கொரோனா பீதி…
அல்லாஹ்வின் திருப்பெயரால்
கொரோனா வைரஸ் உலக முழுதும் ஒரு அச்சத்தை ஏற்படுத்திவிட்டது!
நாளுக்குநாள் இந்த கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது! அதேநேரத்தில் பீதிகள், புரளிகள், வந்ததிகள் புதுசுபுதுசாக ஏதாவது ஒன்றை கிளப்பிவிட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். சிலர் கூறுகிறார்கள் இதற்கான மருந்து கண்டுபிடித்தாச்சு என்று ஒரு பக்கம் செய்தி பரவுகிறது.
இன்னும் சிலர் கூறுகிறார்கள் இதற்கான மருந்து கண்டுபிடிக்கவில்லை என்று இன்னொரு பக்கம் கூறுகிறார்கள். இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் குணம் அடைந்துவிட்டார்கள் என்று ஒரு செய்தி வருகிறது. என்ன தான் நடக்கிறது என்று ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள்.. ஆனால் ஏமாற்றம் தான் மிச்சம். இதுவரை உண்மை நிலவரம் தெரியவில்லை என்பது எதார்த்த உண்மை!
பிரான்ஸ் நாட்டில் சூப்பர்மார்கெட்டில் ஒரு நீண்ட வரிசையில் மக்கள் கூட்டம் பொருள்கள் வாங்க. அவர்களுக்கு ஒரு அச்சம், ”என்ன நடக்குமோ? என்ன ஆகுமோ? என்ற ஒரு விதமான பீதி! இன்று சமூகவலைத்தளங்களில் விழிப்புணர்வு என்ற பெயரில் பீதியை கிளப்பிக்கொண்டு இருக்கிறார்கள். சிலர் பொய்யான தகவல்களை பரப்புவதில் ரொம்ப ஆர்வமாக இருக்கிறார்கள்! அவர்களுக்கு இதில் ஒரு விதமான சந்தோசம்!
இன்னொரு பக்கம், ”எப்படி கவனமாக இருக்கவேண்டும்? எப்படி அந்த வைரஸை விட்டு பாதுகாத்து கொள்ளவேண்டும் என்று நிறைய அட்வைஸ் (இதனால் ரொம்ப மக்கள்கள் மனஉளைச்சல்) இதற்கு என்ன தான் தீர்வு?
இந்த கொரோனாவை விட்டு எப்படி தப்பிப்பது? எல்லோருக்கும் கேள்வி எழும்பும். ஆனால், படைத்தவன் தான் அந்த நோயை நீக்கவேண்டும்! மனிதர்கள் மீது கருணை காட்டவேண்டும். இதான் எங்களின் பதில்!
இந்தியாவில் மக்களைச் சுற்றி நிறைய பிரச்சனைகள். அவைகளை தீர்ப்பதற்க்கே பல ஆண்டுகள் ஆகும்! இந்தியாவில் ஒரு சராசரி மனிதன் காலையில் எழுந்தால் , அவன் ஏதாவது ஒரு புதிய பிரச்சைனையுடன் தான் விழிக்கிறான். இந்தியாவில் மருத்துவ துறை, சுகாதர துறை பற்றி எல்லோருக்கும் நன்கு தெரியும். அதைப்பற்றி சொல்ல வேண்டியதில்லை. இந்த கொரோனா வைரஸ் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை!
பொய்யை தான் இந்த அரசியல்வாதிகள் சொல்லிக்கொண்டு இருப்பார்கள், அவர்களுக்கு மக்களின் நலன், ஆரோக்கியம் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படமாட்டார்கள். இப்பொழுது இந்தியாவில் மக்கள் ரொம்ப பீதியில் இருக்கிறார்கள். ஒரு அச்சமான சூழ்நிலை தான் நிலவுகிறது.
ஏற்கனவே குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவில் போராட்டம் வீரியம் அடைத்துக்கொண்டு இருக்கும் நிலையில், இந்த கொரோனா வைரஸ் இப்பொழுது பரவி வருகிறது! எதை சமாளிப்பது? எப்படி தீர்வு காண்பது? இந்தியா இப்பொழுது ரொம்ப மோசமான சூழ்நிலையில் தான் இருக்கிறது. என்ன நடக்கும் என்பது யாரும் யூகித்து சொல்லமுடியாது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பீதியை கிளப்புகிறார்கள். பொய்யும், புரளியும், வதந்தியும் மக்கள் இடத்தில் ரொம்ப சீக்கிரமாக போய் சேருகிறது. அவைகளை நம்பி மக்கள்கள் பீதியில் ”என்ன செய்வது என்று தெரியாமல்” மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். மனநிலை பாதிக்கும் நிலைக்கு எங்கே வந்துவிடுவார்களோ என்ற ஒரு அச்சம் எமக்கு இருக்கிறது!
தயவு செய்து யாரும் பீதியை உண்டாக்காதீர்கள். உங்களுக்கு உண்மை தெரிந்தால் மட்டும் நீங்கள் சமூகவலைத்தளங்களில் பரப்புங்கள். தயவு செய்து உங்களுக்கு ஒரு தகவல் வந்தால், அது உண்மையா என்று ஆராயாமல் உடனே மற்றவர்களுக்கு பரப்பாதீர்கள்!
சுத்தமாக இருக்கவேண்டும், கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும், இப்படி நிறைய அட்வைஸ் கொடுப்பார்கள். உண்மைதான்! ஆனால் ஒரு கேள்வி எமக்கு எழும்புகிறது, அது இப்போ மட்டுமா அல்லது எப்பொழுதும் சுத்தமாக இருக்கவேண்டுமா? நம்மில் எத்துணை பேர்கள் சிறுநீர் கழித்துவிட்டு மரும உறுப்பை சுத்தம் செய்கிறார்கள்? அதாவது நீரை கொண்டு கழுவது! கண்ட இடத்தில் சிறுநீர் கழித்துவிட்டு, அப்படி செல்லக்கூடிய நிறைய பேர்கள் இருக்கிறார்கள்! இது உங்களுடைய சிந்தனைக்கு!
இஸ்லாம் என்ன சொல்கிறது சுத்தத்தைப் பற்றி: எப்பொழுதும் உடல் சுத்தம், உடை சுத்தம், உள்ளம் சுத்தம் என்று இஸ்லாம் போதிக்கிறது. ஒவ்வொரு நாளும் ஐந்துவேளை தொழுவதற்காக உளு (அங்கசுத்தி செய்கிறார்கள்) செய்கிறார்கள். சிறுநீர் கழித்தால் உறுப்புகளை நன்றாக நீரால் சுத்தம் செய்கிறார்கள்! இஸ்லாம் எங்களுக்கு அப்படிதான் போதிக்கிறது.
ஒருவர் இறந்துவிட்டால், அவரை முறைப்படி குளிப்பாட்டி, சுத்தம் செய்து, அவரை மண்ணறையில் வைப்பார்கள். இது இஸ்லாம் காட்டித்தந்த வழிமுறை. முஸ்லிம் பெண்கள், அவர்கள் அணியும் ஹிஜாபை இந்த உலகம் கேலியும், கிண்டலும் செய்தது. ஆனால் இப்பொழுது அதை உணர்ந்து, பெண்கள் முகத்தை மூடி செல்வது நல்லது என்று கூறுகிறது.
அல்லாஹ் நாடாமல் நமக்கு எதுவும் தீண்டாது என்று நம் ஆழமாக மனதில் பதிய வைக்க வேண்டும்! முன்னெச்சரிக்கை ரொம்ப அவசியம் அது சுன்னத்!
இன்று உலக முழுதும் ஒரு அச்சத்திலும், பீதியிலும் வாழ்ந்துகொண்டு இருக்கும் சூழ்நிலையை அல்லாஹ் ஏற்படுத்திவிட்டான் என்பது தான் உண்மை. நாம் அவன் பக்கமே மீளவேண்டும்! அவனிடத்தில் தான் கையெந்தே வேண்டும். அவனிடத்தில் மட்டுமே அழுது முறையிடவேண்டும்!
நாளை என்ன நடக்கும் என்பது அல்லாஹ் ஒருவன் மட்டுமே அறிந்தவன்! நிச்சயமாக இந்த கொரோனா வைரஸ் ரொம்ப ரொம்ப ரொம்ப கவலை அளிக்கிறது. என்ன நடக்கும்? என்ன ஆகும்? என்று எல்லோரும் அச்சத்தில் இருக்கிறார்கள். உலக முழுதும் பொருளாதாரம் பாதிப்பு இருக்கிறது .இந்த கொரோனா வைரஸ் நமக்கு என்ன பாடம் கற்று கொடுக்கிறது என்று உலக மக்களுக்கு புரிய வைத்திருக்கிறது.
நான் இந்த கொரோனா வைரஸால் மரணிப்பேன் என்று அல்லாஹ் விதித்து இருந்தால் , நான் என்ன தான் பாதுகாப்பாக இருந்தால், கவனமாக இருந்தாலும் நிச்சயமாக நான் மரணத்தை சுவைத்தே தீருவேன். இதில் யாருக்கும் எந்த மாற்று கருத்தும் இல்லை.
மரணம் மறுஉலகத்துக்கான ஒரு பயணம். அந்த பயணத்தை விட்டு யாரும் தப்பிக்கமுடியாது. அந்த மரணம் வருமுன் நாம் எல்லோரும் மனிதநேயத்துடன் , நல்ல குணத்துடன், நல்ல பண்புகளுடன், விட்டுக்கொடுத்து, இறைவனுக்கு கீழ்ப்படிந்து வாழவேண்டும்.
எது நடந்தாலும் நல்லவர்களுக்கு எல்லாம் நன்மைதான்! தீயவர்களுக்கு ஒரு பாடமாகவும், படிப்பினையாகவும் எடுத்துக்கொண்டு, நல்லவர்களுடன் சேர்ந்து நல்லவர்களாக வாழவேண்டும் என்று இந்த கட்டுரையை முடிக்கிறேன்.
– சத்திய பாதை இஸ்லாம் .
source: http://islam-bdmhaja.blogspot.com/2020/03/blog-post_17.html