இனப்பெருமை கோருவோருக்கு இறைவனின் சவால்
இஸ்லாம் வருவதற்கு முன் மதீனாவில் யூதர்கள்
இறைதூதர் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பின்பற்றி வந்தவர்கள் யூதர்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனின் தூதராக ஆவதற்கு முன்னால், அவர்கள் மதீனாவில் வாழ்ந்து கொண்டு இருந்தனர். மதீனாவில் இவர்கள் குடியேறுவதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது.
அதாவது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகை குறித்து அவர்களின் வேதங்களில் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டு இருந்ததால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகையை எதிர்பார்த்தே அவர்கள் மதீனாவுக்கு புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டு இருந்தனர்.
ஆனால் மூஸா நபி அவர்களின் மறைவுக்குப் பின் அவர்களுக்குள் பல மூடநம்பிக்கைகளும் இனமேன்மை பாராட்டும் பழக்கமும் புகுந்திருந்தது. மதீனாவில் வாழும்போது அவர்கள் தங்களது இனவெறியை தக்க வைத்துக் கொண்டனர். முழுமையாக அரபியர்களுடன் ஒன்றிவிடவில்லை. தாங்கள் இஸ்ரவேலர்கள், யூதர்கள் என்ற உயர் இனம் என்று பெருமை பேசிக் கொண்டிருந்தனர். இதனால் அரபியர்களை மிகக் கேவலமாகக் கருதினர். அரபியர்களின் சொத்துகள் தங்களுக்கு ஆகுமானது என்றும், தாங்கள் நாடியபடி அவற்றை அனுபவித்துக் கொள்ளலாம் என்றும் கருதினர்.
பொருளாதார ஆதிக்கம்
யூதர்கள் தங்களது மார்க்கத்தைப் பரப்ப வேண்டும் என்பதில் தீவிரம் காட்டவில்லை. மாறாக, ஜோசியம் பார்ப்பது, சூனியம் செய்வது, மந்திப்பது, பஞ்சாங்கம் பார்ப்பது போன்றவற்றையே தங்களது குலத்தொழிலாகவும் மதச் சடங்காகவும் செய்தனர். இந்தச் செயல்களின் மூலம் தாங்களே கல்விமான்கள், ஆன்மீகத் தலைவர்கள், சிறப்பிற்குரியவர்கள் என்று கருதினர்.
பொருளீட்டும் வழிகளில் மிகுந்த திறமை பெற்றவர்களாக இருந்தனர். இவர்கள் தானியங்கள், பேரீத்தங்கனி, மது வகைகள், துணிமணிகள் என அனைத்து வியாபாரங்களையும் தங்களது ஆதிக்கத்தில் வைத்திருந்தனர். ஆடைகளையும், வித்துக்களையும், மது வகைகளையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து, மதீனாவிலிருந்து பேரீத்தம் பழங்களை ஏற்றுமதி செய்தனர். மேலும் பல தொழில்களும், வியாபாரங்களும் அவர்கள் கைவசம் இருந்தன.
வட்டி மூலம் ஆதிக்கம்
பொதுவாக அரபியர்கள் மூலம் பெரும் இலாபங்களை அடைந்தனர். வட்டி அவர்களின் குலத் தொழிலாக இருந்தது. கவிஞர்கள் தங்களைப் புகழ வேண்டும் என்பதற்காகவும், மக்களிடம் பெயர் பெற வேண்டும் என்பதற்காகவும் பெரும் கடன்களை வாரி வழங்கினர். இதற்குப் பகரமாக அரபுத் தலைவர்களின் தோட்டங்களையும், விவசாய நிலங்களையும் அடைமானமாக வைத்துக் கொண்டனர். பின்பு, அரபுத் தலைவர்களால் அந்தக் கடன்களை அடைக்க முடியாமல் போனபோது அவர்களே அந்தத் தோட்டங்களுக்கும், நிலங்களுக்கும் உரிமையாளர்களாகி விட்டனர்.
சதியும் சூழ்ச்சியும்
யூதர்கள் சதித் திட்டம் தீட்டுவதிலும், அரபுகளின் ஒற்றுமையை குலைப்பதிலும், குழப்பங்களை உண்டு பண்ணுவதிலும் தீவிரம் காட்டினர். தங்களைச் சுற்றியுள்ள அரபு கோத்திரங்களுக் கிடையில் அவர்களால் புரிந்துகொள்ள முடியாத வகையில் சூழ்ச்சிகளைச் செய்து, சண்டைகளையும் போர்களையும் தூண்டி விட்டனர். இவர்களின் இந்தச் சதியால் அரபியர்களுக்கு மத்தியில் எப்போதும் போர் நடந்துகொண்டே இருந்தது.
சில சமயம் போர் அணையும் நிலை ஏற்பட்டால் மீண்டும் புதிதாகப் போரின் நெருப்பை தூண்டுவதற்கு சூழ்ச்சி செய்வார்கள். போர் சூடுபிடித்துக் கொண்டால் ஓர் ஓரத்தில் உட்கார்ந்துக் கொண்டு அந்த அப்பாவி அரபியர்களுக்கு ஏற்படும் அழிவையும், நாசத்தையும் பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள். போருக்குத் தேவையான பொருளாதார வசதி குறைந்து அரபியர்கள் போரை நிறுத்திவிடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு பெரிய அளவில் கடன் கொடுப்பார்கள். இதுபோன்ற சூழ்ச்சிகளால் யூதர்கள் இரண்டு விதமான பயன்களை அடைந்தனர்.
1) யூதர்கள் தங்களின் தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொண்டனர்.
2) வட்டியைப் பரவலாக்கி தங்களின் பொருளாதாரத்தை வளப்படுத்தினர்.
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தபோது கோபம்
இவ்வாறு இருக்கும்போது மக்காவில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனின் தூதராக நியமிக்கப்படுகிறார்கள். மக்காவில் 13 வருடங்கள் கழித்ததன் பின்னால் நபியவர்கள் மதீனாவுக்கு குடிபெயர்கிறார்கள். இஸ்லாமிய பிரச்சாரத்தைத் தொடர்கிறார்கள்.
யூதர்கள் தவ்ராத் வேதத்தில் முன்னறிவிக்கப்பட்ட – தாங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த – இறைத்தூதர் முஹம்மது நபிதான் என்பதை ஐயமற அறிந்து கொண்டனர். “ஆனால் யாரை நாம் நம்மைவிட இழிவான இனம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோமே அந்த அரபுக் குலத்தில் அல்லவா அவர் பிறந்திருக்கிறார்! அவரை எவ்வாறு ஏற்றுக்கொள்வது? ஒருபோதும் முடியாது” என்று அப்பட்டமாக மறுத்து விட்டனர். இனவெறி அவர்களை இறைமார்க்கத்தை தடுத்தது. மட்டுமல்ல நபிகளாரையும் இஸ்லாத்தையும் மூர்க்கத்தனமாக எதிர்க்கத் தொடங்கினர்.
ஆதிக்கத்தை இழக்கும் பயம்
இவர்களது இனவெறி இவர்களது அறிவையும், சிந்தனையையும் மழுங்கச் செய்தது. எனவே அரபியர்களில் இறைத்தூதர் அனுப்பப்பட்டதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஆனால், இஸ்லாமிய அழைப்புப்பணி இனவெறிகளுக்கும், அற்ப உணர்வுகளுக்கும் அப்பாற்பட்டதாகும்.
இஸ்லாமிய அழைப்புப்பணி என்பது ஒரு சீர்திருத்தமும், தூய்மையும், ஒழுக்கமும் நிறைந்த பணியாகும். இப்பணி பல இனத்தவர்களின் உள்ளங்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்துகிறது. விரோதம் மற்றும் கோபத்தின் நெருப்பை அணைக்கிறது. எல்லா நிலைகளிலும், எல்லா செயல்களிலும் நம்பகத் தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் நேர்மையாக சம்பாதித்த தூய்மையானதையே உண்ண வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
எனவே யூதர்கள் சிந்திக்கத் தொடங்கினர்…
அரபியர்கள் இஸ்லாமை ஏற்றுக் கொண்டு இஸ்லாம் கூறும் சீர்திருத்தங்கள் ஏற்பட்டால் அவர்களுக்கு மத்தியில் ஒற்றுமை ஏற்பட்டு விடும். தங்களது சதித்திட்டங்களிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள். தங்களது வியாபாரங்கள் நலிந்துவிடும். தங்களின் பொருளாதாரத்தின் மூலதனமாகிய வட்டித் தொழிலை இழந்து விடுவோம் என்று யோசித்தனர்.
மேலும், இந்த அரபியர்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டால் வட்டியின் மூலம் அவர்களிடமிருந்து நாம் அபகரித்த சொத்துகளையும், தோட்டங்களையும், நிலங்களையும் மீட்டுக் கொள்வார்கள் என்று அஞ்சினர். எனவே முழுமூச்சாக இஸ்லாத்திற்கு எதிராகப் பாடுபட்டார்கள். இன்றும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு எதிராக உலெகங்கும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இறைவனின் சவால்
இறைவனின் பெயரால் இனப்பெருமை பாராட்டி சக மனிதர்களின் உரிமைகளைப் பறித்து கொடுமைப்படுத்தியவர்கள் அல்லது தொடர்ந்து கொடுமைப்படுத்திக் கொண்டு வாழ்பவர்கள் இறைவனின் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. இறைவன் கற்பிக்காத இனமேன்மையை இறைவேதங்களில் புகுத்திய யூதர்களைத் தோலுரிக்கிறது திருக்குர்ஆன்.
அவர்கள் கூறுவது போல இறைவனுக்கு நெருங்கியவர்கள், அவர்கள்தான் மற்றவர்களை விட சொர்க்கத்திற்குத் தகுதியானவர்கள் என்பது அவர்களின் வாதமாக இருந்தால் ஏன் இந்த பூமியில் கஷ்டப்பட வேண்டும்? உடனே மரணத்தைக் கேட்டு ஏன் பிரார்த்திக்கக் கூடாது? என்ற கேள்வியை அவர்களிடம் கேட்கச் சொல்கிறான்.
o அவர்களிடம் நீர் சொல்வீராக: “இறைவனிடம் இருக்கும் மறுமை வீடு மற்ற மனிதர்களுக்கன்றி உங்களுக்கு மட்டுமே சொந்தமானதாய் இருக்குமானால், (உங்களின் இந்த நம்பிக்கையில்) நீங்கள் உண்மையானவர்களாய் இருந்தால், நீங்கள் மரணத்தை விரும்புங்கள் (பார்ப்போம்!)”
o தம் கைகளினால் சம்பாதித்துள்ள தீவினைகளின் காரணத்தால், அவர்கள் அதனை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள் (என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்). மேலும், இந்த அக்கிரமக்காரர்களை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
o எல்லா மனிதர்களை விடவும் ஏன், இணைவைத்து வணங்குபவர்களை விடவும் இவர்களே வாழ்வின் மீது அதிகப் பேராசை கொண்டவர்களாய் இருப்பதை நீர் காண்பீர். அவர்களில் ஒவ்வொருவனும் (எப்படியாவது) ஓராயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகின்றான். ஆயினும், அவனுடைய நீண்ட ஆயுள், வேதனையிலிருந்து அவனை விலக்கிவிடாதே! அவர்கள் எத்தகைய செயல்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை இறைவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 2: 94-96)
வரலாற்று தகவல்கள்: அல் ரஹீகுல் மக்தும்