காலம்
ரஹ்மத் ராஜகுமாரன்
உலகத்தைப் பற்றி எதுவும் புரிந்து கொள்ளாமலே நாம் அன்றாடம் வாழ்க்கை நடத்தி வருகிறோம்.
உயிர்வாழ்வை இயலச் செய்கிற கதிரொளியை உற்பத்தி செய்யும் பொறிமுறை பற்றியோ,
விண்ணில் சுழற்றி வீசப்படாமல் பூவுலகோடு நம்மை ஒட்ட வைத்திருக்கும் புவிஈர்ப்பு பற்றியோ,
எவற்றால் நாம் ஆகியிருக்கிறோமோ,
எவற்றின் நிலைத் தன்மையை நாம் ஆதாரமாகக் கொண்டுள்ளோமோ அந்த அணுக்கள் பற்றியோ நாம் அதிகமாய்ச் சிந்தித்துப் பார்ப்பதில்லை.
இயற்கை ஏன் இப்படி இருக்கிறது? அண்டம் எங்கிருந்து வந்தது? அல்லது அது எப்போதும் இஙகுதான் இருந்ததா?
காலச் சக்கரம் என்றாவது ஒரு நாள் பின்னோக்கிச் சுழன்று காரியங்கள் காரணங்களை முந்திக் கொள்ளுமா? அல்லது மாந்தர்கள் அறிந்து கொள்ளக் கூடியதற்கு இறுதி எல்லைகள் உண்டா?
இப்படியெல்லாம் கேள்வி கேட்டு சிந்திப்பதற்கு நம்மில் பலருக்கு நேரமில்லை.
காலம் அழிப்பது தவிர வேறு என்ன செய்யும்?
وَقَالُوْا مَا هِىَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوْتُ وَنَحْيَا وَمَا يُهْلِكُنَاۤ اِلَّا الدَّهْرُ
وَمَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍ اِنْ هُمْ اِلَّا يَظُنُّوْنَ
“இவ்வுலகத்தில் நாம் வாழும் வாழ்க்கையைத் தவிர வேறொரு வாழ்க்கை இல்லை” என்றும், “(இதில்தான்) நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்; பின்னர் இறந்து விடுகின்றோம். காலத்தைத் தவிர (வேறு யாதொன்றும்) நம்மை அழிப்பதில்லை” என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதைப்பற்றி இவர்களுக்கு யாதொரு ஞானமும் இல்லை. இவர்கள் வீண் சந்தேகத்தில் ஆழ்ந்திருப் போரைத் தவிர வேறில்லை. (குர்ஆன் : 45:24)
மனிதன் பிறப்பதே உலக இன்பங்களைத் துய்ப்பதற்குத்தான் என்று ஒரு கூட்டத்தினர் எண்ணி இருந்து கொண்டே இருக்கிறார்கள் . பாவ மூட்டையை மூட்டை மூட்டையாக அள்ளிக் கட்டிக் கொள்கிறார்கள்.
இன்று கூட நம்மிடையே “மறுமையும் இல்லை, மீண்டும் உயிர்ப்பும் இல்லை அட, மரணத்திற்கு பின் ஏதும் இல்லை” என்று நினைப்போரும் நம்மிடம் உண்டு .இந்த நினைப்புதான் துணிந்து பாவம் செய்ய தூண்டுகிறது .
“இறைவன் இப்படிச் செய்தான்” என்று அறிவுறுத்தப்பட்டால், “அட, அது இயற்கையாகவே நிகழ்ந்தப்பா விடு கவலை” என்பர்
“சரி, அந்த இயற்கை என்றால் என்ன? அது எங்கிருந்து வந்தது? ஏன் வந்தது? எப்படி வந்தது?” என்று கேட்டால் அவர்களால் பதில் அளிக்க முடியவில்லை.
கடல் பிளந்து பாதை பிறந்ததும், சந்திரன் பிளந்து பின்பு இணைந்ததும், நெருப்பு பற்றி பின்பு குளிர்ந்ததும் இயற்கைதானே என விட்டு விட முடியுமா என்ன?
“இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறில்லை” என்று வாழ்ந்து வந்த மக்கத்து இணைவைப்பாளர்கள், “காலத்தைத் தவிர (வேறெதுவும்) நம்மை அழிப்பதில்லை” என்று அவர்கள் கூறினார்கள் .
காலம் ஏன் நம்மை அழிக்க வேண்டும்?
பிரபஞ்சங்களின் படைப்பு, மனிதனின் பிறப்பு, அவன் வாழ்நாள், அவன் மறைவு, பூ பூக்குவதும் காய்கனியாகி உதிர்ந்து போவதும், சந்திர, சூரியன் , விண்மீன்கள், விலங்கினங்கள், ஊர்வன, பறப்பன – ஆகியவை பிறந்து மறைந்ததெல்லாம் பற்றி இவர்களுக்குத் தெரிந்தவை, தெரியப்படுத்தபட்டவை யெல்லாம் மேலெழுந்தவையான சில சொற்ப செய்திகள்தாம்.
ஆனால் இந்த மேலெழுந்த நோட்டக்காரர்களின் கண்களில் படாமல் மறைந்து கிடப்பவை கோடான கோடி உண்மைகள் .
காலம் உள்பட பிரபஞ்சங்கள் அனைத்தையும் படைத்து, கண்காணித்து, இயங்க வைக்கும் இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்தால், இந்த கோடான கோடியில் நமக்குத் தேவையான உண்மைகள் பற்றி காலம் நமக்கு தெளிவை பிறக்க வைக்கும்.
ஓர் இரவுப் பொழுதான காலம் (லைலத்துல் கதிர் இரவு) 83 வருடங்களுக்கும் மேலான பாவத்தை மன்னிக்க செய்யும்.
அரபா வெளி் லுஹர் பொழுதிலிருந்து மக்ரிப் வரையுள்ள ஒரு பகல் பொழுது காலம் அன்று பிறந்த பாலகனாய் அது தூய்மையாக்கி விடும்.
காலம் தூய்மையானதும் துல்லியமானதும் கூட! காலத்தை மறந்து கோடி கோடியாய் அநியாயமாய் இன்பம் துயிக்க மனம் செய்யும். அதுவரை காலமான மாயம் மாயமாகத்தான் இருக்கும் .
– ரஹ்மத் ராஜகுமாரன்
https://www.facebook.com/rahmath.rajakumaran.9/posts/2573056896286983?__tn__=K-R