அத்தாட்சிகள் – திருக்குர்ஆன் கலைக்களஞ்சியம்
தொகுப்பாசிரியர் – ஆளூர் அமீர் அல்தாஃப், கோயம்புத்தூர்
4 தொகுதிகள்
2800 பக்கங்கள்
1600 தலைப்புகள்
13,000 வண்ணப்படங்கள்
நான்கு பாகங்கள், 2800 பக்கங்கள், 110 அத்தியாயங்கள், 779 தலைப்புகள், 13,000 வண்ணப்படங்கள் என மாபெரும் திருக்குர்ஆன் அறிவுக்களஞ்சியத்தை அமீர் அல்தாஃப் படைத்துள்ளார்.
தமிழ், ஆங்கிந்லம் ஆகிய இரண்டு மொழிகளில் 276 நூல்கள், 21 இதழ்கள் துணையுடன் இந்த சாதனை படைக்கப்பட்டிருக்கிறது.
அறிவியல், புவியியல், வானவியல், மானுடவியல், சமூகவியல், மருத்துவம், நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகள் தொடர்பாக திருக்குர்ஆன் பேசுகின்ற வியக்க வைக்கும் தகவல்களை அமீர் அல்தாஃப் மிகவும் அற்புதமாக தொகுத்தளித்திருக்கிறார்.
ஒவ்வொரு அத்தியாயத்தையும் மனங்களை கவரும் வண்ணப்படங்களுடன் விளக்கியிருப்பது கூடுதல் சிறப்பு.
இறைத்தூதர் வரலாறு, முந்தைய சமூகத்தார் வரலாறு, நபிகள் நாயம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது அதிசயிக்கத்தக்க வரலாறு, பெருமானாரின் முக்கியமான கடிதங்கள், நபிமொழி களஞ்சியம், முன்னறிவிப்புகள், இஸ்லாமிய பண்பாடு, சட்டம், போர்க்டள், இறுதி நாளின் அடையாளம் முதலிய முக்கியமான அத்தியாயங்கள் இந்த கலைக்களஞ்சியத்தில் இடம் பெற்றுள்ளன.
அரிய புகைப்படங்கள், வரைபடங்கள், அட்டவணைகள் மூலம் தனது கருத்துக்களை எளிமையாக எடுத்துரைத்துள்ளார். பல்வேறு சமய நூல்கள், வேதங்கள், புராணங்களிலிருந்தும் பொருத்தமான மேற்கோள்கள் மூலம் தனது கருத்துக்களை நிறுவுகிறார் அமீர் அல்தாஃப்.
இப் பெருநூல், அதன் பெயருக்கேற்ப அத்தாட்சிகள் குவிந்திருக்கும் திருக்குர்ஆன்கலைக்களஞ்சியம் ஆகும் என பேராசிரியர் அ. முஹம்மது கான் பாஸில் பாகவி புகழாரம் சூட்டுகிறார்.
காலத்தால் அழியாத கருவூலம் திருக்குர்ஆன், காலமெல்லாம் நின்று வழிகாட்டும் கலைக்களஞ்சியமே இந்நூல் என மௌலானா எம். முஹம்மது மன்சூர் காஷிஃபி காஸிமி தெரிவித்துள்ளார்.
குர்ஆன் கூறும் ஞானம் அளவிடற்கரியது. அது படிக்கப் படிக்கத் தெவிட்டாத அறிவுக் கருவூலம் ஆகும். அது மனிதனின் சிந்தனையைத் தட்டி எழுப்பி இதயங்களை வேகங்கொள்ள வைக்கிறது. இந்த பிரபஞ்சம் முழுக்க நிரம்பி வழியும் இறை அத்தாட்சிகளை எடுத்துக் கூறி மனிதகுலத்தை நேர்வழிபடுத்தும் மாபெரும் உந்து சக்தியாகவும் திகழ்கிறது என மௌலவி எஸ்.என். ஜாபர் சாதிக் பாஸில் பாகவி கூறுகிறார்.
இந்நுல் காலத்தால் அழியாத ஒரு சேவை. மறுமை நாள் வரை நின்று விளங்கும் பேரற்புதமான பணி என தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி அல்ஹாஜ் பி.ஏ. காஜா முயீனுத்தீன் பாகவி கூறியுள்ளார்.
மேலும் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மேதகு நீதியரசர் எப்.எம். இப்ராஹிம் கலிஃபுல்லாஹ், உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மேதகு நீதியரசர் கே.என். பாஷா உள்ளிட்டோரும் இந்த பணிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இத்தகைய சிறப்பு மிக்க அறிவுக் கருவூலத்தை படைத்துள்ள அமீர் அல்தாஃப் அவர்கள் நிதித்துறையில் ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி ஆவார். அவரின் இந்த பணியை ஊக்கப்படுத்த ஒவ்வொருவரும் இதனை வாங்கி ஆதரிக்க வேண்டும்.
இத்தகைய அறிவுக் கருவூலத்தை ஒவ்வொருவரும் வாங்கி படித்து பயனடைய வேண்டும்.
மேலும் தங்களது ஊரில் உள்ள பள்ளிவாசல், பள்ளிக்கூடம், அரபிக் கல்லூரி, நூலகம் ஆகியவற்றுக்கு அன்பளிப்பு செய்யக்கூடிய அரிய நூல் ஆகும்.
விலை : ரூ. 3,000
கூரியர் செலவு : ரூ. 500
மொத்தம் : ரூ. 3,500
நூல்களைப் பெற :
புதிய சமுதாயம் பதிப்பகம், கோவை – 90870 46667 / 98 949 11771
துபாயில் பதிவு செய்ய : +971 50 51 96 433
Thanks to Muthvai Hidhayath (Jazaakallaahu khair)