பள்ளிவாசல்களை குறிவைக்கும் கொரானா வைரஸ்!
இறையில்லங்களை தொழுகையாளிகளைக் கொண்டு அலங்கரிப்போம்
மெளலானா S.ஷம்சுத்தீன் காஸிமி ஹழ்ரத்
[ ஷைத்தானிய சக்திகளின் பேச்சைக்கேட்டு இறையில்லத்தை இழுத்து மூட நினைத்தால்.. எச்சரிக்கை.. எச்சரிக்கை.. கொரானா வைரஸால் தாக்கப்படும் முதல் நபர் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும்தான்.. மறந்து விடாதீர்கள்.]
என்னருமை சமுதாயமே எச்சரிக்கை… பள்ளிவாசல்களை குறிவைக்கும் கொரானா வைரஸ்!
பலியாகி விட வேண்டாம்.
அல்லாஹ்வின் கோபமும் சாபமும் ஏற்படும் போது அதை விட்டும் தப்பிக்க பாதுகாப்பான இடம் பள்ளிவாசல்கள்.
ஆனால் பள்ளிவாசல்களை மூடுவதற்கு உத்தரவிடுவதும் ஒத்துழைப்பதும் ஷைத்தானிய சக்திகள்.
அரசு உத்தரவுக்கு கட்டுப்பட்டு தானே ஆகவேண்டும்… என்றால் பிறகு NPR விஷயத்திலும் அரசுக்கு ஒத்துழைக்கலாமே… அங்கே மட்டும் எதிர்த்து போராடுவதேன்?
நம்முடைய வாழ்வாதார விஷயம் என்றால் ஒரு நியாயம்… அல்லாஹ் வின் விஷயம் என்றால் வேறொரு நியாயமா?
நாடு முழுவதும் அனைத்து வழிபாட்டு தலங்களையும் ஒரே மாதிரியாக மூடிவிடவேண்டும் என்பதுதானே உத்தரவு… என்றால்,
கோயில்களும் பள்ளிவாசல்களும் சமமாகி விடுமா?
இந்த நம்பிக்கை கூட மூமின்களுக்கு இல்லாமல் போனதுதான் வேதனை.
கோயில்களும் தேவாலயங்களும் அல்லாஹ்வுடைய அருள் இறங்கும் இடம் அல்ல.
ஆனால்
“பள்ளிவாசல்கள் தான் அல்லாஹ்வுடைய வேதனையையும் முஸீபத்துகளையும் தடுத்து அல்லாஹ்வின் அருள் இறங்கும் இடம்” என்பது பெருமானாரின் வாக்குறுதி.
“அல்லாஹ் ஒரு ஊரில் தன் அதாபுகளை இறக்குவதாக முடிவு செய்து விட்டால் பள்ளிவாசல்களை ஆபாத் ஆக்கும் மக்களை பார்த்து தன் முடிவை மாற்றிக்கொள்கிறான்” என்பது நபிகளின் செய்தி.
நமக்கு அந்த பெருமகனார் உடைய வாக்குறுதிகள் மீது நம்பிக்கை ஏற்படாததன் விளைவுதான் இத்தகைய நாத்திக சிந்தனைகள்…
அதனால்தான் கோயில்களையும் தேவாலயங்களையும் மூடும்போது பள்ளிவாசலையும் “ஒரேமாதிரியாக” மூடி விட வேண்டியதுதானே என்ற மனப்பான்மை ஏற்படுகிறது.
போராட்டத்துக்காக பொங்கியெழுந்த சமுதாயமே… இப்போதும் பொங்கியெழுங்கள் மஸ்ஜிதுகளை நோக்கி……
ஏனெனில் இஸ்லாமிய உம்மத்தை இறையில்லங்களை விட்டு பிரிக்க நடக்கும் சூழ்ச்சியின் வெள்ளோட்டம் இது.
அருமை மக்களே ஆர்த்தெழுங்கள் மஸ்ஜித்களை நோக்கி…
பள்ளிவாசல் நிர்வாகிகளே…. அல்லாஹ்வின் இறையில்லத்தை ஆபாத் ஆக்கத்தான் நீங்கள் நிர்வாகிகள். இழுத்து மூட அல்ல.
ஷைத்தானிய சக்திகளின் பேச்சைக்கேட்டு இறையில்லத்தை இழுத்து மூட நினைத்தால்…. எச்சரிக்கை… எச்சரிக்கை… கொரானா வைரஸால் தாக்கப்படும் முதல் நபர் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும்தான்….. மறந்து விடாதீர்கள்.
அல்லாஹ் பொய்யான மூட நம்பிக்கைகளை விட்டு பாதுகாத்து உண்மையான இறைநம்பிக்கைகளை நமது உள்ளங்களிலே பதிய வைப்பானாக…
அல்லாஹ் வின் இல்லத்தில் அவனை துதிப்பதை விட்டும் தடுக்கக் கூடியவர்களை காட்டிலும் மிகப்பெரிய அநியாயக்காரன் யார்? அல்குர்ஆன் 2:187.
– இறையூழியன் ஷம்சுதீன் காஸிமி.