உயர் கல்வியும் இன்றைய நிலையும்!
Noor Mohamed
கீழ்திசை தேசங்களில், பல்கி பெருகி உள்ள பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி துறைகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டிருக்கிறது, அங்கு பயிலும் ஆய்வு (PhD) மாணவர்களின் ஆராய்ச்சி அறிக்கை சமூகத்தின் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
தற்போதைய நிலையில் சமூகம் எதிர்கொண்டிருக்கும் சூழலியல், மருத்துவம், முதலாளித்துவ பொருளாதாரம், புவிசார் அரசியல், சமூக நீதி, கல்வியியல், வேளாண்மை, மற்றும் நீர் மேலாண்மை, இது போன்ற துறைகளில் சமூகம் எதிர் கொள்ளும் இன்னல்களுக்கு எந்தவொரு மிக பெரிய அளவில் தீர்வுகளை, கீழ்திசை நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியாகும் ஆராய்ச்சி மாணவர்களின் (PhD) ஆய்வு முடிவுகள் பெரும் விளைவை ஏற்படுத்தவில்லை சமூகத்திற்கு.
மாறாக சிறு மற்றும் குறு தொழில் பட்டறையில் பணிபுரியும் இளைஞர்கள் தன்னார்வமாக, தேவைக்கு ஏற்ப புதிய இயந்திர கண்டுபிடிப்புகளை படைக்கிறார்கள் நாம் செய்திகளில் காண்கிறோம். இவை போன்று ஏண் கீழ்திசை நாடுகளின் ஆய்வு துறையின் மூலம் பெரிய அளவில் மாற்றத்தை காணமுடியவில்லை, ஏன் இந்த நிலை? இவைகளை யார் கட்டுபடுத்துகிறார்கள்?
மேற்கும், முதலாளித்துவம் சேர்ந்து, காலனித்துவ மற்றும் மூன்றாம் உலக நாடுகளில் ஆராய்ச்சி துறைகளில் மூலம் சுற்றுச்சூழலியல், மருத்துவம், பொருளாதாரம், அரசியல், வேளாண்மை, இயற்கை வளங்கள், போன்ற துறைகளில் புரட்சிகரமான மாற்றங்களோ, கருத்துக்களோ வந்துவிட கூடாது என்று அந்தந்த நாடுகளில் கல்வி துறையை பெரும் நிதி செலவில் கண்காணிக்கிறது மேற்குலக அரசியல்.
கட்டுபடுத்த முடியாத மணித சிந்தனையை ஒரு வரைமுறை படுத்தி எந்த ஒரு புரட்சிகர சிந்தனைகள், முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு எதிராக ஒரு ஆய்வும் வந்து விடாமல் பல்கலைக்கழங்களை கட்டுபடுத்துகின்றது அந்தந் நாட்டு கல்வி துறை. இவை மேற்கின் செயல் திட்டத்தை நிறைவேற்றுகிறது.
வரலாற்றில் புரட்சிகரமான மாற்றங்கள் விதைத்த புரட்சியாளர்கள்; தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், அல்லாமா இக்பால், காயிதே மில்லத், எம்.சி. சித்திலெப்பை, ஜமாலுத்தீன் அல்-ஆஃப்கானி, ஷாஹ் வலியுல்லாஹ், அப்துல் கலாம், இது போன்ற பல சமூக புரட்சியாளர்கள்… தற்போதைய பல்கலைக்கழக விதிகளின் படி இவர்கள் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டிருந்தால் இவர்கள் நிலை எப்படியிருந்திற்க்கும், நாம் சற்று ஆழமாக சிந்திக்க வேண்டும், சிந்தனையும், ஆய்வும், சமூகத்தின் வளமாகும், இது சமூகத்தின் உயிரோட்டம்.
மனித சிந்தனை ஆற்றலில் மேற்கத்தியமும் முதலாளித்துவம் எப்படி எல்லாம் செயல்படுகின்றன. வெறுமனே ஆய்வு (PhD) படிப்பை மேற்கொள்வது முக்கியம் அல்ல, இந்த சமூகம் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு எத்தகைய தீர்வை அளிப்பது என்பதான் முக்கியம்.
– Noor Mohamed