கரன்ஸி மூலம் பரவும் நோய்!
இந்திய கரன்சி நோட்டுகள் மூலம் பரவும்
தொற்று நோய்களின் எண்ணிக்கை 78
இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் மூலம் 78 வகையான நோய்கள் தாக்குவதாக ஆய்வின் மூலம் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரூபாய் நோட்டுகளை மணி பர்சில் நிரப்பி வைத்து கொள்வதை பெரும்பாலானோர் விரும்புவது வழக்கம்.
முற்காலத்தில் பெண்கள் இடுப்பு பகுதியில் புடவையில் சுற்றி பணத்தை பாதுகாத்து வந்தனர். இதனால், பெரும்பாலான பெண்களுக்கு இடுப்பு பகுதியில் தோல் பாதிக்கப்பட்டு வெள்ளைத் தழும்புகள் ஏற்பட்டது.
தற்போது பெண்கள் பெரும்பாலனோர் நேரடியாக ஜாக்கெட்டுக்குள் பணத்தை வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் பெரும்பாலான பெண்களுக்கு மார்ப்பக புற்று நோய், இதய நோய் போன்ற பாதிப்புகள் வருவதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
இதே போல், சட்டை மேல் பாக்கெட்டில் ரூபாய் நோட்டுகளை வைப்பதால் பெரும் பாலான ஆண்களுக்கு தோல் நோய் தாக்குவதாகவும், ரூபாய் நோட்டுகளில் உள்ள கிருமிகளை சுவாசிப்பதால் மாரடைப்பு போன்ற பல்வேறு வகையான நோய்கள் தாக்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, ஆண்களோ, பெண்களோ யாராக இருந்தாலும், ரூபாய் நோட்டுகளை மணிபர்ஸ் போன்றவற்றில் பாதுகாப்பது சிறந்தது என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கிறார்கள்.
ரூபாய் நோட்டுகளால் ஏற்படும் பாதிப்பு குறித்த தகவல்களை கண்டறிய பொது மக்கள் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளை சேகரிக்கப்பட்டன. இந்த நோட்டுகளை டெல்லியில் இயங்கி வ ரும் இன்ஸ்டியூட் ஆப் ஜெய நாமிக்ஸ் அண்ட் இன்ட்டி கிரேட்டிவ் பயாலஜி ஆய்வுக் கூட விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் ரூபாய் நோட்டுகளில் பங்கர்ஸ்கள் அதிக அளவில் இருப்பதாகவும், இதனால், எலும்பு உருக்கி நோய் எனப்படும் டி.பி. மற்றும் அல்சர் போன்ற நோய்கள் தாக்கும் என்றும், மேலும், உடைகள் மற்றும் சோப்புகள், கம்ப்யூட்டர் ஆகியவற்றின் மூலம் பல்வேறு வகையான நோய்கள் மக்களை தாக்குவதாக தெரிவிக்கப்பட்டது.
அதே மையம் நடத்தியுள்ள ஆய்வில், மக்கள் தினமும் பயன்படுத்தும் 10, 20 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் மக்களிடம் புழக்கத்தில் இருப்பதன் மூலம் 78 வகையான தொற்று நோய்கள் பரவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகள் ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் கைமாறுவதால், நோய்கள் பரவுவதாகவும் ஆய்வில் தெரியவருகிறது.
கரன்ஸி மூலம் பரவும் நோய்!
1. நம் சட்டைப்பையில் புழங்கும் ஒற்றை ரூபாய் நாணயம், எந்த பிணற்றின் நெற்றியிலிருந்து எடுக்கப்பட்டது என்று யாருக்கு தெரியும்?
அப்படியாக பரவும் அத்தகைய நாணயங்கள் இன்று தவிர்க்க முடியாதவையாகி விட்டன.
2. அடுத்தபடியாக மருத்தவமனையில் புழங்கக்கூடிய ரூபாய் நோட்டுக்கள் , நாணயங்கள்.
“காய்ச்சல் சளி தொடங்கி, சொரியாஸிஸ், மூலம், H1N1, TB, இதர பால்வினை நோய்கள் ஆகிய அத்தனை நோய்களையும் தாங்கிவரும் நோயாளிகள் சிகிச்சைக்காக தரும் ரூபாய் நோட்டுக்கள் மருத்துவமனை மூலம் பரவுகின்றன.
இதனாலேயே சில மருத்துவர்கள் இன்று அந்தந்த சிகிச்சைக்கான கட்டணத்தை தாங்கள் வாங்காமல் அவற்றை கம்பவுன்டர்களிடம் தர சொல்கிறார்கள்.
பின்னர் அவற்றை வங்கி சேமிப்புக்கணக்கில் கம்பவுண்டர்களையே deposit செய்யவும் சொல்கிறார்கள்.
3. சாக்கடை மற்றும் கழிவு நீர் சுத்தம் செய்யும் பணியாளர்கள் மூலம் பரவும் ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள்.
அதிக அளவில் பாக்டிரியாக்கள் வாழக்கூடிய அந்த நோட்டுக்கள் இன்று நம் சட்டைப்பையில்!
இயற்கையாகவே இந்த துப்புரவு பணியாளர்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவர்கள்.
ஆனால் அவர்கள் மூலம் பரவும் நோட்டுக்களை பயன்படுத்தும் நாம்……….?
4. இறைச்சி கடையில் பரிமாறப்படும் பணம். இறைச்சியின் ரத்தத்தில் வாழும் பாக்டிரிய்க்கள் மற்றும் தொற்று கிருமிகள் அப்படியே அந்த கடைக்காரர் மூலம் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்களில் பரவி இன்று நம் வீட்டு பீரோக்களில் பத்திரப்படுத்த படுகின்றன.
5. பேருந்து நிலைய கட்டணக் கழிப்பிடத்தில் வாங்கப்படும் அத்தனை நாணயங்களும் நேரடியாக பேருந்து நடத்துனரிடம் (bus conductors) தினந்தோறும் நேரடியாக தரப்படுகின்றன.
அவர் தரும் நாணயங்கள் , நம் வீட்டில் புழங்கவில்லை என்று உறுதி அளிக்க எவராலும் முடியுமா?
6. பாக்டிரியாக்களை பையில் வைத்து கொண்டு திரிகிறோம். பரவும் அபாயத்தை மறக்கிறோம்.
மற்ற வளர்ந்த நாடுகளில் கரன்சியின் வாழ்நாள் 5 வருடம் தான்.
அதற்கு பிறகு அவற்றை எரித்து விடுவார்கள்.
ஆனால் நாம்…………………?
இந்த பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே தான் போகும்.
இதிலிருந்து தப்புவதற்கு நடுத்தர வர்க்கத்தினரால் இயலாத காரியம்.
ஆனால் நாம் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் செயல்படலாம்.
நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களை வாயில் வைப்பதை தவிர்க்கவும்.
எச்சில் தொட்டு பணத்தை எண்ணும் பழக்கத்தை அறவே விடவும்.
அன்றாடம் கைகளை நன்கு dettol மூலம் கழுவவும்
கரன்சி மூலம் பரவும் பாக்டிரியாக்களை முற்றிலும் ஒழிக்க முயற்சி செய்வோம். பாடுபடுவோம்.
சற்றே சிந்திப்போம் நம் சந்ததியினரை காப்போம்……..!
– பொதுநலன் விரும்பி