நெருப்பில் படைக்கப்பட்ட ஷைத்தான் பற்றி அல்குர்ஆன்
ஷைத்தான் இப்லீஸ், நெருப்பில் படைக்கப்பட்ட ஜின் எனும் படைப்பைச் சேர்ந்தவன். (7:12, 18:50)
இப்லீஸ் ஆதமுக்குப் பணிவது தனக்கு இழுக்கு எனக் கருதினான். அவருக்கு மரியாதை செய்ய மறுத்தான். (2:34, 15:31, 17:61, 20:116, 38:74)
மனிதர்களை வழிகெடுக்க தனக்கு ஒரு வாய்ப்பு அளித்தால் வழிகெடுக்க முடியும் என இறைவனிடம் வேண்டினான். (7:14-17, 15:36-,39, 17:62-64)
உறுதியான நம்பிக்கை கொண்டவர்களை அவனால் வழிகெடுக்க முடியாது. (16:99, 14:22, 15:42, 17:65)
இவனது சந்ததிகளே ஷைத்தான்கள் எனப்படுவோர். இவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவன் என்பதால் மற்ற ஜின்களைப் போல் இவனும் பல்கிப் பெருகுவான். (18:50)
இறைத்தூதர்கள் தவிர மற்ற மனிதர்களுக்கு அவன் தென்பட மாட்டான். (7:27)
மனித உள்ளங்களில் ஊடுருவி தீய எண்ணங்களைத் தோற்றுவிப்பான். (4:119, 4:120, 5:91, 7:20, 20:120, 114:4)
கெட்ட மனிதர்கள் நரகத்திற்குச் செல்வது போல் இவனும் நரகத்திற்குச் செல்வான். (14:22, 26:94,95, 59:15)
தீய எண்ணங்களுக்கு ஆட்படுவோர் உடனே அல்லாஹ்விடம் ஷைத்தானை விட்டு பாதுகாப்புத் தேடுவது கடமையாகும். (7:200, 16:98, 23:97,98, 40:56, 41:36, 113:4, 114:3)
ஷைத்தான்கள் வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்க முடியாது. (15:17,18, 26:212, 37:7-10, 67:5, 72:8,9)
ஜின்கள் இருக்கிறார்கள் என நம்புதல் ஜின்களிலும் தூதர்கள் அனுப்பப்பட்டனர். (6:130)
கெட்ட ஜின்கள் நரகத்தை அடைவார்கள். (6:128, 7:38, 7:179, 11:119, 41:25, 41:29, 46:18, 55:39)
மனிதர்களைப் போலவே ஜின்களுக்கும் கட்டளைகள் உள்ளன. (17:88, 51:56, 55:33)
ஷைத்தான்களின் தந்தையான இப்லீஸ் என்பவனும் ஜின் இனத்தவன் தான். (18:50)
ஸுலைமான் நபிக்கு ஜின்களைக் கட்டுப்படுத்திக் கொடுத்து இறைவன் சிறப்பித்திருந்தான். (21:82, 27:17, 27:39, 34:12, 38:37,38)
ஜின்கள் மனிதனை விட ஆற்றல் மிக்கவை. (27:39,40, 72:8,9)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜின்களுக்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டனர் (46:29-32, 72:1-4, 72:19)
ஜின்களிலும் மறுமையை நம்பாதவர்கள் உள்ளனர். (72:7)
ஜின்கள் வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்க முயலும்போது தடுக்கப்படுவார்கள். (15:17,18, 26:212, 37:7-10, 67:5, 72:8,9)
ஜின்களில் நல்லோரும், தீயோரும் உள்ளனர். (72:11-14)
ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டனர். (7:12, 15:27, 38:76, 55:15)
இறைத்தூதர்களுக்கு தீய மனிதர்கள் எதிரிகளாக இருந்தது போல தீய ஜின்களும் எதிரிகளாக இருந்தனர். (6:112)