CAA & NRC தடுக்க என்ன வழி? – தி.மு.க.விற்கு தேர்தல் வியூகம் வகுக்கும் ஐபேக் பிரசாந்த் கிஷோர் சொல்லும் ஐடியா!
நாடு முழுவதும் `தேசிய குடிமக்கள் பதிவேடு’ கொண்டு வர வேண்டும் என்பது இந்தியக் குடியுரிமையை மதிப்பிழக்க வைப்பதற்குச் சமம். நீங்கள் நிரூபிக்கும்வரை செல்லாது – பிரசாந்த் கிஷோர்.
பிரசாந்த் கிஷோர் ( Twitter )
குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராகப் போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் `குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் என்.ஆர்.சி செயல்படுத்தப்படுவதைத் தவிர்க்க இரண்டு சிறந்த வழிகள் உள்ளன’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Prashant Kishor
@PrashantKishor
Two effective ways to stop the implementation of #CAA_NRC are;
(1) Keep protesting peacefully by raising your voice on all platforms, &
(2) Ensure most if not ALL of the 16 Non BJP CMs say NO to NRC in their states.
Everything else important as they may is largely tokenism.
அதில், “அமைதியாகத் தொடர்ந்து போராடி அனைத்துத் தளங்களிலும் குரலெழுப்ப வேண்டும்” என்றும் “பா.ஜ.க ஆட்சியில் இல்லாத 16 மாநிலங்களிலும் உள்ள முதலமைச்சர்கள் என்.ஆர்.சியை அமல்படுத்தப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.
“நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டைக் கொண்டு வர வேண்டும் என்பது இந்தியக் குடியுரிமையை மதிப்பிழக்க வைப்பதற்குச் சமம். நீங்கள் நிரூபிக்கும்வரை செல்லாது. இதனால், ஏழைகளும் விளிம்புநிலை மக்களும்தான் மிகவும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்” என்றும் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
மேலும், “காங்கிரஸ் வீதிகளில் இறங்கி போராடவில்லை. CAA மற்றும் NRC-க்கு எதிராகக் குடிமக்கள் போராடுவதில் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் பங்கெடுக்கவில்லை” என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கிடையே, போராட்டக்களத்தில் அதிகமாக மாணவர்கள் இருக்கும் நிலையில், “மோடியும் அமித் ஷாவும் உங்கள் எதிர்காலத்தை அழிக்கிறார்கள். வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பொருளாதார சரிவு குறித்த உங்களது கோபத்தை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. அதனால்தான், இந்தியாவைப் பிரிக்க நினைக்கிறார்கள். வெறுப்பின் பின்னால் ஒளிந்துகொள்கிறார்கள். ஒவ்வொரு இந்தியனிடமும் அன்பாக இருப்பதன் மூலமே நான் அவர்களைத் தோற்கடிக்க முடியும்” என்று ராகுல் காந்தி கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சேர்ந்து இந்த தேசத்தில் உள்ள இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்துவிட்டனர் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி, மக்கள் சாலைகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். இந்தச் சட்டம் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல , காங்கிரஸ் திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்கிறது என்று பாஜக சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
உ.பி.யில் கடந்த இரு நாட்களாக இந்தச் சட்டத்துக்கு எதிராக நிகழ்ந்த போராட்டம், வன்முறையில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆனாலும், பதற்றம் குறையவில்லை. இந்தச் சூழலில் குடியுரிமைச் சட்டம் குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்க டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரதமர் மோடி தலைமையில் பேரணியும், பொதுக்கூட்டமும் நடந்து வருகிறது. அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
இதற்குப் பதிலடி தரும் வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “அன்பார்ந்த இளைஞர்களே! பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சேர்ந்து உங்கள் எதிர்காலத்தை அழித்துவிட்டார்கள்.
நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்படுத்திய சேதம், வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியாததால் ஏற்பட்டுள்ள உங்கள் கோபத்தை அவர்களால் எதிர்கொள்ள முடியாது. அதனால்தான் மோடியும், அமித் ஷாவும், வெறுப்பின் பின்புறம் மறைந்து கொண்டு, அன்புக்குரிய நம்முடைய தேசத்தைப் பிரிக்கிறார்கள். ஒவ்வொரு இந்தியர் மீதும் அன்பால் பதில் அளித்தால் மட்டுமே நாம் அவர்களை வீழ்த்த முடியும்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
source: Vikatan