இந்தியாவில் உண்மையான தேசப்பற்று உள்ளவர்கள் யார்?
அல்லாஹ்வின் திருப்பெயரால்
இந்தியாவில் உண்மையான தேசப்பற்று உள்ளவர்கள் யார்?
இந்தியா சுதந்திரம் கிடைப்பதற்கு முஸ்லிம்களுக்கு நிறைய பங்கு இருக்கிறது. அவர்கள் செய்த தியாகம் இன்று மறைக்கப்பட்டாலும், யாரும் மறுக்கமுடியாது.
தேசத்துக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் முஸ்லிம்கள் .நிறைய பண உதவிகளை செய்தவர்கள் முஸ்லிம்கள். ஆங்கிலேயர்களை மட்டும் வெறுக்கவில்லை, மாறாக, அவர்களின் ஆங்கில மொழியையும் வெறுத்தார்கள்.
இந்திய தேசத்துக்காக முஸ்லிம்கள் செய்த தியாகம் சொல்லிமாளாது.
இன்று முஸ்லிம்களுக்கு இந்தியாவில் பல நெருக்கடியான பிரச்சனைகள், அவர்களின் உயிருக்கும், உடமைக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை.
குடியுரிமை திருத்த சட்டத்தால் முஸ்லிம்கள் மன உளைச்சலில் இருக்கிறார்கள்.
”நீங்கள் இந்த நாட்டின் குடிமகனா என்பதை நிரூப்பிக்கவேண்டும்” என்று பாசிச சக்திகள் முஸ்லிம்களை பார்த்து கேட்கிறார்கள்.
இந்த நாட்டிற்கு வந்தேறிகளாக வந்தவர்கள், இந்திய சுதந்திரத்துக்கு எந்த ஒரு தியாகமும் செய்யாத, ஆங்கிலேயருக்கு உதவியாக இருந்தவர்கள் இன்று அவர்கள் எங்களை பார்த்து ”நாங்கள் தேசவிரோதிகள் என்று வாய் கூசாமல் பேசுகிறார்கள்.
இந்த கேடுகெட்ட பாசிச கொள்கை உடையவர்கள், அவர்களுக்கும் தேசப்பற்றுக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது? இவர்கள் தேசப்பற்றை பற்றி பேசுவதுதான் எங்களுக்கு வேதனையாக இருக்கிறது.
முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் வரலாறு இருக்கிறது! வந்தேறிகளான உங்களுக்கு என்ன வரலாறு இருக்கிறது? நீங்கள் செய்யாத தியாகத்தை செய்ததாக சொல்லி கோளாறு செய்யும் தகராறு உள்ளவர்கள்தான் நீங்கள்!
உங்கள் வரலாறு எங்களுக்கு தெரியாதா? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இனி இந்தியாவில் பாலாறு, தேனாறு ஓடும் என்று பொய்களை பரப்பி, அப்பாவிகளை நம்பவைத்து ஆட்சிக்கு வந்தவர்கள் தானே நீங்கள்! உங்களின் ஆட்சி லட்சணம் இந்த உலகத்திற்கே தெரியும்!
இந்திய மக்களை நிம்மதியாக வாழவிடாமல், ஒவ்வொருநாளும் ஏதாவது ஒரு பிரச்னையை கொண்டுவந்து, மக்களை வீதியில் போராட வைத்து.அவர்களை காவல்துறையை ஏவிவிட்டு அடித்து துன்புறுத்தி , சுட்டு கொள்ளவும் உத்தரவு செய்து .மக்களை பீதியில் ஆழ்த்தி, அவர்களின் வாழ்வாதாரங்களை நசுக்கி கொண்டு இருக்கிறீர்கள்.
இந்தியாவின் பொருளாதாரம் எந்த நிலையில் இருக்கு என்பதை கூட கவலை கொள்ளாமல், குடியுரிமை திருத்த சட்டம் தான் ரொம்ப முக்கியம் என்று ஆணவ ஆட்சி செய்கிறீர்கள்! உங்கள் கையில் மக்கள்கள் ஆட்சி கொடுத்துவிட்டார்கள் என்ற ஒரு ஆதங்கம்தான்!
குரங்கு கையில் பூமாலை கிடைத்தால் எப்படி இருக்கும் என்று நீங்கள் காட்டிவிட்டீர்கள்! நீங்கள் இரண்டாவது முறை ஆட்சியை எப்படி பிடித்தீர்கள் என்பது தெரியும்! உங்கள் கையில் ஆட்சி, அதிகாரம், செல்வாக்கு, பணம், தேர்தல் அதிகாரிகள், நீதிபதிகள் எல்லாம் உங்கள் கையில் வசம் இருக்கிறார்கள் என்று ரொம்ப ஆட்டம் போடுகிறீர்கள்!
எங்களுக்கு எங்கள் இரட்சகன் அல்லாஹ் இருக்கின்றான் அவன் எங்களுக்கு போதுமானவன். அல்லாஹ்வை மீறி இந்த உலகத்தில் எதுவும் நடக்காது, அசையாது, முடியாது. நாங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், பலத்தில், மனஉறுதியில் நாங்கள் வலிமையானவர்கள் என்பதை பாசிச சக்திகளான நீங்கள் ஒருநாள் உணர்வீர்கள். அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை. ஒருநாள் நீங்கள் வெறுக்கப்படுவீர்கள், விரட்டப்படுவீர்கள் இன்ஷாஅல்லாஹ் அப்பொழுதுதான் எங்களுடைய பெருமை, அருமை புரியவரும்!
இன்ஷாஅல்லாஹ் உங்களுக்காக நாங்கள் உதவி கரம் நீட்டும் நிலை வரும்!
அப்பொழுதுதான் முஸ்லிம்களை பற்றி உண்மையை உணர்வீர்கள்!
இவர்கள்தான் உண்மையான தேசப்பற்று உள்ளவர்கள் என்று அறிவீர்கள்!
இஸ்லாமிய ஆட்சி வந்தால் மட்டும் உலகத்தில் அமைதியும், சமாதானமும், சமத்துவமும், சகோதரத்துவமும், நல்ல நீதியும், நல்ல தீர்வும், நியாயமும் கிடைக்கும். ஆட்சி செய்வபர்கள் யார் என்பது முக்கியம் அல்ல என்ன ஆட்சி என்பதுதான் முக்கியம் அதுதான் இஸ்லாமிய ஆட்சி!
இந்தியாவில் முஸ்லிம்களின் தியாகத்தை மறைப்பது என்பது, உங்கள் வேட்டியில் யானை மறைப்பது போன்று, அது இயலாத காரியம்! நீங்கள் கூவிக்கொண்டு இருக்கிறீர்கள்” நாங்கள் ஒருபோதும் இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறமாட்டோம்” என்று. நாங்கள் கூறுகிறோம் ”அல்லாஹ் எங்களுக்கு எதை விதித்துள்ளானோ அது எங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்! அல்லாஹ்விடமே நாங்கள் முறையிடுகிறோம். அல்லாஹ் எங்களுக்கு போதுமானவன்!
எங்கள் போராட்டம் ஒருபோதும் நாங்கள் அதிலிருந்து பின்வாங்கமாட்டோம் என்று நாங்கள் உங்களுக்கு உறுதியாக கூறுகிறோம்!
எங்களுடன் அல்லாஹ் இருக்கின்றான்,
உங்களுடன் ஷைத்தான் இருக்கின்றான்.
வெற்றி யாருக்கு என்பதை இன்ஷாஅல்லாஹ் பொறுத்து இருந்துபார்ப்போம்! பெண்களும், குழந்தைகளும், வயோதிர்களும் இந்த போராட்டத்தில் இருக்கிறார்கள். இந்த போராட்டம் எங்களின் உரிமைக்கான போராட்டம். எங்களுடைய எதிர்கால சந்நதிர்களுக்கான போராட்டம். அவர்கள் இந்தியாவில் நிம்மதியாக மற்ற சமூக மக்களுடன் ஒற்றுமையாக வாழ்வார்கள் இன்ஷாஅல்லாஹ்.
எங்களுடைய அன்பான இந்து சகோதரர்கள்/சகோதரிகள் நிச்சயமாக நீங்களும் எங்களுடன் அவசியம் இந்த போராட்டத்தில் கலந்து, இன்ஷாஅல்லாஹ் எல்லோரும் சேர்ந்து இந்த சட்டத்தை எதிர்ப்போம்! இந்த சட்டத்தின் மூலம் நீங்கள் என்ன விளங்கிக்கொண்டீர்கள் என்பதை விட்டுவிட்டு, எங்களுக்கு எதுவும் பிரச்சனை வராது என்று நீங்கள் ஒதுங்கிவிடாதீர்கள்!
நீங்களும், நாங்களும் மதத்தால் வேறு ஒழிய நாமும், நீங்களும் உள்ளத்தால், உறவால் ,அன்பால், நேசத்தால் ஒன்று இணைந்தவர்கள்! உங்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால், நாங்கள் இருக்கிறோம். எங்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் நீங்கள் இருக்கிறீர்கள். நம்மை பிரிக்க நினைக்கும் பாசிச சக்திகளுக்கு நம்முடைய பலத்தை அவசியம் அவர்களுக்கு காட்டும் சரியான தருணம் இதுதான்! எங்கள் அன்பு சொந்தங்களே! இந்துக்களே ! சிந்தியுங்கள்! இன்றே செயல்படுங்கள்!
வேற்றுமையிலும் ஒற்றுமை தான் எங்கள் தேசம்! எங்கள் நேசம்! இந்தியா!!!
நாம் அனைவரும் இந்த நாட்டு குடிமகன்கள் என்பதை நாங்கள் எந்த ஆவணத்தை கொண்டும் ஒருபோதும் நிரூப்பிக்கமாட்டோம்! நாங்கள் அன்றும், இன்றும், என்றும் இந்த நாட்டு தேசப்பற்று உள்ளவர்கள்தான் என்பதை உறுதியாக இறுதியாக சொல்கிறோம்! வாழ்க இந்தியா ! வாழ்க வளமுடன் இந்திய மக்கள்!
-சத்திய பாதை இஸ்லாம்
source: http://islam-bdmhaja.blogspot.com/2020/02/blog-post_17.html