Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

முஸ்லிம்களே! பொது விவகாரங்களில் மூக்கை நுழையுங்கள்!

Posted on January 26, 2020 by admin

முஸ்லிம்களே! பொது விவகாரங்களில் மூக்கை நுழையுங்கள்!

[ காலத்தின் தேவை   இக்கட்டுரை ]

    மாண்புமிகு சல்மான் குர்ஷித்       

[  இந்துக்களையும், முஸ்லிம்களையும் இணைத்து   முஸ்லிம்களுக்கு நலன் நாடும் விஷயங்கள் சச்சார் கமிட்டியில் என்னென்ன உள்ளது.    தனிமைப்படுத்தும் பரிந்துரைகள் குறித்தும் பரிசீலிக்க வேண்டும்.

தென்னிந்தியாவில் உட்கார்ந்து கொண்டு கல்வி உதவி கேட்கிறீர். வியப்பாய் உள்ளது.   உத்தரப் பிரதேசத்துக்கு நீங்கள் வழிகாட்ட அழைக்கிறேன்.    நீங்கள் கல்விதுறையில் வெற்றியாளர்கள்.   நீதியரசர் பஷீர் அஹ்மது சயீது பெயரில் 10 தரமான கல்வி நிறுவனங்கள் நடத்துகிறீர்.   பெங்களூருக்கு அஜீம் பிரேம்ஜி உதவுகிறார். நீங்கள், உ.பி, பீஹார், அஸ்ஸாம் மக்களுக்கு உதவுங்கள். தமிழகத்தில் நீங்கள் ஆற்றிய கல்வி சாதனைகளை எமது மாவட்டத்துக்கு, என் தொகுதிக்கு வழிகாட்டுவீர்.

ஜனநாயக நடைமுறையில் ஒத்துப்போய் நீங்கள் நிறுவனம் நடத்தணும். அரசாங்கம் தலையிட்டு உங்கள் நிறுவனத்துக்குள் மூக்கை நுழைக்க அனுமதிக்காதீர். நீங்கள் அழைத்தீர் ஒரு அமைச்சர் தலையிட்டார். நாளை அமைச்சர் தனது சுய விருப்பத்துக்கு, அதிகார மமதையில் தலையிடுவார்.   அபாயம் உணர்வீர்.

முஹல்லா, பள்ளிவாசல், முஸ்லிம் கல்லூரி இவை முஸ்லிம் இந்தியா.   இந்தியாவின் பிற பகுதிகள், பிரச்னைகள் பற்றி முஸ்லிம்களுக்கு ஆர்வமில்லை. கவலையில்லை. அக்கறையில்லை.    பள்ளிவாசல் மத சடங்குக்கு, கல்வி நிறுவனம் நாட்டு பிரச்னைகளை விவாதிக்க பயன்படவேண்டும்.   அரசியல் கட்சி சார்ந்து இயங்க வேண்டாம். ஆனால் அரசியல் விவாதம் முக்கியம்.   மிகச் சிறந்த அரசியல் உயர் வழிகாட்டுதலை வழங்குவீர்.]

  பொது விவகாரங்களில் மூக்கை நுழை!    

அரசு செலவின தொகையில் 15 சதவீதம் கண்டிப்பாக முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். நாம் இதனை உறுதிப்படுத்த வேண்டும். நமது நாட்டில் மிகச் சரியான, முறையான அரசு இயக்கம், நீதி பரிபாலனம், கல்வி கட்டமைப்பு, சமூக நலத்திட்டம் அமையுமேயானால் முஸ்லிம்களுக்கான கோரிக்கை எதுவுமிருக்காது. சம குடிகள் அந்தஸ்த்தில் முஸ்லிம்களுக்குரிய பங்கு கிடைத்திருக்குமா. நாங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டோம் குமுறல் வாய்த்திருக்காது.

முஸ்லிம்களின் பின் தங்கிய நிலையை பட்டவர்த்தமனமாக மெய்யாக, அப்பட்டமாகவே சச்சார் கமிட்டி முடிவாக நிரூபித்தது. காரணங்கள் பல. பாக்கிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு முன்னேறிய, படித்த, வளமான முஸ்லிம்கள் பாக்கிஸ்தான் சென்று விட்டனர். பலவீன முஸ்லிம் சமுதாயம் இந்தியாவில் தங்கிவிட்டது. இன்னும் சிலர், ‘‘திட்டமிட்ட ஒதுக்குதல்’’ காரணியாக்குகின்றனர்.

பிரிவினையின் எதிரொலி பின்னடைவு. வெளிப்படையாக பார்த்தால் பிரிவினையில் அதிகமாக பாதிக்கப்பட்டது முஸ்லிம்கள். இந்தியாவில் தங்கிவிட முடிவெடுத்த முஸ்லிம்கள் கடுமையாக விளைவுகளை சந்தித்தனர். பாதிப்புக்குள்ளாயினர். எம்மை பொறுத்தவரை நாங்கள் தேசப் பிரிவினையை ஆதரிக்கவில்லை. உத்தரப் பிரதேசம், வங்காளம் தேசப் பிரிவினையுடன் நேரடி தொடர்புடைய பகுதிகள். தென்னிந்தியா தமிழகம் பகுதியில் பிரிவினை பாதிப்பு இல்லை.

பணக்காரர்கள், படித்த மேல்தட்டு முஸ்லிம்கள் பாக்கிஸ்தானை உருவாக்கினர். அறிவு ஜீவிகள் பாக்கிஸ்தானை விரும்பினர். அலிகரில் பாக்கிஸ்தான் கருத்தாக்கம் சூல் கொண்டது. மத்ரசாக்கள், ஆலிம்கள், ஏழை முஸ்லிம்கள் பாக்கிஸ்தான் பிரிவினையை ஏற்கவில்லை. மறுத்தனர். இந்தியாவில் வாழும் பலருக்கு இது தெரியாது. முஸ்லிம்களுக்கே இது தெரியாது.

1947ல் நாம் ஒற்றுமையை போதித்தோம். இந்திய விடுதலைக்கு போராடிய முஸ்லிம்கள் பிரிவினையை எதிர்த்தனர். இந்துக்களுடன் சம பங்குதாரர் நாம். சமபங்குக்கான அனைத்து தகுதிகளும் நமக்கு உண்டு. சககுடிகள். சக குடிமை எங்கோ காணாமல் போயிருந்தால், தவறு நிகழ்ந்திருக்குமேயானால் அதனை சரி செய்தாக வேண்டும். சம உரிமைக்கான தேடலை நடத்தவேண்டும். சிறுபான்மை நல அமைச்சகம் மட்டுமே சிறுபான்மை நலத்தை பொறுப்பேற்காது. சிறுபான்மை நல அமைச்சகத்தின் பொறுப்பு, அனைத்து துறைகளும் அமைச்சகங்களும் தங்களின் பங்கை சரிவர ஆற்ற கண்காணிக்கும்.

மனிதவள பிஸிஞி மேம்பாட்டு அமைச்சகம் சிறுபான்மை நலனுக்கு உதவமுடியும். சட்டத்துறை, உள்துறை, வணிகத் துறைக்கும் சிறுபான்மை நலனுக்கும் எவ்வித பொறுப்புமில்லை, கருத்து முறையல்ல. 15 சதவீத நிதி ஒதுக்கீட்டுக்கு சிறுபான்மை நல அமைச்சகம் கண்காணிப்பாளர். காவலர். இதனையும் தாண்டி நாம் சிந்திக்கலாம். பன்னிரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் தயாரிக்கிறோம். கடந்த மூன்று ஆண்டுகால அனுபவத்தை முன் வைத்து முஸ்லிம் அறிவாளிகள் டெல்லி வந்து உதவலாம். ஆலோசனை கூறலாம்.

சச்சார் கமிட்டி அமுலாக்கத்துக்கு கடந்த வருடங்களில் முயற்சித்துள்ளோம். சச்சார் அறிக்கை குர்ஆன் அல்ல. குர்ஆன் ஆகிவிடாது. அது தவறாகவும் இருக்கலாம். வாய்ப்பிருக்கிறது. நமக்கு ஒரே ஒரு வேத புத்தகம் மட்டுமே உள்ளது. அது குர்ஆன். அதில் தவறு, குறை, கோளாறு இல்லை. ஏனைய, இதர புத்தகங்கள், சச்சார் கமிட்டி அறிக்கை உட்பட தவறாக இருக்கக்கூடும். விமர்சனக் கண்ணோட்டத்துடன் சச்சார் அறிக்கையை அணுகலாம்.

இந்துக்களையும், முஸ்லிம்களையும் இணைத்து முஸ்லிம்களுக்கு நலன் நாடும் விஷயங்கள் சச்சார் கமிட்டியில் என்னென்ன உள்ளது. தனிமைப்படுத்தும் பரிந்துரைகள் குறித்தும் பரிசீலிக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு ஏதாவது சிறு நலன் கிடைக்கலாம். ஆனால் தனிமைப்பட நேரிடும். ஒவ்வொரு துறையிலும் யாருடனும் போட்டியிட நாம் ஆர்வப் படுகிறோம். தயார். ராக்கெட் தொழில்நுட்பத்தில் டாக்டர் கிறியி சாஹிபின் மூளை நாட்டில் மிகச் சிற்நதது. அதனால்தான் ஜனாதிபதி அங்கீகாரமளித்தோம்.

கிரிக்கெட் ஆட்டத்தில் திறமையாளர்களை தந்தோம். ரிசர்வேஷன் கோரவில்லை. சினிமா துறையில், மீடியா போட்டியில் சாதனைபடைத்தோம். இட ஒதுக்கீடு தேவைப்படவில்லை. ஏரளாமான துறைகளில் போட்டியாளர், சாதனையாளராக நாம் நிற்கிறோம். சில துறைகளில் நமக்கு ஆதரவு, ஊக்குவிப்பு தேவைப்படுகிறது. வங்கித் துறை, சிவில் சர்வீஸ், இங்கு முஸ்லிம்களுக்கு உதவி செய்தாகணும்.

தென்னிந்தியாவில் உட்கார்ந்து கொண்டு கல்வி உதவி கேட்கிறீர். வியப்பாய் உள்ளது. உத்தரப் பிரதேசத்துக்கு நீங்கள் வழிகாட்ட அழைக்கிறேன். நீங்கள் கல்விதுறையில் வெற்றியாளர்கள். நீதியரசர் பஷீர் அஹ்மது சயீது பெயரில் 10 தரமான கல்வி நிறுவனங்கள் நடத்துகிறீர். பெங்களூருக்கு அஜீம் பிரேம்ஜி உதவுகிறார். நீங்கள், உ.பி, பீஹார், அஸ்ஸாம் மக்களுக்கு உதவுங்கள். தமிழகத்தில் நீங்கள் ஆற்றிய கல்வி சாதனைகளை எமது மாவட்டத்துக்கு, என் தொகுதிக்கு வழிகாட்டுவீர்.

நான் ஒரு மாடல் காட்டுகிறேன். என் மனதில் உள்ளதை கூறுகிறேன். சிறுபான்மை நல அமைச்சகம் வேண்டாம். சம வாய்ப்புக்கான அமைச்சகம் கேட்போம். என சக அமைச்சர்கள் இதர துறை மந்திரிகள் சிறுபான்மை நல அமைச்சகத்துக்கும் வேறு துறைகளுக்கும் சம்பந்தமில்லை, உதவ மறுக்கின்றனர். சிறுபான்மையினருக்கானது, மைனாரிட்டிஸ் அபெய்ர்ஸ். முஸ்லிம்களும் அவ்வாறே கருதுகின்றனர். சிறுபான்மை நலன் முஸ்லிம் நலன் மட்டுமல்ல. நாட்டில் இன்ன பிற சிறுபான்மையினரும் வசிக்கின்றனர். சிலரின் பாதிப்பு ஓரளவுக்கு. இன்னும் சில சிறுபான்மையினம் முஸ்லிம்களைவிட கூடுதலாக பின்தங்கியுள்ளனர்.

சீக்கியர், பாரசீக இனத்தவர் பிரச்னைகள் வினோதமானவை. வேறுபட்டவை. பார்சீக்கள் என்னை சந்தித்து, ஜனத்தொகை பெருக உதவுமாறு கூறுகின்றனர். எண்ணிக்கையில் பார்சீ குறைவு. அரசின் நலத்திட்டம் சென்று சேரவில்லை. மத்திய அரசின் கொள்கை மக்கட் தொகை கட்டுப்பாடு. திட்டக் கமிஷன் பார்சீ கோரிக்கையை ஏற்கவில்லை. ஜனத்தொகை உயர நிதி தர இயலவில்லை.

சுயநிதி, தன்னாட்சி நிறுவன காலம் இது. உலகம் மாறிவருகிறது. அலிகர் பல்கலைக் கழகத்தில் முஸ்லிம் கேரக்டர் தனித்தன்மை கோறுகின்றனர். உங்களுக்கு ஏற்ப நிறுவனத்தை நீங்களே வடிவமைக்கலாம். உருவாக்கலாம். சிறுபான்மை பல்கலைக்கழகம் முஸ்லிம்களுக்கானது. அரசாங்கம் தலையிடாது. சிறுபான்மை தன்மை சிறிய, ஒரு பகுதி மட்டுமே. ஜனநாயகப் பூர்வமாகவும் பல்கலைக் கழகம் தரமாக இயங்கவேண்டும். மாணவர்கள் துணை வேந்தரை நீக்க குரல் கொடுக்கின்றனர். டெல்லி வந்து அரசிடம் மனு அளிக்கின்றனர். நீங்கள் சிறுபான்மை நிறுவனம், அரசிடம் ஆலோசனை கேட்கக் கூடாது.

ஜனநாயக நடைமுறையில் ஒத்துப்போய் நீங்கள் நிறுவனம் நடத்தணும். அரசாங்கம் தலையிட்டு உங்கள் நிறுவனத்துக்குள் மூக்கை நுழைக்க அனுமதிக்காதீர். நீங்கள் அழைத்தீர் ஒரு அமைச்சர் தலையிட்டார். நாளை அமைச்சர் தனது சுய விருப்பத்துக்கு, அதிகார மமதையில் தலையிடுவார். அபாயம் உணர்வீர். முஸ்லிம் நிறுவன செயல்பாடு குறித்த பலத்த பரிசீலனை, மறுஆய்வு செய்வீர். பினாயக் சென் மனித உரிமை நாடு அலறியது. ஆனால் முஸ்லிம் அமைப்புகள் வாய்திறக்கவில்லை. பொறுப்பை தட்டிக் கழித்தனர். மவுனம் காட்டினர்.

முஸ்லிம் பர்சனல் லா போர்டு, தனியார் சட்ட வாரியம், மில்லி கவுன்சில், முஸ்லிம் அமைப்புகள் அலிகர் ஜாமியா பிரச்னை, குஜராத் கலவரம், குறித்து கவலைப்படுகின்றனர். நக்சலைட் வன்முறை, மணிப்பூர் சோகம் முஸ்லிம்களிடம் கருத்து இல்லை. நாட்டின் ஒவ்வொரு நிகழ்விலும் முஸ்லிம் கருத்தையறிய காத்திருக்கிறோம்.

முஹல்லா, பள்ளிவாசல், முஸ்லிம் கல்லூரி இவை முஸ்லிம் இந்தியா. இந்தியாவின் பிற பகுதிகள், பிரச்னைகள் பற்றி முஸ்லிம்களுக்கு ஆர்வமில்லை. கவலையில்லை. அக்கறையில்லை. பள்ளிவாசல் மத சடங்குக்கு, கல்வி நிறுவனம் நாட்டு பிரச்னைகளை விவாதிக்க பயன்படவேண்டும். அரசியல் கட்சி சார்ந்து இயங்க வேண்டாம். ஆனால் அரசியல் விவாதம் முக்கியம். மிகச் சிறந்த அரசியல் உயர் வழிகாட்டுதலை வழங்குவீர். அறிவின் முதிர்ச்சி அரசியல் முதிர்ச்சி. ‘‘விவாதகும்பல் இந்தியர்’’, அமெர்த்தியா சென் குறிப்பிடுகிறார். மனித உரிமை, கல்வி, புதிய நிறுவன கொள்கை, லோக்பால் மசோதா முன் வரைவு விவாதிப்போம். நடைமுறையில் உள்ள அரசின் திட்டங்கள், நிதி, பயன்பாடு, பயனாளிகள் குறித்தும் கருத்து, ஆலோசனை கூறுவீர். இன்னும் சிறப்பாக நடைபெற துணை புரிவீர்.

கட்டுரையாசிரியர்: மாண்புமிகு மத்திய சட்டத்துறை அமைச்சர், சல்மான் குர்ஷித்

ஆகஸ்ட் 2011 முஸ்லிம் முரசு

source: http://jahangeer.in/?paged=4

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 80 = 88

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb