அரசு நடத்திய இனப்படுகொலை!
மௌலானா கா.மு இல்யாஸ் ரியாஜி ஹஸ்ரத்
மேலப்பாளையம் ஷாகின் பாக்–இல் மௌலானா கா.மு இல்யாஸ் ரியாஜி ஹஸ்ரத் அவர்கள் பேச்சு
6.3.2020 அன்று வெள்ளிக்கிழமை இரவு மேலப்பாளையம் ஷாகின் பாக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்னை மந்தைவெளி பள்ளிவாசல் இமாமும் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் துணைப் பொதுச் செயலாளருமான இல்யாஸ் ரியாஜி பேசியதாவது…
கடந்த மார்ச் 2 ஆம் தேதி வடகிழக்கு டெல்லியில் மத்திய அரசு முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய இனப்படுகொலைகளை நேரில் கண்டோம்
இது சி.எ.எ ஆதரவாளர்களுக்கும் – எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதலாக மீடியாக்கள் கூறுகின்றன. பச்சைப் பொய் அது.
மேலும் அதனை தீடீரென நடந்த கலவரமாகவும் மீடியாக்கள் சித்தரிக்கின்றன. நிச்சயமாக பச்சைப் பொய் அது.
மாறாக அது கலவரம் அல்ல.. முஸ்லிம்களுக்கு எதிராக மத்திய அரசு நடத்திய இனப்படுகொலை அது.
வடகிழக்கு டெல்லிக்கும்- உத்திரபிரதேசத்திற்கும் இடையே 15 கிலோ மீட்டர் தூரம் தான் இடைவெளி.
அங்கிருந்து சுமார் ஆயிரம் நபர்கள் முழுமையாக ஆயுதப் பயிற்சியளிக்கப்பட்டவர்கள். துப்பாக்கிகளை கையாளும் பயிற்சிப் பெற்றவர்கள் லாரிகளில் ஏற்றி கூட்டி வரப்பட்டார்கள்.
அவர்கள் வருவதற்கு முன்பு லாரிகளில் கற்கள் கொட்டப்பட்டன. அவர்கள் ஒவ்வொருவரும் கத்தி, கோடாரி, வாள் , குறுவாள்,அரிவாள், இரும்பு கம்பிகள், கையெறி குண்டுகள், கள்ள மார்க்கெட்டில் வாங்கிய கைத்துப்பாக்கிகள், சிறிய அளவிலான ராக்கெட் லாஞ்சர்கள் என எல்லா வகையான ஆயுதங்களையும் டெல்லிக்குள் கொண்டு வந்தார்கள்.
உத்தரபிரதேச போலீஸ் செக்போஸ்ட், டெல்லி செக்போஸ்ட் எல்லாவற்றையும் தாண்டித் தான் வந்தார்கள்.
வந்தவர்கள் சுமார் 72 மணிநேரம் மூன்று நாட்கள் வடகிழக்கு டெல்லியில் இருந்தார்கள்.
சிலமணிநேரங்கள் மட்டும் தாக்குதல் நடத்திவிட்டு செல்லவில்லை. மாறாக மூன்று நாட்கள் இருந்தார்கள் என்றால், அவர்கள் மனிதர்கள் தானே, அவர்களுக்கு சாப்பாடு வேண்டுமே.. தூக்கம் வருமே! என்ன செய்தார்கள்?
அந்த மூன்று நாட்களும் வடகிழக்கு டெல்லியின் வீதிகளில் அவர்களுக்கு சமையல் செய்யப்பட்டன. அவர்கள் தங்குவதற்கு டெல்லி காவல்துறையும் மாநகராட்சியும் முஸ்லிம் பகுதியில் முஸ்லிம்கள் நடத்திய மூன்று பள்ளிக்கூடங்களை ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.
அங்கு தான் அவர்கள் தங்கியிருந்தார்கள். மூன்று மணி நேரத்திற்கொருமுறை ஒரு லாரி அந்த பள்ளிக்கூடங்களுக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும். அவர்களிடமிருந்து அவர்கள் கொள்ளையடித்த பொருட்களை வாங்கி இன்னொரு இடத்தில் கொண்டு போய் பாதுகாப்பாக வைப்பார்கள்.
வடகிழக்கு டெல்லியில் உள்ள அசோக்புரி, முர்சிபாத் பகுதிகள் சென்னை சிந்தாதிரிப்பேட்டை போன்று இருப்பவை. மெயின்ரோட்டை ஒட்டி சாக்கடைக் கால்வாய். இடையில் குறுக்காக சின்ன சின்ன தெருக்கள்..
பயிற்சி பெற்ற சங்பரிவார் பயங்கரவாதிகள் வீட்டுக்குள் இருந்தவர்கள் வெளியில் கொண்டு வருவதற்காக துப்பாக்கியால் சுட்டார்கள். மூன்றாவது நான்காவது மாடியில் இருந்தவர்கள் எட்டிப்பார்த்தார்கள். எட்டிப் பார்த்த பெண்கள் சுடப்பட்டார்கள். பின்னர் ஆண்கள் வெளியில் வந்தார்கள். வந்தவர்கள் வெட்டி சாய்க்கப்பட்டார்கள். ஒவ்வொரு வீடாக ஓட்டர் லிஸ்ட்டை வைத்துக் கொண்டு இரண்டு பேரை கொன்று விட்டோம். மூன்றாவது நபர் உள்ளாரே என்று தேடி தேடி கொலை செய்தார்கள்.
அசோக்புரியில் மார்க்கெட்டில் இருந்த பள்ளிவாசல்களில் கான்கிரிட் உடையுமளவு ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் தகர்த்தார்கள். வீடுகளில் உள்ள சிலிண்டர்களை கொண்டு வந்து வெடிக்க வைத்தார்கள்.
முஸ்லிம் கடைகள், வணிக வளாகங்கள், வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. கொள்ளையடிக்கப்பட்டன. கொள்ளையடித்த பொருட்கள் அனைத்தும் தயாராக தெரு முனையில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளில் ஏற்றப்பட்டன.
சங்பரிவார்கள் இரவிலும் பகலிலும் ஒரு பிரிவினர் தாக்குதல் நடத்துவார்கள். இன்னொரு பிரிவினர் அந்த பள்ளிக்கூடங்களில் ஓய்வெடுப்பார்கள்.
அவர்களுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் அந்த பகுதி சங்பரிவார் பொறுப்பாளர்கள் காவல்துறை, மாநகராட்சி பொறுப்பாளர்கள் உதவியுடன் செய்து கொடுத்தார்கள்.
பள்ளிக்கூடங்கள் மட்டுமல்ல பள்ளிவாசல்களில் இரவில் தங்கி மது அருந்தி மல ஜலம் கழித்து அசிங்கப்படுத்தினார்கள். பள்ளிவாசல்களில் சுவர்களில் அந்த அடையாளங்கள் இருந்தன. பள்ளிவாசல் முதல் மாடியில் மது பாட்டில்கள் கிடந்தன. மலம் ஜலம் கிடந்தன.
நாங்கள் சென்று பார்ப்பதற்கு முந்திய நாள் போலீசார் அடையாளங்களை வெள்ளை அடித்ததாக அப்பகுதி மக்கள் கூறினார்கள்.
100 எலிகளைத் தின்ற பெருச்சாளியைப் போன்று கொழுத்திருக்கும் கொலைகாரன் அமித்சாவின் ஆணைக்கேற்ப காவல்துறை முஸ்லிம்களை கொன்று குவித்தது. சங்பரிவார் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தது.
சாக்கடையில் வீசப்பட்டு மிதந்த பிணங்களை வெளியில் எடுக்க டெல்லி மாநகராட்சி பொக்லைன் இயந்திரங்களை கொண்டு வந்தது. கால்வாயின் இரண்டு பக்கம் அள்ளியவுடன் ஏராளமான பிணங்கள் வந்தன. உடனே வேலை நிறுத்தப்பட்டன.
சங்பரிவார்களுக்கு எல்லா வகையிலும் துணை நின்றார் அரவிந்த் கேஜ்ரிவால். நம்மால் மறக்கவும் முடியாது. மன்னிக்கவும் முடியாது.
அவன் அடிக்க அடிக்க ஒரேயடியாக அடிவாங்கவும், இழப்புகளைத் தாங்கவும் நாம் என்ன கோழைகளா?
அவர்கள் காவல்துறை உதவியுடன் வந்த நமது ஆண்களை வெட்டுவார்கள். நமது பெண்களை கற்பழிப்பார்கள். நமது குழந்தைகளை கொலை செய்வார்கள். நமது வீடுகளை இடிப்பார்கள். கடைசியில் கொல்லப்பட்ட நம்மவர்கள் மீது எஃப் ஐ ஆரையும் போடுவார்கள். இந்த நாடு நம்மைப் பற்றி என்ன நினைக்கின்றது?
உ.பி. யில் கொல்லப்பட்ட அக்லாக் என்ற பெரியவரின் மீது எஃப் ஐ ஆர் போடப்பட்டது. கொலை செய்தவர்கள் மீது போடப்படவில்லை. ராஜஸ்தானில் பெஹ்லுகானின் மீது எஃப் ஐ ஆர் போடப்பட்டது. அவனைக் கொன்ற கொலைகாரர்கள் மீது போடப்படவில்லை.
கலவரத்தை முன்னின்று நடத்தியதற்கான எல்லா வீடியோ ஆவணங்கள் இருந்தும், அதனை நீதிமன்றத்திலேயே போட்டுக் காட்டியும் மத்திய அரசு வக்கீல் 3 வாரம் அவகாசம் கேட்டார் அவன் மீது எஃப் ஐ ஆர் போடுவதற்கு.
ஆனால் ஐஏஎஸ் அதிகாரி ஹரீஸ் மந்தர் மீது உடனே வழக்கு போடப்பட்டது.
கபில்மிஸ்ராவின் மீது எஃப் ஐ ஆர் போடவில்லை என்பது மட்டுமல்ல அவனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பும் கொடுத்தார் அமித்சா.
உலகத்திலேயே கொல்லப்பட்டவனின் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்து கொலை செய்தவர்களை பாதுகாக்கும் அமைச்சர் பதவியும் கொடுக்கும் மனிதநேயமற்ற மிருகங்கள் வாழும் ஒரே நாடு இந்தியா மட்டும் தான்.
வடகிழக்கு டெல்லியில் ஏழு தொகுதிகளில் கபில் மிஸ்ரா தொகுதி தவிர மற்ற எல்லா தொகுதிகளும் பா.ஜ.க வசம். கபில் மிஸ்ரா மட்டும் தோற்றுப் போனான். என்னைத் தோற்கடித்தீர்களா? என்று வீடு வீடாக கூவி கூவி கொலைகள் செய்தான் கபில் மிஸ்ரா. அவனுக்குத் தான் பாதுகாப்பு.
வடகிழக்கு டெல்லி மக்களிடம் சொல்லி விட்டு வந்தோம். பணக்காரர்கள் கோழைகளாக இருக்கின்றார்கள் என்றார் அர்த்தம் உண்டு.
எல்லாவற்றையும் இழந்த நீங்கள் ஏன் கோழைகளாக இருக்கின்றீர்கள்?
நீங்கள் நிமிர்ந்தால், திருப்பி அடித்தால் எதிரி உங்களைக் கண்டு பயப்படுவார்கள். தயாராகுங்கள். அல்லாஹ் உங்களுடன் இருப்பான் என்றோம்.
இவ்வாறு இல்யாஸ் ரியாஜி பேசினார்.