட்டில் முடங்கி இருக்கின்றோம்! நம் கையில் இந்த செல்போன் தான் இருக்கிறது, அதை வைத்து கொண்டு நாம் நேரத்தை கடத்திக்கொண்டு இருக்கிறோம்! வதந்தி, பொய், பீதி, அச்சம் இப்படி நம் வாழ்க்கை போய்க்கொண்டு இருக்கிறது.
இந்த வருடம் ரமலான் எப்படி நமக்கு அமையப்போகிறது என்பது ஒரு விதமான அச்சம் இருக்கிறது. இந்த வருட ரமலான் பள்ளியிலேயா அல்லது வீட்டிலேயா ??? எதுவாக இருந்தாலும் இன்ஷாஅல்லாஹ் நாம் ரமலானை வரவேற்க தயாராக இருக்கவேண்டும்!
நாம் வருடத்தில் பதினோரு மாதம் இந்த சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் உலா வந்துகொண்டுதான் இருக்கிறோம்! நேரத்தையும், பொழுதையும் கழித்துக்கொண்டுதான் வருகிறோம்! நாம் இந்த ஒரு மாதம் அல்லாஹ்வுக்காக அந்த சோசியல் மீடியா விட்டு நீங்கி இருப்போம்! நாம் ரமலான் முழுதும் அந்த பக்கமே போகக்கூடாது என்று ஒரு சுய கட்டுப்பாடுடன் இருப்போம்! இன்ஷாஅல்லாஹ் நாம் முயற்சி செய்வோம்!
ரமலான் மாதத்தின் சிறப்பை எல்லோரும் அறிவோம்! ஆனால் அறிந்தும், நாம் அசட்டையாக தான் ஒவ்வொரு ரமளானுக்கு இருக்கிறோம்! சோசியல் மீடியாவில் பதிவை போட்டு கொண்டு, தேவையில்லாமல் விவாதம் செய்துகொண்டு, அந்த பொது தளத்தில் நல்லதும் வரும், கெட்டதும் வரும்!
சில சமயம் ஆபாச காட்சிகள் பார்க்க நேரிடும்! இதெல்லாம் நிச்சயமாக நாம் தவிர்க்க வேண்டும்! இன்று சோசியல் மீடியாவில் பெரும்பாலும் வதந்திகளும், பொய்களும், அவதூறுகளும், ஆபாசங்களும், தீய வார்த்தைகளும், ஒவ்வொருவரையும் தவறாக விமர்சனம் செய்வதும் இப்படித்தான் போய்க்கொண்டு இருக்கிறது! இதனால் நமக்கு நிறைய பாதிப்புகள் வரலாம்… நம்முடைய நோன்பு பூரணம் இல்லாமல் ஆகலாம்..
ஒருமாதம் அல்லாஹ்வுக்காக நாம் இன்ஷாஅல்லாஹ் ஒரு சுய கட்டுப்பாடுடன் இருக்க அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவியும், அருளும் புரிவானாக!!!
இன்ஷாஅல்லாஹ் இனி வரும் நாட்களில் (ரமலான் ஆரம்பிக்கும் வரை) ரமலானை பற்றி அதன் சிறப்பை பற்றி கட்டுரைகள் பதிவு செய்யப்படும்! பிறகு இன்ஷாஅல்லாஹ் ரமலான் தொடங்கி விட்டால், இனி எந்த ஒரு புதிய பதிவுகளும் போடப்போவதில்லை! இன்ஷாஅல்லாஹ் ரமளானுக்கு பிறகு தான் மீண்டும் பதிவுகள் போடப்படும்!( இன்ஷாஅல்லாஹ் ஒருமாதம் லீவு ரமலான் முன்னிட்டு)
சத்திய பாதை இஸ்லாம்