நமக்குச் சொந்தமான அணைத்தும் அல்லாஹ்வின் அருட்கொடையே
நாம் வாழும் உலகில் அல்லாஹ் மனிதனுக்கு பல அருட்கொடைகளை வழங்கியுள்ளான். ஒவ்வொரு உயிரினத்தினதும் தேவைகள் அன்பாக பூர்த்தி செய்யப்படுகிறது. எந்த ஒரு விஷயமும் விடுபடவில்லை.
நம்மை பற்றி சற்று சிந்திப்போம். நாம் காலையில் எழுந்தது முதல் நமக்கு பல பொருட்கள் தேவைப்படுகின்றன. மேலும் பல வகையான சூழ்நிலைகளை சந்திக்கிறோம். சுருக்கமாக சொல்வதானால் எம்மீது அருளப்பட்ட பல அருட்கொடைகளின் காரணமாக நாம் உயிர் வாழ்கிறோம்.
நாம் எழுந்தவுடன் சுவாசிக்கிறோம். இதை செய்வதற்கு நமக்கு எந்த கஷ்டமும் ஏற்படுவதில்லை. காரணம் நமது சுவாசத் தொகுதி முறையாக தொழிற்படுகிறது.
நாம் கண்ணை திறந்தவுடன் நம்மால் பார்க்க முடிகிறது. தெளிவாகவும் – தூரமாகவுமுள்ள காட்சிகள்- மூன்று கோணங்களிலும் – வர்ணங்களும் நமது கண்ணுக்கு தெளிவாக தெரிகிறன. இதற்கு நமது கண் மிக நுண்ணியமாக வடிவமைக்கப்பட்டுள்ளதே காரணமாகும்.
நாம் சுவையான உணவுகளை உண்ணுகிறோம். நாம் உண்ணும் உணவிலுள்ள வைட்டமின்கள் மினரல்கள் காபோஹைடரேட்கள் அல்லது புரத சத்துகள் எமது உடலில் சேமிக்கப்படுகிறதை பற்றியோ அல்லது உடல் அதை எவ்வாறு உபயோகிக்கிறது என்பதை பற்றியோ நாம் கவலைபடுவதில்லை. இவ்வாறு ஒரு தொழிற்பாடு நமது உடலில் நடைபெறுகிறது என்பதை பற்றி நம்மில் பலருக்கு தெரியாது.
நாம் ஒரு பொருளை கையில் எடுத்தவுடன் அது கடினமானதா அல்லது மிருதுவானதா என்பதை நாம் உணர்ந்து கொள்கிறோம். இதை செய்ய நாம் எமது மூளையை செலவிடுவதில்லை. இதை போன்ற எண்ணிலடங்காத சில நொடி செயல்கள் நமது உடலில் நடைபெறுகிறன. இந்த தொழிற்பாட்டிற்கு பொறுப்பான உறுப்புகள் சிக்கலான முறையில் தொழிற்படுகின்றன. மனித உடல் பல சிக்கலான இயந்திரங்களின் தொகுப்பு எனலாம். இந்த உலகில் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட பெரும் அருள்களில் இந்த உடலும் ஒன்றாகும்.
இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுகிறது. இந்த தொழிற்சாலை இயங்க தேவையான மூல பொருட்கள் எவ்வாறு பெற்று கொள்ளப்படுகிறது? இதை வேறு வகையில் கூறுவதானால் நீர் காற்று மற்றும் வாழ்கைக்கு தேவையான மற்றைய அனைத்து சத்துகளும் எவ்வாறு தோன்றின?
பழங்கள் மற்றும் காய்கறிவகைகளை பற்றி சற்று சிந்திப்போம். முலாம்பழம் தர்பூசணி செரிப்பழம் மாதுளை தக்காளி கடுகு அன்னாசி திராட்சை…….. அனைத்தும் மண்ணில் துவப்பட்ட விதையிலிருந்து வளர்கின்றன. இந்த விதைகளில் சில நேரம் மரத்தை விட கடினமான அமைப்பு காணப்படுகின்றன. இவைகளை பற்றி சிந்திக்கும் பொழுது நாம் காலம்காலமாக சிந்திப்பதை போன்றல்லாமல் வேறுவிதமாக சிந்திப்போம். செர்ரி பழத்தின் சுவை மற்றும் வாசனையை அல்லது முலாம்பழத்தின் மாறும் நிறத்தை சற்று நினைத்து பாருங்கள்.
விஞ்ஞான ஆய்வுகூடங்களில் இத்தகைய வாசனைகளை உருவாக்க செலவிடப்பட்ட நேரங்களும் சக்திகளும் தோல்வியில் முடிந்ததை சற்று சிந்தித்து பாருங்கள.; ஆய்வுகூடங்களில் விஞ்ஞானிகளால் பெறப்பட்ட முடிவுகள் அவர்களது முயற்சி தோல்விகளிலேயே முடிந்துள்ளதை காட்டுகின்றன. இயற்கையில் காணப்படும் பலவிதமான சுவைகளும் வாசனைகளும் நிறங்களும் அவற்றின் இணையற்ற தன்மைகளாகும்.
அனைத்து காய்கறிகளிலும் பழங்களிலும் காணப்படும் தனித்துமான சுவைகளும் வாசனைகளும் உண்மையில் அவற்றுக்கென விதிக்கப்பட்ட வடிவமைப்பே காரணமாகும். இவை அனைத்தும் அல்லாஹ் மனிதன் மீது இறக்கிய அருட்கொடைகளாகும்.
அதைபோன்று விலங்குகளும் மனிதனுக்காகவே படைக்கப்பட்டுள்ளன. உணவாக பயன்படுவதை தவிர்ந்து அவைகள் மனிதனுக்கு அழகாக தோன்றுகின்றன. மீன்கள் கோரல்கள் நட்சத்திர மீன்கள் போன்றவைகள் கடலின் ஆழத்தை அவற்றின் அழகான நிறங்களால் அழங்கரிக்கின்றன. அனைத்து விதமான பறவைகளும் அவற்றின் இருப்பிடத்திற்கு மெருகூட்டுகின்றன. பூனைகள் நாய்கள் டொல்பின்கள் பென்குயின்கள் …….. ஆகிய அனைத்தும் அல்லாஹ்வின் அருள்களாகும். இந்த உண்மையை பற்றி அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் கூறுகிறான்.
‘அவனே வானங்களிலுள்ளவை, பூமியிலுள்ளவை அனைத்தையும் தன் அருளால் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான். அதில் சிந்திக்கும் சமூகத்தாருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் உள்ளன.’ (ஸூறா ஜாதியா : 13 )
‘இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை உங்களால் எண்ண முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.’ (ஸூறா நஹ்ல்: 18)
‘நீங்கள் அவனிடம் கேட்ட யாவற்றிலிருந்தும் அவன் உங்களுக்குக் கொடுத்தான்¢ அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான்.’ (ஸூறா இப்றாஹீம் : 34)
மேலே கூறப்பட்ட உயிரினங்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளில் சிறிய பகுதியாகும். நாம் திரும்பும் திசையெல்லாம் அல்லாஹ்வின் வல்லமைகளை காணலாம். அல்லாஹ் அர்-ரஸ்ஸாக் (கணக்கின்றி கொடுப்பவன்) அல்-லதீப்(நுண்ணறிவாளன்-அனைத்தையும் நுண்ணறிவு கொண்டு படைப்பவன்) அல்-கரீம் (கொடைவள்ளல்) அல்-பார் (அனைத்து நன்மைகளினதும் இருப்பிடம்).
இப்பொழுது உங்களை சுற்றியுள்ளவற்றை பார்தது சிந்தியுங்கள். நீங்கள் கொண்டுள்ள அனைத்தும் உங்கள் இறைவனின் அருட்கொடை என்பதை மறந்தவிடாதீர்கள்.
‘மேலும், எந்த பாக்கியம் உங்களிடம் இருந்தாலும் அது அல்லாஹ்விடமிருந்து உள்ளதேயாகும்¢ பின்னர் ஏதாவது ஒரு துன்பம் உங்களைத் தொட்டு விட்டால் அவனிடமே (அதை நீக்குமாறு பிரலாபித்து) நீங்கள் முறையிடுகிறீர்கள்’ (ஸூறா நஹ்ல்: 53)
”Jazaakallaahu khairan”
கட்டுரையாசிரியர்: ஹாருன் யஹ்யா