அடிக்க அடித்ததான் வீறுகொண்டு எழும் பந்து ஒடுக்க ஒடுக்கத்தான் பட்டொளி வீசும் தீன் கொடி!
டாக்டர் ஏ.பீ. முஹம்மது அலி, பிஎச்.டி; ஐ.பீ.எஸ்(ஓ)
அன்றாட செய்தி தாள்களும், தொலைக் காட்சியும் முஸ்லிம்கள் பல்வேறு நாடுகளில் வீடிலிழந்து, உணவிழந்து, உடுக்க துணியில்லாமல், அழும் பிள்ளைகளுக்கு கூட பால் கொடுக்கமுடியாத அவல நிலையும், காயத்திற்கும், நோய்களுக்கும் கூட மருத்துவ வசதியின்றியும், மழையிலும், ஓடும் தண்ணீரிலும், சகதியும், சேரும் கொண்ட கூடாரங்களில் புழுக்கள் போல வாழும் நிலையினைக் கண்டு மனம் வெதும்பி வேதனை கொள்ளச் செய்கின்றதல்லவா?
அவைகளைப் பார்க்கும் போது முஸ்லிம் மக்களுக்கு பெரிய சோதனை ஏற்பட்டுள்ளது அதனால் இஸ்லாம் நலிவுற்றுடிமோ என்ற எண்ணம் உங்களிடையே ஏற்படலாம். ஆனால் இஸ்லாமிய வரலாறுகளை உற்று நோக்குவோமானால், இஸ்லாம் புவியில் சிறு குழந்தையாக பிறந்ததிலிருந்து பல இன்னல்களை சந்தித்து வெற்றி நடை போட்டுக் கொண்டுள்ளது என்பதினை சில உதாரணங்களைக் கொண்டு விளக்கலாம் என எண்ணுகின்றேன்.
உஹது யுத்தத்தில் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆணைக்கு இணங்க மலைமேல் இருந்த அம்பு எறியும் வீரர்கள் குறைஷியர் அற்ப செல்வங்கங்களுக்கும், கேடயங்களுக்கும் ஆசைப் படாமல் இருந்திருந்தால் நிச்சயமாக உஹதுப் போரில் வெற்றி பெற்றிருப்பார்கள் என்று என்று எல்லாம் வல்ல அல்லாஹ் ‘அல் இம்ரான்’ அத்தியாயத்தில் கூறியுள்ளான்.
மேலும் அல்லாஹ் ‘தவறு செய்தவர்வர்களை ஒரு போதும் மன்னிக்க மாட்டான்’ என்று அத்தியாயம் 3/140 ல் கூறியுள்ளான். ஆனால் அந்த உஹது யுத்தத்தில் நம்பிக்கைக்கு பாத்திரமான வீரமிக்க ஹம்சா,முசாபின் உமைர் போன்றவர்கள் மடிந்தாலும், உஹது போரில் குறைஷியர்களுக்கு வெற்றிக் கனியினை தேடித் தந்த தளபதிகளான அபுசுஃபியான் மற்றும் காலித் பின் வாலித் போன்றவர்கள் வல்ல நாயன் அல்லாஹ் இஸ்லாமிய மார்க்கத்தின் பால் பிற்காலத்தில் திருப்பியது இஸ்லாத்தினையும், இஸ்லாமியர்களையும் ஒருபோதும் அழிக்க முடியாது என்பதினை காட்டவில்லையா?
அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வழங்கப் பட்ட கலீபா பட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்களிடையே சிவில் யுத்தம் கி.பி. 656 ல் தொடங்கி கி.பி.661 ல் அலி ரளியல்லாஹு அன்ஹு கொல்லப் பட்டார்கள். அதன் பிறகு சிரியாவினை தலை நகரமாகக் கொண்டு முவாவியா கலீபா ஆனார். அவர் வம்சம் 90 ஆண்டுகள் ஆட்சி செய்து ஆப்பிரிக்கா , ஸ்பெயின், ரோம் , பைசான்டின் வரை நீண்டது. சுலைமான் மாக்னிபியின்ட் என்பவரால் பெல்க்ரேடு, வியன்னா , ரஸ்யா மற்றும் போர்துகீஸ் வரை இஸ்லாமிய ஆட்சி காலடி வைத்தது.
இஸ்லாமிய பொற்காலம் என்று இபின் அபாஸிட் சாம்ராஜ்யம் கி.பி.750 லிருந்து கி.பி. 1258 வரை பாக்தாத்தினை தலைநகராக கொண்டு விளங்கியது. பெருளாதாரம், விஞ்ஞானம், கலாட்சாரம் மற்றும் அரசியலில் கொடிகட்டிப் பறந்தது. அதன் பின்பு மங்கோலியர் படையெடுப்பினால் சிறுக சிறுக மறையத் தொடங்கியது. ஆப்கான், முகலாயர் போன்ற சாம்ராஜ்யங்கள் ஆசியாவில் தங்களுடைய ஆதிக்கத்தினை செலுத்தினாலும் பிற்காலத்தில் முஸ்லிம் மார்க்கத்தினிடையே ஷியா, சுன்னி பிரிவுகளில் யார் பெரியவர் என்ற போட்டியாலும், ஐரோப்பிய அரசுகளின் தொழில் புரட்சியில் ஏற்பட்ட மாற்றத்தினாலும் நவீன ஆயுதங்கள் கொண்ட போரினாலும் மங்கத் தொடங்கியது.
இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி இத்தாலி, ஆங்கிலேய அரசுகள் இஸ்லாமியர் வசமிருந்த நாடுகளை ஒவொன்றாக கைப்பற்ற ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் இத்தாலி, அரசு முஸ்லிம்களின் புனித தலங்களான மக்கா , மதினாவினை என்றும் பயமுறுத்தின. அவர்களுடைய பயமுறுத்தளுக்குப் பயந்து ‘கமால் அத்தா துருக்’ துருக்கிய அரசினை மேற்கிந்திய கலாசாரத்திற்கு மாற்றம் செய்வதே ஒரே வழி என்ற நிலைக்கு தள்ளப் பட்டார். முஸ்லிம்களிடையே ஒற்றுமை இருந்திருந்தால் மேற்கத்திய நாடுகளால் இன்று இஸ்லாமிய நாடுகள் அச்சுறுத்தும் நிலை இல்லாமல் இருந்திருக்கும்.
ஒற்றுமை பற்றி ரசூலுல்லாஹ் கூறியதாக அபு மூஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ‘ஓர் இறை நம்பிக்கையாளர் மற்றொரு இறை நம்பிக்கையாளருக்கு கட்டிடத்தினைப் போன்றவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு உறுதுணையாக இருக்கிறது. அதன் உதாரணமாக தங்களுடைய கை விரல்களைக் கோர்த்து காட்டினார்கள், என்று கூறியுள்ளார். அந்த ஒற்றுமை இல்லாததால் வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பல்வேறு இன்னல் ஏற்பட்டுள்ளன.
ஆப்பிரிக்க கண்டத்தில் செங்கடல் பகுதியினை யார் ஆதிக்கம் செலுத்துவது என்ற போட்டியாலும், துருக்கி அரசு, ஜெனம பகையாளிகளாக உள்ள ஈரான், சௌதி அராபிய அரசுகளில் உள்ள கருத்து வேறுபாடுகளினால் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சி செய்கிறது. சௌதி அராபிய நாடு மற்றும் ஐக்கிய அரபு குடியரசுகளால் பொருளாதார தடையினை கத்தார் அரசின் மீது விதித்து நசுக்க முயன்றது. அதுவும் எந்த நேரத்தில் என்றால் 2020 உலக கால்பந்தாட்ட நிகழ்ச்சிகளுக்கு தன்னை தயார் செய்து கொண்டிருந்த நிலையில். ஆனால் கத்தார் அரசின் சிறந்த நடவடிக்கையால் தன்னை நிமிர்ந்து நிற்க செய்துள்ளது என்பதினை அனைவரும் ஒப்புக் கொள்வர். செங்கடல் பகுதியில் உள்ள துறைமுகங்களை யார் ஆதிக்கம் செலுத்துவது என்ற போட்டியில் வளமான ஏமன் நாட்டில் போரினால் களையிழந்து காணப் படுகிறது.
வஹாபிஸ சௌதி அரசு தன்னுடைய ஆதிக்கத்தினை ஆப்பிரிக்க நாடுகளான சாட், சூடான், சோமாலியா, ஏரி ட்டேரியா, எத்தியோப்பியா போன்றவற்றில் செலுத்த ஆரம்பித்தது. ஆனால் சௌதி அரசு எகிப்து அரசுடன் இணக்கமாக செயல் பட முடியாத நிலை ஏற்பட்டது. காரணம் நைல்நதியின் கப்பல் போக்குவரத்தினை யார் ஆதிக்கத்தில் கொண்டுவருவது போன்ற போட்டியால் எகிப்து அரசின் ஜனாதிபதி சிசியுடன் ஒத்துப் போகமுடியவில்லை.
அதேபோன்று சூடான் நாட்டின் புரட்சியால் ஜனாதிபதி பசீர் ஆட்சி விலக்கப் பட்டு புதிய அரசும் ஏற்பட்டது. அதற்கு போட்டியாக ஈரான் தனது ஆதிக்கத்தினை ஈராக், சிரியா, ஏமன் மற்றும் லிபியா போன்ற நாடுகளில் தலையிட்டது. சௌதி அரேபியா, மற்றும் ஐக்கிய அரபு குடியரசுகள் தீவிரவாத அமைப்புகளான முஸ்லிம் பிரதர்ஹூட், இஸ்லாமிக் ஸ்டேட், அல்க்கைடா, போகோ ஹராம் போன்ற அமைப்பின் ஆதிக்கத்தினை விரும்பவில்லை.
அதேபோன்றே துருக்கியின் ஆதிக்கத்தினையும் விரும்பவில்லை. இவ்வாறு இஸ்லாமிய நாடுகளிடையே ஒற்றுமை இல்லாததால் முஸ்லிம் மக்கள் அகதிகளாக பெரும்பாலும் பெண்கள் குழந்தைகள் முதியோர் பாதிக்கப் பட்டுள்ளனர். பெண்கள் கற்பினை இழந்துள்ளனர்., குழந்தைகள் கடத்தப் பட்டுள்ளனர்,அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் சேருக்குள்ளும், சகதிக்குள்ளும், மருத்துவ வசதியில்லாமல் வாழ்கின்ற காட்சிகளை தினந்தோறும் தொலைக்காட்சியில் காணும்போது கல் மனதும் கரையாமல் இல்லைதானே !
இது வரையில் உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்கள் பட்டியலிட்டால் மாயாது, முடியாது. அவை :
1) சோமாலியா யுத்தத்தில் 5,50,000/
2) எத்தியோப்பியா எரிட்டோரியா யுத்தத்தில் 75,000/
3) அல்ஜீரியா யுத்தத்தில் 1,50,000/
4) அர்மேனியா அசர்பைசான் யுத்த்தில் 35,000/
5) ஆப்கானிஸ்தான் யுத்தத்தில் 2,00,000/
6) ஈராக் யுத்தத்தில் 2,00,000/
7) சிரியா யுத்த்தில் 3,20,000/
8) தெற்கு சூடான் யுத்தத்தில் 10,000/
9) உக்ரைன் யுத்தத்தில் 2,500/
10) ஏமன் யுத்தத்தில் 10,000/
உள்நாட்டுப் போர்கள், பக்கத்து நாடுகளுடன் நடந்த சண்டைகள் போன்றவை இஸ்லாமிய நாடுகளில் அமெரிக்கா, ருசியா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் தலையீடுகள் அதிகரிக்கத் துடங்கியது.
இஸ்லாமிய நாடுகள் மேற்கத்திய நாடுகளிடம் ஆயுதங்களை வாங்கி குவிக்கச் செய்தன. எண்ணெய், மற்றும் கனிம வளங்கள் அந்த அரசுகளால் கொள்ளை போயின. அதனால் சொந்த மண்ணை விட்டு அந்நிய நாடுகளுக்கு அகதிகளாக செல்ல முஸ்லிம்கள் தலைப்பட்டனர்.
அப்படி செல்ல முற்பட்டவர்கள் பலர் கடலிலேயே சமாதியாயி விட்டனர் என்பதினை தொலைக் கட்சி நிறுவனங்கள் படம் போட்டுக் காட்டின. அப்படி அகதிகளாக சென்ற முஸ்லிம்கள் பக்கத்து நாட்டு முஸ்லிம் அரசுகளுக்கு பெரும் பொருளாதார சுமையாக அமைந்து விட்டனர்.
போரினால் அகதிகளாக இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் பின்வருமாறு:
1) சூடான்-5,00,000/
2) டார்பூர் -20,00,000/
3) பாலஸ்தீனம்-40,00,000/
4) ஈராக் -20,00,000/
5) ஆப்கானிஸ்தான்-30,00,000/
கிட்டத்தட்ட 1,40,00,000/ மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.
இவ்வளவு அழிவுகள் இருந்தாலும் முஸ்லிம் மக்கள் ஜனத்தொகை 2006 ம் ஆண்டிலிருந்து 2011 வரை 1.8/ சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் உலக மக்கள் தொகை 1.1/ சதவீதம் தான் அதிகரித்துள்ளது. PEW(Centre for strategic and international studies) என்ற ஆராய்ச்சி நிறுவனம் தனது ஆய்வில் கடந்த 20 வருடங்களாக முஸ்லிம் அல்லாதவர்களை விட முஸ்லிம்கள் இரு மடங்காக அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.
அதற்கான காரணங்களாக 1) முஸ்லிம்களிடையே இளைஞர் பட்டாளம் அதிகம், 2) குழந்தைகள் பிறப்பது, 3) இஸ்லாமியா மார்க்கத்தின் பால் ஈர்க்கப்பட்டும், 4) அகதிகளாக இடம் பெயர்வதினாலும் என்று கூறுகின்றனர்.
2013 ல் 49 முஸ்லிம் நாடுகளில் ஜனத்தொகை 150 கோடியாக இருந்தது. அது 2019 ல் 190 கோடியாக உயர்ந்து உலக மக்கள் தொகையில் 24.4 சதவீதமாக முஸ் லிம் ஜனத்தொகை உள்ளது, அல்ஹம்துலில்லாஹ்.
யானைப் படைகளுடன் மக்கா நகரைப் பிடித்து, அங்குள்ள புனித தலமான ஹரத்தினை அழிக்க எதிரி கங்கணம் கட்டிக்கொண்டு யானைப் படையில் வரும்போது வல்ல நாயன் பறவைகள் மூலம் சுடு கற்களைக் கொண்டு அந்தப் படையினை நிர்மூலமாக்கினான் என்ற வரலாறு உங்களுக்கெல்லாம் தெரியும். ஆகவே இஸ்லாத்திற்கு எதிராக களம் இறங்கியவர்கள் இறுதியில் இஸ்லாத்தினை வெல்ல முடியாமல் மண்ணைக் கவ்வியது உங்களுக்குத் தெரியும். ஆகவே இஸ்லாத்தினையும், இஸ்லாமிய மக்களையும் எந்த ஆதிக்க சக்திகளும் அடக்கி விடமுடியாது, இஸ்லாம் அடிபட்ட பந்துபோல மென்மேலும் வளரும் என்பது சரிதானே!
– AP.முஹம்மத் அலி