Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

கொரோனோ வைரஸ்களும் கொடூர மரணங்களும்! காரணம் என்ன?

Posted on March 20, 2020 by admin

கொரோனோ வைரஸ்களும் கொடூர மரணங்களும்! காரணம் என்ன?

      எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7       

இந்த உலகில் வாழும் அனைவரும் ஆரோக்கியத்துடன் ஆனந்தமுடனும் வாழ்வதற்கு, மனிதர்களைப் படைத்த இறைவன் ஓர் அழகிய வாழ்க்கைத் திட்டத்தை அளித்துள்ளான். அதன் பெயர்தான் இஸ்லாம்.

இந்த வாழ்க்கை நெறியை கைக்கொள்பவர்களுக்கு இம்மையிலும் வெற்றி, மறுமையிலும் வெற்றி!

இந்த உண்மையை நிராகரிப்பவர்களுக்கும் நடைமுறைப்படுத்த மறுப்பவர்களுக்கும், இரு உலகிலும் துன்பமே தொடர் கதையாகும் என்பதில் அறிவியல் ரீதியாக ஐயமே இல்லை.

படைத்த இறைவனுக்குத்தான் தெரியும் தன் படைப்பினங்களுக்கு எந்தெந்த உணவுகள் உண்ண வேண்டுமென்ற உண்மைகள்!

ஆடு மாடு போன்ற கால்நடைகளுக்கு புல்,பூண்டு, பசுமைத் தாவரங்களை உண்ணத் தகுந்தவாறு உடலமைப்பை அமைத்தான். கொடிய காட்டுமிருகங்கள் வேட்டையாடி மாமிசத்தை உண்பதற்கு தகுந்தவாறு அதன் உடலமைப்பைப் படைத்தான். இவைகளிலிருந்து மேம்பட்ட ஆறறிவு கொடுக்கப்பட்ட மனிதனுக்கு தாவரங்களையும், மாமிசத்தைதையும் ஒருங்கே உண்ணும் ஒப்பற்ற உடலமைப்பை அமைத்தான்.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் நல்ல தூய்மையான உணவுகளை உண்ணவே இஸ்லாம் ஆர்வமூட்டுகிறது.

மனித உடலுக்கு கேடு விளைவிக்காத ஹலாலான உணவுகள் ஏராளமாக உள்ளன. ஆயினும் மனிதனின் ஷைத்தானிய மனமானது போதை உணவுகளையும் தடுத்த ஹராமானதையுமே உண்ணத் தூண்டுகிறது. ”மனிதன் நிரப்பும் பாத்திரங்களிலேயே மிக மோசமான பாத்திரம் அவனது வயிறு.” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது கவனத்திற்குரியது.

மனிதன் நிரப்புவதிலேயே அவனது வயிற்றை விட மோசமான பாத்திரம் எதுவுமே இல்லை. ஆதமுடைய மகன் அவனது முதுகை நிமிர்த்துவதற்கு தேவையான உணவை உண்டால் போதும். அது முடியவில்லை என்றால் மூன்றில் ஒரு பாகம் உணவும், மூன்றில் ஒரு பாகம் நீருக்கும், மூன்றில் ஒரு பாகம் மூச்சு விடுவதற்கும் இருக்கட்டும். என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். – திர்மிதீ.2380.

எல்லா வகை உணவுகளையும் தின்று செரித்து ஜீரணிக்கும் ஆற்றலை மனிதன் பெற்றிருந்த போதிலும் அதிலும் சில மாமிச உணவுகளை அல்லாஹ்.. மனிதனுக்கு தடை செய்து விட்டான். அதன் உண்மைக் காரணம் அவன் ஒருவனுக்குத்தான் தெரியும். அல்லாஹ் தடுத்த உணவுகளை மனிதன் தடையை மீறி புசிக்கும்போது தான் புதியபுதிய வியாதிகள் புற்றீசல்களாக புறப்படுகின்றன. அல்லாஹ் மனிதர்களுக்கு அணுவளவும் அநீதி இழைப்பதில்லை.ஆயினும் மனிதன் தனக்குத்தானே தன் கரங்களைக்கொண்டு தீங்கிழைத்து கொள்கிறான். – (அல்குர்ஆன். 3:162; 42:30.)

ஆரம்பத்தில் யூதர்களுக்கு மன்னு- ஸல்வா என்னும் பரிசுத்தமான நல்ல உணவை வானிலிருந்து இறக்கி வைத்து இவைகளைப் புசியுங்கள்! என்ற கட்டளையை மறுத்தவர்கள், தங்களுக்கு தீங்கிழைக்கும் உணவையே வேண்டி தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டார்கள் என்ற உண்மையை அல்குர்ஆன்.2:57 கூறுகிறது. மன்னு – ஸல்வா என்னும் தூய உணவை. அன்றே உண்ணுங்கள் நாளைக்கு என்று சேமித்துவைக்காதீர்கள் என்ற அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்து மறுநாளுக்கும் சேமித்து வைத்து தங்களுக்கு தாங்களே தீங்கு செய்து கொண்டார்கள். (அல்குர்ஆன்.7:160)

யூதர்கள் வழிமுறைகளைக் கடைப்பிடித்தே இன்றைய முஸ்லிம்களும், தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டு வருகிறார்கள். அல்லாஹ் ஹலாலாக்கிய ஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சிகளை அன்றே அறுத்து அன்றே புசிக்காமல் அவற்றை பிரீஸர் என்னும் குளிர் பதன சவப்பெட்டியில் வைத்து வைரஸ் வியாதிகளை வரவழைக்கிறார்கள்.

தற்போது புதிதாக உருவாகும் வைரஸ்கள் குறைந்த வெப்ப நிலையிலும் செழித்து வளரும் ஆற்றல் பெற்றவையாக உள்ளன. மின்தடை போன்ற வெப்ப நிலை குறைவினால் (மைனஸ் டிகிரி -18 C) பிரிட்ஜ்ஜில் உள்ள இறைச்சியானது வைரஸ் தாக்கத்திற்குள்ளாகிறது. வியாதிகளை உருவாக்கும் இன்குபேட்டர்களாக இன்றைய குளிர்சாதன பெட்டிகள் வீட்டிற்கு வீடு உள்ளன.

“தானாக செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெரித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப்பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) வன விலங்குகள் கடித்துச் செத்ததையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத்தவிர; (உண்ணலாம்)”. (அல்குர்ஆன் 5:3)

மனிதர்கள் எந்த மாமிசங்களை உண்ணலாம். எதை உண்ணாக்கூடாது. உண்ணக்கூடிய விலங்குகளையும் எந்த முறைப்படி அறுத்து உண்பது என்பதையும் அல்லாஹ் அழகிய முறையில் தெளிவு படுத்தி விட்டான். இந்த வரம்புகளை மனிதன் மீறும் போதே அனைத்து வியாதிகளும்,துன்பங்களும் தொடர்கதையாக அவனைத் தாக்குகின்றன. தானாக செத்தவற்றையும் ரத்தங்களையும் உண்பது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது.

இதன் அறிவியல் காரணம் அனைவருமே அறிந்ததுதான். தானாக செத்த பிராணியின் இரத்தம் அதன் மாமிசத்திலேயே உறைந்து விடும்.அனைத்து வைரஸ்கள், மற்றும் பாக்டீரியாக்கள் பயணம் செய்யும் ஊடகமாகவே இரத்த ஓட்டம் உள்ளது. எனவே இரத்தத்தை உண்பதும் தானாக செத்து, ரத்தம் உறைந்த இறைச்சியை உண்பது என்பது வியாதியை உண்பதற்குச் சமம். ஆகவே இதனை இஸ்லாம் தடை செய்கிறது.

அடுத்து பன்றியின் மாமிசம் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் இறைச்சியில் ஏராளமான தீய கிருமிகள் நிறைந்துள்ளன. வருடத்தில் சுமார் 200 மில்லியன் மக்கள் ஹெப்பாட்டிஸ். இ (Hepatitis E.) என்னும் நோயில் இறப்பதற்கு பன்றியின் இறைச்சி காரணமாகிறது. அடுத்து Multiple Sclerosis (MS) எனும் மத்திய நரம்பு மண்டல நோய்க்கும் பன்றியின் இறைச்சியே பிரதான காரணமாக இருக்கிறது..

அடுத்து Liver Cancer and Cirrhosis என்னும் ஈரல் புற்று நோய் வருவதற்கும் பன்றியின் இறைச்சி காரணமாக இருக்கிறது. சரியாக வேக வைக்கப்படாத பன்றி இறைச்சியில் Yersinia bacteria எற்சீனியா என்னும் பாக்டீரியாக்கள் உருவாகி ஏராளமான வியாதிகளை தருகின்றன. இவையெல்லாம் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஆய்வு முடிவுகள். மேலும் பன்றியின் மேல் தோலானது வியர்வையை வெளியிடக்கூடிய சுரப்பி இன்மையின் காரணமாக, நச்சுக் கிருமிகள் உடலிலேயே தங்கிப் பெருகி, ஒட்டுமொத்த இறைச்சியும் வியாதிகளின் விளைநிலமாக மாற்றப்படுகிறது.

இயற்கைக்கு மாறான உணவு பழக்கம்!

ஆடு,மாடு, கால்நடைகளுக்கு புற் பூண்டு எனும் பசுமை தாவரங்களை உண்டு செரிக்கும் விதத்தில் அதன் உணவு பழக்கத்தையும், உடலமைப்பையும் அல்லாஹ் அமைத்து வைத்துள்ளான். ஆனால் 1980 ஆம் ஆண்டுவாக்கில் இங்கிலாந்து நாட்டில் நடந்ததென்ன? பேராசை கொண்ட மனிதர்கள் மாடுகளை கொழுக்க வைப்பதற்காக.. இறந்த மாடுகளின் உறுப்புக்களையும், எலும்புகளையும் காயவைத்து பவுடராக்கி மாட்டிற்கு உணவாகக் கொடுத்தனர்.(Cannibalistic non-vegetarian feed of crushed meats and bones)இந்த இறைச்சி பவுடரை உண்ட மாடுகளின் மூளையில் விசித்திர வியாதி உருவானது. அவ்விறைச்சியை உண்ட மனிதர்களையும் அந்நோய் தாக்கியது.. அதுதான் “MAD COW DESEAS” இந்நோயால் ஏராளமான மக்கள் மடிந்தனர். அல்லாஹ்வின் இயற்கை அமைப்பை மனிதன் மாற்றினால்ஸ.அதன் இறுதி முடிவு அவனது அழிவே!

புதிய நோய்களின் பிறப்பிடம் – சீனா!

ஏராளமான புதிய நோய்களின் பிறப்பிடமாக இன்று சீனா மாறிவிட்டதன் அடிப்படைக் காரணம் அவர்களின் கட்டுப்பாடட்ட உணவுப் பழக்கமே! ஊர்வன, நடப்பன, பறப்பன என்ற வேறுபாடின்றி அனைத்தையும் உண்ணக்கூடிவர்களாக இருக்கிறார்கள். 1956 ஆம் ஆண்டு புதிதாக பரவிய ஆசியன் ப்ளு எனும் காய்ச்சலினால் சுமார் ஒன்று முதல் நான்கு மில்லியன் மக்களுக்கு மேல் பலியானார்கள்.

கடந்த 2002 ஆம் ஆண்டு குவாங்டாங் மாகாணத்தின் இறைச்சி விற்பனைக்கூடத்திலிருந்துதான் கொடிய “சார்ஸ்”(SARS – Severe Acute Respiratory Syndromes) எனும் மூச்சு திணறல் நோய் புறப்பட்டது. அங்கு இறைச்சி விற்பனைக்கு வைத்திருந்த புனுகுப் பூனை (Civet Cats) மற்றும் அதன் இறைச்சியில் இருந்துதான் கொடிய சார்ஸ் நோய் புறப்பட்டது. இந்த கொடிய நோயானது 37 நாடுகளுக்குப்பரவி 8098 மக்களைத் தாக்கி சுமார் 774 மனிதர்களைக் பலி வாங்கியது.

2013 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து புறப்பட்ட H7N9 என்னும் வைரஸ் பறவை காய்ச்சலால் சுமார் 1223 மக்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது புதிதாக பரவி வரும் கொரோனோ என்னும் கொடிய நோயால் உலகம்முழுவதும் 53 நாடுகளிலுள்ள சுமார் 83,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உயிரிழப்பு 3118 ஐ தாண்டிவிட்டது. சீனாவின் யுஹான் மாநிலத்தில் உள்ள கடலுணவு இறைச்சிக்கூடத்திலிருந்தே கொரோனோ வைரஸ் புறப்பட்டது. அந்த பொது இறைச்சி மார்கெட்டில் எல்லாவிதமான  நாய், நரி, பூனை, குரங்கு, பாம்பு, பல்லி, வௌவால் போன்ற மிருகங்களின் இறைச்சியும் உயிருடன் கிடைக்கும்.

வன மிருகங்களின் இரத்தக்கலப்பு, பொது சுகாதாரமின்மை,மக்கள் நெருக்கம் போன்ற காரணங்களால் புதிய வைரஸ்கள் புறப்படும் தளமாக இன்று சீனா மாறிவிட்டது. மலிவு விலையில் ஏராளாமான பொருள்களை உலகெங்கும் ஏற்றுமதி செய்து வந்த சீனா தற்போது புதுப் புது வியாதிகள் உருவாகும் நாடாக மாறி வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. உலகில் அதிக மக்கள் தொகை நிரம்பிய நாட்டில் உருவாகும் நோய்கள் .விரைவில் உலகமெங்கும் பரவும் அபாயம் உள்ளது.

இன்று மக்களை அச்சுறுத்தும், சார்ஸ், பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், இன்புளுன்ஸா, கொரோனோ வைரஸ் போன்ற அனைத்தும் மிருகங்கள்,அல்லது பறவைகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. மனிதர்களை தாக்கிய வைரஸானது அம்மனிதர்களின் மூச்சுக் காற்று, தும்மல்.எச்சில், தொடுதல் மூலம் பிற மனிதர்களுக்குப் பரவுகிறது. இன்று கொரோனோ பாதிக்கப்பட்ட நாடுகளில் மக்கள் அனைவரும் வாய்,மூக்கை மூடி மாஸ்க் அணிந்தே நடமாடுகின்றனர். தற்போது இந்த மாஸ்களுக்கு பெறும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஒரு மனிதரிடமிருந்து பிற மனிதர்களுக்கு நோய் பரவுவதற்குக் காரணமே மூச்சுக் காற்றில் உள்ள வைரஸ் கிருமிகளே!

அறிவில் மார்க்கமான இஸ்லாம் இதை அன்றே தடை செய்து விட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தும்மினால், தம் கையைக் கொண்டு அல்லது தன் துணியை வாயில் வைத்துக் கொள்வார்கள். இதன் மூலம் தன் (தும்மல்) சப்தத்தை (மறைத்துக்) கொள்வார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: அபூ தாவூத், திர்மீதி)

தும்மலின்போது காற்றில் வெளியேறும் வைரஸ் கிருமி நீர்த்திவலைகள், மணிக்கு 100 மைல் வேகத்தில் வெளியேறும். இதன் மூலமாக எதிரில் இருக்கும் நபர்களுக்கு வைரஸ் நோய் பரவ வாய்ப்புள்ளது. ஆகவே தும்மலின் வேகத்தை குறைப்பதற்கு கையை அல்லது துண்டை வைத்து மறைப்பதை இஸ்லாம் சுன்னத்தாக ஆக்கிவைத்துள்ளது. இது போன்று தான் கொட்டாவி விடுதலையும் இஸ்லாம் மறைக்கக் சொல்கிறது.

உங்கலில் ஒருவர் கொட்டாவி விட்டால், தன் கையால் வாயை மூடட்டும்.நிச்சயமாக,ஷைத்தான் அதன் வழியாக நுழைந்து விடுவான்,என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லீம்0

இஸ்லாம் தூய்மைக்கு முதலிடம் கொடுக்கிறது

“திண்ணமாக அல்லாஹ், தீமையிலிருந்து விலகி இருப்பவர்களையும், தூய்மையை மேற்கொள்பவர்களையும் நேசிக்கின்றான்.” (அல்குர்ஆன் 2: 222)

தூய்மை என்பது ஈமானில் பாதி என்று இஸ்லாம் கூறுகிறது. ஐவேளை தொழுகைக்கு தூய்மை கட்டாயம்.காலையில் தூங்கி எழுந்தவுடன் முகம்,வாய்,மூக்கை சுத்தம் செய்ய மார்க்கம் கட்டளையிடுகிறது.

“உங்களில் ஒருவர் உறங்கி எழுந்ததும் (தமது மூக்கிற்குள் நீர் செலுத்தி) மூக்கை மூன்று முறை சிந்தி சுத்தம் செய்யட்டும் ஏனெனில் ஷைத்தான் அவர் உள் மூக்கில் தங்குகின்றான்., என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.” (நூல்: முஸ்லீம் 238)

ஷைத்தான் மனிதர்களுக்கு எதிரியாக இருக்கின்றான். அவனது படை பலத்தின் முலம் நம்மை சோதிப்பான். அவனது ஆயுதங்களில் வைரஸ்,பாக்டீரியாக்கள் போன்றவைகளும் உண்டு. இன்று புதிதாக உருவாகிப் பரவும் அனைத்து வைரஸ் நோய்களும் மனிதனின் மூச்சுஸசுவாசக்காற்றின் மூலமே பரவுகின்றன. வைரஸ் ஷைத்தான்கள் மூக்கில் தங்கி அதன் வழியாக உள் நுழைந்து இரத்த ஓட்டத்தில் கலந்து விடுகின்றன.

இதையே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்., ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஓடுகின்றான். (நூல்: புஹாரி 3281).

இன்றைய நவீன மருத்துவத்தில் இரத்த பரிசோதனையின் மூலமே எய்ட்ஸ் ல் இருந்து கொரோனோ வரை எல்லா நோய்களும் கண்டறியப்படுகின்றன. அல்லாஹ்வின் வரம்புகளை மீறி, மனிதன் மாறு செய்யும் போது புதிய வியாதிகள் புறப்படுகின்றன. அமெரிக்கா நாட்டிற்கு சவாலாகவும்; உலகின் ,புதிய பொருளாதார செல்வச் செழிப்பில் செருக்குடன் இருந்த சீனாவைஸ.இன்று புறப்பட்ட கொரோனோ வைரஸ் புரட்டிப் போட்டு விட்டது.

“உண்மையில் அல்லாஹ் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை. எனினும் மனிதர்கள் தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.” (அல்குர்ஆன்.10:44)

அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள பொருள்களில் அனுமதிக்கப்பட்டதும், தூய்மையானதுமான பொருள்களை உண்ணுங்கள்.மேலும், எந்த இறைவன் மீது நீங்கள் நம்பிக்கை கொண்டு இருக்கிறீர்களோ அவனுக்கு மாறு செய்வதிலிருந்து விலகி வாழுங்கள். – அல்குர்ஆன்.5:88.

source: http://www.readislam.net/%E0%AE%95%E0%AF%8

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

23 − = 17

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb